18 ஆகஸ்ட் 2021

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மறைந்த தினம்

1945 ஆகஸ்ட் 18-ஆம் தேதி *நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்* பயணம் செய்த விமானம் தைவான், பாமோசா தீவுக்கு அருகே விபத்துக்கு உள்ளாகி அவர் இறந்து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.


இந்தச் செய்தி இந்திய மக்களை நிலை குலையச் செய்தது. நேதாஜி இறந்து விட்டார் என்பதைப் பலரும் நம்பவில்லை.

அவருடைய மரணம் மர்மமாகவே இன்றும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-இல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி. கோசலாவைக் கொண்ட “விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது.

ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திய ஜி.டி. கோசலா, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.

 

16 ஆகஸ்ட் 2021

தாலிபன்கள் யார்? எழுச்சி பெற்றது எப்படி?

16.08.2021 - BBC News தமிழ்

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்கள், தலைநகர் காபூலில் அமைதி வழியில் ஆட்சியை அரசாங்கம் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதன் முன்னோட்டமாக, தலைநகர் காபூலுக்கு வெளியே ஆயதங்களுடன் தம் போராளிகளைக் காத்திருக்குமாறு தாலிபன் தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது.

இதனால் கிட்டத்தட்ட எந்த நேரத்திலும் ஆப்கானிஸ்தானைத் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது உறுதியாகி விட்டது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான நடைமுறைக்கு அரசு தயாராகி வருவதாக ஆப்கன் உள்துறை அமைச்சர் உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றி பேசி இருக்கிறார்.

இந்த அளவுக்கு அரசாங்கத்தை அடிபணிய வைக்கும் நிலைக்கு தள்ளுவதற்கு தாலிபன்களால் எவ்வாறு முடிந்தது?

2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் அகற்றப் பட்டனர். பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தாலிபன்களும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் ஒப்புக் கொண்டனர்.

அதன்பேரில், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் வெளியேறத் தொடங்கின.

இதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தங்களுடைய செல்வாக்கை நிலைநாட்டத் தொடங்கிய தாலிபன்கள், பல இடங்களில் தாக்குதல் நடத்தி முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.

இன்று கடைசிக் கட்டமாக காபூல் நகரை தாலிபன்கள் சூழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு 20 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அமெரிக்கா வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள், கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தி இருக்கும் அமெரிக்கத் துருப்புகளை முழுமையாக பின்வாங்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், தாலிபன்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் அரசைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் பல நகரங்களையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.

2018-ஆம் ஆண்டு தாலிபன் குழுக்கள் அமெரிக்காவுடன் தாலிபன்கள் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 2020-இல் இரு தரப்புக்கும் தோஹாவில் ஓர் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது.

அதில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்குவதாகவும், தாலிபன்கள் அமெரிக்க துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அல்-காய்தா போன்ற மற்ற தீவிரவாத அமைப்புகளை, தாலிபன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைக்குள் இருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது எனவும்; ஆப்கானிஸ்தானின் தேசிய அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தாலிபன் படைகள், ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்களைத் தொடர்ந்து இலக்கு வைத்து தாக்கியது. தற்போது அமெரிக்கா தன் துருப்புகளைப் பின் வாங்கச் செய்து இருப்பதால், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிவேகமாக, நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யத் துருப்புகள் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 1990-களில் தான் 'தாலிபன்' என்கிற பஷ்தோ சொல் உருவானது.

தொடக்கத்தில் தாலிபன் இயக்கத்தில் பஷ்துன்களே அதிகம் இருந்தனர். இந்த இயக்கம் கடுமையான சன்னி இஸ்லாத்தை போதித்தது. இந்த இயக்கத்துக்கு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் இருந்து நிதி உதவி கிடைத்தது.

தாலிபன் அதிகாரத்துக்கு வந்த பிறகு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவிக் கிடக்கும் பஷ்துன் நிலப்பரப்புகளில் அமைதியை மீட்டுக் கொண்டு வரவும், தங்களின் கடுமையான ஷரியா விதிகளை அமல்படுத்தவும் உறுதி கூறியது.

ஆஃப்கானிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இருந்த தாலிபன் அமைப்பு, மிக குறுகிய காலத்திலேயே தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டது. 1995 செப்டம்பரில் ஹெராத் என்கிற ஈரான் எல்லையை ஓட்டி இருக்கும் மாநிலத்தைக் கைப்பற்றியது.

சரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் ஆப்கன் தலைநகரான காபூலைக் கைப்பற்றியது தாலிபன். அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்த புர்ஹானுத்தின் தான் ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன் அமைப்பை நிறுவி அவர்களை எதிர்த்து போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேகத்தில் 1998-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 90 சதவீத ஆப்கானிஸ்தானைத் தாலிபன் அமைப்பு கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

தொடக்கக் காலத்தில் தாலிபன்களின் வருகையை மக்கள் வரவேற்றனர். தாலிபன்கள் வந்த இடங்களில் எல்லாம் ஊழலை ஒழித்தனர். சட்டம் இல்லாமல் இருந்ததற்கு ஒரு முடிவு கொண்டு வந்தனர்.

சாலை வசதிகளை ஏற்படுத்தினர். அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பாதுகாப்பாகவும் வணிக ரீதியாக செழித்து வளரவும் முடிந்தது. எனவே மக்களும் அவர்களைத் தொடக்கத்தில் ஆதரித்தனர்.

அதே நேரத்தில் தாலிபன்கள் இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்ட தண்டனைகளை அறிமுகப் படுத்தினர் அல்லது ஆதரித்தனர். குற்றவாளியாக அறிவிக்கப் பட்டவர்களை பொது வெளியில் கொல்வது; திருடுபவர்களின் கை கால்களை வெட்டுவது; போன்ற தண்டனைகளை பின்பற்றப்பட்டன.

ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும்; பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் புர்காக்களை அணிய வேண்டும்.

டி.வி., இசை, சினிமா போன்றவற்றைத் தாலிபன்கள் தடை செய்தனர். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை அந்த அமைப்பு தடை செய்தது.

பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டன.

2001-ஆம் ஆண்டு, மத்திய ஆப்கானிஸ்தானில் இருந்த உலகப் புகழ் பெற்ற பாமியன் புத்தர் சிலையைச் சிதைத்தது தாலிபன். இதற்கு அனைத்துலக அளவில் மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

பாகிஸ்தான் தான் தாலிபன் என்கிற அமைப்பு உருவாகக் காரணம். அந்த நாடு தான் தாலிபன் அமைப்பை வடிவமைத்தது என பலரும் கூறிய போது, அதைத் திட்டவட்டமாக மறுத்தது பாகிஸ்தான்.

ஆனால் தாலிபன் அமைப்பில் ஆரம்பக் காலக் கட்டத்தில் இணைந்தவர்கள் பலரும், பாகிஸ்தானில் இருக்கும் மதரஸா பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆப்கானிஸ்தான் நாட்டில், தாலிபன்களின் ஆட்சி இருந்த போது அதை அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதைத் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் ஆதாவை வழங்கின.

அதே போல தாலிபன் அமைப்புடனான தூதரக உறவை முறித்துக் கொண்ட கடைசி நாடும் பாகிஸ்தான் தான் என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தானையே நிலைகுலையச் செய்து விடுவோம் என மிரட்டியது தாலிபன் அமைப்பு.

2012 அக்டோபரில் பாகிஸ்தானின் மிங்கோரா எனும் நகரத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த மலாலா யூசுப்சாய் தாக்கப் பட்டதை ஒட்டுமொத்த அனைத்துலகச் சமூகம், பாகிஸ்தானியத் தாலிபன் தாக்குதலைக் கண்டித்தது.

அடுத்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் தாலிபன்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலில், தாலிபன்களின் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்தது.

2013-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய டுரோன் தாக்குதலில் ஹகிமுல்லா மெஹ்சூத் உட்பட மூன்று முக்கிய பாகிஸ்தான் தாலிபன் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகின் கவனம் மீண்டும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது.

அல்-காய்தா தீவிரவாத அமைபுக்கும், ஒசாமா பின் லாடனுக்கும் அடைக்கலம் கொடுத்ததாகத் தாலிபன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2001 அக்டோபர் 7-ஆம் தேதி அமெரிக்க இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படை கூட்டணி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.

டிசம்பர் முதல் வாரத்துக்குள் தாலிபன் ஆட்சி நிலைகுலைந்தது. அப்போதைய தாலிபன் அமைப்பின் தலைவர் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின் லாடன் உட்பட சில மூத்த உறுப்பினர்கள் எப்படியோ தப்பி ஓடினர்.

தாலிபனின் பல மூத்தத் தலைவர்கள் பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்பட்டது. அங்கிருந்து கொண்டு தாலிபன் இயக்கத்தை நடத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது.

எத்தனையோ வெளிநாட்டு இராணுவத் துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தாலும், தாலிபன் மெல்ல தன் செல்வாக்கைப் பெற்று தன் அதிக்கத்தை ஆப்கானிஸ்தான் மண்ணில் விரிவாக்கிக் கொண்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் காபூலில் பல்வேறு தாலிபன் தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறின. இதில் கேம்ப் பேசின் பேஸ் தாக்குதல் குறிப்பிடத் தக்கது. தாலிபன் குழுவினர் நேட்டோ படைகள் மீதே நடத்திய தாக்குதல் இது.

கத்தாரில் தாலிபன்கள் ஓர் அலுவலகத்தைத் தொடங்குவது தொடர்பாக அறிவித்த போது, 2013-இல் அமைதி தொடர்பாக சில பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால் மறுபக்கம் வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் 2015-இல் தாலிபன் குழுவின் முக்கிய தலைவரான முல்லா ஒமரின் மரணத்தை மறைத்ததாக ஒப்புக் கொண்டது. அவர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த முல்லா மன்சூர் தாலிபன் குழுவின் தலைவரானார். இதே காலக் கட்டத்தில், மிக முக்கிய நகரங்களில் ஒன்றான குண்ட்ஸை வெற்றி கொண்டது தாலிபன்.

இது 2001-இல் தாலிபன் சந்தித்த தோல்விக்குப் பிறகு காணும் முக்கிய வெற்றிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு மே மாதம் முல்லா மன்சூர் ஒரு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் பதவிக்கு மற்றொரு தாலிபன் தலைவரான மெளலவி ஹிபாத்துல்லா அகுந்த்ஸாதா என்பவர் வந்திருக்கிறார்.

இப்போது வரை இவர் தான் தாலிபன் இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்பட்டு வருகிறார்.

பிப்ரவரி 2020 அமெரிக்கா தாலிபன் அமைதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தாலிபன் சிக்கலான தாக்குதல் நடத்துவதை கைவிட்டது.

நகரங்கள் மீது, இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை விடுத்து, தனி மனிதர்களை இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைதிச் செயல்பாட்டாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் என இலக்கு வைத்து தாக்கத் தொடங்கியது.

அது தாலிபன்கள் தங்களில் தீவிரவாத கொள்கையில் இருந்து மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிநாட்டுப் படைகள் இல்லையெனில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தாலிபன்கள் கைப்பற்றி விடலாம் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் 2021-இல், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒட்டுமொத்த அமெரிக்கத் துருப்புகளும் பின்வாங்கப்படும் எனக் கூறினார்.

ஏற்கனவே பல்வேறு நாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கி விட்டன. எனவே தாலிபன்கள் பல்வேறு நிலப் பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

நேட்டோவின் மதிப்பீடுகள் படி, தற்போது 85,000 முழு நேரப் போராளிகள் தாலிபனில் உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலப் பகுதிகளை வரையறுப்பது கடினம்.

இருப்பினும் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை தாலிபன்கள் நேரடியாக கட்டுப்படுத்தி வருவதாகச் சமீபத்தைய கணிப்புகள் கூறுகின்றன.

பலரும் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக தாலிபன்களின் விரிவாக்கம் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் மோசமான உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அமெரிக்க படைகளை வழி நடத்திய ஜெனரல் ஆஸ்டின் மில்லர் என்பவர் கடந்த ஜூன் மாதம் எச்சரித்தார்.

மேலும் இது ஒட்டு மொத்த உலகத்துக்கே கவலை அளிப்பதாக அமையலாம் எனவும் கூறி உள்ளார்.

அதே மாதம் வெளியான அமெரிக்காவின் புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கையில், அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்ற பிறகு, அடுத்த ஆறு மாத காலத்துக்குள், ஆப்கானிஸ்தான் அரசு கவிழ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அந்த ஊகம், தற்போது உண்மையாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

பின்னூட்டங்கள்:

கென்னடி ஆறுமுகம்:
ஆப்கானில் தலிபான் ஆட்சியை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக சீனா விளங்குகிறது.

முகில்: தலிபான்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் சொல்லப் படுகிறது. தெற்கு ஆசியாவில் இனி சீனாவின் கை ஓங்கும்இருக்கலாம் ஐயா.

கென்னடி ஆறுமுகம்:  அமெரிக்காவை எதிர்கொள்ள இது அவர்களுக்கு உதவலாம்.

முகில்: இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஆப்கான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

கணேசன் சண்முகம்: அடுத்து ஆப்கானிஸ்தானில் சீனாவில் பணத்தை அள்ளி  வீசும்.

முகில்: இந்தியாவை மிரட்டுவதே அதன் நோக்கம்.

கென்னடி ஆறுமுகம்: ஆப்கானில் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

கணேசன் சண்முகம்: கண்டிப்பாக

கென்னடி ஆறுமுகம்: அவர்களுக்கு பாலஸ்தீனத்துக்கு போராடவே நேரம் போதவில்லை. இதுவரை எந்த அரபு தேசமோ, இஸ்லாமிய நாடுகளோ ஆப்கான் மக்களுக்கு ஆதரவாக இதுவரை குரல் எழுப்பவில்லை.

முகில்: காபூல் விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி அதன் பாதுகாப்பை அமெரிக்க கூட்டுப் படையினர் மீட்டுள்ளனர். காபூல் நகரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக ஆப்கன் படையினர் தாலிபன்களிடம் வீழ்ந்து விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது

அமெரிக்காவின் உதவியுடன் ஆப்கன் படையினர் இயங்கி வந்தனர். அந்த வகையில் அமெரிக்காவை ஆப்கானிஸ்தானில் இருந்து துரத்த வேண்டும் என்பதே சீனாவின் இலக்கு. அப்படித்தான் சீனாவின் அரசியல் சாணக்கியம் செயல்படுகிறது. செயல்பட்டு வந்தது.

கென்னடி ஆறுமுகம்:  ஆமாம் ஐயா. அமெரிக்க கூட்டுப்படைகள் ஆப்கான் மண்ணிலிருந்து வெளியான பிறகு தான் தாலிபான் உத்வேகம் எடுத்தார்கள். ஆனால் வெகு விரைவாகவே ஆப்கானை கைப்பற்றி விட்டார்கள்.

முகில்: தாலிபன்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும், துணை அதிபர் அமிருல்லா சாலேயும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

அமெரிக்கா வெளியேறுவதற்கு முன்னர் ஆப்கான் படையினருக்கு போதுமான பயிற்சிகள் போதுமான தளவாடங்களை வழங்கி உள்ளனர்.

கென்னடி ஆறுமுகம்: ஆப்கான் இராணுவமும் எதிர்ப்பு காட்டாமல் அடங்(க்)கி விட்டார்கள்.

முகில்: ஆனால் சீனாவில் உதவிகள் அமெரிக்காவின் இலக்கைச் சிதறச் செய்து விட்டன. ஆமாம். அவர்கள் அப்படியே தலிபான் பக்கம் சேர்ந்து கொண்டார்களாம்... சண்டைகள் போடாமல்... தலிபான்களுக்கு வசதியாகிப் போனது

கென்னடி ஆறுமுகம்:  அனைத்து போர் தளவாடங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். அவற்றுள் பல ஆயுதங்களை அவர்களுக்கு (தாலிபான்) தெரியவில்லையென செய்தி.

முகில்: ஆப்கானிஸ்தான் முக்கிய தலைவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்குச் சென்று விட்டார்கள். நாட்டை நடத்த ஆப்கான் தலைவர் எவரும் இல்லை... அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று செய்திகள் வருகின்றன...

முகில்: என்ன நடக்கும். உங்களால் யூகிக்க முடிகிறதா? பாகிஸ்தானுக்கு ஆபத்து... சீனா உள்ளே வரும்.

கென்னடி ஆறுமுகம்:  எல்லாம் வல்லரசு நாடுகளின் கையில். (அமெரிக்கா, சீனா) அவர்கள் ஆட்டுவிப்பார்கள்... இவர்கள் ஆடுவார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா.

ஆனால் பாவம் அங்குள்ள பொதுமக்களின் நிலை கேள்விக்குறியே?

முகில்: மத்திய கிழக்கு நாடுகள் உடையும். அங்கே சீனாவின் உதவிக் கரங்கள் நீளும். இந்தியாவின் வல்லரசு கனவு பலிக்கும் காலம் நெருங்கி வருகிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நண்பர்கள்.

சீனாவை எதிர்ப்பதற்கு அமெரிக்கா, இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தியா விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் (பாகிஸ்தான், இலங்கை, பர்மா, நேபாள், பூடான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான்) அனைத்திலும் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இது இந்தியாவிற்கு கெட்ட செய்தி.

[7:28 pm, 16/08/2021] Kennedy Arumugam Grik Perak: இது நிதர்சனமான உண்மை ஐயா.

முகில்: மூன்றாம் உலகப் போர் வராமல் இருந்தால் சரி. ஏன் என்றால் அப்படி வந்தால் மனுக்குலம் அழிந்து போகலாம்.

கென்னடி ஆறுமுகம்:  ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பலத்த போட்டி.

முகில்: அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லாமே அணுகுண்டுகளை வைத்து இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்னால் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். படித்து இருப்பீர்கள்.

கென்னடி ஆறுமுகம்:  அப்படி ஒன்று வந்தால் அதில் சீன தேசம் முக்கிய காரணியாக இருக்கும்.

முகில்: 50% 50%... இந்தியா சீனா...

கென்னடி ஆறுமுகம்: ஆமாம் ஐயா.

முகில்: சரி தம்பி கென்னடி. நல்ல அறிவார்ந்த இளைஞராய் உள்ளீர்கள். வாழ்த்துகள். பின்னர் பார்ப்போம்.

நிறைய அனைத்துலக நடைமுறை விசயங்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். 👍👍

கென்னடி ஆறுமுகம்: மகிழ்ச்சி ஐயா நன்றி 🙏🙏

தனசேகரன் தேவநாதன்: கடந்த காலங்களில் தங்களின் சீன எல்லைகள் விரிவாக்கம் இந்திய நிலை கட்டுரைகள் நினைவிற்கு வருகிறது ஐயா யானையும் யானையும் மோதி பூனைகள் நசுங்கிப் போகலாம்🧐🧐🧐🧐🧐







 

14 ஆகஸ்ட் 2021

செஞ்சோலை சிறுவர் இல்லப் படுகொலை

14.08.2021

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் நாள் தமிழரின் வரலாற்றில் துயர் படிந்த ஒரு நாளாகும்.

தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம். உலகத்திலேயே அதிகளவு பெண்கள், அதுவும் பள்ளிக்கூட  மாணவிகள் ஒட்டு மொத்தமாகக் கொல்லப் பட்டது ஒரு வரலாறாக மாறி இருக்கிறது.


உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்தச் சாதனையை இலங்கை அரசாங்கம் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி அதிகாலை வேளையில் நடத்தி முடித்தது.

வன்னிப் பகுதியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய இடங்களில் இருந்து கல்விப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 61 மாணவிகள் சில மணித் துளிகளில் மரணித்து போனது ஈழ மண்ணை சோகத்தில் மூழ்கடித்தது.

இந்தப் பயிற்சி  வகுப்புகள் ஆகஸ்ட் 11, 2006-இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.


ஆனால் பயிற்சி வகுப்புகள் தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டனர் .

பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப் போய் கிடந்தன. துள்ளிக் குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாகக் கிடந்தன. கனவுகளைச் சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக் கொண்டு கிடந்தது.

அதிகாலை வேலை கிணற்றடியிலும், கழிப்பறையிலும், சமையலறையிலும், தத்தம் கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டனர் .

காலை வேளையில் இலங்கை அரசின் வெறி பிடித்து வந்த கிபிர் விமானங்கள் ஆறு முறை குண்டுகளைக் கொட்டியது. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது.


மாணவிகள் வாயிலின் ஊடாக ஓட முடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது. அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நான்கு திசைகளிலும் போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது .

மாணவிகள் எந்தத் திசை வழியாகவும் வெளியே ஓட முடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப் பட்டது.

அங்கிருந்த நூற்றுக் கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் இரத்தக்கறை மாறாது இருக்கிறது.


உலக வரலாற்றில் நடந்த மறக்க முடியாத கொலைகளில் பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட இந்த நாளை தமிழர்களால் எப்படி மறக்க முடியும்?

நன்றி: சங்கதி -கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

பின்னூட்டங்கள்:

வெங்கடேசன்: கொடூர அரக்கக் குணம் கொண்டவர்களால் கொல்லப்பட்ட நம் பிள்ளைகளுக்கு இதய பூர்வ அஞ்சலி். எவ்வளவு உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்டனர். உலகமே இன்று வரை, கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வேதனை. இனப் படுகொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். மனித குலமே வெட்கித் தலை குனிய வேண்டும் 😡😡

தேவிசர கூலிம்: படிக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. கொடும் பாவிகளை இன்னும் அந்த இறைவன் விட்டு வைத்திருக்கிறாரே...

முகில்: தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி வரலாறு படைப்பது உண்மைதான். போற்றுகிறோம். ஆனால் செஞ்சோலையில் குண்டுவீசி 400 குழந்தைகள் கொல்லப் படுவதற்கும்; தொடர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் படுவதற்கும் காரணமாக இருந்த சிங்கள அரசிற்குத் துணை போனவர்கள் ஒரு கொலைஞர் குடும்பம் தானே..இதை எந்த வரலாற்றில் சேர்ப்பதாம்?

இதற்குத் துணை போன குடும்பத்தாரைத் தூக்கி வைத்துப் புகழும் இனத்தவரைத் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப் படுகிறேன்.

தமிழீழத்தில் தமிழன மக்களை அழிப்பதற்குத் துணை போன குடும்பத்தின் புகழாரங்களைத் தயவு செய்து இந்தப் புலனத்தில் பகிர வேண்டாம்.

வெங்கடேசன்: இனத் துரோகி. இவர் நினைத்து இருந்தால் ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். தன் மக்களுக்காக இனத்தையே பலி் கொடுத்தவர். துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது 😭

முருகன் சுங்கை சிப்புட்:

முகில்: ஓர் இனம் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கும் போது, தன் மகளுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடியவர். அவர் குடும்பத்தின் இனம் மானம் காக்க வேண்டும். அப்படித்தானே.

சாப்பிடுகிற சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடும் எந்தத் தமிழரும் ஓர் இனத்தை அழித்தக் குடும்பத்திற்குப் பரிந்து பேச மாட்டார்.

முருகன் சுங்கை சிப்புட்: எப்படி அய்யா. வெறும் வாய்மொழியிலா..? செயலிலா? அதையும் சொல்லி விட்டால் நம் இனத்தில் தான் இன மானம் காக்க நிறைய போராளிகள் உள்ளனரே உடனே திரண்டு விடுவார்கள்.

மொத்தமாக ஓர் இனம் போரால் அழிந்து, வறுமையில் வாடிக் கொண்டும், அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம். அந்த வருடத் தீபாவளியை பட்டாசு வெடித்துக் தானே கொண்டிருந்தோம். எங்கே போச்சு நம் இன உணர்வு அய்யா...

முகில்: இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே புலனத்தில் ஒரு வாக்குவாதம். அதில் தாங்கள் சொன்னது: தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்படும் போது மலேசியத் தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பூப்பறித்துக் கொண்டு இருந்தார்களா என்று கேட்டீர்கள். நினவு இருக்கிறதா. நீங்கள் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை.

அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, இன்றைக்கு அந்தக் கொலக்காரக் குடும்பத்திற்குப் பரிந்துரை செய்வது போல ‘இன மானம் காப்போம்’ என்று சப்போர்ட் பண்ணுவது, அறவே எனக்குப் பிடிக்கவில்லை.

முருகன் சுங்கை சிப்புட்: திசை திருப்பவில்லை அய்யா. வழியைச் சொல்லுங்கள்... நான் வாய் சொல் வீரன் அல்ல. கலைஞர் எனக்கும் எதிரிதான்😡

முகில்: இப்படித்தான் அன்றைக்கும் கேட்டீர்கள். என்னத்த வழி சொல்வது. முதலில் உங்களுக்கு என்று ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தமிழீழ மக்கள் சாகடிக்கப் படுவதற்கு துணை போன குடும்பம் என் எதிரிகள் என்று வைராக்கியக் கொள்கை வேண்டும்.

கொலக்காரக் குடும்பம் ஆயிரத்தெட்டு நன்மைகள் செய்தாலும் செத்துப் போன இரண்டு இலட்சம் தமிழர்கள் மீண்டு வந்துவிடப் போவது இல்லை.

ஆச்சு பூச்சு என்றால் மலேசியத் தமிழர்கள் தீபாவளி கொண்டாடி பட்டாசு கொளுத்தினார்கள் என்று கதையை மாற்றி விடுவது.... போதும்.

நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள். சிராங்கூன் ரோட் அம்மாச்சி பூக்கடையில் பூமாலை கட்டிக் கொண்டு இருந்தீர்களா.

தயவு செய்து எதைப் பற்றி பேசுகிறோமோ அதைப் பற்றி பேசுங்கள்... தீபாவளி பட்டாசு கதை எல்லாம் வேண்டாம். சரிபட்டு வராது.

முருகன் சுங்கை சிப்புட்: உண்மை அய்யா... மீண்டும் சொல்கிறேன் நான் இனமானம் உள்ளவன்.  அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி போட்டு விட்டு தப்பித்து கொள்ள நினைக்காதவன். தப்பு என் மீதும் உண்டு... உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் உண்டு. "பழமையே பேசிக் கொண்டு எதிர்காலத்தை பற்றி துளி அளவும் சிந்திக்காதவர்கள் நாம்"

முகில்: சரிங்க ஐயா. நீங்க இனமானம் உள்லவர். எங்களுக்கு எல்லாம் இல்லை. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள். தயவு செய்து திசை திருப்ப வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. பிறகு பார்ப்போம்.

முருகன் சுங்கை சிப்புட்: நான் நிறுத்திக் கொள்கிறேன் அய்யா. ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.

முகில்: ஏற்கனவே டென்சன்.. இதில் இன்றைக்கு வேறு. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் எனக்கும் பிரசர் எகிறிப் போய் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும். நிறுத்திக் கொள்கிறேன். நன்றி.

வெங்கடேசன்: உடல் நலத்தில் கவனம் தேவை ஐயா🙏

முருகன் சுங்கை சிப்புட்: தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான். நன்றி

முகில்: நான்கு வயதிலேயே காது குத்தி விட்டார்கள். ஏழு வயதில் அரிச்சுவடியை மணலில் எழுத, காதில் போட்டு இருந்த கடுக்கனைக் கழற்றினேன். மறுபடியும் குத்த வேண்டியது இல்லை. 🙏

தனசேகரன் தேவநாதன்: ஈழத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் அன்றைய சூழ்நிலையில் செய்ய இயன்றதைச் செய்தார்கள். எப்படி என்ன என்று கேட்காதீர்கள் செய்தவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் 💪💪💪💪💪💪😄

ஜீவன் தங்காக்: உண்மை

முருகன் சுங்கை சிப்புட்: இனி இந்த புலனத்தில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை. இதுவரை உங்களுடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சி... நிறைய கற்றுக் கொண்டேன். அருமையான குடும்பம். கருத்துச் சுதந்திரம் மட்டுமே இல்லை. மிகுந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன்! அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏

[10:50 pm, 14/08/2021] Satya Francis: ஒரு தந்தை இல்லாமல் நாங்கள் எப்படி ஒரு குடும்பமாக பயணம் செய்ய முடியும்? தயவுடன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் ஐயா...

[10:52 pm, 14/08/2021] Satya Francis: வணக்கம் ஐயா. இப்படி எல்லாம் நீங்கள் விடை பெற்றுக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது?

முகில்: இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் சாகடிக்கப் பட்டதை ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்களாம். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்தது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தானாம்

அநியாயத்தை நியாயப் படுத்த கதைகள் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனசாட்சி இல்லாமல் எப்படிங்க இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா? நியாயமே இல்லை. 🙏

கரு ராஜா சுங்கை பூலோ: ஆமாம் முருகன் சொன்ன கருத்தை ஏற்க முடியாது.

கணேசன் சண்முகம்: உண்மை ஐயா.

கரு ராஜா சுங்கை பூலோ: தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அராஜகம்.

[11:05 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஈழத தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருப்பார் கள்

[11:08 pm, 14/08/2021] Raja Sg Buluh: தமிழ் நாட்டுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ஏற்க முடியவில்லை.

[11:10 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு சில சூடு சொரனை இல்லாத தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!!!!!?

[11:11 pm, 14/08/2021] Raja Sg Buluh: எல்லாத் தமிழனையும் சூடு சொரனை இல்லாதவர்கள் என்று நினைக்க வேண்டாம்

[11:13 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு கருத்து சொல்லும் போது யோசித்து சொல்லனும்.

[11:15 pm, 14/08/2021] Raja Sg Buluh: கருத்து சுதந்திரம் என்று ஏற்க முடியாத கருத்துக்களைச் சொல்வது தப்பு. உலகமே அழுதது. இதை உலக தமிழர்கள் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா??????

கணேசன் சண்முகம்: உலகத் தமிழர்கள் மனதில் ஆழமாய் பதிந்த மரணச் சம்பவம்.


முகில்: இந்த முகங்களைப் பாருங்கள். எத்தனை வயது. இந்தக் குழந்தைகள் தான் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகள். இவர்கள் மட்டும் அல்ல. 400 குழந்தைகள்.

இந்த மாதிரி சின்னஞ்சிறுசுகளைக் கொன்று போட்ட கூட்டத்திற்குத் துணை போன கும்பலுக்கு பரிவு காட்டுவது நியாயமா?

இப்படி எல்லாம் நடந்த பிறகு ’தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்..புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார் என்று கதை சொல்வது நியாயமே. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.

Raja Sg Buluh: இதை எல்லாம் எப்படி மறக்க முடியும்???

கணேசன் சண்முகம்: கண்டிப்பாக மறக்க முடியாத சம்பவம். உடல் சிதைந்த , உயிரற்ற உடல்கள்.

வெங்கடேசன்: உண்மையான தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். காலப் போக்கில் மறக்கடிக்கப் படலாம். ஆனால் வரலாற்றை மாற்ற இயலாது. கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்கள் இன்னும் சிலர் சாட்சிகளாக உயிருடன் இருக்கிறார்கள்.

ராதா பச்சையப்பன்: அன்று சேதி கேட்டு அழுததை, இன்றும் நினைத்து பாருங்கள். இனியும் இது போன்று வேண்டாமே...








 

தந்தைகளின் இறுதிக்காலம்

14.08.2021

தந்தைகளின்  இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும்; முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரைக் கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.

மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, ’மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும்’ என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.

எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காகக் கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
.
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதை செய்து இருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்குத் தனிமை மிக கொடுமையானது. ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கி கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்துத் தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

குடும்பத் தலைவன் என்பவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்று எல்லாம் வாழ்ந்து விட்டவன்.

தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.

பின்னூட்டங்கள்

தேவிசர கூலிம்: அருமையான அவசியமான பதிவு... முற்றிலும் உண்மையான கருத்துகள்... என் தந்தையின் ஞாபகம் வருகிறது. அப்பாவிற்காகவே மாதத்தில் இரண்டு முறை வீட்டிற்கு செல்வேன்.

அம்மா தவறி விட்டதால் அப்பாவை நாங்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டோம். இருந்தும் அவர் பாதுகாவலர் வேலைக்குச் செல்வார். யார் கையையும் எதிர் பார்க்க மாட்டார்.

சிறப்பான உணவு செய்தால், கணவரிடம் வேலைக்குச் செல்லும் வழியில் அப்படியே கொடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புவேன். இதைப் படித்தவுடன் அதெல்லாம் ஞாபகம் வருகிறது.

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா. தந்தையர்களுக்காக இந்தப் பதிவு. வரிக்கு வரி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. இன்றில்லை. தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பு.

பெருமாள் கோலாலம்பூர்: பிள்ளைகளுக்காக ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை அழகாக விவரித்துள்ளீர். ஆனால் பெற்றவர்கள் கொடுத்தே பழக்கப் பட்டவர்கள். பிள்ளைகளிடம் கேட்டுப் பெறாதவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்.👍👌

ராதா பச்சையப்பன்: 🌻🙏படித்ததும் மனம் அழுகிறது. எட்டு வயதிற்குப் பிறகு தந்தை பாசம் இல்லை. அப்பாவுக்குச் செல்லப் பெண் நான். திருமணத்திற்குப் பிறகும் மாமனாரும் இல்லை. பார்த்ததும் இல்லை. இதை எல்லாம் நினைக்கையில் வேதனைதான். 🙏🌻

வெங்கடேசன்: கலங்க வேண்டாம் மா. பெண் பிள்ளைகள் கலங்கக் கூடாது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் தந்தை மாதிரிதான். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள் தான். கலங்க வேண்டாம் 👍🙌🙌

பாலன் முனியாண்டி: இன்றைய பிள்ளைகள் உணர்வார்களா என்பது கேள்வி குறிதான் ஐயா.

காரணம் அன்று முதியோர் இல்லம் பார்ப்பதற்கு அரிதாக இருந்தது.
இன்று பார்க்கின்ற இடமெல்லாம் முதியோர் இல்லத்தை  காண முடிகின்றது. இதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்.....

 இந்த கட்டுரை படித்தபோது  கண்கள் கலங்கின....


13 ஆகஸ்ட் 2021

மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா?

13.08.2021

மாண்புமிகு குலசேகரன் அமைச்சராகச் சேவை செய்த காலத்தில், அவர் மலேசிய தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் அமைவதற்கு முன்னர், பக்காத்தான் ஹரப்பான் கட்சி ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டது. வழக்கமாக எல்லாக் கட்சிகளும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக அந்தக் கொள்கை விளக்க அறிக்கையில் சொல்வார்கள்.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்ட அந்தக் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்து, மாண்புமிகு குலசேகரனைத் தரம் தாழ்த்திச் சிறுமைப் படுத்தும் ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் காணொலியும் பதிவாகி உள்ளது.

சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டிவிட வேண்டுமா என்று அந்தக் காணொலிப் பதிவாளர் கேட்கிறார். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கரு. ராஜா: இந்த அம்மணி நியாயமாகப் பேசுறாங்க... ஒரு தமிழனை, குறை சொல்ல, தமிழர்கள் தான் வருகிறார்கள்.

......: நியாயமான கருத்துரை. மாண்புமிகு குலசேகரன் அமைச்சரானதும் ஏற்கனவே இருந்த அதிகாரம் என்ன என்ன செய்து இருக்கிறது; அந்த அதிகாரத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்கவே ஆறு மாதங்கள் பிடித்தன. கோப்புகள் மேல் கோப்புகள்.

இவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்தே நண்பராக இருந்தவர். அதனால் சில பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். பொதுவில் பகிர இயலாது. அரசு நிந்தனையாகலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வெளியே தெரியாமல் நம் இனத்திற்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா.

......: உங்களுக்கும் அதைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்

தேவிசர கடாரம்: இவர் இந்திரா காந்தியின் வழக்கிற்கு பணம் வாங்கவில்லை என்று கேள்விப்பட்dஉ இருக்கிறேன்...

......:உண்மைதான். இந்திராகாந்தியின் பிரச்சினை இந்த நாட்டுத் தமிழர்களின் பிரச்சினை எனும் முன்னெடுப்பில் நகர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் பணிபுரிந்த பாலர் பள்ளியில் அவருக்கு ஊழியப் பிரச்சினை; ஊதியப் பிரச்சினை. அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவர். இங்கு விளக்கமாகச் சொல்ல இயலாது. புரிந்து கொள்ளும்மா...

சித்தியவான் சனாதன ஆசிரமம்

தனசேகரன் தேவநாதன்: சித்தியவான் சனாதன ஆசிரம குழந்தைகளின் அடையாள அட்டை பிரச்சனைகளை 90 சதவிகிதம் தீர்வு கண்டவர். பொறுப்பில் இல்லாத போதும் இருந்த போதும் அந்த ஆசிரமத்திற்கு இன்று வரை உதவி வருபவர்.

இவ்விடம் வந்தால் ஆசிரமக் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடும் அன்பான மனிதர். தனது பதவி காலத்தில் பெரிய மானிய தொகையை ஆசிரம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியவர். சித்தியவான் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் 🙏🌹👌🙏🌹👌

......: தகவலுக்கு நன்றிங்க. ஆயர் தாவார், சித்தியவான் பகுதிகளில் தமிழர்கள் பலருக்கு நீல அடையாள அட்டைகள்; குடியுரிமை சான்றிதழ்கள் பெற்றுத் தந்துள்ளார். உண்மை.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

கணேசன் சண்முகம் சித்தியவான்: தெரியும் ஐயா. அன்றைய நிகழ்வை நான் தான் வழி நடத்தினேன். அமைச்சர் என்ற முறையில் சிறப்பான சேவையை செய்தார் ஆசிரமத்திற்கு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தகவலுக்கு நன்றிங்க கணேசன் ஐயா. கண்ணுக்குள் ஈரம் இருப்பது நமக்கும் தெரியாது. வெளியே உள்ளவர்களுக்கும் தெரியாது. கண்ணுக்கு மட்டுமே தெரியும்.

வெங்கடேசன்: ஒருவரை பற்றி நன்கு ஆராயாமல் கண்டபடி புலனங்களில் திட்டுவது நம் மக்களுக்கு வா(வே)டிக்கையாகி விட்டது 🤷



 

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

சாரதா நயனதாரா சாந்தி பெறுக

13.08.2021

செல்வி சாரதா நயனதாரா, முன்னாள் நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகள். இராஜகுமாரன் அவர்கள் மறைந்த ஆதி. குமணன் அவர்களின் அண்ணன் ஆவார். கோவிட் தொற்று காரணமாக நயனதாரா மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 


அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறோம்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறோம். 


பாதாசன்: நம்பமுடியவில்லை. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. செல்வி சாரதா நயனதாரா, இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகளின் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறேன்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.


ராதா பச்சையப்பன்: பார்க்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏.

மலையாண்டி மலாக்கா: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவா இந்த மண் மீது வாழும் எங்கள் இனத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்.

கரு ராஜா: ஆழ்ந்த இரங்கல். நாட்டில் மரணச் செய்தி மிகs சர்வ சாதாரணமாக வந்து கொண்டிப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது.


கலைவாணி ஜான்சன்: மரணங்களின் ஓலங்கள்.... ஜீரணிக்க முடியவில்லை.... என்னவென்று சொல்வது. மலேசிய மண்ணில் தமிழுக்காக கோலோச்சிய ஒவ்வொரு ஜீவன்களையும் மரணம் தழுவிச் செல்வது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை.... நயனதாராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கடேசன்: ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆந்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.😭

தனசேகரன் தேவநாதன்: அழகிய முத்தாரம் அறுந்து போனதே... என்று தணியும் இந்த வேதனை இறைவா இறைவா ஓம் நமசிவாய


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இறைவா... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாழ வேண்டிய வயது. ஆதி. இராஜக்குமாரன் தன் வாழ்நாளில் தன் மகளுக்காகவே வருத்தப் பட்டவர். மலேசியம் அன்பர்களின் ஆழ்ந்த இரங்கல்... ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

விஜயசிங்கம்: என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

உதயகுமார் கங்கார்: ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் நமசிவாய.

மகாலிங்கம் படவேட்டான்: ஆழ்ந்த இரங்கல்... ஓம் நமசிவாய... ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

செல்லா செல்லம்: ஓம் சாந்தி  🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி

 

மலேசியம் இணையத்தளத்தில் மலேசியம் புலனப் பதிவுகள்

13.08.2021

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் தகவல்கள் மூன்று வாரங்களில் தானாகவே அழிபடும். அந்த வகையில் ‘மலேசியம் இணையத்தளம்’ தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் உறுப்பினர்கள் பதிவு செய்த அழகு அழகான பதிவுகள்; மணிமணியான முத்திரைப் பதிவுகள் எல்லாமே அழிந்து போய் விட்டன.


இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது. மலேசியம் புலனத்தில் பதிவாகும் நல்ல பதிவுகள்; நேர்த்தியான பதிவுகள் அனைத்தும் மலேசியம் இணையத் தளத்திலும் உடனுக்குடன் பதிவாகும்.

அவ்வாறு பதிவு செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த படசம் இரண்டு மணி நேரம் வரை செலவாகலாம். பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் நேர்த்தியான பதிவுகள் அனைத்தையும் சேகரித்து இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

மலேசியம் இணையத்தளத்தில் பதிவாகும் புலனப் பதிவுகள் காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாம் மறைந்த பின்னரும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும்; அல்லது 1000 ஆண்டுகள் கழித்தும், அடுத்து வரும் தலைமுறைகள் அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். நம்மைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

மலேசியம் எனும் பெயரில் ஒரு புலனம் இருந்தது. இப்படி எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்; இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று அவர்களும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பதிவுகள் தான் நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனம்.

வெங்கடேசன்: சிறப்பான முயற்ச்சி வாழ்த்துகள் ஐயா. தங்கள் செயல் மிக சிறப்பான ஒன்று 🙏🙏

கணேசன் சண்முகம் சித்தியவான்: உண்மை ஐயா. போற்றப்பட வேண்டிய செயல். காக்கப்பட வேண்டிய எழுத்துச் சாசனங்கள்.

தனசேகரன் தேவநாதன்: இது ஒரு மாபெரும் பணி. பொய் சேவையே மெய் என கருதுகிறோம் எனும் அண்ணன் அன்பானந்தன் அவர்களின் அமுத மொழி  ஓட்டப் பந்தயத்தில் எங்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்களே...

பொய் புளுகுச் சரித்திர மூட்டைகளை அடித்துத் துவைக்கும் உங்கள் எழுத்துக்ள் என்றென்றும் உயிர் பெற்று வாழும். அன்னை சரஸ்வதி அனைத்தையும் உங்களுக்கு அருள்வாய் என அன்னையை வேண்டி இந்த அமுத கானத்தை உங்களுக்காகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

https://youtu.be/l1kYJFo-uBU

தேவிசர: சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

தேவிசர: வணக்கம் அப்பா. கற்றுக் கொண்டதை வீணே விரயம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன் படட்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட தங்களுக்கு இறைவன் எந்த நேரத்திலும் துணை இருப்பார்.

சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

கரு. ராஜா: அருமை

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் தனசேகரன் ஐயா. தங்களின் நீண்ட பதிவு மனதில் ஆழமாய் வருடிச் செல்கின்றது.

இதற்கு மேலும் எதை எழுதுவது... தெரியவில்லை. தங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் நாட்டிற்கும் தேவை. வீட்டிற்கும் தேவை. இந்தப் புலனத்திற்கும் தேவை. வாழ்த்துகள் ஐயா


 

12 ஆகஸ்ட் 2021

மலேசியக் கல்விச் சட்டத்தில் கிரந்த எழுத்துகள்

தமிழ் மலர்: 12.08.2021

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அந்தப் பாவனையில் மொழி மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மொழிச் சீர்த்திருத்தங்கள் தவிர்க்க முடியாதவை. எதை மாற்றம் செய்ய வேண்டுமோ; எதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டுமோ; அதைச் செய்வது சிறப்பு.

அந்த வகையில் மொழி மாற்றங்கள்; மொழிச் சீர்த்திருத்தங்கள் செய்பவர்களின் நல்ல நோக்கங்களைத் தவறாக எடைபோடுவது நம் நோக்கம் அல்ல. ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதைச் சிதைவுறாமல் சீர்த்திருத்தம் செய்வது நலம் பயக்கும். அதுதான் முக்கியம். சீர்த்திருத்தம் எனும் பெயரில் திணிப்புகளைத் தவிர்ப்பதும் சாலச் சிறப்பு.

மொழிச் சீர்த்திருத்தம் செய்யப்படும் போது, பொது மக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். நான் எடுத்த முடிவுதான் சரி என்று பிடிவாதம் செய்வது தவறு. பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் என்று முரட்டுவாதம் செய்வது தவறு.

கிரந்த எழுத்துகள் வட எழுத்துகள் அல்ல. இதைத்தான் மலேசியக் கல்வி அமைச்சின் பாடத் திட்டக் குழுவினரும் முன்வைக்கின்றனர். பாடத் திட்டங்களை வகுக்கும் போதும் சரி; தொகுக்கும் போதும் சரி; கிரந்த எழுத்துகள் என்று சில அத்தியாயங்களை உருவாக்கிப் பாடமாகச் சொல்லித் தருகிறார்கள்.

1957-ஆம் ஆண்டு, மலாயா சுதந்திரம் அடைந்த போது ரசாக் அறிக்கை (Razak Report) எனும் கல்வி அறிக்கை உருவாக்கப்பட்டது. மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்து ரஹ்மான் தாலிப் (Rahman Talib Report 1960) அறிக்கை வந்தது. அதன் விளைவாக கல்விச் சட்டம் 1961 (Education Act 1961) உருவானது. அப்போது தான் தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடத் திட்டங்களை உருவாக்கினார்கள்.

அந்தக் கட்டத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் கிரந்த எழுத்துகள் இணைத்துக் கொள்ளப் பட்டன. அப்போது இருந்தே கிரந்த எழுத்துகள் சட்டபூர்வமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தத் தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

எப்போது எழுதப்பட்ட பாட நூல்களில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாய் இருந்தன. கிரந்த எழுத்துகள் இருக்கின்றனவா இல்லையா என்றுகூட அடையாளம் தெரியாமல் பிணைந்து போய் இருந்தன.

பின்னர் காலங்களில் வடமொழிச் சொற்கள் களையப் பட்டன. ஆனால் கிரந்த எழுத்துகளை மட்டும் விட்டு விட்டார்கள். ஒன்றும் செய்யவில்லை. அந்த எழுத்துகள் இன்றும் பாட நூல்களில் வந்து போகின்றன. அப்படியே பிள்ளைகளுடன் மக்களுடன் ஐக்கியமாகி விட்டன.

மேலும் ஒரு தகவல். 2011-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் லீனஸ் (LINUS) கல்வி முறை அமல் செய்யப்பட்டது. (LINUS, Literacy and Numeracy Screening). இந்த லீனஸ் திட்ட நடைமுறை தமிழ்ப் பள்ளிகளில் அமல்படுத்தும் போது கிரந்த எழுத்துகளும் இருந்தன. 2011 அக்டோபர் மாதம் வரையில் 1100 ஆசிரியர்களுக்கு லீனஸ் கல்வி முறை பயிற்சிக்கப் பட்டது. அந்தப் பயிற்சிகளில் கிரந்த எழுத்துகள் பயன்பாடும் ஓர் அங்கமாக இருந்தது.

ஆக காலம் காலமாகத் தமிழ்ப்பள்ளிகளில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருப்பினும் அண்மைய காலங்களில் கிரந்த எழுத்துகளைத் தவிர்ப்போம் என்று ஒரு குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாம் தடைக்கல்லாக அமையவில்லை. போராட்டம் செய்யுங்கள். வெற்றி பெறுங்கள். ஆனால் மற்றவர்கள் சொல்லும் கருத்துகளுக்கும் செவி சாயுங்கள். 


பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: அதிகாலையிலேயே படித்து விட்டேன் ஐயா. கருத்து குருடர்களை ஒன்றும் செய்ய இயலாது. உங்கள் பின் பெரிய பட்டாளமே உண்டு ஐயா. உண்மையை உறக்க சொல்ல தயக்கம் வேண்டாம். தமிழோடு உயர்வோம் வாழ்க உங்கள் பணி 👌💞👌💞👌💞

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தங்களின் அன்பான ஆதரவான கருத்துகளுக்கு நன்றிங்க. பொதுவாக காலையில் பத்திரிகையைப் பார்ப்பது இல்லை. கட்டுரை வந்து இருக்கும் எனும் நம்பிக்கையில் மற்ற மற்ற வேலைகளில் ஈடுபடுவேன்.

இன்றைக்கு முதல் வேலையாகப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தேன். மனநிறைவு. தாங்கள் சொல்வது போல உண்மையைத்தான் சொல்கிறோம். உண்மையைத்தான் வலியுறுத்துகிறோம். அது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தனிப்பட்ட ’அஜெண்டா’, தனிப்பட்ட பார்வையில் சிலர் பிடிவாதம் பிடிக்கலாம்.

தோழரே. நம் பாதையில் நம்மால் இயன்றவரை நல்லவற்றைச் செய்து கொண்டே இருப்போம். 🙏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 நானும் காலையிலேயே கட்டுரையைப் படித்தேன். சில பல விசயங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே. தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான் என்பார்கள். அது போல வருவது வரட்டும். வந்த பிறகு பேசுவோம். கட்டுரையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கட்டுரையாளருக்கு நன்றி 🙏🌷.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க சகோதரி. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கடைசி வரிகளின் சொல்லாடலைக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

கரு. ராஜா, சுங்கை பூலோ: கட்டுரை அருமை ஐயா. உங்களிடம் வாலாட்ட முடியுமா? அலவாங்குப் போட்டு நோண்டி எடுத்து ஆதாரம் காட்டிவிட்டார் நம்ம வரலாற்று பேரரசு முத்துக்கிருஷ்ணன்.

எந்தெந்த காலங்களில் நம் முன்னோர்கள் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆதாரப் பூர்வமாக மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். இனி என்ன ஆதாரம் வேண்டும் இங்குள்ள தமிழ்ப் பண்டிதர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கும். இரண்டு நாள் கட்டுரைகளை படித்து ஓரளவு தெளிவு அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நன்றி. வணக்கம்.

வெங்கடேசன்: பூனைக்கு மணியும் சுண்டெலிக்கு சிலுவாரா? என்ன ஒரு வார்த்தை ஜாலம் ! 😄😄

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: (11.08.2021 பதிவு) நன்றிங்க ராஜா. சாட்டையடி என்று சொல்கிறீர்கள். ஆனால் காலையில் என்ன நடந்தது என்று கேட்கவில்லையே.

இன்று காலை மணி 9 இருக்கும். ஒருவர் மிக அமைதியாக அழைத்தார். கொஞ்ச நேரம் நன்றாக அமைதியாகப் பேசினார். நல்ல மனிதர் என்று முடிவு செய்யும் போதுதான் சுய ரூபத்தைக் காட்டினார்.

‘நீ தமிழனுக்கு பொறந்து இருந்தால் பார்ப்பான் எழுத்துக்கு அடிவருட மாட்டாய். தமிழ் மலருக்கு போன் செய்து என்ன செய்கிறேன் பார். உன்னை எழுத விடாமல் செய்கிறேனா இல்லையா பார்’ என்று ஒருமையில் மிரட்டிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

அவர் மிரட்டிய தோரணையைப் பார்த்தால் மேல்மட்ட அரசியல் செல்வாக்கு ஆள்பலம் இருக்கலாம் போலும். விடுங்கள். இந்த மாதிரி எத்தனையோ மிரட்டல்களைச் சந்தித்து விட்டேன்.

இருந்தாலும் மனசுக்குள் ஆதங்கம். உண்மையை எழுதுவதால் எதிர்கள்தான் அதிகமாகிறார்கள் எனும் ஆதங்கம்.

அதிகாரம் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால்... நாளைய தினம் இரண்டாவது கட்டுரை வராமல் போகலாம். சொல்ல முடியாது. அதுவே ஒரு பனிப்போரின் ஆரம்பம்.. பார்ப்போமே!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நன்றிங்க ராஜா. தெளிவான பார்வையில் சிறப்பான பின்னூட்டங்கள். ஆழமான பதிவு. சற்றுக் கூடுதலான தனிப்பட்ட தகவல். கிரந்த எழுத்துகள் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் வாட்ஸ் அப்; புளோகர், பேஸ்புக்; இன்ஸ்டகிராம் ஊடகங்களில் வழக்கம் போல பதிவு செய்யலாம் என்று நினைத்தேன்.

தாங்களும் பதிவு செய்யுங்கள் என்று காலையில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் மனத்தில் சின்ன சஞ்சலம்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜேந்திர சோழனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப் போய் நார் நாராகக் கிழித்து எடுத்து விட்டார்கள். நான் ஒரு தனிமனிதனாக ஒரே சமயத்தில் பத்துப் பதினைந்து தாக்குதல்களைச் சமாளித்தேன்.

அதன் பின்னர் சரியான மன உளைச்சல். நல்லதுதானே எழுதினேன். நல்லதுக்குத் தானே எழுதினேன். அதற்கு இந்த மாதிரியா... பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி என்று வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டார்கள். நல்ல ஒரு பாடம்.

ஊடகத்தில் பதிவு செய்யாமல் பத்திரிகையோடு விட்டு இருந்தால் பிரச்சினை பெரிதாகிப் போய் இருக்காது.

அதே போல கிரந்த எழுத்துகள் பற்றிய அந்த இரண்டு கட்டுரைகளையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்தால், சிலர் அவற்றைப் படம் பிடித்து மற்ற புலனங்களில் பகிரலாம். அதைப் பற்றி விவாதங்கள் நடக்கலாம். நல்ல பெயர் சிலருக்கு... கடைசியில் கெட்ட பெயர் எனக்கு.

நல்லதுக்கு காலம் இல்லைங்க. ’எப்ப... எப்ப... பாயலாம்’ என்று சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். வம்பை விலை கொடுத்து வாங்குவது சரியன்று. பத்திரிகை வாங்கிப் படித்துக் கொள்ளட்டுமே. அமைதியாக இருப்பதே சிறப்பு. என்ன சொல்கிறீர்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று எவருக்கும் தெரியாதுங்க.

பொன் வடிவேலு, ஜொகூர்: சகோதரர் முத்து அவர்களே, உங்களுக்கு துணையிருப்பவர் ஸ்ரீவிநாயகர், அன்னை ஸ்ரீமகாலக்‌ஷ்மி, சிவபெருமான், முருகப்பெருமான். தூசுகள் துவம்சமாகும் ௐ





நம்பிக்கை வைத்தால் அவமானம் நமக்கே

12.08.2021

ஆறுதல் கிடைக்கும் என்று சில வேளைகளில் நம்முடைய பிரச்சினைகளை நம்பிக்கையின் பெயரில் மற்றவரிடம் சொல்லி விடுகிறோம். இங்கே நம்பிக்கை தான் முதன்மை பெறுகிறது.

ஆனால் இந்தக் கலிகாலத்தில் உயிருக்கு உயிராய் நம்பியவர்களே மோசம் செய்து விடுகிறார்கள்.

2014-ஆம் ஆண்டில் என் நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் தோழி ஒருவர் இருந்தார். கூடப் பிறந்த தங்கைக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்துப் பழகி வந்தார். தன்னுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொல்லி விடுவார். நம்பிக்கை. நம்பிக்கை.

அந்தப் பெண்ணுக்குப் பண உதவி தேவைப்படும் போது எல்லாம் 50, 100, 200 என்று கொடுத்து உதவி செய்து வந்து இருக்கிறார். கணக்குப் பார்ப்பது இல்லை.

தங்கச்சி தானே என்று அவருடைய போன் பில்; கரண்டு பில்; அந்த பில் இந்த பில் என்று நிறைய கொடுத்து உதவி இருக்கிறார். சில ஆயிரங்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் என்னவோ பிணக்கு. அப்புறம் என்ன. நண்பரின் அந்தரங்க இரகசியங்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தன.

அதனால் நல்லா இருந்த அவருடைய மனைவிக்கும் அவருக்கும் சண்டைச் சச்சரவுகள். பிள்ளைகளும் தந்தையாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். குடும்ப உறவு முறை இன்றும் சீர் அடையவில்லை.

அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆகவே யாரிடமும் எந்த இரகசியத்தையும் சொல்லாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: உண்மை. நம்மிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால் நண்பனும் பகைதான். என் சொந்த அனுபவமே உண்டு. மனிதர்கள் பல வகை 🤷‍♀️

இராதா பச்சையப்பன்: 🌷🙏எதுவும் சொல்ல தோன்றவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை. 🤷‍♀️🤷‍♀️

கலைவாணி ஜான்சன்: சிறப்பு மிக்க பதிவு ஐயா... நிதர்சனமான உண்மை... 👍👍

போகும் பாதை பொல்லாத பாதை

12.08.2021

பதிவு செய்தவர்: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

போகும் பாதை பொல்லாத பாதை
திருந்தி வாழவா தெரியவில்லை
வேகமாக வளர்கின்ற காலத்தை
விளங்கி உயரவா புரியவில்லை

அமரர் டி.எம். ராமையா


போகும் பாதை பொல்லாத பாதை

கையில் புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறாய்

..... பாடல் வரிகள் தொடரும்



பின்னூட்டங்கள்:

முருகன் சுங்கை சிப்புட்:  அருமை இந்தப் பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன். அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏

டாக்டர் சுபாஷினி: நல்ல பாடல். இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. mp3 வடிவில் இந்தப் பாடல் இருந்தால் அனுப்புங்கள். இது மலேசிய பாடகர் எழுதி பாடிய உள்ளூர் பாடல் தானே...

வெங்கடேசன்: திசையறியா வைரஸ் பாதை. எப்போது முடியுமோ 😢

தனசேகரன் தேவநாதன்: போகும் பாதை பொல்லாத பாதை திருந்தி வாழ்வா தெரியவில்லை. மலேசிய பாடகர் அமரர் திரு T.m இராமையா பாடிய பாடல் 😢😥


தேவிசர கடாரம்: ஊதா....ஊதா...ஊதாப்பூ... 😍

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஊதா பூவின் உவகையில் மின்சாரக் கண்ணா படத்தின் பாடல்...

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
இன்றும் என்றும் உதிரா பூ...

தேவிசர கடாரம்: வாவ் 😍...அருமை👏👏👏👏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 சகோதரர் கவிஞர் அவர்களே 'கொஞ்ச நாட்களாய் காணவில்லையே".  நலம் தானே? கவிதையைப் பாடலாமே'. காலையிலேயே  புலனத் தலைவர் கூட பாட்டுப் பாடி இருக்கிறார் கவனித்தீர்களா? வேறு ஒருவர் 'ஊதாக் கலர் ரிப்பன், உனக்கு யார் அப்பன் என்று கூட பாட நினைத்தாராம். ஆனால் தலைவர் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு எதற்கு என்று விட்டு விட்டாராம்.  🤷‍♀️🙏🌷

இராதா பச்சையப்பன்: 🌷🙏 இந்த ஊதா பூ பாடல் நான் கூட பாடியது இல்லை.  உலகக் கட்டுரை நாயகனுக்குக் கட்டுரை எழுத மட்டுமே தெரியும் என்று நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. பாடல்களிலும், பாடல் நாயகன் என்று  தெரிகிறது. மகிழ்ச்சி 😃🙏🌷.



 

பொறுமையின் மறுவடிவம் மூங்கில் செடி

12.08.2021

பதிவு செய்தவர்: பி.கே.குமார், ஈப்போ

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஓர் அங்குகுலம் அளவு கூட வளராமல் அடம் பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதைப் பராமரிக்க வேண்டும்.*

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பது இல்லை.


ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் தொடங்கும். அதுவும் எப்படி? சட சடவெனும் அசுர வளர்ச்சி.

ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஓர் இரகசியம் அதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களைப் பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஐந்தாவது ஆண்டில் ’நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன். என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை’ என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை. தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித் தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

#பாரதிய தமிழன்

 

11 ஆகஸ்ட் 2021

மொட்டை அடிக்கும் குட்டிப் பிசாசுகள்


1. ஐம்பது சாரி... ஐம்பது சுடிர்தார் போதும்...

2. அப்பா கட்டின வீடு ஒன்னு இருக்கு... அது வேணும்.

3. கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் கிரேண்டா செய்யணும். அதன் ஒருநாள் வாடகை ஐம்பது இலட்சம். அதிலே எல்லா செலவும் அடங்கும்.

4. பிரிட்ஜ் வேணும்... வாசிங் மெசின் வேணும்... சப்போஸ் நான் தனிக்குடித்தனம் போனால்...

4. கார்... வீடு... அப்புறம் கோல்ட் 50 பவுன்... அப்புறம் எங்க அம்மா வச்சிருக்கிற இருக்கிற சேலைகள் எல்லாம் வேணும்...


5. இப்ப நாங்க இருக்கிற வீடு எனக்கு வேணும்... கீழே வாடகைக்கு விட்டு இருக்காங்க. வாடகை நிறைய வரும். நான் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். 

நான் ஒரு நாளைக்கு ஒரு சாரி கட்டினால் அதை மறுபடியும் கட்டவே கூடாது. வருசத்துல 365 நாளைக்கும் 365 சேலைகள் வேணும். இதை எல்லாம் புருசன் கிட்ட கேட்கலாமே. வேண்டாம். அப்பா அம்மகிட்ட கேட்கலாம். இன்னொருத்தன் கிட்ட போய் ஏன் கேட்கணும். (பிள்ளையை ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்காங்க).

6. வைர நெக்லஸ் ஒரு கலெக்சன் வேணும்.

7. 50 பவும் நகை வேணும் ஒரு நிலம் வேணும். அம்மா சேர்த்து வச்சிருக்காங்க. அதான் வேணும். (என்ன கொடுமை சார் இது)

8. மணமேடைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கணும்

9. மாப்பிள்ளை வீட்டில் 30 சவரண் கேட்டால் எனக்கு டபுளா தரணும்.

10. எனக்கு 80 பவுன்ல நகை வேணும்.

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: இந்த நிகழ்வைப் பார்க்க நேர்ந்த பொழுது என் மகள் சொன்ன வார்த்தை ‘இதுகள் பிசாசுகள்’. அச்சமயம் மகளுக்கு திருமணம் ஆகவில்லை.

இராதா பச்சையப்பன்: இது பழைய  காணொலி .

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இதைப் பற்றி அன்பர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லலாமே... ஒரு மாற்றத்திற்காக...

கணேசன் சண்முகம் சித்தியவான்: தாய் தந்தையின் வேர்வை  உழைப்பு  கண்ணீர் சிந்திய இரத்தம் அதை உணரும் பிள்ளைகள் உருவாக வேண்டும்.

குமரன் மாரிமுத்து: பணம், பொருள் ஈட்டும் வேட்கையில் குழந்தை வளர்ப்பை, கூட்டுக் குடும்பங்களை உதறித் தள்ளிய பெற்றோர்களின் சொத்துகள் (பிள்ளைகள்) இன்று முள்வேளியாக வளர்ந்து அவர்களையே காயப் படுத்துகின்றனர்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் கெட்டவராவது தாய் தந்தை வளர்ப்பினிலே!

தனசேகரன் தேவநாதன்: நமது நாட்டில் குறிப்பாக பெண் பிள்ளைகள் இப்படி என கேள்வி பட்டதே இல்லை ஐயா. இப்படி எதிர்பார்த்த மாப்பிள்ளைகளை தட்டிக் கழித்த பெண்கள் உண்டு.

தமிழ் நாட்டில் இந்நிகழ்வில் கலந்து கருத்து சொன்னவர்கள் வாழ்க்கை முறை புரியாத புதிராக உள்ளது. கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்கள் பாணியில் பேசுவது தமிழ்நாட்டு ஏற்ற தாழ்வு விளங்கவில்லை

ஐயா. நம்நாட்டில் வசதியான குடும்ப பெண்கள் கூட பெற்றோர்களிடம் இப்படி சுரண்டல் செய்வார்களா என்பது கேள்வி குறிதான்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா.... மற்றும் அனைவர்க்கும் 🙏🙏... பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களுக்கு தேவதைகள் என்ற நினைப்பு ஆணித்தரமாக உள்ளது. ஆகவே பெண் பிள்ளைகள் தேவதைகள் தான் அப்பா என்று நிரூபிக்க வேண்டும்.

சில பெண் பிள்ளைகள் இப்படி செய்ததை எனது நண்பர் காவல் துறை அதிகாரி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்.... வேதனை தான்.... பார்த்து பார்த்து வளர்ந்தவர்களிடம் இப்படி நடந்து கொள்வது முறை அல்ல....

திருமணத்திற்கு பின் கணவருடன் சேர்ந்து உழைத்து அனைத்து ஆடம்பரங்களைச் சேர்த்து கொள்வது அவர்கள் திறமை. அதுவே சாலச் சிறந்த பண்பாகும்...

என் அப்பாவுக்கு நாங்கள் நான்கு பெண் பிள்ளைகளும் தேவதைகள் தான் என்பதை பெருமையாக மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறேன்.

அப்பாக்கள் அனைவரும் பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த பொக்கிஷம்.... நம் புலன அப்பாக்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்... 🌹🌹🙏🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியாவைப் பொருத்த வரையில் நம் தமிழ்ப்பிள்ளைகள் தங்கமான பிள்ளைகள். 100-க்கு 95 பெண்பிள்ளைகள் குடும்பத்திற்குப் பாரம் இல்லாதவர்கள்.

காணொலியைப் பார்த்து மிக மிக வேதனை அடைந்தேன். பொதுவாகவே பெண் பிள்ளைகளைத் தெய்வக் குழந்தைகளாக, தெய்வத்தின் அவதாரங்களாகப் பார்த்து புகழ்ந்து போற்றுவது என் வழக்கம்.

ஆனால் அந்தக் காணொலியில் அப்பாவுடைய சொத்துகளை பறித்துக் கொள்வதில்தான் அந்தப் பெண்பிள்ளைகள் முழு இலக்கைக் காட்டி உள்ளார்கள். எப்படி மனசு வருகிறது என்றுதான் முதல் கேள்வி. இப்படி கேட்கும் அளவிற்கு என் மகளை வளர்க்கவில்லையே....

நம் நாட்டில் அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் அறவே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். தன்னிடம் உள்ளதை அப்பா அம்மாவிடம் கொடுக்கும் பிள்ளைகளைத் தான் இதுநாள் வரையிலும் பார்த்து இருக்கிறேன்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆமாம் ஐயா. உண்மை ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு குடும்பத்தில் அதிகமான பெண் பிள்ளைகள் இருந்தால் அங்கே பெண் தேவதைகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று பொருள்.

ஆண் பிள்ளைகளை விட்டுத் தள்ளுங்கள். அதிரசத்தை அதிசயமாகப் பார்க்கும் ஆஸ்திரேலியாகாரன் மாதிரி திருமணம் ஆனதும் பெற்றோரை அதிகம் கண்டு கொள்வது இல்லை. எல்லோரும் அல்ல. பாதிக்குப் பாதி.

ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி இல்லை. திருமணமாகிப் போனாலும் அப்பா அம்மாவை விட்டுக் கொடுப்பது இல்லை. தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகள் செய்கிறார்கள். இது நம் நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளைச் சொல்கிறேன்.

காணொலியைப் பாருங்கள். அப்பாவுடைய வீடு வேண்டும். அப்பாவுடைய நிலம் வேண்டும். அம்மாவுடைய நகைகள் வேண்டும். அப்பாவுடைய பணம் வேண்டும். அதுவும் 50 இலட்சம். என்னவோ பணம் அச்சடிக்கும் மெசினை அப்பா வீட்டில் வைத்து இருக்கிற மாதிரி லிஸ்ட் போடுகிறார்கள்.

பெற்று வளர்த்து படிக்க வைத்து அடுத்தவன் வீட்டுக்குப் போகும் போது இருக்கிறதை எல்லாம் அப்பா அம்மா கொடுத்து அனுப்புகிறார்கள். கடைசி காலத்தில் பெற்றோர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கணிக்க வேண்டாமா. இருப்பதைப் பிடுங்கும் பார்வைதான் பெரிதாகத் தெரிகிறது. உண்மையிலேயே அந்தக் காணொலியைப் பார்த்து வெட்கப் பட்டேன்.

தேவிசர கடாரம்: இந்த காணொலியை என் சகோதரர்கள் பார்த்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்... பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்வார்கள்...

என் அப்பா உயிரோடு இருந்தால் ..என் பெண்கள் அப்படி இல்லை என்று ஒரே போடாகப் போட்டிருப்பார்...

[8:37 pm, 11/08/2021] Kalaivani Johnson: ஆனால் நம் நாட்டில் தமிழ்ப் பெண் பிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது மிகக் குறைவு தாங்க ஐயா....

[8:38 pm, 11/08/2021] Kalaivani Johnson: உங்களுக்காகவும் உங்கள் தந்தையர்க்காகவும் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன் சகோதரி...👍👍

தேவிசர கடாரம்: என் வீட்டில் நானும் என் தமக்கையும் என் தந்தையிடம் இது வேண்டும் என்று ஒரு நாளும் கேட்டது இல்லை... எங்கள் சகோதரர்களிடமும் கேட்டது இல்லை... இன்றும் கூட வாய் திறந்து கேட்டது இல்லை...

குமரன் மாரிமுத்து: அங்கு இருந்த வாழ்க்கைச் சூழல் வேறு; இங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் வேறு. அதுவே இந்த இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன் ஐயா.

இங்கு படித்தாலும் படிக்காவிட்டாலும் வேலை கிடைத்துவிடும்; வருமானம் ஈட்டுதலில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாத வாழ்க்கை முறை. சோம்பேறிகளை வேறு கணக்கில் வையுங்கள்.

தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது வேலையே இல்லை என்ற சூழல். அதனால், ஏழைகள் தங்கள் குழந்தைகள் வளரும்போது பணம் ஈட்டுதலை முதன்மைபடுத்துகின்றனர்.

பிள்ளைகள், படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். பணம் ஈட்டுதலையே முதன்மையாக நினைக்கும் எந்திரமாக மாறுகின்றனர். (அனைவரும் அல்ல; ஆனால் பெரிய எண்ணிக்கை இதில் அடங்கும்.)

இது அவர்களின் தவறு அல்ல; உயிர் வாழ வேண்டும்; ஏழை என்ற முத்திரையை கிழித்தெறிய வேண்டும்..... இப்படியாக மனிதம் செயலிழந்து வருகின்றது ஐயா. என்னைப் பொருத்தவரை அங்கும் இங்கும் ஒப்பீடு செய்வது முறையாகாது.🥰✌🏻

மன்னிக்கவும். இன்னும் அதிகம் எழுதத் தோன்றுகிறது. உடல் நலம் இடம் தரவில்லை. ஏறக்குறைய 18 நாட்களாக கோறணி நச்சில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போதுதான் தேறிவருகிறேன். நேற்றிலிருந்துதான் புலனத்தில் சில பதிவுகளைச் செய்யத் தொடங்கினேன். அதிக நேரம் கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்த சிரமமாக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டச் என் கோ தான்..... 🙏🏽😁

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நீங்கள் சொல்வதில் நியாயமான காரணங்கள் உள்ளன தம்பி குமரா. ஆனால் அக்கரையோ இக்கரையோ பெண்பிள்ளைகளைத் தெய்வப் பிறவிகளாகப் பார்க்கும் பாவனையில் வாழ்ந்து விட்டேன்.

அதனால் அப்பா அம்மாவை வைத்துக் கொண்டு அவர்களுடைய பணம், வீடு, நிலம் வேண்டும் 50 பவுன் நகை வேண்டும் என்று வாய்க் கூசாமல் கேட்பதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்ன குமரா... உனக்குமா... உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் தம்பி. புலனத்திற்குப் பின்னர் வரலாம். முதலில் உடல் நலம். கவனம். கவனம்.