09 அக்டோபர் 2021

மலாக்காவின் முதல் கவர்னர் லியோங் யூ கோ

மலாயா மாநிலங்களில் யாங் டி பெர்த்துவா, கவர்னராக நியமிக்கப்பட்ட முதல் முதல்வர் லியோங் யூ கோ (LEONG YEW KOH. முதலும் கடைசியுமான சீனர். 31 ஆகஸ்ட் 1957-இல் இருந்து 30 ஆகஸ்ட் 1959 வரை பணியாற்றினார்.


அவர் 12 செப்டம்பர் 1959 முதல் 12 ஜனவரி 1963 வரை மலாயா நீதித்துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார்

மலாய் அல்லாதவர்கள் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்று யார் சொன்னது?

நமது சுதந்திரத்தின் தொடக்கத்தில் மலேசியா எப்படி இருந்து இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இப்போது போல இனம் மற்றும் மதத்திற்கு அப்போது குருட்டுத்தனம் எதுவும் இல்லை.

06 அக்டோபர் 2021

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கி இருக்கிறார்

06.10.2021

1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25  வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தன் சம்பளத்தைக் குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். இருப்பினும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

3. அம்மா நீங்கள் விரும்பியதைச் சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாகக் காட்டப் படுகிறது. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. நீங்கள் தொலைபேசியில் பேசும் போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பது இல்லை என்று அப்பா எப்போதாவது  நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடம் இருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

5. அலமாரியில் வண்ண மயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தன் சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கு என்று ஆபரணம் ஏதும் இருப்பது இல்லை. தனக்கு என்று ஏதும் வாங்கியதும் இல்லை.  இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னமும் தெரியவில்லை.

7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும் போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி அல்லது கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் பண்டிகைக்கு எனக்காகச் சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். நான் முன்பே முடிவெடுத்து விட்டேன். எனக்கும் வேண்டாம் என்கிறார்.  குழந்தைகளுக்குப் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் வாங்கித் தருகிறார். அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி  சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது ​​குழந்தைகள் சொல்கிறார்கள்; வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார்?

*அவர்தான் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும்  காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.* இருந்தாலும் அப்பா ஏன் பின்தங்கி இருக்கிறார் என்று தான் தெரியவில்லை.