15 ஜனவரி 2024

போகி பண்டிகை

 இமயவர்மன், திருச்சி - 15.01.2024


🎉 போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும்!. இது பின்னர் மருவி போகிப் பண்டிகை என்றாகி விட்டது.

🎉 வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது. 


🎉 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர்.

🎉 இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாளன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள்.

காப்புக் கட்டுதல் :

🎉 போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு-ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

🎉 மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் வருவதைத் தடுக்கும். விஷ முறிவுக்கு உதவும்.

🎉 வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை வரவிடாமல் தடுக்கும். ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளைத் தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.

இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :

🎉 மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.

🎉 மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.

பழைய பொருட்களை எரித்தல் :

🎉 பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். 

அதனோடு மட்டுமல்லாமல்  மனதில் இருக்கும் துயரங்களையும் அழிப்பதால் இப்பண்டிகையைப் போக்கி என்றனர். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். 

அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாடத்தின் வெளிப்பாடாகும்.

10 ஜனவரி 2024

வாழ்க்கையில் நீக்குதல் கோட்பாடு

THEORY OF ELIMINATION IN  LIFE 


பெருமாள், கோலாலம்பூர் (10.01.2024)

வாழ்க்கையில் நீக்கப் படுவதற்கான 3 நிலைகள்:

60 வயதில், பணி செய்த இடம் உங்களை நீக்குகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையின் போது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக அல்லது ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சாதாரண நபராகத்தான் திரும்புவீர்கள்.

எனவே, உங்கள் கடந்தகால வேலையில் இருந்து மேன்மையின் மனநிலையையும் உணர்வையும் பற்றிக்கொள்ளாதீர்கள், உங்கள் ’ஈகோ’-வை விடுங்கள், அல்லது நீங்கள் உங்கள் இலகுவான உணர்வை இழக்க நேரிடலாம்!


70 வயதில், சமூகம் உங்களை படிப்படியாக நீக்குகிறது.

நீங்கள் சந்திக்கும் மற்றும் பழகிய நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் குறைவாக இருப்பார்கள், மேலும் உங்கள் முன்னாள் பணியிடத்தில் யாரும் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள். 
 
ஏனென்றால், இளைய தலைமுறைக்கு உங்களைத் தெரியாது; மேலும் நீங்கள் அதைப் பற்றி சங்கடமாக உணரக் கூடாது!

80 வயதில், குடும்பம் உங்களை மெதுவாக நீக்குகிறது.

உங்களுக்கு பல பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் மனைவியுடனோ அல்லது உங்களுடனோ வாழ்வீர்கள்.

உங்கள் பிள்ளைகள் எப்போதாவது வருகை தந்தால், அது அன்பின் வெளிப்பாடாகும். எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீவிரமாக இருப்பதால், குறைவாக வருகை தந்தால் அதற்கு அவர்களைக் குறை கூறாதீர்கள்!

90 வயதில், பூமி உங்களை தவிர்க்க விரும்புகிறது. இந்தக் கட்டத்தில், சோகமாகவோ துக்கமாகவோ இருக்க வேண்டாம்,

ஏனென்றால் இதுவே வாழ்க்கையின் வழி, எல்லோரும் இறுதியில் இந்தப் பாதையைத் தான் பின்பற்றுவார்கள்!

எனவே, நம் உடல்கள் இன்னும் நல்ல நிலையில் இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!

நீங்கள் விரும்புவதைச் சாப்பிடுங்கள், நீங்கள் விரும்புவதைக் குடியுங்கள், விளையாடுங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் விசயங்களைச் செய்யுங்கள்.


நினைவில் கொள்ளுங்கள், உங்களை நீக்காத ஒரே விசயம் வாட்ஸ்அப் குழு மட்டுமே. எனவே, குழுவில் அதிகம் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வணக்கம் சொல்லுங்கள், உங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், வருத்தப்பட வேண்டாம்!

எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள். இந்த்ச் செய்தி மூத்த குடிமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

(பதில் இடுகைகள்)

உலக வாழ்க்கையை
நாளும்
நினைத்தாலே
ஈகோ 
என்ற கேள்விக்கே இடமில்லை.

இனி எப்படி வாழ்வது
என்று
இப்பொழுது தான்
திட்டமிடவேண்டுமா,
இதற்கு எப்பவோ
தயாராகி
இருந்திருக்கவேண்டும்.

வாழும் வரை
போராடு
உண்மைதான்.

உடலில்
வலுவுள்ளவரை
போராடி
மகிழ்ந்து
மடிவோம்.
அவ்வளவுதான்.

நமது வயதினிலே
வேறு 
என்ன செய்வது.
எல்லாம்
அவன் செயல்
என்று
வாழ்ந்த காலங்களை
அசை போட்டுக்கொண்டு
உடம்பையும்
கவனித்துக்கொண்டு
நமது
நேரம் வரும்போது
இறைவனே
அழைத்துக்கொள்வான்.

பிறப்பும்
இறப்பும்
அவன் கையிலே.

தற்காலிக
இடமாக
இந்த பூலோகத்தில்
தங்க வாய்ப்பளித்த
இறைவனுக்கு
நாளும்
நன்றி சொல்லி
நம் நாளை
எதிர்நோக்குவோம்.

சரணம் சொல்லி
மரணம் காண்போம். ta

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம்

மகாலிங்கம், பினாங்கு (07.01.2024)

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம், பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரிலிருந்து, அன்றைய போர்ட் வேல்ட்; இன்றைய கோலா செபத்தாங் வரையில், ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பெற்றது. 


அன்று தைப்பிங் நகரில் உள்ள ஈய இலம்பங்களில் எடுக்கப்பட்ட ஈயக் கட்டிகளை போர்ட் வேல்ட் துறைமுகத்திற்கு எடுத்து செல்ல உருவாக்கப் பட்டது தான் இந்த இரயில் தண்டவாளம்.

இன்றைக்கு ஒட்டு மொத்தமாக இந்தப் பகுதிகள் அனைத்தும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. வித விதமான வியாபாரங்கள் நடைப் பெறுகின்றன; வித வித மான உணவுகள், கருவாடுகள், கடல் பயணம் என்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்.

உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள்...

(பதில் இடுகைகள்)

பெருமாள், கோலாலம்பூர்

இதிலே 
பழமையும்
புதுமையும்
இருக்கையிலே...

மலேசியா முழுமையும்
துடைத்தொழிக்க
காரணமென்ன...

பழயனவற்றை
இன்றும்
பாதுகாத்து
வரும் அரசு
ஏன்
அத்தகைய மாற்றத்தை
முன்னெடுத்தது
என்பதை
அன்றைய KTM நிர்வாகம் பதிலலித்தால் சிறப்பாக இருக்கும்...

இப்படி பழசும்
பதுசும்
பார்வையில்
விழுந்தால்
அந்த கால
நினைவலைகள்
சிறகடித்துப்போகும்...

கண்டிப்பாக
சுற்றுப் பயணிகளை
கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன.
MATIC பின்னோக்கி நகருமா. ta

12 டிசம்பர் 2023

அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

(இன்று 12.12.2023 மலேசியாவின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் மலேசிய இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) ஓர் அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. அதன் விளைவாக மலேசியா முழுமைக்கும் மலேசிய இந்தியர்களிடையே அதிருப்தி நிலை. அது குறித்து மலேசியம் புலன அன்பர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு உள்ளன.)

Dhanasegaran Thevanathan: அமைச்சரவையில் தமிழர்கள் காணாமல் போனது மலேசிய எம்.ஜி.ஆர் செயத சாதனை... வேதனை... மாற்றத்தின் மகிமை


Muthukrishnan Ipoh: மக மக மனுசன் இப்போதைக்கு போக மாட்டான் என்று கிந்தா கிளி ஜோசியர் சொல்கிறார்... அவரின் இரண்டாம் தவணையில் நான்கு இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்து நம்மை எல்லாம் கண் கலங்க வைத்தாரே... ஆனால் கழுத்தை அறுக்கப் போகிறார் என்பதை தாமதமாகத் தான் ஐயா தெரிந்து கொண்டோம்...

Dhanasegaran Thevanathan: அவன் கழுத்தறுத்தான்... இவன் கருவறுத்தான்...

12/12/2023, 11:07am - Ganeson Shanmugam Sitiawan: விடாது ஐயா சும்மா விடாது. இவரது ஆட்டம் பொய்யாட்டம் என்றால் நிச்சயம் பேரிடி விழும். விழுந்தே தீரும்.

12/12/2023, 11:07am - Muthukrishnan Ipoh: என்னத்தைச் செய்தாலும் நம் இனத்திற்கு அரசியல் விமோசனம் என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருக்கும்... ’அவர்களுக்குள்’ பதவிகளை மாற்றிக் கொள்வார்கள்... ’அம்புட்டுத்தான்... எல்லா பிரதமர்களும் அதைத்தானே செய்து வருகிறார்கள்... அன்பருக்கு’ பிடிக்காதவர்களை பதவியில் இருந்து தூக்கி விடுவார்...


அருமையான சொல்லாடல்... உண்மையிலேயே இப்போது உள்ளவன்... கருவையே அறுக்கிறான்... வெள்ளிடைமலை...

12/12/2023, 11:10am - Mahalingam Padavettan Penang: தமிழனுக்கு சாப கேடோ???

12/12/2023, 11:10am - Dhanasegaran Thevanathan: தமிழர் முழுஅமைச்சராக இல்லாதது சரித்திரத்தில் முதல் முறை

12/12/2023, 11:11am - Muthukrishnan Ipoh: அடுத்த தேர்தலில் நம் இனத்தின் வாக்குகள் நிச்சயம் ????... இப்போதே என் பிள்ளைகளிடம் சொல்லி வைத்து இருக்கிறேன்...

12/12/2023, 11:11am - Ganeson Shanmugam Sitiawan: 👍👍👍

12/12/2023, 11:12am - Dhanasegaran Thevanathan: ஆட்சி கவிழ ஆதரிக்கிறேன்

12/12/2023, 11:13am - Mahalingam Padavettan Penang: ஆசை வார்த்தைகளை நம்பி நம்பி ஏமாந்த ஒரு இனம்... யாரைத்தான் நம்புவதோ?


12/12/2023, 11:16am - Muthukrishnan Ipoh: மிகச் சரி. இந்த நாட்டின் இந்தியர் மக்கள் தொகையில் 82.8 விழுக்காடினர் தமிழர்கள்.

12/12/2023, 11:16am - Dhanasegaran Thevanathan: தழிழர் சார்ந்த இயக்கங்கள் உடனடியாக தங்கள் ஒட்டு மொத்த எதிர்ப்பை காட்டுவார்களா

12/12/2023, 11:26am - Muthukrishnan Ipoh: இதைக் காரணம் காட்டி இன்னோர் அரசியல் கட்சியைத் திறப்பார்கள்.... 


12/12/2023, 11:28am - Mahalingam Padavettan Penang: ஆனால், ஒரு சதவிகிதம் அரை சதவிகிதம் இருக்கிறவர்களுக்கு 82.8 சதவிகிதம் உள்ள தமிழர்கள் எலும்பு துண்டுக்கு அடிமையாக இருப்பதால் தான்... நமது உரிமைகள் பறிபோகுது... நம்மவர்கள் உணர்வார்களா?

12/12/2023, 11:29am - Mahalingam Padavettan Penang: இதுவும் சுயநலம் தான்... பேச வேண்டியது நிறைய இருக்கிறது...

12/12/2023, 11:35am - Kalaivani Johnson: பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!

12/12/2023, 11:52am - Dhanasegaran Thevanathan: 3 துணை தமிழ் அமைச்சர்கள்
குலா. சரஸ்வதி ரமணன்


12/12/2023, 12:39pm - Muthukrishnan Ipoh: மகிழ்ச்சியான செய்தி... மூன்று தமிழர்கள்... எதிர்ப்பார்த்தது... சிவக்குமார் அமைச்சரான பிறகு இவர் மீது நிறையவே குற்றச்சாட்டுகள்... இலக்கவியல் அமைச்சராக கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆள்பல அமைச்சராக Steven Sim Chee Keong நியமிக்கப்பட்டு உள்ளார். 

*மலேசிய அமைச்சரவை மாற்றம்*

*TERKINI*

Rumusan Rombakan Kabinet
_*MENTERI YANG DIGUGURKAN*_

1) YB Sivakumar a/l Varatharaju
_*MENTERI BAHARU*_

1) Gobind Singh Deo
2) Datuk Seri Dr.Haji Dzulkefly Ahmad
3) Datuk Seri Johari Abdul Ghani
4) Steven Sim Chee Keong
5) Datuk Seri Amir Hamzah Azizan (dilantik Senator)

_*TIMBALAN MENTERI YANG DIGUGURKAN*_

1) Ramkarpal Singh a/l Karpal Singh
2) Datuk Siti Aminah binti Aching

_*TIMBALAN MENTERI YANG BAHARU*_

1) Datuk Seri Noraini Ahmad
2) M.Kulasegaran a/l V.Murugeson
3) Datuk Ramanan Ramakrishnan
4) Wong Kah Woh
5) Dr. Zulkifli bin Hasan (Dilantik Senator)

_*RUMUSAN KESELURUHAN*_

1) Jumlah Ahli Jemaah Menteri meningkat daripada 28 orang ke 31 orang
2) Jumlah Timbalan Menteri meningkat daripada 27 orang ke 29 orang. 
3) Jumlah keseluruhan meningkat daripada 55 orang ke 60 orang.


12/12/2023, 1:25pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்களில் எவரும் அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லை* >>> பிரதமரின் கணிப்பாக இருக்கலாம்... மாண்புமிகு சிவகுமார் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி; மற்றும் ஜ.செ.க தலைவர்களில் ஒருவர். இந்தக் கட்டத்தில் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு சேவை செய்ய அவரின் அனுபவம் மிக மிக அவசியம் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இப்போது ஜ.செ.க ஆட்சியில் உள்ளது. எனவே மாண்புமிகு சிவக்குமார் தொடர்ந்து இந்தியர்களின் பிரதிநிதியாகவும், தகவல் தொடர்பாளராகவும் செயலாற்றலாம்.

இந்தியர்களின் ஏழ்மை நிலை, கல்வி நிலைப்பாடு, கோயில்கள் பிரச்சினை, சமூக-பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகச் சீர்கேடுகள் மற்றும் இவை போன்ற பல பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

எதிர்க்காலத்தில் மாண்புமிகு சிவக்குமார் நம் இந்தியர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து. இன்று அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை... மிக மிகக் கேவலமாகவும் மிக்க வேதனையாகவும் உள்ளது. 

1957-இல் மலாயா சுதந்திரம் அடைந்ததில் இருந்து... இதுவரையிலும் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டதே இல்லை. *அன்வார்  கொடுத்த பரிசு* 

12/12/2023, 1:51pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா....தகுதி இல்லாத ஒருவரை தேர்ந் தெடுத்தது நம் தவறு தான். அவர் யார் என்பதை நமக்கு காண்பித்து விட்டார்.

12/12/2023, 1:52pm - Muthukrishnan Ipoh: நம்பினோம்... மோசம் போனோம்...

Melayu Anak saya... 
China Anak Saya... 
India Anak Saya... 
Kadazan Anak Saya ...

12/12/2023, 1:58pm - Kalaivani Johnson: எம்.ஜி.ஆர் .... பல பொய்கள்...

12/12/2023, 1:59pm - Muthukrishnan Ipoh: தலை சுற்றுகிறது... இரண்டு பெணடோல் இருந்தால் கொடுங்கள்... 

12/12/2023, 2:09pm - Perumal Kuala Lumpur: இந்த ஆட்சியின் லட்சணம் பாதியிலே பிட்டுக்கலாம்... சபாகாரன் துணிந்து ஓராங் டாயாக் என்கிறான். சாபாவின் பூமியின் புத்திரன் என பேச்சு ஆரம்பம். இங்கே mgr சீக்கிரம் காத்து வாங்க போகலாம். நாளும் பெரிக்காத்தான் வாங்கு வாங்குன்னு வாங்குரான். புதிய அமைச்சரவையை அவரே மெச்சிக்கனும். தலை சுற்றத்தான் செய்யும். ஆப்பு அடிக்க தயாராவோம்.

12/12/2023, 2:35pm - Perumal Kuala Lumpur: பாவம் YB sivakumar அவர்கள். இந்த ஆட்சி மட்டுமே ஒரு தமிழனை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

12/12/2023, 2:45pm - Muthukrishnan Ipoh: விரைவில் மலேசிய இந்தியர்கள் பின் தள்ளப்படுவார்கள்... கோபிந்த் சிங் மலேசிய இந்தியர் அல்ல... *சீனர்கள்* 6 முழு அமைச்சர்கள் 6 துணை அமைச்சர்கள்... மலேசிய இந்தியர்களுக்கு... 
*1* முழு அமைச்சர்... (சீக்கியர் - bukan Orang India)
*3* இந்தியத் துணையமைச்சர்கள்

12/12/2023, 2:53pm - Perumal Kuala Lumpur: மத்தியில் ஒரு சீக்கியர் வடக்கே ஒரு சீக்கியர்
12/12/2023, 2:56pm - Perumal Kuala Lumpur: தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய சீக்கியர்களை Mgr அடையாளம் காட்ட முடியுமா.

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: தமிழனை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்... ஏமாளி தமிழனை எப்படியெல்லாம் வதைக்கலாம் என்பதை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துக் கொண்டு மிக சிறப்பாக காயை நகர்த்துகிறார்கள்...

12/12/2023, 2:59pm - Mahalingam Padavettan Penang: PMX க்கு நன்றி வாழ்த்துக்கள்.

12/12/2023, 2:59pm - Kalaivani Johnson: தமிழர்களுக்கான பிரதிநிதிகள் சரியாக இருந்திருந்தால், நாம் ஏன் அன்வாருக்கு ஓட்டு போடப் போகிறோம்..? வாய்த்தவர் சரியில்லை, வந்தவரும் சரியில்லை...இப்போது ஓட்டுப் போட்டவர்களை குறை சொல்லி என்ன பயன்?  நமது இனத்தின் ஒற்றுமையின்மையே இந்த சூழ்நிலைக்கு காரணம்...

12/12/2023, 3:06pm - Perumal Kuala Lumpur: அம்னோ பொலிவிழந்து செயல்படுகிறது. ஓங்கி நின்ற நம் தாய்கட்சியோ ஒதுங்கி நிற்கிறது... பாரிசானை கணக்கிட்டு கச்சிதமாக காய் நகர்த்தும் Mgrரை காலை வாரி விடுவோர் வெகு தூரமில்லை. மணி அடிக்காதே என்ற போதே மரண அடி கொடுத்திருக்க வேண்டும். சங்கூதும் ஒலி தொடங்கியாச்சு.

12/12/2023, 3:24pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுக்கப்பட்டு நம் மலேசியம் இணையத் தளத்தில் பதிவு செய்யப்படும்... 💐


12/12/2023, 3:28pm - Kennedy Arumugam Grik Perak: அப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுகமாக இருந்தது. இப்பொழுது பார்க்கும் பொழுது மனதிற்கு சுமையாக இருக்கிறது.

12/12/2023, 3:31pm - Kalaivani Johnson: நம் இனத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இவர் அன்று... இவர் தவறு இல்லையே.... மனம் குமுறுகிறது.... 😡😡

நானும் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்... ஆனால் நடப்பது எல்லாம் கானல் நீர்... உண்மைதான்... அவரின் ஆனந்தக் களிப்பு... இமயத்தில் உச்சம்... பலரும் அப்படியே... 😞😞

12/12/2023, 3:35pm - Kennedy Arumugam Grik Perak: எல்லோரையும் நம்பி நம்பி மோசம் போனது தான் மிச்சம் ஐயா.

12/12/2023, 3:36pm - Muthukrishnan Ipoh: நஜீப் எவ்வளவோ பரவாயில்லை... நடப்பது நடந்தே தீரும்... 😞

12/12/2023, 3:38pm - Kalaivani Johnson: மிகச் சரியாக கூறினீர்கள் ஐயா...நாம் அனைவரும் ஆனந்த களிப்பில் இருந்தோம்.....நம்பிக்கை துரோகி.....

12/12/2023, 4:04pm - Mahalingam Padavettan Penang: அன்று பார்த்த போது கூட கடுப்பாக தான் இருந்தது... இப்போது 1000 மடங்கு மகா கடுப்பாக இருக்கு... இப்படிப்பட்ட சுய நிலை மறந்த ஜென்மங்கள் கூட இருக்கா என்று... 😭😢😭😢😭

12/12/2023, 5:07pm - Kumaran Marimuthu: இந்தியர்களை பின் தள்ளும் முயற்சிகளை இன்றைய பிரதமர் தீவிரப்படுத்தி இருக்கின்றார். இது அவருக்குப் புதிதல்ல.

சிலாங்கூர் மாநிலத்தில் PKR சார்பில் ஒரு தவணை மட்டுமே ஒருவருக்கு ஆட்சிக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டது. கடந்த மூன்று தவணைகளாக ஒரு இந்தியருக்கும் PKR சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிரித்து சிரித்து கழுத்தறுத்துவிட்டார் அன்வார். ஆனாலும், அந்தக் கட்சி இந்திய ஆதரவாளர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

12/12/2023, 5:14pm - Kumaran Marimuthu: சாகிர் நாய் முன்பு இட்ட ஓலம் நினைவில் உள்ளதா? காபிர்கள் அமைச்சர்களாகவும் உயர் பதவிகளிலும் இருக்கக்கூடாது; இசுலாமியர்கள்தான் மேல்மட்டத்தை அலங்கரிக்க வேண்டும்; காபிர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குக் கீழ் அடிபணிந்துதான் வாழ வேண்டும் என்று கூறியது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அன்வரும் அவரின் சீடர்தானே? குருவின் ஆசியை நடைமுறைபடுத்துகிறார்...... மலேசிய MGR

12/12/2023, 5:26pm - Kalaivani Johnson: நாய் நன்றி உள்ள மிருகம் ஐயா... சாகிர் கழுதையை, ஒருநாள் இந்தக் கழுதை பின்னங்காலால் உதைக்கும் பொழுது, பின்னாள் நிற்கும் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தவர் உதை வாங்குவார்... கூடிய விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது...

12/12/2023, 5:50pm - Perumal Kuala Lumpur: கண்மூடித்தனமான தொண்டர்களை பகடைக்காய் ஆக்கியவர்... பதவி சுகத்தால்... பழமையை மறந்து... புதுமையான சுகபோகம் காண்கிறார். வரும் ஒரு  திருப்புமுனை அது. ஏவுகனையாகவே வரும்.

12/12/2023, 5:55pm - Murugan Sivam: மலேசிய எம்.ஜி.ஆர் தெய்வம்... இன்னும் இருக்கு.....

12/12/2023, 5:56pm - Raja Sg Buluh: நம் இனத்திற்கு முழு அமைச்சர் இல்லாத புதிய அமைச்சரவை. தமிழன் முழு அமைச்சராக இருக்க லாய்க்கில்லையோ!!!இந்த நாட்டு தமிழர்களுக்கு ஒரு தலைக்குனிவு! சிங் சமூகத்தை விட நாம் என்ன அறிவில் குறைந்தவர்களா?

தமிழன் அரை மந்திரியாக இருக்கத்தான் லாயக்கு என்று பிரதமர் முடிவு எடுத்துவிட்டாரோ? இவருக்கு அரை மந்திரி கொடுத்து அவமானப் படுத்தியது நியாயமா?

12/12/2023, 6:00pm - Perumal Kuala Lumpur: பாரிசான் ஆட்சி தானே நடக்குது அதையே பின் பற்றி ஒரு  தமிழனுக்கு முழு அமைச்சர் தந்திருந்தால் அன்வாரின் பதவியோ பட்டமோ பறி போயிருக்குமோ.....


12/12/2023, 6:04pm - Raja Sg Buluh: இந்தச் செய்தியை கேட்டால் தமிழனுக்கு முழு மந்திரி கிடைக்க வாய்ப்பே இல்லை ராஜா. நல்ல அடி.........

12/12/2023, 6:23pm - Murugan Sivam: அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் தேனும்...(எம்ஜிஆர்)

12/12/2023, 7:10pm - Raja Sg Buluh: வணக்கம் மலேசிவாழ் தமிழினத்தினர் அனைவரும் இதனைக் கட்டாயம் படித்துப் பார்ப்பதோடு இனிவரும் காலங்களில் இந்நாட்டு அரசியலும் இந்த அரசியலினால் தமிழர்களாகிய நமது எதிர்கால நிலைப்பாடும் மிகப் பெரிய கேள்விக்க குறியாகவுள்ளது??? 


இம்மண்ணில் ஐந்து  தலைமுறையை எட்டியுள்ள நாம் இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்த  இனம் என்று பெருமைப் பேசுவது வெட்டிப் பேச்சுக்கு இனி இடமில்லை.  

இன்றைய இளையோர்களும் பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளால் எந்தவோரு கடினங்களும் மேற்கொள்ளாமல் 4 வேலை சோறு, உடுத்த உடை, நண்பர்களோடு சுற்றித் திரிந்து எதிர்காலத்தைப் பற்றி கவலையின்றி இருக்கின்றனர் (சிலரை தவிர). 

இப்போது உள்ள இளையோர் முதலில் அனுபவிப்போம் பின்னால் பார்த்துக் கொள்வோம் எனும் தத்துவத்தைக் கடைப்பிடிக்கின்றனர் (Most if current generation policy is to enjoy first n the rest later part). 

எனவே நமக்கு நாமேதான் எதிர்காலத்தை முடிவு செய்துக் கொள்ள வேண்டுமேயொழிய எந்த அரசியல் கட்சியும் தலைவரும் வாயிலாக எதுவும் கிடையாது? தயவுசெய்து இதனைப் பொறுமையாக முழுமை படித்துப் பகுத்தறிந்து பகிருங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்.  

(Dear beloved Msian Tamilians.  Please take few moment and be patient to read rationally this comment n share it. The previous and the current political scenario does not benefit us at all.  We may proud to say that we particularly majority Tamils who makes the Indian community had contributed the economic growth and for development and also for the progress of this nation. This old self-proud sayings does not valid n doesn't make sense to this current Malaysia.  And as such the previous and the current government never bother about us.  So we have to take care of our  future by ourselves. Think rational. Thank you 🙏🙏🙏

2/12/2023, 8.14pm - Kumaran Marimuthu: துணை அமைச்சர் பதவியைக் கொடுத்து அன்வார் குலாவை ஏமாற்றிவிட்டதாக நீங்கள் ஆதங்கப் படுகின்றீர்கள். ஆனால், தூக்கி எறிந்த எலும்புத் தூண்டை கௌவிக் கொண்டு ஓடும் நாயைப் போல அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளாரே... அதற்கு என்ன சொல்வது ஐயா? மானங்கெட்ட பிழைப்பு ஐயா இது...... 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

12/12/2023, 8.40pm - Perumal Kuala Lumpur: அரசியல்வாதிகள் எது கிடைத்தாலும் கௌவிக் கொள்வதில் பேர் பெற்றவர்கள்

12/12/2023, 8.44pm - Perumal Kuala Lumpur: அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை

12/12/2023, 9.08pm - Murugan Sivam: அப்போ குலாவை ராஜினாமா செய்ய சொல்லாமே... இங்கே பலருக்கு குலாவுடன் நேரடி தொடர்பு உண்டுதானே....

12/12/2023, 9:10pm - Raja Sg Buluh: அதுதான் எலும்புத் துண்டு கிடைத்துவிட்டது. எப்படிங்க ராஜினாமா ???????


08 டிசம்பர் 2023

பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர்

சிலாங்கூர், புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் 08.12.2023 - 10.12.2023 வரையில் இலவச இருசக்கர வண்டி கவசத் தொப்பிகள் வழங்கப்படுகின்றன எனும் செய்திக்கு பத்து தீகா கரு. ராஜா வழங்கிய பதில் பதிவுகளில் அவரின் மனவேதனைகள் பிரதிபலிக்கின்றன. அண்மையில் அவரின் மூன்றாவது மகன் ராஜமோகன் புற்றுநோயினால் மரணம் அடைந்தார். அந்தத் தாக்கம் இன்றும் அவரிடம் உள்ளது.


அவரின் பதிவு: காலையிலேயே போனால் ஒரு கவசத் தொப்பி வாங்கி வரலாம். ஒரு தடவை நான் பெட்டாலிங் ஜெயாவில் இருந்து பத்து தீகா போகும் போது இடையில் மடக்கி பழைய தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு ஒரு புதிய தொப்பியைக் கொடுத்தார்கள்.


எனக்கு இப்போது 77 வயது. இன்னும் இருசக்கர வண்டியை விரும்பி ஓட்டுகிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து இருசக்கர வண்டி ஓட்ட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வார்கள். இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவேன்.

சமீபத்தில் காலமான என் மகன் பெரிய மோட்டார் ஓட்டுவான். 900 சி.சி. நான் அவன் விசயத்தில் தலையிடமாட்டேன். இந்த மலேசியாவில் எல்லா இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறான். அவனோடு சேர்ந்து சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பயணிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்தக் கேன்சர் வந்து என் மகன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

பதில் இடுகைகள்:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

வயதை நினைக்காதீர்கள் ராஜா... மனசோடு வாழுங்கள்... என்னைப் பாருங்கள்... இன்றும் 16 என்றும் 16... அப்படி போய்க் கொண்டே இருக்கிறேன்... வயதை நினைத்தால் அங்கே ஒரு உள்ளார்ந்த தடை ஏற்படுவதை உணரலாம். Age is a number என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.