30 ஜனவரி 2021

தேசியப் பள்ளிகளில் மலாய் மொழி வடிவில் இசுலாமிய போதனை

30.01.2021

குமரன் மாரிமுத்து, கிள்ளான்


இந்த ஆண்டு (2021) தேசிய பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சித் திட்ட வரைவு ஒன்று உருவாகப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சித் திட்ட வரைவானது மலேசியக் கல்வி அமைச்சால் எல்லா பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளதாக அறியப் படுகின்றது.

இணையம் வழி கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களின் முழுமையான பங்கெடுப்பு பல காரணங்களால் குறைபாடுகளுடன் செல்வதால், வாரம் ஒருமுறை மேற்கண்ட பயிற்சிகள் நகல் எடுக்கப்பட்டு ஒன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் மூலம் பகிர்ந்தளிக்கப் படுகிறது. நல்ல முயற்சிதான். வாழ்த்துவோம்.

அன்பான பெற்றோர்களே, குறிப்பாக தேசியப் பள்ளிகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பினால்தான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று பிடிவாதமாக நாங்கள் எல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் சற்றும் உங்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் முரண்டு பிடித்த பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள பயிற்சிகளைக் கூர்ந்து கவனியுங்கள்.

முதலாம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே உங்கள் குழந்தைகள் உங்களைவிட்டு, உங்களோடு இணைத்து இருக்கும் உறவுகளைவிட்டு, பந்தங்களைவிட்டு, உங்கள் பண்பாடு, பழக்க வழக்கங்களை விட்டு தூரப் போகத் தொடங்கி விட்டனர் என்பதை உணர முடிகின்றதா?

ஆம், உங்கள் குழந்தைகளுக்கு தேசிய மொழி என்ற அடையாளத்தில் முதலாம் ஆண்டு தொடங்கியே இசுலாமியக் கல்வி பிஞ்சு மனங்களில் ஆழமாகப் பதிக்கப்படுகின்றது; திணிக்கப் படுகின்றது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மதமாற்றத்தை நோக்கி ஒளிமயமாக பயணப்பட்டு விட்டது. இப்போதும் நீங்கள் இரு காதுகளோடு, இரு கண்களையும் மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறீர்களா?

ஜாவி எழுத்துகளை தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக அரசாங்க மத வெறியர்களால் திணிக்கப் பட்டுள்ளது. மொழி பாடத்தை மதம் சார்ந்த பாடமாக போதிக்கக் கூடாது என்று நாங்கள் பகிரங்கமாக எதிர்த்து வருகிறோம்.

எதிர்ப்புகள் பலமாக இருந்தும் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களின் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை (எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்களின் நோக்கத்தில் உறுதியாக இருக்கின்றனர்).

மலாய் தொடக்கப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களே, தேசியப் பள்ளிகளில் நம்மவர்களின் எண்ணிக்கைக் குறைவு. யோசித்துப் பாருங்கள். உங்கள் குரல் அங்கே எடுபடுமா? உங்கள் குழந்தைகள் மலாய் மொழி என்ற வடிவில் ஆறாம் ஆண்டு முடிவதற்குள் கட்டாயம் இசுலாத்தைக் கற்றுத் தெளிந்துவிடுவர். பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்?

உங்கள் குழந்தைகளை உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்றிக் கொண்டுவாருங்கள். தாயை விட்டுத்  தறிகொட்டுச் சொன்ற பிள்ளை மீண்டும் தாயின் கால்களில் விழுந்தால் எந்தத் தாயும் எட்டி உதைப்பதில்லை; அணைக்கவே செய்வாள். சிந்தியுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள்.



25 ஜனவரி 2021

தற்கொலை தீர்வல்ல – ஒரு சமூகப்பார்வை

24.01.2021

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத் தலைமை கொள் – பிரிவு நடத்தும்

இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜனவரி 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2021

இன்றைய சமூகத்தில் மலினமாகிவிட்ட தற்கொலைகளுக்கு என்ன காரணம், ஒரு சமூகமாக இதை மாற்றவும் புரிந்துகொள்ளவும் நாம் என்ன செய்யமுடியும் என்று பெருந்தகையாளர் இருவரின் சிறப்புரைகளோடு மக்கள் மத்தியிலான கலந்துரையாடலுடன் கூடிய நிகழ்ச்சி.

கருத்துரைகள்: எழுத்தாளர் இமையம் & வழக்கறிஞர் அஜிதா

வரவேற்புரை: முனைவர். சாந்தினிபீ

நோக்க உரை: முனைவர். சுபாஷிணி

நெறியாள்கை: திருமிகு. ஆனந்தி

ஜூம் வழி இணைய:
https://us02web.zoom.us/j/84395895931

நுழைவு எண்: 84395895931

கடவுச்சொல்: live

இந்திய / இலங்கை நேரம்:  மாலை 5:00 மணி
தென்கொரியா நேரம் :  இரவு  8:30  மணி
மலேசியா / சிங்கை நேரம்: மாலை  7:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மதியம் 12:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன்  -  காலை 11:30 மணி
வளைகுடா நேரம்: மதியம் 3:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மதியம் 2:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு  10:30 மணி
அமெரிக்க நேரம்: நியூயார்க் : அதிகாலை 6:30  மணி
அமெரிக்க நேரம்: கலிபோர்னியா: அதிகாலை 3:30  மணி

நேரலை @

https://www.facebook.com/TamilHeritageFoundation/
மின்னஞ்சல்: thfruletheworld@gmail.com

https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.facebook.com/subashini.thf
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://ruletheworld.tamilheritage.org/
https://www.tamilheritage.org/

 

சோழர் காலத்து அந்தமான் தமிழர்கள்

தமிழ் மலர் - 24.01.2021

முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள்.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு. அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவின் மீது படையெடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார். படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை.

அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார்.ஏன் என்று கேட்க வேண்டாம். அந்த மகா சோழரைக் கேட்க வேண்டிய கேள்வி. ஆயிரத்தெட்டு அவசரங்களில் இதுவும் ஓர் அவசரமாக இருந்து இருக்கலாம். அதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கிறது.

அந்தமான் தீவுகளில் அப்படித் தனிமைப் படுத்தப்பட்ட தமிழர்களும் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி விட்டார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம் வேறு சான்றுகள் தேவை இல்லை.

(மலேசியம்)
24.01.2021

மலேசியத் தமிழர்களும் குண்டர் கலாசாரமும்

தமிழ் மலர் - 23.01.2021

ஒரு தகப்பனார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பிள்ளை சாப்பிட்ட மிச்சம் மீதியைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். சிதறிக் கிடப்பதை சீண்டி எடுப்பதற்கு வெள்ளிக் கரண்டிகள்.

மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்; இப்போது செல்வச் செழிப்பின் சீமத்தில் உட்கார்ந்து உச்சம் பார்க்கிறது.

மற்றொரு பிள்ளையை அந்தத் தகப்பனார் கண்டு கொள்வதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார்.

அந்தப் பிள்ளை தட்டுத் தடுமாறி தன் வாழ்க்கையைச் சொந்தமாக அமைத்துக் கொண்டது. ஆனாலும் இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால், அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா.

அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் பிள்ளை. மலேசிய இந்தியர்களில் ஒரு பிரிவாகப் பயணிக்கும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அந்த மலேசியத் தமிழர்களில் ஒரு சிலர்; குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். சொல்ல வேதனையாக உள்ளது. சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.

பொதுவாகவே குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் அல்ல. இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் சில சமூகத் தலைகளும்; காலம் காலமாக கோலோச்சிக் கோலம் போட்டு வந்தன.

போட்ட கோலத்திற்குள் செடிகள் நட்டு; கொடிகள் வளர்த்து; அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சி; உரம் தெளித்துச் செழிக்க வைத்து விட்டன. வேறு எப்படி சொல்லுவதாம்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு சிலர்; இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்; இப்போதும் ஒரு சிலர் சொப்பனக் கனவுகளில் சுகமாய் வாழ்ந்தும் வருகிறார்கள்.

மன்னிக்கவும். இது சமுதாயம் சார்ந்த உண்மை. 2014-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன.

அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல் படுகின்றன என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ’ஓப்ஸ் சந்தாஸ் 1’ எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. அப்போது குண்டர் கும்பல் ஈடுபாடு புள்ளி விவரங்கள் வெளியிடப் பட்டன.

மலேசிய மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 65 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 5 விழுக்காடு.

சீனர்கள் – 27 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 20 விழுக்காடு.

இந்தியர்கள் 7 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 72 விழுக்காடு.

சபா மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 1 விழுக்காடு.

சரவாக் மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 2 விழுக்காடு.

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72 விழுக்காடு. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.01.2021


 


தமிழன் தலையெழுத்து என்று மாறும்

24.01.2021

பதிவு செய்தவர்: தனசேகரன் தேவநாதன்

தாய் தமிழ்ச் சொந்தங்கள் கண்முன்னே இறந்தனர் துடித்து!

அதனைக் கண்ட தமிழர் உள்ளமோ வெடித்து!

இச்சோக அவல நிலையை நினைத்து!

மக்களெல்லாம் மழை மழையாய் கண்ணீரை வடித்து!

சுயம், பயம் என்ற மதிலை இடித்து!

மெத்தனத்தையும் அலட்சியத்தையும் விட்டொழித்து!

எழுந்தனர் உறக்கத்திலிருந்து விழித்து!

அறிவுபூர்வமான திட்டங்கள் பல வகுத்து!

அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாக அதைத் தொகுத்து!

மாற்றப்பட வேண்டும் ஈழத்தமிழரின் தலையெழுத்து!

அதையே இலக்காய் கொண்டனர் உலகத்தமிழர் அடுத்து!

அதற்கு  உள்ளத்தில் உரமேற்றினர் சபதம் எடுத்து!

நம்புங்கள் அதற்கு கைகொடுக்கும் நம் தமிழ் எழுத்து!

என்று எழுதுகிறேன் மங்களமாய் ஈழம் மலருமென முடித்து!

இத்தனைத் தீமையை,

இனி எத்தனை காலம்?

ஒரு பித்தனைப் போன்று,

சகிக்க வேண்டும் என் புத்தனே?

ஆக்கம்,
பா.சந்திரன்


 

பாவம் மலேசியர்கள்

25.01.2021

மலேசியர்களின் அடிப்படைத் தேவைகளில் அவர்களைப் ’பிசி’யாகவே வைத்து இருந்தால் அவர்கள் இழந்த சுதந்திரத்தை அவர்களே மறந்து விடுவார்கள். 

If you keep them busy with basic needs... they will forget about the freedom they lost...
 

பத்துமலை தைப்பூச ஊர்வலம் தேவைதானா? தமிழர் குரல் கண்டனம்

25.01.2021

நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடுமையான கட்டுப்பாடுக்கு இடையே மக்களும் முன்களப் பணியாளர்களும் இந்தத் தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு இருக்கிற வேலையில், இவ்வாண்டு பத்துமலை தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் நடத்த தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமலில் உள்ளதை அடுத்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இச்செயல் முன்னுக்குப்பின் முரணானது என்று மலேசிய தமிழர் குரல் சிலாங்கூர் & கூட்டரசு பிரதேச மாநில தலைவர் திரு.கணேசன் கண்டனம் தெரிவித்தார்.

இச்செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகி மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கோவிட் 19 தொற்றின் தீவிரம் கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து இந்த ஆண்டிற்க்கான மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டத்தை நிறுத்தம் செய்வதாக முன்பு பினாங்கு மாநில துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்கள் அறிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் இம்முடிவு அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டது. இதை ஏன் பத்துமலை நிர்வாகமும் பின்பற்றகூடாது?

அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலம் உட்பட நாடு தழுவிய நிலையில் அணைத்து ஆலயங்களும் மக்கள் பெருந்திரளாக கூடும் தைப்பூச விழாவை நிறுத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டன.

நிலைமை இவ்வாறு இருக்கையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஏழாவது வீடாக கருதப்படும் கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தில் மட்டும் இவ்வாண்டின் தைப்பூச வெள்ளிரத ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்த அடம் பிடிக்கும் ஆலய நிர்வாகத்தினரின் போக்கையும்; அதற்கு அடித்தளமிட்டு ஊர்வலம் நடத்த பிரத்தியேக அனுமதி அளித்திருக்கும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலையும் தாம் சாடுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூச ஊர்வலம் நடைபெறும் என்றும் அதற்கு பத்து பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப் படுவர் என்றும், இதை கோலாலம்பூர் மாநகர் மன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு சாத்தியமாகுமா? வெறும் பத்து பேர் கலந்து கொள்ளும் இந்த ஊர்வலத்தை நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இரத ஊர்வலத்தை காண மக்கள் திரள மாட்டார்கள் என்பது நிச்சயமற்றது. ஊர்வலத்திற்குப் பிறகு புதிய "தைப்பூச நோய் தோற்றாளர்கள்" உருவாகினால் இதற்கு பத்துமலை தைப்பூச நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.

வெள்ளிரத ஊர்வலம் சமுக ஊடகம் முகநூல் நேரலை வழி மக்களுக்கு காண்பிக்கப்படும் என்கிறார்கள். அதற்கு  மக்கள் தமிழகத்தில் இருக்கும் அறுபடை வீடுகளின் தைப்பூசத்தைக் காண்பார்களே; ஒரு தமிழன் தமிழர் நடத்தும் விழாவை விமர்சிக்கிறார் என்பதை விடுத்து கோவிட் 19 நோய் தொற்றின் தீவிரத்தை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக மதி இழந்து செயல்பட வேண்டாம் என்று கூறினார்.

மலேசிய திருநாட்டில் இருக்கும் அனைத்து ஆலயங்களுக்கும் தாய்க் கோயிலாக முன் உதாரணமாக இருக்க வேண்டிய பத்துமலை திருத்தல நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும் திரு. கணேசன் தெரிவித்தார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
 

கோலாலம்பூர் பத்துமலை இரதங்களுக்குப் பின்னால் செல்லுங்கள்... விதிகளை மீறுங்கள்... ஆனால் தயவுசெய்து இப்போதே 1000 ரிங்கிட்டை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறிதற்காக அபராதம் 1000 ரிங்கிட்...



 

வாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் ஊடகங்களில் அலைபேசியின் வழியாகத் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதைப் பல முறை சொல்லி இருக்கிறோம். ஆனால் சிலர் மீண்டும் மீண்டும் ஆங்கிலோ தமிழில் தட்டச்சு செய்வது வேதனையாக உள்ளது. சரி. மீண்டும் பதிவு செய்கிறோம்.

உங்களுடைய அலைபேசியில் Play Store எனும் ஒரு சின்னம் இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதைச் சொடுக்கி விடுங்கள்.

Play Store பகுதிக்கு நீங்கள் புதியவராக இருந்தால், சொடுக்கியதும் உங்களின் மின்னஞ்சலைக் கேட்கும். ஆங்கிலத்திலேயே மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் Search என்பதில் Sellinam என்று தட்டச்சு செய்யுங்கள். செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் (Download) செய்யுங்கள். பின்னர் பதிப்பு (Install) செய்யுங்கள். சில கேள்விகள் கேட்பார்கள். செல்லினம் அமைப்பில் (Settings) பகுதியில் Switch Input Methods என்பதில்

English

Languages Tamil (Murasu Anjal)

என்பதைத் தேர்வு செய்யுங்கள். பின்னர்... சரி (Yes) என்று தட்டி விடுங்கள். மற்றவற்றைச் செல்லினம் செயலியே செய்து கொடுத்து விடும்.

உங்கள் அலைபேசியில் செல்லினம் நிறுவப் பட்டதும் தட்டச்சு முகப்பில் தமிழ் ஆங்கிலம் எனும் இரு மொழிகள் இருக்கும். தட்டச்சு பலகையில் ‘மு’ எனும் எழுத்துச் சின்னம்... ஆகக் கீழே இருக்கும்.

முதலில் ஆங்கிலத்தின் மூலமாகத் தமிழ் தட்டச்சு செய்யும் முறை வரும். மீண்டும் அதே எழுத்துச் சின்னத்தைத் தட்டுங்கள். ‘தமிழ்’ என்பது வரும். மீண்டும் தட்டினால் ’English’ என்பது வரும்.

உங்களுக்கு எது சரியாக அமைகின்றதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேல் விவரங்கள்:

தவிர எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் இணைய முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. அவ்வளவுதான். மிகவும் எளிது. இரண்டு மூன்று நிமிட வேலைகள். கொஞ்ச நேரத்து வேலை. தமிழில் தட்டச்சு செய்வோம்.

 


22 ஜனவரி 2021

அவர் ரொம்ப பெரிய ஆள்

21.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

இந்த வாக்கியத்திற்குள் ஒளிந்து இருக்கும் ஓர் உளவியல் உண்மையைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

இவர் ரொம்ப பெரிய ஆளுங்க... இவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... என்பது போன்ற வாக்கியங்களைப் பொதுவாகவே பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

அதுபோன்ற வாக்கியங்களை நாம் ஏன் பயன்படுத்தி வருகிறோம் என்று இதுவரை சிந்தித்து உள்ளீர்களா? பலரும் இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்களே. அது ஏன்?

இது போன்ற வாக்கியங்களைத் தனிப்பட்ட நபர் ஒருவர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்றால் அது அவரது கண்ணோட்டம். அதில் எந்தவித தவறும் இல்லை.

அதே போல, ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சூழல் சார்ந்ததாக இருக்கலாம். அதுவும் தவறில்லை.

ஆனால் இதுபோன்ற வாக்கியங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அது எப்படி சாதாரண ஒரு நிகழ்வாக இருக்க முடியும்? அது எப்படி அனைவராலும் ஒன்று போலவே சிந்திக்க முடியும்?

இது இயல்பாக நடந்த ஒன்று இல்லை. மாறாக இது நம் மீது திணிக்கப்பட்ட ஒன்று. இது திட்டமிட்டு நம்முள் திணிக்கப் பட்டதா? இல்லையா? என்று நம்மால் கண்டறிவது சாத்தியமானது இல்லை.

ஆனால் இது நம்முள் திணிக்கப்பட்ட ஒன்று என்பது தான் உண்மை‌‌. இது ஏன் நடந்தது? இதனால் நாம் எந்த வகையில் பாதிக்கப் படுகிறோம்? அதை எப்படி சரி செய்வது என்பதை நாம் உணர்ந்து செயல் படுத்தும் அவசியம் உள்ளது.

ஊடகங்களின் வழியாக இவர் அவ்வளவு பெரிய நபர்; இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர்; என்று சிலரை மட்டும் திரும்பத் திரும்ப நம் மனதிற்குள் இவர் பெரிய ஆள் என்கிற எண்ணம் தொடர்ந்து காட்டப்பட்டு அது நம் அனைவரது மனதிற்குள்ளும் ஆழமாக பதிவாகிறது.

உதாரணமாக, இன்று அவர் சமூக வலைத் தளத்தில் ஒரு டிவிட் செய்தார். இன்று அவர் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்தார். நாளை காய்கள் வாங்கக் கடைக்குச் சென்று வர திட்டமிட்டு உள்ளார்.

இப்படி யாராவது ஒருவர் பற்றி வெட்டியாக, இதை எல்லாம் பரபரப்பு செய்திகளாக மாற்றி நம் மனதை உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மையை நோக்கி தெரிந்தோ, தெரியாமலோ தயார் செய்து விடுகிறார்கள்.

இதன் விளைவாக அந்த ஒரு சிலரை மட்டுமே மிகப் பெரிய நபராக மற்றும் அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதிற்குள் வளர்ந்து விடுகிறது.

பிறகு என்ன? அந்த எண்ணம் தானாகவே நம் மனதிற்குள் ஓடும்,

இதன் விளைவாக, அவர் போன்ற நபர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றும்; அவர்கள் சாதனைகள் செய்யவே பிறந்து உள்ளார் என்றும்; நான் சாதாரண மனிதன்; நான் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்; என்கிற எண்ணங்கள் மறைமுகமாக நம் மனதை ஆக்கிரமிப்பு செய்து விடும்.

இந்த எண்ணங்கள் தான் நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் தான் நாம் சாதாரணமாக வாழும் நபர்; அவர்கள் மட்டுமே சாதிக்கப் பிறந்தவர்கள் என்கிற மனநிலையை நமக்குள் உருவாக்கி விடுகின்றன.

அதனால் தான் என்னால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையே பலருக்கும் எழுவதே இல்லை.

இது ஒரு சில நபர்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரம் கோடி மக்களுக்கு அந்த நம்பிக்கையே பிறப்பதும் இல்லை. அத்தனை கோடி மக்கள் உளவியல் ரீதியாகவே தங்களைத் தாங்களே குறைவாகவே மதிப்பீடு செய்வது தான் வருந்தக் கூடிய விடயம்.

அவர் பெரிய ஆள்தான் என்பது ஒரு பிம்பம். அந்த பிம்பத்தைப் பார்த்து வியப்பு அடையாதீர்கள். அந்தப் பிம்பத்தைப் பார்த்து அசாத்தியமானவர் என எண்ணாதீர்கள்.

உங்களுக்கும் அது எல்லாம் சாத்தியம் தான். அவர் பெரிய ஆள் தான் அதை மறுக்கவில்லை. அதே வேளையில் நீங்களும் பெரிய ஆள் தான் என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பிடித்த நல்லதொரு தொழிலைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு உண்மையாக உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்காமல் அதை மட்டுமே உங்கள் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டு பயணம் செய்யுங்கள்.

அப்போது உங்களால் சாதிக்க முடியும்... நிச்சயமாக அதை உங்களால் சாதிக்க முடியும்... ஏனென்றால் நீங்கள் ஒரு பெரிய ஆள்...

அன்புடன்,
த. கார்த்திக் தமிழ்,
#BRAIN_vs_MIND.

21 ஜனவரி 2021

கமலா ஹரிஸ்

21.01.2021

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர். இந்திய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் திருமதி கமலா ஹாரிஸ். தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் தாய்வழி வம்சாவளியைக் கொண்டவர்.

மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார். தொடர்ச்சியான கடின உழைப்பு அவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து உள்ளார்.

மலையில் இருந்து தான் நதி உற்பத்தியாகிறது. ஆனால், நதியிடம் மலை எதையும் எதிர்பார்ப்பது இல்லை. நதியின் அழகையும், நீண்ட தூர வெற்றிப் பயணத்தையும் பார்த்து மலை பூரித்துப் போகிறது’ - இது ரவிந்திரநாத் தாகூரின் வரிகள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமம்.

`தன் மண்ணில் வாழ்ந்த தலைமுறையினரின் தொடர்ச்சி ஒன்று, உலகின் கவனத்தை ஈர்க்கிறது’ என்ற பெருமித பிரவாகத்தில் திளைத்து நிற்கிறது இந்தக் கிராமம்.

`அமெரிக்காவின் துணை அதிபராக உயர்ந்து இருக்கிறாரே எங்கள் ஊரில் வாழ்ந்த கோபாலனின் பேத்தி...’ என வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார்கள் இந்த துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள்.

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரின் உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.

கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்ற பின், அவரின் தாய் சியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப் பட்டார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும் போது எல்லாம் அவருடன் இந்தியாவிற்குப் பயணம் செய்து உள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஆக்லாந்தின் கறுப்பின கலாசாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டார். தன் இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார். இதைக் கமலா தெரிவித்து உள்ளார்.

"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்து கொண்டே எங்களை வளர்த்தார்" என தன் சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டு உள்ளார்.

"நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கறுப்பின பெண்களாகத் தான் பார்க்கும். எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கறுப்பினப் பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்" என கமலா குறிப்பிட்டு இருந்தார்.

கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட வைபவத்தைக் கொண்டாடும் வகையில் அவரின் பூர்விக கிராமமான தமிழகத்தின் துளசேந்திரபுர மக்கள் பட்டாசுகள் வெடித்து உணவுகள் வழங்கினர்.

அதே வேளையில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸ்-சின் முகம் அச்சிடப்பட்ட நாள்காட்டிகளும் விநியோகிக்கப்பட்டன.

அமெரிக்காவின் இரண்டாவது உயர்பதவியை ஏற்ற முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமை கமலா ஹாரிஸ்-சைச் சேரும்.

(தொகுப்பு: மலேசியம்)

வேலாயுதம் பினாங்கு: இவரைப் பார்த்து பின்பற்றி மலேசிய இந்தியப் பெண்களுக்கும் அரசியல் விழிப்புணர்ச்சி அதிகரிக்க வேண்டும். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீர மங்கைகள் நமது நாட்டிலும் மறு பிறவி எடுக்க வேண்டும. காலத்தின் கட்டாயமாகி வருகிறது.

ஜெய ஸ்ரீ கண்ணன்:
அவர் இந்தியராகத் தன்னை அதிகம் காட்டிக் கொள்வது இல்லை. துணை அதிபரானது பல இந்தியர்களுக்குப் பெருமை தரக்கூடிய செய்திதான் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ் பேசினால் புரியுமாம். பெண் / தமிழ்ப் பெண் / வழக்கறிஞர் / இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவர் / இந்தியத் தாய். எல்லாமே நமக்கு ஊக்கம் தரும் செய்திகள் தான். நல்லவை நோக்கி நல்லவை பார்த்து பகிர்ந்து அன்னம் போல் ஊக்கம் பெறுவோம்.

ராஜா சுங்கை பூலோ: தமிழன் எங்கிருந்தாலும் வாழ்க

சந்திரன் லார்கின் ஜொகூர்: இப்படியாவது நம்முடைய சமுதாயம் வெளிநாட்டில் போய் கொடி கட்டி பறக்கட்டுமே. திறமைக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் மதிப்பு உண்டு. வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்.

குமரன் மாரிமுத்து: மலேசியாவைத் தவிர என்று சேர்த்துக் கொள்வோமா ஐயா....?

ராதா: வாழ்த்துக்கள். நம் மலேசியாவில் இது போல் வருமா? வர வேண்டும்.

ராஜா சுங்கை பூலோ: அப்படி போடுங்க அரிவாளை... நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா... மதவெறி கொண்டவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியாது ஐயா.

சந்திரன் லார்கின் ஜொகூர்: மன்னிக்கணும்... கனவில் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம். இப்படி ஒன்று இங்கு நடக்கும் என்று...

ராதா: ஏன் சகோதரரே?  காசா பணமா? நினைத்து பார்த்தால் என்னவாம்,

ரஞ்சன் கங்கார் பூலாய்: புலன நிர்வாகிகள் மற்றும் புலன உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அடியேனின் சிறு ஆதங்கம். எழுத்துப் பிழையோ கருத்துப் பிழையோ இருந்தால் மன்னிக்கவும்.

இன்றைய பதிவுகள் சிறப்பாக இருந்தன. என்னால் கருத்தூட்ட முடியவில்லை. அதற்குக் காரணம் சில பதிவுகள் ஏற்கனவே நம் புலனத்தில் பதிவிடப் பட்டவை. நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை.

அடுத்து இன்றைய பதிவுகளில் நிறைய வெளிநாட்டு செய்திகள். குறிப்பாக அமெரிக்கச் செய்திகள். துணை அதிபராகப் பதவியேற்கும் கமலா ஹாரிஸ் அவர்களால் நம் நாட்டு இந்தியர்களுக்கு என்ன பெருமை.
 
அடுத்து தமிழ் நாட்டு அரசியல் வேண்டாம் என்கிறீர்கள். இப்பொழுது சின்னம்மா சசிகலா பற்றிய செய்தி வருகிறது.

 

ஆனால் நம் நாட்டில் இன்றைய சூழலில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்ற செய்திகளைக் காணோம். இவை எல்லாம் என் மனத்தை சற்று கீறியது. இங்கே கொட்டி விட்டேன். யார் மனமும் புண்பட அல்ல நான் பதிவிட்டது.

சந்திரன் லார்கின் ஜொகூர்: மலேசியச் செய்தியைப் போட பலருக்குப் பயம். காரணம் கேட்டால் அவர் பார்த்து விடுவார். இவர் படுத்து விடுவார் என்ற பயம். (ஒரு சிலரைத் தவிர)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: என்னென்ன பதிவுகள் முன்பே வந்த பதிவுகள் என்று தெரியவில்லையே.

இன்றைய நாளில் உலகத்தின் முதல் செய்தியாகத் திகழும் கமலா ஹாரிஸ் செய்தியைப் பகிர்வதில் தவறு இல்லை.

ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தமிழகத்துச் செய்தி வருகிறது. அடிக்கடி வரவில்லை. சரிங்களா.


ராஜா சுங்கை பூலோ: ரஞ்சன் நீங்கள் செய்த தட்டச்சை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பாராட்டுக்கள்

சந்திரன் லார்கின் ஜொகூர்: மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய கமலா ஹாரிஸ் செய்தியைப் பகிர்வதில் தவறு இல்லை...(காரணம் ஒன்று நம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்) நாம் இந்தியர்களே நான் புகழ் வில்லை என்றால் யார் ஐயா புகழ்வது. குறை நிறைகளை சுட்டிக் காட்டுவதில் எந்த ஒரு பயமும் எனக்கு இல்லை எனக்கு..

ராஜா சுங்கை பூலோ: அமெரிக்க துணை அதிபரைப் பற்றி எப்போதும் பேசப் போவது இல்லை. 20-ஆம் தேதி தான் பதவி ஏற்றார். தமிழன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.

தேவி கடாரம்: கமலா ஹாரிஸ் ஓர் இந்தியர். இந்தச் செய்தி அகில உலக இந்தியர்களுக்கு எல்லாம் பெருமை ஐயா.

சாகுல் ஹாமீது: தமிழ் மண்ணில் வாழ்ந்த தலைமுறை ஒன்று... உலகின் கவனத்தை ஈர்க்கிறது... அருமை!




கிறிஸ்தபர் ரீவ் தன்னம்பிக்கையின் மறுபெயர்

21.01.2021

சூப்பர் மேன் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பில் கட்டிப் போட்டு வைத்த சாகச நாயகன்.

ஹாலிவுட் சூப்பர் மேன் பாத்திரத்தில் நடித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ், 80 - 90-ஆம் ஆண்டுகளின் கனவு நாயகன். ‘உலகின் பலசாலி’ என்று கொண்டாடப்பட்டவர். இவர் வாழ்விலும் நிறைய சோகங்கள்.

ஒரு விபத்து இவரை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விட்டது. திரையில் விண்ணில் பறந்து பல சாகசங்கள் செய்த இந்தத் துணிச்சல்கார மனிதர், அந்த விபத்துக்குப் பின் தனது சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார்.

அந்தச் சோதனையை ஏற்றுக் கொள்ள முடியாத கிறிஸ்டோபர், தற்கொலை முயற்சி வரை போனார். பின்னர் மனம் மாறி வாழ்க்கையில் துணிவோடு போராடவும் முடிவு செய்தார்.

கிறிஸ்டோபர் ரீவ் (Christopher D'Olier Reeve) (பிறப்பு: செப்டம்பர் 25, 1952 – மறைவு: அக்டோபர் 10, 2004) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர்; தயாரிப்பாளர்; திரைக் கதையாசிரியர்; எழுத்தாளர்.

1995-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி. அமெரிக்கா வெர்ஜீனியாவில் குதிரை மீது சாகசங்கள் செய்யும் போது எதிர்பாராத விபத்து.

திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல். பின்னர் வாழ்க்கையில் பற்பல போராட்டங்கள். தன் உண்மையான வலிமையையும் திடத்தையும் உலகுக்குக் காட்டினார்.

தண்டுவட பாதிப்புகளால் ஏற்படும் நோய்கள் (Spinal-cord injury), செல் ஆய்வு (stem cell research), ஆகியவற்றின் ஆராய்ச்சிக்காக *கிறிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளை* மற்றும் *ரீவ் இர்வின் ஆராய்ச்சி மையம்* ஆகியவற்றை நிறுவி உள்ளார். உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடக்கி வைத்தார்.

அதற்கான நிதி உதவியும் செய்தார். 1998-இல் Still Me என்ற தலைப்பில்  தன் வரலாற்றை எழுதினார். உலகில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம் பிடித்தது.

உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார். பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது.

கழுத்துக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறி போல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது.

கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கு ஏற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக் காட்டினார். பல துவண்டு போன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்தார். தம் தமது 52-ஆவது வயதில் காலமானார்.

கிறிஸ்டோபர் ரீவ் இறந்த பின்னர் அவர் உருவாக்கிய அறக் கட்டளையை அவருடைய மனைவி டானா ரீவ் ஏற்று நடத்தினார். அவரும் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2006-ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.

*ரீவ்ஸ்*. இவர் மூலம் தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக் காட்டியவர்.

அவரது உடல் மறைந்து இருக்கலாம். ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி மட்டும் என்றும் மறையாது இருக்கும்.

(தொகுப்பு: மலேசியம்).


 

சோழர் காலத்து அந்தமான் தமிழர்களின் சோகமான வரலாறு

தமிழ்மலர் - 20.01.2021

இராஜேந்திர சோழன் 1024-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவின் மீது படை எடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார்.

அந்தமான் தீவுகளைக் கைப்பற்றியதால் அந்தத் தீவில் ஒரு தற்காலிமான ஆளுமை வேண்டும் என்பதற்காகப் போர் வீரர்களை விட்டுச் சென்று இருக்கிறார்.

பொதுவாகவே முன்பு காலத்துச் சோழர்கள்; அவர்கள் கைப்பற்றிய இடங்களில் அவர்களின் போர் அதிகாரிகளை நிர்வாக அதிகாரிகளாக விட்டுச் செல்வது வழக்கம். தவிர அந்தமான தீவில் சோழர்களின் மரக் கலங்களில் சில சேதம் அடைந்து இருந்தன. பலமான புயல்காற்றினால் மரக் கலங்கள் சேதம் அடைவது வழக்கம்.

அவற்றைச் செப்பனிட வேண்டும். சற்றுத் தாமதம் ஆகலாம். அதனால் அவர்களின் கப்பல்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் போர் வீரர்கள் சிலரை அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்று இருக்கிறார்.


படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் வரும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை. அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார். இன்னும் ஒரு கருத்தும் உள்ளது.

அந்தமான் தீவுகளுக்கு இராஜேந்திர சோழன் மீண்டும் சென்ற போது முன்பு விட்டுச் சென்ற தமிழர் வீரர்கள் பலர் அங்கே இல்லை. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டவர்கள் காடுகளுக்குள் போய் ஷோம்பேன் பழங்குடி இனத்தாருடன் கலந்து விட்டதாக்ச் சொல்லப் படுகிறது.

அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண விசயம் அல்ல. அந்தமான் காடுகள் அடர்ந்த அமேசான் காடுகளைப் போல அடர்த்தியான காடுகள். எந்தக் காட்டுக்குள்; எந்த குகைக்குள் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. தவிர பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் செல்வதும் ஆபத்து. விஷ அம்புகளால் கொன்று விடுவார்கள்.

அங்கு தற்காலிகமாகக் கட்டப்பட்ட கோட்டையில் ஒரு சிலர் மட்டுமே இருந்து உள்ளனர். அவர்களில் சிலர் அழைத்துச் செல்லப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இராஜேந்திர சோழன் விட்டுச் சென்ற போர் வீரர்களினால் ஒரு நல்லதும் நடந்து இருக்கிறது.

அந்தமான் தீவுகளில் அப்படி விடப்பட்ட தமிழர்களில் சிலர் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம்... வேறு சான்றுகள் தேவையே இல்லை.


முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள்.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.


ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு.

அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை மனிதவியலாளர்கள் அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.

சோழர் காலத்து அந்தமான் தமிழர்களும்; சன்னம் சன்னமாய் நாகரிக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். பெரும்பாலானவர் தங்களின் பிள்ளைகளைச் சென்னைக்கு மேல் படிப்பிற்காக அனுப்பி வைக்கிறார்கள். பிள்ளைகளும் நன்றாகப் படிக்கிறார்கள். அவர்களில் சிலர் நல்ல நல்ல பதவிகளிலும் சேவை செய்கிறார்கள்.

சோகமான வரலாற்றிலும் சுகமான சுவடுகள் சுந்தரமான ராகங்களைச் சுவாசிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.01.2021


ஞ்சன், கங்கார் பூலாய்: நான் படிக்கும் பொழுது சரித்திரப் பாடத்தில் இவை எல்லாம் மறுக்கடிக்கப் பட்டு இருக்கிறது. ஆங்கிலேயனும், சீனனும், ஜப்பான்காரர்கள் மட்டும் தான் வெட்டி முறித்தார்கள் என்று அவர்களை முன்னிலைப் படுத்திச் சரித்திரத்தைப் படைத்தார்கள்.

வெங்கடேசன்: அருமையான கட்டுரை மிக்க நன்றி ஐயா. சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அந்தமான் தீவுகளில் ஓர் இனம் வாழ்வதாகவும் அவர்கள் வெளியில் இருந்து யார் புதிதாக வந்தாலும் அடித்தே கொன்று விடுவதாகவும்; ஒரு வெள்ளைக்காரப் பாதிரியாரைக் கொன்றதாகவும் தகவல் வெளியானது.

சந்திரன், லார்கின் ஜொகூர்: உங்களுடைய கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா.

மணியம், கோலாலம்பூர்: வணக்கம். எந்த நேரமும் சுடச்சுட செய்திகளும், கருத்துகளும் இன்னும் காணொலிகளும் வந்து கொண்டு இருக்கும் புலணம் மலேசியம். நன்றி உறவுகளே.

ராதா பச்சையப்பன்: இன்றைய கட்டுரையைப் படித்தேன். மலைத்துப் போனேன். சில விசயங்கள் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. பயமாகவும் இருக்கிறது. இதில் எங்ஙனம் அந்தமானைச் சுற்றிப் பார்க்கப் போவது. பிள்ளையையும் கிள்ளி விட்டு; தொட்டிலையும் ஆட்டி விட்டுப் போனால் எப்படி?

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இன்னும் அந்தமான்; பாபுவா நியூகினி காடுகளில் மனித வேட்டை நடக்கிறது... மாட்டிக் கொண்டால் அம்புட்டுத்தான்...

பொன் வடிவேல்:
முருகப் பெருமான் ஆசியும் அருளும் மேன்மைமிகு ஐயா முத்துவுக்கு நிறைந்திருக்கும் தருணங்களில் காய்ந்த சருகுகளின் சலன ஓசைகளுக்கு காது கொடுக்காமல், தெய்வம் வகுத்த பாதையில் தங்க இரதத்தில் மாமன்னராக பவனி வரும் அழகை  ரசித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான உலக மக்களின் ஆத்மாவில் தேனூறும் பஞ்சாமிர்தம் ஊறிக் கொண்டே இருக்கும்.

- பொன்.வடிவேல், ஜோகூர்பாரு- 012-7299587




 

 

அங்கவி சங்கவி அழகிய மங்கையோ

20.01.2021

பதிவு செய்தவர்: ராதா பச்சையப்பன்



அங்கவியோ சங்கவியோ
அழகிய மங்கையோ!
உனை இங்கே
அழைத்தவர் யாரோ!
கோபியர் கொஞ்சும் ரமணா!
கோபால கிருஷ்ணனா!
இல்லை... 


கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா

மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா -
மதுசூதனா!



தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா

ராதா பச்சையப்பன்: கட்டழகி பொட்டு வைத்தால் கண்ணுக்கு அழகு. காதலனை முத்தமிட்டால் கன்னதிற்கு விருந்து. கொட்டும் மழை மேகமோ பூமிக்கு அழகு. தாவி வரும் குழந்தைக்கு தாய் பாலே மருந்து.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
ஆண் கவிஞர்களுக்குப் போட்டியாக பெண் கவிஞர்களும் துவாலை ஏந்துவது மகிழ்ச்சி அளிக்கிறது... ஒரு பக்கம் சன்னமாய்ப் பொறமையும் வந்து போகலாம்...

தேவி கடாரம்: வாவ். அருமை. வாழ்த்துகள்💐


கடைசி இலை - நம்பிக்கையின் தூறல்

20.01.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்கிறான். அவன் மனதில் அணு அளவுகூட தாம் குணம் அடைவோம் என்ற நம்பிக்கை இல்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.


ஆனால் அவனைப் பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப் படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக் காட்டி அதைப் போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.


செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை! இதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணம் அடைந்தான்.

அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தின் அருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தி இருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறது என்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால்; உடல் என்ன உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மை என்று நம்புங்கள். உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிடும். -படித்ததில் பிடித்தது



    தேவி கடாரம்

"கடைசி  இலை" (The Last Leaf) என்பது William Sydney Porter என்பவர் எழுதிய சிறுகதை. இந்தக் கதை 1907-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "The Trimmed Lamp, and Other Stories" என்ற தொகுப்பில் இடம் பெற்று உள்ளது.


"கடைசி இலை" கதையைத் தழுவி தொடர்ச்சியாகத் திரைப் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

1912 - "பாலிங் லீப்ஸ்" (Falling Leaves)

1917 - டூ ரீல் சைலன்ட்

1952 -  "ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் (முழுமையான வீடு) என்கிற தொகுப்பு வெளியானது.

1983 - ஓ ஹென்றிஸ் புல் ஹவுஸ் படத்தினை தழுவி இயேசு கிறிஸ்துவின் கடந்த நாட்களும் சாதுக்களும் (en:The Church of Jesus Christ of Latter-day Saints) படம் வந்தது. இது 24 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும் படமாகும்.

2013 - வெளிவந்த இந்தி படமான ’லூதெரா’ இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டது.


"The Last Leaf" has been adapted frequently on the stage and the big screen. Notable short film adaptations include

The 1912 film Falling Leaves is a very loose adaptation.

The 1917 two-reel silent film The Last Leaf, one of a series of O. Henry works produced by Broadway Star Features.

In 1952 it was one of five stories adapted for O. Henry's Full House. In this adaptation, the protagonist's nickname is Jo, and Susan (Sue) is portrayed as a sister, not a friend.

In 1983 a screen adaptation was done as a 24-minute film produced by The Church of Jesus Christ of Latter-day Saints. This adaptation is the same as the 1952 film version from O. Henry's Full House.

The 1986 Hindi TV series Katha Sagar adapted this for its seventh episode "Kalakriti" ('art form'), which was directed by Shyam Benegal.

Paranoia Agent's 9th 'Etc.' episode contains a segment depicting it within the context of the series.

The 2013 Hindi film Lootera is loosely based on "The Last Leaf".

The 21st episode of the Pokemon Sun and Moon anime features a Stoutland on the brink of death. The symbol of its death, the dying tree, is a reference to the story.

இந்தக் கதை இங்கிலாந்து கிரீன்விச் கிராமத்தில் நடப்பதாக எழுதப்பட்டு உள்ளது. கதையின்படி ஒரு ஓவியர் இளங்கலைஞரைக் காப்பாற்றுகிறார். ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் இருக்கிறார்.

அவர் ஜன்னல் வழியே ஒரு கொடியில் உள்ள இலைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையை உதிர்ந்துகொண்டு வருகிறது. கடைசி இலை உதிரும் பொழுது தான் இறந்து விடுவதாக நினைத்து கொண்டு படுத்து இருக்கிறார்.

அன்றைய தினம் கடுங்காற்றுடன் கூடிய  மழை பெய்கிறது. விடிந்து பார்க்கிறார். அந்த ஒரே இலை உதிராமல் இருக்கிறது. நோயாளி நம்பிக்கை கொள்கிறார்.

அந்த இலை உண்மையான இலை இல்லை, இலையைப் போல தோற்றம் அளிக்குமாறு ஓவியத்தை வரைந்தவர் அந்த ஓவியர்.