29 ஜூலை 2021

மூன்றாவது கொரோனா அலையில் தமிழர்கள் அதிகம் பாதிப்பு

மகாலிங்கம் படவெட்டான், நாம் தமிழர் பினாங்கு.

இன்றைய மூன்றாவது கொரோனா அலையில் நம்மவர்கள் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அழிவிற்கு காரணங்கள்....

1. ஆரம்பத்தில் ஏற்பட்ட முதல் அலையில் இருந்த பாதுகாப்பு அம்சம், பய உணர்வு, அச்சம், கவனம் நம்மவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறை... இப்போது இல்லை.

2. இரண்டாவது அலையிலும் மிக மிகக் கவனமாக எதிர்க் கொண்டோம். அச்சம் பயம் இருந்தது. ஆனாலும் அலச்சிய போக்கு இருந்தது. கொஞ்சம் பாதிப்பு.

3. இப்போதைய மூன்றவது அலையில் முற்றிலுமாக முழு அலச்சிய போக்கை கையாண்டு....

அ... கூட்டம் கூட்டமாக கூடி மது அருந்துவது

ஆ... பணத் திமிரில் ஒன்று கூடி விருந்துகள் வைத்து ஆட்டம் பாட்டம் போடுவது

இ... பழைய பய பக்தி இல்லை..

ஈ... தெனாவட்டாக மமதையில் வாழ்வது... எனக்கு ஒன்னும் வராது என்ற திமிர்

உ... கட்டுபாடு அற்ற வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்

ஊ... இப்போதைய சமுதாய சிந்தனையில்  சிறு வயது முதல் வயதில் மூத்தவர்கள் வரை தலை கனம் பிடித்து அலைகிறார்கள்....

இவர்களின் தெளிவில்லாத சிந்தனையால் தான் நமது இனம் இன்று கொத்து கொத்தாக செத்து மடிக்கிறார்கள்.

ஆக, இந்தச் சூழலில் நாம் யாரையும் குறை கூறவோ வஞ்சிக்கவோ வேண்டாம்.

இந்த அழிவுக்கு காரணம் நாம் தான். மற்ற இனத்தவர்கள் இந்த நோயிலிருந்து பயந்து ஓடுகிறார்கள். ஆனால், நாமோ ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டும், மது போதையில் வாழ்ந்து கொண்டும் திருந்தாத ஜென்மங்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால் நமது அழிவை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைய நமது மக்கள் தொகை 7 சதவிகிதம் கூட இல்லை. ஆனால், கொரோனா முடித்த பிறகு நமது மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நமது இந்தியரின் விகிதம் 5 சதவிதமாக மாறி விட வாய்ப்பு உள்ளது.

ஆக, நம்மை நாமே காப்போம்... குடும்பத்தையும் காப்போம்.

மகாலிங்கம் படவெட்டான்

நாம் தமிழர். பினாங்கு.

 

28 ஜூலை 2021

நெஞ்சை உலுக்கிய நிகழ்வு

பதிவு: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

எந்த எல்லைக்குப் பணி நிமித்தமாக செல்கிறீர்கள்? ஆக்ராவுக்கு... அங்கு இரண்டு வாரம் பயிற்சி. அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி.


ஒரு மணி நேரம் சென்றிருக்கும். அப்பொழுது ஓர் அறிவிப்பு. மதிய உணவு தயார்.

’சரி உணவு வாங்கலாம்’ என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும் போது எனக்குப் பின்னால் இருந்த இராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.

ஏன்... சாப்பாடு வாங்கலையா?

இல்லை. விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கி உண்ணலாம். விலை குறைவாக இருக்கும்.

ஆமாம். உண்மை.

இதைக் கேட்ட பொழுது என்மனது மிகவும் வலித்தது. உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமானப் பணிப் பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.

அந்தப் பணிப் பெண் என் கைகளைப் பிடித்தாள். கண்களில் கண்ணீர். ’இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து’ என்றாள்.

நான் உண்டு முடித்து, கை கழவச் சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, ’நீங்கள் செய்தததை நான் பார்த்தேன். நான் வெட்கப் படுகிறேன்’ எனக் கூறி ’இந்தாங்க... என் பங்கு ரூபாய் 500’ என்று என்னிடம் கொடுத்தார்.

நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்து குலுக்கி, ’இது ஒரு மிகப் பெரிய கருணைச் செயல்... மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிச் சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை...

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயைத் திணித்தான்.

விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டைப் பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.

இறங்கி நடந்தேன். அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வண்டிக்காகக் காத்து இருந்தார்கள்.

அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்.

ஒரு தூண்டுதல். பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்... அனைத்துப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாகச் சாப்படுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.

இந்த இளம் வீரர்கள் குடும்பப் பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.

இவர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும்

சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

கோடிக் கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்... ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்... லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துகூட பார்ப்பது இல்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது..

இளைஞனே... என் சகோதரனே... உன்னைச் சரியான வழியில் வாழத் தயார் செய்து கொள்.

பின்னூட்டங்கள்

பதிவு செய்தவர் மீது நாம் குறை காண இயலாது. வேறு ஒரு புலனத்தில் பகிரப் பட்டது. பதிவாளருக்குப் பிடித்து இருக்கிறது. இங்கு பதிவு செய்து உள்ளார். தவறு இல்லை.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தில் பயணம் செய்யும் இந்தியப் போர் வீரர்களுக்கு விமானத்தில் இலவசமாக உணவு நீர் வழங்கப்படும். அப்படி இருக்கும் போது விமானத்தில் விற்கப்படும் உணவை விலை கொடுத்து வாங்கி வீரரகளுக்கு வழங்கியதாகச் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர: உண்மை ... தன் நாட்டை காக்கும் படை வீரனுக்கு உணவு இலவசமாக கொடுக்கலாமே...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தின் பயணம் மூன்று மணி நேரம். விமானத்தில் ஏறி இறங்க எல்லாம் முடிய ஐந்து மணி நேரம் பிடிக்கும். விமானத்தில் உணவு வாங்கிச் சாப்பிடாமல் டில்லியில் போய் இறங்கி சாப்பிடலாம்; அங்கு விலை குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர:உண்மை ஐயா

கேப்டன் வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. சாதாரண விமானங்களில் இராணுவ வீரர்களை அனுப்புவது குறைவு. அவர்களுக்கு என்று இராணுவ விமானங்கள் உள்ளன.

15 வீரர்களுக்கு சாப்பாட்டுச் செலவு 500 ரூபாய். ஒரு வீரருக்கு 30 ரூபாய். இந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்கும் அளவுக்கு இந்திய இராணுவ வீரர்களைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

வெங்கடேசன்: பொருமையாக படித்து பார்தால்தான் இவ்வளவு விஷயங்களும் விளங்கும் ஐயா அருமை 👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  மொத்தத்தில் ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையே அவமதிக்கும் கதையாகவே தெரிகிறது.

தேவி சர:இப்படி கதை எழுதுவதால் அவருக்கு என்ன இலாபம்...🤦🏻‍♀️

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவாளர் மீது நாம் குறை காணக் கூடாது. அதைப் பகிர்ந்ததால் தான் கருத்துகளைச் சொல்ல

கடைசியாக என்னைப் பாதித்தது. இந்திய இராணுவ வீரர்கள் 30 ரூபாய் இல்லாமல் ஐந்து மணி நேரம் பசியை அடக்கிப் பயணிக்கிறார்கள் என்று எழுதியவர் முன் வைக்கும் கருத்து... Totally absurd!

வெங்கடேசன்: சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

போன்ற நல்ல கருத்துகளையும் முன் வைப்பதற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கலாம்.

தேவி சர: எப்படி இருந்தாலும். இந்தக் கதையை பிரதமர் மோடி படித்தால் என்ன ஆவது... நல்ல வேலை அவருக்கு தமிழ் படிக்க தெரியாது...

வெங்கடேசன்: எப்படி இருந்தாலும் பிழை பிழைதான்... போர் எல்லையில் இந்திய இளைஞர்கள் நாட்டுக்காக உயிர் துறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் பொழுதை வீணாகச் செலவு செய்கிறார்கள் என்பதைச் சொல்ல முன் வருகிறார்.

ஒரு நாட்டை அவமதிப்பது போல கதை செல்கிறது.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



 

26 ஜூலை 2021

உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்பு (1) - முனைவர் க. சுபாஷிணி

25.07.2021

உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகைச் செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து செல்கின்றன. 

உண்டெரூல்டிங்கன் (ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிறுப்பு
அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021
சென்றிருந்த போது பதிந்த காட்சி.
-முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்.



அவை பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவும் பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப் டுவிட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன.

தமிழ்நாட்டுத் தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத் தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளைப் பற்றி அறிந்து கொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.


தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்ட காலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சிப் பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.  

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும்; சிறு நகரமாகட்டும்; கிராமம் ஆகட்டும்; எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு ஒன்றினைப் பற்றியது.

உண்டெரூல்டிங்கன் (Pfahlbaumuseum Unteruhldingen) கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ் ஏரிக்கு அருகே உள்ளது. 

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள்
ஒருவர் ஃபெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு
'Pile Dwelling' என பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார்.



இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.
 
ஜெர்மனிக்கு தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி.

1853-1854 ஆகிய காலக் கட்டத்தில் இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டிக் கிழிந்து போயின. அதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் கடலுக்கு அடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பிச் சோதனை செய்தனர்.

அப்போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும்; அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்கு கிடைத்ததும்; ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன.

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர் பெர்டினன் கெல்லர். இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' என பெயரிட்டு தன் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த கி.மு. 3000 கால அளவிலான வீடுகள்; இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன்.

தொடரும்...
-சுபா

 

கற்றல் கற்பித்தலில் என் பட்டறிவுகள் (17) - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே. குமார் - 25.07.2021

ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை முடிவுற்று ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்துவிட்டது.

மலேசியக் கல்வியமைச்சிடம் இருந்து கூட்டரசு பிரதேச மாநிலத் திணைக்களம் வழியாக எனக்கு ஒரு மடல் வந்திருந்தது. அதில் கோலாலம்பூரில் உள்ள பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றிற்கு என்னை இட மாற்றம் செய்து இருப்பதாக எழுதப் பட்டிருந்தது.  


அந்தப் பள்ளிக்குச் சென்று 'உள்ளேன் ஐயா' என்று செய்யச் சொல்லி இருந்தது. தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனும் ஒரு சட்ட மிரட்டலோடு அந்த மடல் அமைந்து இருந்தது.

எனக்கு இது இரண்டாவது பள்ளி என்பதால் இவ்வகை மடல்கள் எனக்குப் புதிது. என்னுடைய முதல் பணி அமர்த்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கவில்லை.  சிலரைக் கேட்டு அறிந்த பொழுது வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போகும் போது மடல் இப்படித்தான் வரும் என்பதை அறிந்து கொண்டேன்.  

அது மட்டுமின்றி மடல் குறிப்பிடும் நாளில் தகுந்த காரணங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லாமல் காலம் தாழ்த்தினால் அரசு ஆணையை மீறியக் குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும் என்பதனையும் பிற்பாடு கல்வியமைச்சில் நான் ஒரு அதிகாரியாக இருந்த போது  உணர்ந்து கொண்டேன்.

ஒருவழியாகப் பள்ளித் திறந்த முதல்நாள் என்னுடைய யமாகா உந்துருளியில் (motorcycle) பள்ளிக்குச் சென்றேன். இது பெண்கள் இடைநிலைப்பள்ளி எனும் சுவரெழுத்துக்கள் என்னை வரவேற்றன.

பள்ளிக் காலையிலேயே தொடங்கி விட்டது. நான் பத்து நிமிடம் தாமதமாகச் சென்று சேர்ந்தேன். என் உந்துருளியைப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையின் ஓரமாக நிறுத்தினேன்.

'வா வா வாத்தியாரே வா' எனும் பாட்டை யாரோ பாடுவதுக் கேட்டு நிமிர்ந்தேன். சிற்றுண்டிச் சாலையின் இருக்கையில் நம்மின மாணவிகள் இருவர் அமர்ந்து இருந்தனர்.

நான் அவர்கள் பக்கம் நோக்கிய போது, ஒரு மாணவி குறும்பாகச் சிரிக்க மற்றொரு மாணவி ’படக்’கென்று வேறொரு பக்கம் திரும்பிக் கொண்டாள். இருவருக்கும் 15-16 அகவைக்குள் தான் இருக்கும்.

’அடக் கடவுளே முதல் நாளே வரவேற்பு இப்படி இருக்கிறதே’ என்று நொந்து கொண்டேன். இதை நான் உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை. பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்திய மாணவிகள் இப்படியும் இருப்பார்களா என்று எனக்கு வியப்பு ஏற்பட்டது.  

நான் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் முன்பின் தெரியாத ஆடவனைப் பார்த்து அதுவும் ஓர் ஆசிரியரைப் பார்த்து மாணவிகள் இப்படி எல்லாம் செய்தது இல்லை.

காலம் மாறிவிட்டு இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைமுறை மாற்றம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றியது.

அந்தப் பள்ளியில் என்னோடு சேர்த்து மூவர் மட்டுமே ஆண் ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் சீனர், ஒருவர் மலாய்க்காரர். மொத்தம் 120 ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் 117 பேர் பெண்கள். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள். பள்ளியின் முதல்வர், துணை முதல்வர்கள் எல்லோரும் பெண்கள்.

இந்த அதிர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பள்ளியின் தலைமையும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.


 

23 ஜூலை 2021

மலேசியத் தமிழனத்தின் குடிப்பழக்கம் - மகாலிங்கம், பினாங்கு

23.07.2021

நம் இனத்தின் குடிப் பழக்கம் தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ளது. ஏன் ஏன் ஏன்?

ஏறக்குறைய பிறந்த சில நாட்களில் இருந்து குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி... சுடுகாடு போகும் வரை... பழகிய இந்தக் குடியை மறக்க முடியாத... விட்டுத் தொலைக்க இயலாத... ஒரு சுயசிந்தனை இல்லாத... மானம் கெட்டத் தமிழ் இனமாக  மாறி...


மற்ற இனத்தவர்கள் காரி உமிழும் வகையில் இடம் பொருள் ஏவல் இல்லாமல்...

நடு ரோடு, பொது விளையாட்டுப் பூங்கா, கோயில் குளம், திருமணக் கொண்டாட்டம், பிறந்த நாள், இறந்த நாள், கருமாதி என்று எல்லாம்...

ஆண் பெண் என பால் தெரியாமல்... கண்டதே காட்சி கொண்டதே கோலமாக... தரி கெட்டு... நாளும் குடி குடி என்று குடித்து ஆட்டம் போடும் நம் இனத்தை யார் திருத்துவது?


தந்தையும் குடிக்கிறான்...
மகனும்  குடிக்கிறான்...
அம்மாவும் குடிக்கிறான்...
மகளும் குடிக்கிறாள்...
அதுவும் ஒரே மேசையில் அமர்ந்து...

குடியிலே வேறு வேறு பிரிவுகள்...
உயர் தர தண்ணி...
கீழ்த் தர தண்ணி...

ஆனால், போதை தரும் தண்ணியில் வேறு வேறுபாடு...
படித்தவருக்கு ஒரு வகை தண்ணி...
படிக்காத பாமரருக்கு ஒரு வகை தண்ணி...
பணக்காரனுக்கு உயர் தர தண்ணி...
ஏழை மக்களுக்கு  தரம் குறைவான தண்ணி...

ஆக மொத்தத்தில் நம்மவர்களில் 90 விழுக்காட்டினர் மது போதையில் தான் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... யாரை யார் திருத்துவது? தயவு செய்து நாம் நம்மைச் சுற்றியுள்ள நம் இனத்தை ஒரு வட்டமிட்டுப் பார்ப்போம்.


சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்பு அடைந்தவரின் உடல் நலத்தை சேதப் படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்கத் தூண்டுவதாகும்.

இரண்டாவதாக மதுவைக் குடிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் இயலாமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல வழிகளில் வெளிப்படும்.

சாராய மயக்கம் காரணமாகக் குடிப்பவர், அவரின் குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்களுக்குச் சமூகத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் சமுதாய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


சாராய மயக்கம் என்பதனைச் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு, மதுபானங்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவதில் இருந்து மீள இயலாமை ஆகிய குறிப்பிட்ட அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம்.

மதுபானங்களால் தூண்டப்படும் உடலியக்கவியல் சகிப்புத் தன்மை, உடலியச் சார்பு போன்றவை குடிப்பவர் குடிக்காமல் இருக்க இயலாமைக்கு காரணிகளாக விளங்குகிறது.

சாராய மயக்கம் மன நலத்தையும் வெகுவாகப் பாதித்து மன நலச் சீர்கேடுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம். குடிப்பவர்களில் ஏறக்குறைய 18 விழுக்காடு மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அன்புடன்,
மகாலிங்கம் படவெட்டான்,
நாம் தமிழர்; பினாங்கு.


பின்னூட்டங்கள்

பாலன் முனியாண்டி: வாழ்கை என்பது வாழ்வதற்கே... வருவது வரட்டும் பயம் எதற்கு என்ற அறப சந்தோசத்தில் திலைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள்...

வெங்கடேசன்: உண்மை... தற்போது நம் சமுதாயத்தில் குடிப் பழக்கம மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. பிறந்த நாள், கருமாதி நாள், திருமண நாள் இப்படி எல்லா நாட்களிலும் குடியும் குடித்தனங்கள்...

மகாலிங்கம் படவெட்டான் பினாங்கு: வேதனையான விடயம்... யாரை யார் காப்பாற்றுவது ஐயா?

வெங்கடேசன்: நம் சமுதாயத்திடம் நல்ல விடயங்கள் சொல்ல முடிவதில்லை ஐயா. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

தனசேகரன் தேவநாதன்: சந்தோசத்தின் உச்சம் குடிப்பதுதான் என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது நம் இளைய தலைமுறை... வேதனை

வெங்கடேசன்: இந்தப் பழக்கம் வைரஸை விட கொடூரமாக நம் சமுதாயத்தைக் குறிப்பாக... இளையோர் மத்தியில் மிக மோசமாக பரவியுள்ளது. வேதனையான விடயம் 😭😭

பால் சேர்வை: இந்தியர்கள் குடிb பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்

முருகன் சுங்கை சிப்புட்: திருடனாய் திருந்த வேண்டும்... நானும் பல போதைக்கு அடிமையானவன்தான். அமைந்த மனைவியும் ஒரு காரணம். சிந்தித்தேன் சிறப்பான முடிவை எடுத்தேன். 30 ஆண்டுகளாகி விட்டன. புகைபிடித்தல், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் அனைத்தையும் நிறுத்தி விட்டேன். நிறுத்தினால் மட்டுமே தன்மானம் கொஞ்சம் பிறக்கும்.

பொன் வடிவேலு ஜொகூர் பாரு: இந்தியர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்த, அவரவர் குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடியில் மிதப்பவர்களைக் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்க வேண்டும். அதுபோல சமுதாயமும் குடிகாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

குடிகாரர்களை சீர்திருத்த மையங்களுக்கு அனுப்ப வேண்டும். குடிப்பதை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என சொல்லிச் சொல்லி பல காலம் போய்விட்டது. இயக்கங்கள் நல்ல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். -பொன் வடிவேல் ஜோகூர்பாரு 012-7299587

உதயக்குமார் பெர்லிஸ்: தமிழ் திரைப் படங்களில் புகைப் பிடித்தல் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு எனும் அறிவிப்பை விடுத்து அவ்வாறான காட்சிகள் இல்லாமல் இருத்தல் சிறப்பு.




22 ஜூலை 2021

இறப்பிலும் இணைந்த இதயங்கள்



மலேசியம் புலன அன்பர் திரு. பெருமாள் அவர்களின் அண்ணன்; அண்ணியர் இருவரும் I.C.U. வில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார இடைவெளியில் ஒருவரை ஒருவர் அறியாமலேயே இறைவனடி சேர்ந்தனர். 17-ஆம் தேதி கணவர் காலமானார். இன்று காலை 21.07.2021 மனைவி காலமானார்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமையானது என்பதை அறிந்து கொள்வோம். அது உறவுகளைப் பார்ப்பதும் இல்லை. உணர்வுகளைப் பார்ப்பதும் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் (உடன் பிறப்புகளாக இருந்தாலும்). வீட்டில் உள்ளவர்கள் வெளியே போய் ஊர் சுற்றுவதையும் அனுமதிக்காதீர்கள். 50 வயது தாண்டியவர்களுக்கு ஆபத்து மிக அதிகம். அண்மைய தகவல்.

அவர்களின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கின்றோம்.

*புலன அன்பர்கள்*
*நிர்வாகத்தினர்*
*மலேசியம்*
21.07.2021

பின்னூட்டங்கள்

பெருமாள் கோலாலம்பூர்: இல்வாழ்வில் இணைந்தவர்கள். இருவருமே மருத்துமனையில் சேர்க்கப் பட்டனர். ஒருவரை ஒருவர் அறியாமலே I C U வில் இணைந்து ஒரு வார இடைவெளியில் இருவருமே இறைவனடி எய்தனர்.

கொரோனாவின் கோரப்பிடி எவ்வளவு கொடுமை வாய்ந்தது என்பதை அறிகிறேன். என் அண்ணன் அண்ணியாரின் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கிறேன் ta

தனசேகரன் தேவநாதன்: ஓம் சட்கதி. எல்லாம்,வல்ல ஏக இறைவன் குடும்பத்தினருக்கு அமைதியையும் சாந்தியையும் அருள்வாயாக ஓம்நம சிவாய.


வெங்கடேசன்: ஓம் நம சிவாய ஓம்

கலைவாணி ஜான்சன்: ஆழ்ந்த இரங்கல்... திருமண பந்தத்தில் இணைந்த இதயங்கள், இறப்பிலும் இணைந்து ஒன்றாக இறுதி பயணத்தில்.... இவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏


இராதா பச்சையப்பன்: 🙏. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

தேவி சர: ஓம் நமச்சிவாய

உதயகுமார் பெர்லிஸ்: ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் நமசிவாய


செல்லையா செல்லம்: ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ... ஓம் சிவாய நமஹ...

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.. ஆழ்ந்த அனுதாபங்கள்


சிவகுரு மலாக்கா: ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் நமசிவாய 🙏🏼

கென்னடி ஆறுமுகம் கிரிக்: ஆழ்ந்த இரங்கல்

பெருமாள் கோலாலம்பூர்: தலைவர் அவர்களே... இரங்கல் தெரிவித்தோருக்கு துயரிலும் தலை வணங்குகிறேன். நமது அன்றாட தகவல் பகிர்வுகளை தொடர வேண்டுகிறேன். அன்புடன் ta.

பால் சேர்வை:
ஆழ்ந்த இரங்கல்....

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்

ஆதி சேகர் கோலக்கிள்ளான்: ஆழ்ந்த அனுதாபங்கள்... ஓம் நமசிவாய 🙏🏼


19 ஜூலை 2021

கோலாசிலாங்கூர் சரித்திரப் புகழ் 1 - இராதா பச்சையப்பன்

19.07.2021

கோலாசிலாங்கூர் சரித்திரப் புகழ் பெற்ற இடம். என்னோடு வாருங்கள். புலனத்தில் இருந்தவாறே கோலாசிலாங்கூரை சுற்றிப் பார்க்கலாமே! படத்தில் உள்ளது புக்கிட் மெலாவதிக்கு (மலை குன்று) போகும்  நுழை வாயில்.  


SELAMAT  DATANG  KE BUKIT MALAWATI எனும் வரவேற்புச் சின்னம்; தேசிய மொழியிலும், ஜாவி மொழியிலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும்.

இதுதான் கோலாசிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் செயல்படும் வாகனம். இங்கு டிபால்மா ஓட்டலும் உண்டு.

ஓட்டலில் தங்கி இருப்பவர்கள் மலையைச் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் ஓட்டலுக்கே வாகனம் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும்.

சுற்றிப் பார்த்த பிறகு திரும்ப ஓட்டலிலேயே கொண்டு வந்து விட்டுச் செல்லும். இதற்கு ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுப்பதும் உண்டு. (இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்)

பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: சரித்திரச் சான்றுகளைப் பதிவு செய்யுங்கள். உங்கள் ஊரை பற்றி தெரிந்து கொள்வோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இது ஓர் அன்பரின் சொந்த முயற்சி. படைப்பு. இப்படிப்பட்ட பதிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். அடுத்த புலனங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பதிவுகளுக்கு என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது. சொந்த முயற்சியாளர்களைத் தட்டிக் கொடுப்போம். அதுவும் நம் புலன அன்பர்... தட்டிக் கொடுங்கள். உற்சாகம் வழங்குங்கள்.

வெங்கடேசன்: பயனான தகவல்கள் மிக்க நன்றி

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு புதிய கட்டுரையாளர் உருவாகிக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துகள். எனக்கு போட்டியாக வந்து விடுவாரோ... பயமாக இருக்கிறது... ஓடிடுவோம்... சும்மா ஜோக்... பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் சகோதரி. எனக்குப் பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ் மலர் ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் திரு. சின்ன ராசு நம் புலனத்தில் ஓர் அன்பர். உங்களின் இந்தக் கட்டுரையை ஞாயிறு மலரில் பிரசுரிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்

வெங்கடேசன்: குருவை மிஞ்ச முடியுமா.ஐயா?குரு குருதான் மாணவர் மாணவர்தான்

தேவி சர: அருமை அம்மா. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நாளை தொடருக்காக காத்திருக்கிறேன்...

இராதா பச்சையப்பன்: மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் தெரியாத என்ன? மலையோடு என்றும் மடு மோத இயலாது.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ. இவரின் மாணவர் அரிஸ்டாட்டில். இவர்களில்  யார் மலை யார் மடு. அந்த வகையில் திறமைசாலிகளை மலைக்கும் மடுவிற்கும் ஒப்பீடு செய்வது சரியன்று. எனினும் ஆசிரியரின் ஆசீர்வாதங்கள் எப்போதும் மாணவர்களுக்கு உண்டு. எழுந்து வா மகளே...

சின்ன ராசு:
சற்று முன்தான் கவனித்தேன். என்னை பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சகோதரரே. அவரின் படைப்பை அனுப்பி வைக்கவும். பிரசுரிப்போம். நன்றி. cnrasu.media@gmail.com


குடும்பப் பண்பாடே வெற்றியைக் கொண்டு வரும் - குமரன் வேலு

பதிவு: பி.கே.குமார் - 19.07.2021

இப்பொழுது  பொதுமுடக்க காலம். ஊரே வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. விடிய விடிய தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டும், திறன்பேசியில் கூட்டாளியுடன் கொட்டம் அடித்துக் கொண்டும் தூங்கப் போகிறார்கள். படிக்கும் பிள்ளைகளில் இருந்து கற்க வேண்டிய நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கின்றனர்.


வேலைக்குப் போகா விட்டாலும் சிலருக்கு சம்பளம் உண்டு. ஆனால் இயங்கலையில் படிக்காமல் மட்டம் போடும் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? அதன் நீட்சி எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்காத சமூகமாக இந்தியர்களில் சிலர் இருக்கின்றனர்.

நாட்டில் உள்ள தலைசிறந்த தமிழ்ப்பள்ளி ஒன்றில் சராசரி மாணவர் வருகை 77%.  அப்படி என்றால் 100-க்கு 23 பேர் அன்றாடம் பள்ளிக்கூடம் வருவது இல்லை. அவர்களின் கதி எதிர்காலத்தில்  என்னவாகும் என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா?

எனக்குத் தெரிந்த இந்தியக் குடும்பம் ஒன்று. அதில் இரண்டு பிள்ளைகள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்தவர். இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் பன்னாட்டுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார்கள். அதன்பின் மலேசியாவுக்கு திரும்பினர்.

திரும்பி வந்ததும் ஒருவர் தமிழ்ப்பள்ளியில் படித்தார். மற்றவர் சிரி கே.எல். எனும்  பன்னாட்டுப் பள்ளியில் படித்தார். தமிழ்ப்பள்ளியில் படித்த மூத்தவர் இன்று இங்கிலாந்தில் கணக்காயராக (அக்கவுண்டன்) பணி புரிகிறார். மற்றொருவர் இங்கிலாந்தில் வழக்குரைஞருக்குப் படிக்கின்றார்.

நடுத்தரக் கும்பம் என்றாலும் காசுக்கு குறைவில்லை. அதைவிட ஒழுங்கைக் கடைபிடிப்பதிலும் கூடுதல் முயற்சி செய்வதற்கும் இந்தக் குடும்பத்தினர் தயங்கியதே இல்லை. இவர்களின் இன்றைய வெற்றிக்கு  அந்தக் குடும்பம்  கடைபிடிக்கும்  பண்பாடுதான் காரணம் என அடித்துச் சொல்லலாம்.

கணவன் மனைவி இருவரும் குறைந்தது ஒரு மணிநேரம் நூல்கள் / நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் நாளிதழ்கள் படிக்கும் போது பிள்ளைகளும் படிக்க வேண்டுமாம். நான்கு ஐந்து வயதாக இருக்கும் போதே குழந்தைகள் இருவருக்கும் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனராம்.

இப்பொழுது  வெளிநாட்டில் வழக்குரைஞருக்குப் படிக்கும் இரண்டாவது பிள்ளை பனிரெண்டு வயதில் இஞ்சோன் கிரிசம் (John Grisham) எழுதிய சட்டமும் குற்றமும் (Law and Crime) நூலை விரும்பிப் படித்தாராம்.

அப்போதே ஹெரி போர்ட்டர் கதைகளையும் கரைத்துக் குடித்தவராம். பந்து விளையாட்டில் வெறித்தன விருப்பத்துடன் விளையாடுவாராம். விளையாட்டில் துடிப்பான ஆர்வம் உள்ளவராம்.

காலையில் எழுந்து இறைவனை வணங்கி அன்றாடப் பணியை தொடங்கும் ஒழுங்கு சிறுவயதில் இருந்தே தொடர்ந்து வருகிறதாம் இந்த வழக்குரைஞருக்குப் படிக்கும் இளையருக்கு. வாசிப்பு பழக்கம்தான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது.

கூடுதல் முயற்சி (Extra effort) வெற்றிப் பெறுவதற்காகக் கூடுதல் முயற்சியும் உழைப்பையும் போட்டு வெற்றியை அறுவடை செய்யும்வரை இலக்கில் இருந்து விலக மாட்டார்கள்.

வயிறு புடைக்க உண்பது; கண்ட நேரத்தில் உண்பது; என்பது இந்தக் குடும்பத்தில் நிச்சயமாகக் கிடையாதாம். இயன்றவரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்பர்களாம்.

எந்த வேலையும் சூட்டோடு சூடாகச் செய்து முடிப்பது வழக்கமாம். நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் இல்லையாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டார்களாம். இந்தக் குடும்பம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பண்பிலும் நிமிர்ந்து நிற்கிறது தமிழை மறக்காமல்.

- முனைவர் குமரன் வேலு

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: எல்லா மாணவர்களிடமும் திறன்பேசி, கணினி வசிதிகள் உள்ளனவா என்பதை வகுப்பாசிரியர் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

இயங்கலை நடத்தும் ஆசிரியர்கள் நேரடியாகப் பாடத்திற்குப் போகாமல் சின்னச் சின்னக் கதைகளைச் சொல்லி அந்தக் கதைகளின் மூலமாக பாடங்களை இணைக்க வேண்டும்

நேரடியாக 2444-ஐ நான்கால் வகுத்தால் மிச்சம் வருவது ஒற்றைப் படையா இரட்டைப் படையா என்று straight to the subject. பலனளிக்காது. மாணவர்களை உற்சாகப் படுத்த வேண்டும். கதைகள் சொல்லி ஈர்க்க வேண்டும்.

எ.கா: நான் ஆசிரியராக இருந்த காலத்தில் என் பின்னால் ஒரு மாணவர் கூட்டம் எப்போதும் வலம் வருவார்கள். ஒரு வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றால் மாணவர்கள் நேராக ஆசிரியர் அறைக்கு வந்து என்னைத்தான் தேடுவார்கள். பக்கத்து வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றால் என்னைத்தான் அழைப்பார்கள். ஏன்?

மாணவர்களுக்குப் பிடித்தமான கதைகளைச் சொல்லி ஒரு பள்ளிக்கூட மாணவர்களியே ஈர்த்து வைத்து இருந்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை. மாணவர்களைக் கவர்ந்து பாடத்திற்குள் இழுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறேன்.

 

16 ஜூலை 2021

சவூதி அரேபியா இளவரசி மிசால் சுட்டுக் கொலை

வரலாற்றில் இன்று 15 ஜூலை 1977

சவூதி அரேபியா மன்னரின் பேத்தி இளவரசி மிசால் (Princess Mishaal bint Fahd Al Saud). 19 வயது. பாலியல் குற்றச்சாட்டின் பேரில், ஜெட்டா நகரில் பொதுமக்கள் முன்னிலையில், சுட்டுக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தினம் இன்று.


லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இளவரசி மிசால் படிக்க விரும்பினார். அதனால் அவரின பெற்றோர் அவரை லெபனாக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் தூதராக அலி அசான் அல் சாயிர் (Ali Hassan al Shaer) என்பவர் இருந்தார். அவரின் உடன் பிறந்தவரின் மகன் கலீத் அல்-ஷேர் முல்லல்லால் (Khaled al-Sha'er Mulhallal) என்பவர் இருந்தார். அவருக்கு வயது 21.

இளவரசி மிசாலுக்குப் கலீத் அல்-ஷேருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மலர்ந்தது. 


பின்னர் சவூதி அரேபியா திரும்பியதும் இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்தனர். உடலுறவு கொண்டனர். இது இவரின் குடும்பத்தினரால் கண்டு பிடிக்கப்பட்டது.

இளவரசியின் தாத்தா (சவூதி அரேபியாவின் மன்னர்) அறிவுறுத்தலால் விபச்சார வழக்காகப பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருடைய தலையில் மூன்று முறை சுடப்பட்டது.


இவரின் காதலரின் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது. ஆறு முறை வெட்டப்பட்டுத் தான் கொல்லப் பட்டார்.

Her family sent Princess Mishaal bint Fahd, at her own request, to Beirut, Lebanon, to attend school. While there, she fell in love with a man, Khaled al Sha'er Muhalhal, the nephew of Ali Hassan al Shaer, the Saudi ambassador in Lebanon, and they began an affair.

Upon their return to Saudi Arabia, it emerged that they had conspired to meet alone on several occasions and a charge of adultery was brought against them. She attempted to fake her own drowning[3] and was caught trying to escape from Saudi Arabia with Khaled. 


Although the Princess was disguised as a man, she was recognized by a passport examiner at Jeddah airport.[4] She was subsequently returned to her family.

Under the Sharia law current in Saudi Arabia, a person can only be convicted of adultery by the testimony of four adult male witnesses to the act of sexual penetration, or by their own admission of guilt, stating four times in court "I have committed adultery. (Other Schools of Islamic Jurisprudence or Sharia have different views and legal practice than this.)

Her family urged her not to confess, but instead to merely promise never to see her lover again. On her return to the courtroom, she repeated her confession: "I have committed adultery. I have committed adultery. I have committed adultery."

On 15 July 1977, both were publicly executed in Jeddah by the side of the Queen's Building in the park. She was blindfolded, made to kneel, and executed on the explicit instructions of her grandfather, a senior member of the royal family, for the dishonor she brought on her clan.


Khaled, after being forced to watch her execution, was beheaded with a sword by, it is believed, one of the princess' male relatives rather than by a professional executioner. Severing his head took five blows.[4][9] Both executions were conducted near the palace in Jeddah, not in Deera Square.

இங்கிலாந்தைச் சேர்ந்த ATV தொலைக்காட்சி நிறுவனம் இவர்களின் கதையை 1980-இல் Death of a Princess என்ற பெயரில் ஆவணப் படமாக  (documentary drama) வெளியிட்டது. பல நாடுகளில் இவர்களின் கதை புத்தகங்களாகவும் வெளிவந்தன.

Independent film producer Antony Thomas came to Saudi Arabia and interviewed numerous people about the princess' story. He was met by conflicting stories, which later became the subject matter of a British documentary, Death of a Princess.

The film was scheduled to show on 9 April 1980 on the ITV television network and then a month later on the public television network PBS in the United States. Both broadcasts were met with livid protests followed by strong diplomatic, economic and political pressure from the Saudis to cancel these broadcasts.

After having failed to get the British broadcast cancelled, King Khalid expelled the British ambassador from Saudi Arabia.

In May 1980, attention then shifted to PBS where their officials endured a month of mounting pressure from corporations and politicians. A major PBS sponsor, the Mobil Oil Corporation, took out a full-page ad in
The New York Times op-ed page opposing the film and declaring it jeopardized U.S.-Saudi relations. After some stalling, it was eventually broadcast by the PBS program World in most of the US on 12 May 1980, although some PBS stations did not do so.

For example, in South Carolina, the PBS affiliate cancelled broadcast of the film, a decision influenced by fact that the then US Ambassador to Saudi Arabia, John C. West, had formerly been the state's governor.

The docudrama was aired in the United States as part of a weekly PBS program called "World". That program later became known as PBS Frontline. Death Of A Princess aired again on Frontline in 2005, to commemorate the 25th anniversary of the original broadcast. King Khalid was said to have offered $11 million to the network to suppress the film.

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Mishaal_bint_Fahd_Al_Saud

2. https://nakarajan.blogspot.com/2018/07/royal-murder-against-love-in-saudi.html

3. https://www.ozy.com/true-and-stories/the-mysterious-murder-of-a-saudi-princess-and-her-lover/94274/

4. https://rakyatku.com/read/124966/mirip-romeo-and-juliet-ini-putri-raja-arab-yang-dieksekusi-di-depan-kekasih

5. "Fate of another royal found guilty of adultery". The Independent. 20 July 2009.

6. A Talk With Antony Thomas - Death of A Princess". Frontline. PBS.

பின்னூட்டங்கள்

மகாலிங்கம் படவேட்டான் பினாங்கு: குற்றம் புரிந்த தன் மகனையே தேரின் சக்கரத்தில் இட்டுக் கொன்ற தமிழ் மன்னனின் தோன்றறம் என நான் கருதுகிறேன். மன்னரின் பேத்தி என்றும் பாராமல் நியாயத்தையும் சட்டத்தையும் நிலை நாட்டியது. போற்றுதலுக்கு உரியது. 🌹

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தன் பேத்தி ஆசைப் பட்டவனுக்கே, அவளைக் கட்டிக் கொடுத்து புண்ணியம் செய்து இருக்கலாமே... அவர்கள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும்... அவர்களைச் சேர்த்து வைத்து அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து இருக்கலாமே... தப்பு தண்டா நடக்க வாய்ப்பே இல்லை. இது என் தனிப்பட்ட கருத்து.

வெங்கடேசன்: மனிதாபிமானத்துடன் இதை செய்து இருக்களாம் .அந்த நாடுகள் பெண்களை ஒரு போக பொருளாகதானே பார்க்கின்றன! 🤷‍♀️

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பெண்ணுக்கு 19 வயது. காதலனுக்கு 20 வயது. மாமா முறை. விசயம் தெரிய வந்து இருவரும் நாட்டை விட்டு தப்பிக்கும் போது ஜெட்டா விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டார்கள். அவள் ஆண் உடையில் தப்பிக்க முயற்சி செய்தாள்.

இது ஒரு பழி வாங்கும் படலமே. அரச குடும்பத்தில் காரை நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினை. இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த பழி வாங்கல்; மனக் கசப்புகளில் இந்தப் பெண் பலிக்கடா ஆனாள்.

இருவரையும் நாடு கடத்தச் சொல்லப் பட்டது. இருவரையும் எங்கேயாவது அனுப்பி விடுங்கள் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது. ஒரு சிலர் பல பெண்களை மனைவியாக்கிக் கொள்ள முடியும். ஆனால் சின்னஞ் சிறுசுகளின்  ஆசாபாசங்களுக்கு மட்டும் எதிரி... என்னங்க இது.

வெங்கடேசன்:  ஆமாங்க ஐயா. சில தனி மனித சிக்கல்களால் வாழ வேண்டிய பிஞ்சுகள் கொடூரமாக கொல்லப் பட்டனர். வேதனையான விசயம் 😭

மரண தண்டனை கொடுத்த அந்த மன்னருக்கு 5 மனைவிகள். Muhammad bin Abdulaziz married five times had twenty-nine children, seventeen sons and twelve daughters.

வெங்கடேசன்: பாருங்க இவனுங்க மட்டும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ரொம்ப மோசமான சட்டங்கள் 😡

தனசேகரன் தேவநாதன்: ஆமாம் தலைவரே. ஒரு நாட்டில் உடுட் அமலாக்கம் பின்புற கதவு வழியாக வெளியேறி விட்டதா பேச்சு மூச்சே காணோமே 😢😢

கணேசன் சண்முகம்: என்ன அண்ணே! உடுட் பற்றி கேட்கிறீர். ஆடி ஆவாங்கும் அவர் வீரர்களும் இப்ப பணம் -டுட்,  பதவி- டுட், பெண்கள் - டுட் என பதுங்கி விட்டனரே.

தனசேகரன் தேவநாதன்: உடுட்டா அது நம்முடையது அல்ல மனுநீதி சோழன் என்ற இந்து அரசன் கொண்டு வந்த, நடைமுறை என் தலைகீழ் நிற்பார்கள்.

ஜெயகோபாலன் பாகன் செராய்: ஓர் அரசாங்கத்தின் முட்டாள்தனமான காலத்திற்கு ஏற்தல்லாத தண்டனைகளில் இதுவும் ஒன்று! 🤦‍♀ இம்மாதிரியான தண்டனைகளை இக்கரையில் அமல்படுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா?! இதுதான்! - திருடினான் கையை வெட்டுவது போன்று?!

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நியாயமே இல்லை. இருவருக்கும் சின்ன வயது. ஆசைப்பட்டு இருக்கிறார்கள். எங்கேயாவது கண்காணா இடத்திற்குப் போய் விடுங்கள் என்று விரட்டிவிட்டு இருக்கலாம். அதற்கு கொலை செய்வதா? எங்கே ஐயா தர்மம்... நியாயம்? மனிதம் பார்க்காத ம.... தமா?

வெங்கடேசன்: இதற்கு காரணம் கண் மூடி(ட)தனமான பழக்கம்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஓர் ஆண் 4 பெண்களைக் கல்யாணம் பண்ணலாம் என்றால் எப்படி? இங்கே ஒருத்தி ஒருவனைத் தானே விரும்பி இருக்கிறாள்... தண்டனை கொடுத்தவருக்கே ஐந்து மனைவிகள்... என்னங்க... தலை சுற்றுகிறது.

வெங்கடேசன்: மாற்றி விடுவோம் .அவன்களை திருத்த முடியாது ஐயா

 

12 ஜூலை 2021

வியட்நாம் பயணங்கள் - கரு. ராஜா

12.07.2021

வியட்நாம் அழகிய நாடு.  அற்புதமான நாடு. இந்தோசீனாவின் கிழக்கே அமைந்து உள்ளது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பச்சை பசேல் வரலாற்றைப் பதித்து வருகிறது. ஒரு முறை போனால் மறுபடியும் போகச் சொல்லும் நாடு.

அமெரிக்காவின் ஆதிக்கத்தில் அலைகழிக்கப்பட்ட நாடு. மக்கள் தொகை 90.3 மில்லியன். மலேசியாவைப் போல ஏறக்குறைய மூன்று மடங்கு. வடக்கே சீனா; வடமேற்கே லாவோஸ்; தென்மேற்கே கம்போடியா; கிழக்கே தென்சீனக்கடல்; எல்லைகளாக அமைந்து உள்ளன.

வியட்நாம் டானாங் நகரில்

இந்த நாட்டிற்கு கோலாலம்பூரைச் சேர்ந்த கரு. ராஜா அவர்கள் தன் குடும்பத்தாருடம் ஏழு முறை பயணம் செய்து இருக்கிறார். கரு. ராஜா மலேசியப் பத்திரிகை உலகில் நன்கு அறியப் பட்டவர். தமிழ் மலர்; தமிழ் முரசு; வானம்பாடி நாளிதழ்களில் சேவை செய்தவர்.

அவர் வியட்நாம் சென்று இருந்த போது பிடித்த நிழல்படங்கள் இங்கு காட்சிப் படுத்தப் படுகின்றன. வியட்நாம் பற்றிய சில தகவல்கள்.


பழங்காலத்தில் இருந்தே வியட்நாம் பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து உள்ளன. கி.மு. 500,000 வருடங்கள் பழமையான ஹோமோ எரெக்டஸ் மனித எச்சங்கள் வடக்கு வியட்நாமின் லாங் சான் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

வியட்னாம் பானா மலை

1945 செப்டம்பர் 2-ஆம் திகதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோ சிமின் புரட்சி அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்தது. வியட்நாமை தங்கள் காலனி ஆதிக்கத்திற்குள் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. 

ஹாலொங் பே

அதற்கு எதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட்டார்கள். ஒன்பது ஆண்டுகள் இந்தப் போர் நீடித்தது. 1954-இல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது.

அதன் பின்னர் அமெரிக்காவின் தலையீடு. வியட்நாம் போரின் போது காட்டுமிராண்டித் தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது. வியட்நாம் மக்களுக்கு அந்தப் போரின் போது அமெரிக்கா கணக்கிட முடியாத இழப்புகளும், சொல்லொணாத் துயரங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

கரு. ராஜாவும் அவர் மனைவியும்

இப்போதுதான் வியட்நாம் மக்கள் கொஞ்சம் நிம்மதியாகப் பெருமூச்சு விடுகின்றனர்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: அருமையான கட்டுரை. மிக்க நன்றி. இன்னும் கொஞ்சம் விரிவாக அங்குள்ள உணவு பழக்க வழக்கம் பற்றியும் எழுதுங்கள்.

இராதா பச்சையப்பன்: அடேங்கப்பா... ஒரு வகையில் எல்லா ஊர்களையும் சுற்றிப் பார்த்த மாதிரிதானு சொல்லுங்கள். உங்களை உலகம் சுற்றும் வாலிபன் என்று சொன்னாலும் தகும். கொடுத்து வைத்தவர். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

கரு. ராஜாவும் அவர் மகளும்

இனி வரும் காலங்களில் அப்படி ஒரு வேளை வெளியூருக்குப் போக நினைத்தால், அந்த டிக்கெட்டை என் பெயரில் புக் செய்யவும். உங்கள் செலவில், உங்க தயவில், நான் போய் வெளியூரைச் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேனே!

அது சரி, நீங்கள் போய் வந்த ஊர்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லலாமே. போய் வந்த ஊர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதலாமே புலனத்தில்... நன்றி.

ஹனோய்  ஹலோங் விரிகுடா பகுதி

பொன் வடிவேல்: அழகிய நாடுகளுக்குs சுற்றுலா செல்லும் உங்களின் ஆர்வம் எமது நினைவுகளில் பசுமையாக அமைகிறது. இன்னும் விரிவாக எழுதினால் சிறப்பாக இருக்கும். இதன் பின் நாம் உலக சுற்றுலா செல்ல பல வருடங்கள் ஆகலாமே. - பொன் வடிவேல், ஜோகூர்பாரு. 012-7299587

கரு. ராஜா: வியட்னாமில் சாப்பாடு ஒரு பிரச்னை இல்லை. நம் நாட்டில் சீனர்கள் விற்கும் சிக்கன் சாப்பாடு (chicken rice) எல்லா இடங்களிலும் கிடைக்கும்.அதை சாப்பிட்டு நாம் சமாளிக்கலாம். அவர்கள் ஒரு மாதிரி பெகர் தயாரித்து கொடுக்கிறார்கள். கோழி பெகர். மலேசிய பணம் சுமார் சுமார் நான்கு ரிங்கிட். ஒரு பெக்கர் சாப்பிட்டலே போதும். வயிறு நிறைந்து விடும்.


சுமார் 6 பேர் கொண்ட குழுவில் சென்றால் சாப்பாடு ஒரு பிரச்னை இல்லை. 6 பேரும் ஒரு மேஜையில் உட்கார்ந்து விருப்பப்பட்ட பொருளை ஆர்டர் செய்து சாப்பிட்டு பிறகு பகிர்ந்து கொண்டால் பணம் ரொம்ப குறைவாக இருக்கும்.

சுமார் 5 அல்லது 6 பேர் பயணம் போகும் போது வாடகைச் செலவு குறையும். என்னைப் பொருத்தவரை சாப்பாடு ஒரு பிர்ச்னையே இல்லை.

டானாங் நகரில் உள்ள இந்து ஆலயம்

நான் ஒரு கிராமத்துக்கு சுற்றுலா சென்று இருந்தேன். அங்குள்ள ஒரு மார்க்கெட்டுக்கு போய் இருந்தேன். அங்கு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.

வியட்னாமில் ஒரு சில சீக்கியர்கள் உணவகம் நடத்துகிறார்கள். ஆனால், விலை கொஞ்சம் அதிகம். ஒரு முறை நாங்கள் சப்பாத்தி ஆர்டர் செய்து... சப்பாத்தியும் வந்தது சாம்பார் இல்லாமல்... சாம்பார் கேட்டதற்கு சாம்பார் தனி விலையாம். அதிலிருந்து சீக்கியர் உணவகத்தைத் தவிர்த்து விட்டோம். கொரனா முடிந்ததும் வியட்னாம் போய் வாருங்கள். திருட்டு இல்லாத ஊர். நன்றி

இராதா பச்சையப்பன்:
அருமை👌. இன்னும் மற்ற மற்ற ஊர்களையும் கட்டுரை வடிவில் எதிர்ப்பார்க்கிறோம். 

துணிச்சல்காரப் பிள்ளை மகள் மலர்விழி
சுரங்கத்தில் இறங்கிப் பார்க்கிறார்


தனசேகரன் தேவநாதன்: ஆவல் அதிகரிக்கிறது ஐயா... பார்க்க வேண்டிய  இடங்களைக் குறிப்பிடுங்கள். அனைவருக்கும் பயன்படும்.

கரு. ராஜா:
வியட்நாம் பயனம் முறைப்படி திட்டமிட்டு தயாரித்தால் சுமார் 5 நாட்களுக்கு சுமார் 1000 மலேசிய ரிங்கிட்தான் வரும்.நீங்கள் சுற்றுலா நிறுவனம் மூலம் போனால் செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் வரும்.

ஒரு முறை வியட்னாமில் டானாங் என்ற ஊருக்கு சுற்றுலா போயிருந்தேன். எல்லாம் நெருங்கிய நண்பர்கள். 5 நாள் பயணம். கடைசியில் பயணச் செலவைக் கணக்கிட்டால் தலைக்கு 850 வெள்ளி தான் வந்தது. 

நாராங் எனும் இடத்தில் உள்ள ஒரு பாலைவனம்

இராதா பச்சையப்பன்: உள்ளம் ரெண்டும் ஒன்று. உருவம் தானே   ரெண்டு, உயிர் ஓவியமே  கண்ணே நீயும் நானும் ஒன்று.

கரு. ராஜா: ஒரு சில நேரங்களில் air Asia மலிவாக டிக்கட் போடுவார்கள். அந்த நேரத்தில் உடனே டிக்கட்டைப் போட வேண்டும். சுற்றுலா பிரச்னை இல்லை. போக வேண்டிய ஊரின் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகச் சுற்றுலாவை பேரம் பேசலாம். குறைந்த விலையில் கிடைக்கும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மைதான். மியன்மாரில் 2014 ஆம் ஆண்டு தனி ஆளாக திட்டமிட்டுப் பயணம் செய்தேன். ஒரு வாரம்...1400 ரிங்கிட் தான் பிடித்தது.

கரு. ராஜா:
கொரனா மட்டும் வரவில்லை என்றால் இந்த ஒன்றரை வருடத்திற்கு குறைந்தது மூன்று ஊருக்காவது போயிருப்பேன்.

தோளில் போட்ட கையை எடுக்க மனசு வரலையோ

இராதா பச்சையப்பன்: இது தெரிந்த விசயம் தானே. மறக்காமல் என் பெயரிலும் ஒரு டிக்கெட்டைப் போடவும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இரவின் மடியில் என்று சொல்லி போட்டுத் தாக்குகிறார்கள். நீங்கள் என்ன... உலகம் சுற்றி வந்து இருக்கிறீர்கள். பதிவு செய்யுங்கள். நாங்கள் பார்க்கிறோம்.
 
ஹோசிமின் நகர இந்து கோயில்

நம் புலனத்தைச் சேர்ந்த ஒருவர் உலகம் சுற்றி வந்து இருக்கிறார். அதைப் போடாமல் தமிழநாட்டு செய்திகள்: சுகரை குறைப்பது எப்படி; கொசுவை பிடிப்பது எப்படி எனும் பழைய குப்பைகளை மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டுமா...

முருகன் சுங்கை சிப்புட்: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்... பருவ சிலைகளின் அரங்கம்...

கரு. ராஜா: உலகில் இருக்கப் போவது கொஞ்ச காலம்தான். இருக்கிற வரைக்கும் 4 ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய  ஆசை. கொரனா முடிந்ததும் புலன உறுப்பினர்கள் வியட்நாம் போய் வருவோம். வாருங்கள்.
கொரில்லாக்கள் பதுங்கி இருந்த 
பதுங்கு குழியில் மலர்விழி

இராதா பச்சையப்பன்: அனைத்து புகை படங்களும்,  சுற்றுலா இடங்களும் அருமையோ அருமை

சிவகுரு மலாக்கா: காணொளியும் தங்களின் குரல் பதிவின் விளக்கமும்  மிக அருமை ஐயா.

தேவி கடாரம்: மிக அருமை ஐயா 👌👍🏻 மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் பயணக் கட்டுரை பிரமாதம். அதைவிட அருமையிலும் அருமை தாங்கள் பகிர்ந்த படங்கள்.

கரு. ராஜா: படங்களைக் கண்டுகளித்த புலன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


மலேசியம் புலன அன்பர்களின் சார்பில் கரு. ராஜா குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

கோலசிலாங்கூர் கடல் பெருக்கு - இராதா பச்சையப்பன்

12.07.2021

கோலாசிலாங்கூர் ஓர் அழகிய துறைமுகப் பட்டினம். சிறப்பு வாய்ந்த சிலாங்கூரில் சிருங்காரம் பாடும் ஒரு சின்னப் பொக்கிசம். மலாக்கா நீரிணையைச் சார்ந்த நிலப்பகுதி. பச்சைப் பசேல் சதுப்புநிலக் காடுகள்.

கிள்ளான் மாநகரில் இருந்து 50 கி.மீ. கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. ஓர் அமைதியான ஊர். ஆனாலும் அங்கே ஒரு பெரிய காலப் பெட்டகமே புதைந்து கிடக்கிறது. 

அதிகாலை கடல் வெள்ளப் பெருக்கு.
கோலாசிலாங்கூர் ஆறும், மலாக்கா கடலும் சங்கமமாகும் இடம்.

கோலா சிலாங்கூருக்குப் போனதுமே முதலில் உங்கள் கண்களில் படுவது கோலா சிலாங்கூர் (Kuala Selangor) எனும் பிருமாண்டமான வெள்ளை எழுத்துச் சுவர்கள் தான். மெலாவாத்தி குன்றின் (Bukit Melawati) கரும்பச்சைக் கானகத்து உச்சியில் அந்த எழுத்துகள் ஜொலிக்கின்றன. 

இன்று காலையில் ராதா பச்சையப்பன் எடுத்த படம். 

மெலாவாத்தி குன்றில் இருந்து மலாக்கா நீரிணையில் போகும் கப்பல்களைப் பார்க்க முடியும். துறைமுகத்திற்கு வரும் கப்பல்களைப் பார்க்க முடியும். தவிர கீழே கோலா சிலாங்கூர் பட்டினத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நன்றாகவே கவனிக்க முடியும்.

கோலா சிலாங்கூரின் வரலாறு 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் வந்து கலக்கும் முகத்துவாரத்தில் தான் இந்தச் சிலாங்கூர் குன்று இருக்கிறது. இங்கே தான் ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. அதை இப்போது மெலாவாத்தி கோட்டை என்று அழைக்கிறார்கள். 


உண்மையில் இங்கே இரு கோட்டைகள் உள்ளன. மெலாவாத்தி குன்றின் மீது ஒரு கோட்டை. அதற்கு மெலாவாத்தி கோட்டை என பெயர். இன்னொரு கோட்டை இரு கி.மீ. அப்பால் தஞ்சோங் கிராமாட்டில் உள்ளது.

சிலாங்கூர் குன்றின் சுற்றுப்புறங்கள் அனைத்திலும் நெட்டைக் குத்தலான கருங்கல் பாறைகள். அவ்வளவு சுலபமாக மேலே ஏறிப் போய்விட முடியாது.

கீழே சிலாங்கூர் ஆறு வளைந்து வளைந்து நெளிந்து போகிறது. ஆற்றின் இரு மருங்கிலும் அடர்ந்த காண்டா சதுப்புக் காடுகள். மேலே குன்றின் மீது இருக்கும் கோட்டைக்கு இவையே நல்ல தற்காப்பு அரண்கள். 16ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகனட்டின் மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது. 


அந்தக் காலக் கட்டத்தில் ஜொகூர் ஆட்சியின் கீழ் தான் கோலா சிலாங்கூர் இருந்தது. துன் முகமட் அங்கிருந்து கோலா சிலாங்கூர் நிலப்பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். (சான்று: A History of the Peninsular Malays with Chapters on Perak & Selangor; R.J. Wilkinson, C.M.G (Pub Kelly & Walsh Ltd.)

17ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா மூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா எனப் பெயர் மாற்றம் கண்டது. 


இவர்தான் மெலாவாத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.

(சான்று: http://www.sabrizain.org/malaya/sgor5.htm - Raja Lumu, who took the title Sultan Salehudin Shah, established himself at the Kota Malawati)

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: நீலக் கடல் அவைதான்... எந்தன் நெஞ்சின்
அலைதான் கண்ணம்மா... பாரதியார் கவிதை

கோலாசிலாங்கூர் காலை வேளையில்... அழகிய காட்சிகள்... நதிக் கரைகளைச் சுத்தம் செய்தால் அழகியச் சுற்றுலா தளங்களாக ம்றுவடிவம் பெறலாம்... 

ஏற்கனவே இன்று காலையில் பதிவானவை... இருப்பினும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.

நம் நாட்டுப் படங்கள்... நம் புலன உறுப்பினர் இன்று காலை எடுத்த படங்கள்... Photo genuine உள்ளது. அசல் தன்மைகள்.

இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கு நிழல்படக் கலைத் தன்மை உள்ளது. வாழ்த்துகள். 

இராதா பச்சையப்பன்: இதில் இப்படி ஒரு கண்ணம்மா கதை இருப்பது தெரியாமல் போனதே.

கரு. இராஜா: கடல் சார்ந்த பட்டிnஅம், நதிச் சார்ந்த நகரங்கள் மற்ற நகரங்களை விட அழ்காக இருக்கும். இந்த அழகை ரசிப்பதற்காகவே நான் அடிக்கடி கோலாசிலாங்கூர் போவதுண்டு. என் வீட்டிலிருந்து கோலசிலாங்கூருக்கு 60 நிமிடப் பயணம்.

நான் முறை சீனா, ஷங்காய்  நகருக்குப் போயிருந்தேன். ஷங்காய் நகரமும் ஒரு நதிச்சார்ந்த நகரம். இரவு நேரத்தில் அந்த நதியில் பயணம் செய்வது,  சொல்ல வார்த்தை இல்லை. இரு கரைகளிலும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணைக் கவரும்.
 
அடுத்து பாங்காக்,   இதுவும் ஒரு நதி சார்ந்த நகரம். இதுவும் ஷங்காய் மாதிரி தான் இருக்கும். பாங்காக் நகரத்திற்கு மூன்று முறை சுற்றுலா போய் இருக்கிறேன்.

வியட்நாம் சொல்லவே தேவை இல்லை. வடக்கில் இருந்து தெற்கு தெற்கு வரை மீகோங் நதி பாய்கிறது. பெரும்பாலும் வியட்நாம் நகரங்கள் நதி ஓரமாக அமைந்திருக்கிறது. 7 முறை வியட்நாம் போயிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

இராதா பச்சையப்பன்: நன்றி சொல்ல எனக்கு வார்த்தை  வரவில்லை.  இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நினைக்கவும் இல்லை. அனைத்துக்கும்  நன்றி நல்குகிறேன்.  நன்றி

 

10 ஜூலை 2021

தேனீக்களும் அதன் அதிசய வாழ்க்கை முறையும்

பதிவு: கென்னடி ஆறுமுகம் - 09.07.2021

வேலைக்காரத் தேனீக்கள், பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது. ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து பூக்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து வரும்.


அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக நடனமாடும். அந்த நடனத்தை வைத்துப் பூக்கள், தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும்.

அந்த நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.

அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனைச் சேமிக்கும் முறை பற்றியும்; அதைக் கெடாமல் பாதுக்காகச் செய்யப்படும் வேலைகளைப் பற்றியும்; ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஞ்ஞானம். அவ்வளவு நுணுக்கம்.

Bees are the claasic example for Colonial and Communal system of living.

கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.

ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும். மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள். இதில் இனப் பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணி. ஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழு முதல் பொறுப்பு. இந்தத் தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள், மரங்கள், காடுகளே உருவாகின்றன.

இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீப காலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன. ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.

காரணம் :- மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள். அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.

அப்பூக்களில் உள்ள Neonicotinoids - நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி, அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும், நல்ல ஞாபகத் தன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து குழம்பி இறந்து விடுகின்றன.

இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ இறுதியில் தானும் இறக்கிறது அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.

இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள் அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உரிவாக்குகின்றன.

வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில், குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக் காய்களும், வாழைப் பழங்களும், மாம்பழங்களும் - Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.

இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும் வேரடி மண்ணோடும் விரட்டி அடிக்க வேண்டியது நம் பொறுப்பு. ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,

மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.

ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத் தெறியப்பட்டு விடும்.

பி.கு: "Bee Movie" என்றொரு Animated English Movie உள்ளது. அதைப் பாருங்கள். ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம். படித்ததில் சிந்திக்க வைத்தது.



வாணிகமா? நாடகமா? நமது அரசியல்! - பாதாசன்

பதிவு செய்தவர்: கரு. ராஜா -  09.07.2021


அரசியல் என்பது வாணிகமா ? - அஃது
   அரங்கில் நடித்திட நாடகமா ?
அரைசல் புரைசல் செய்திகளா ? - அல்ல
  அரசியல் பொய்யின் புழுதிகளா ?
நரசல் கோறனிக் கைகளிலே - மக்கள்
  நாளும் நசுங்கிச் இறக்கையிலே
அரசியல் வலுவை இழப்பதுவா - இதை
   அரசியல் வாதிகள் செய்வதுவா ?

கோறனி போடுது கொண்டாட்டம் - நம்
    குடும்ப அரசிலோ திண்டாட்டம் !
ஓரணி சேர்ந்திடும் நேரமிதே - நாம்
   ஒன்பதாய்ப் பிரிந்தால் ஊறலவோ ?
காரணம் ஆயிரம் இருக்கட்டுமே - அவை
  கானல் நீரென ஆகட்டுமே !
நேரம் இதுவே ஒன்றிணைய ! -பகை
  நேற்றைய கனவென மறந்திணைய !

குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல் - நம்
  கொள்கை அதுவெனல் நாணமதே !
குழம்பில் காய்கறி இணைந்ததுபோல் - இனிக்
   கூடி ஒன்றாய்ப் பிணைந்திடுவோம் !
புலம்பல் இனியும் தேவையிலை - நாம்
   புரிந்த அரசியல் தேவையென்போம் !
கலங்க வேண்டாம் மலேசியரே - நலம்
   துலங்கும் நமது வாழ்வினிலே !

 

ஆசிரியர் பணி என்பது தொழிலா தொண்டா? - முனைவர் குமரன் வேலு

பதிவு: பி.கே.குமார் - 09.07.2021

அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று பல தனியார் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி... தொடர்ந்து ஆசிரியராகத் தனியார் பள்ளியிலும், விரிவுரையாளராகத் தனியார் கல்லூரிகளிலும் பணி செய்த அனுபவங்கள் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஓரளவுக்கு உதவினாலும் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளின் சூழலும் மாணவர்களின் தேவையும் சற்று மாறுபட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.


இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் சூழலில் ஓர் ஐந்து ஆண்டுகள் என்னுடைய பணி அனுபவங்கள் மையம் கொண்டிருந்தன. ஆசிரியம் ஓர் அறப்பணி என்பதெல்லாம் காசுக்காக கற்பிக்கப்படும் தத்துவங்கள் என என் மனம் சொல்லியது.

புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில், பணக்கார மாணவர்கள் பயிலும் இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் ஏமாந்துவிடக் கூடாது.

நான் பணி செய்த அந்தக் கல்லூரியில் பல துறைகள். பொறியியல் துறையில் நான் பொறியியல் கணிதம் கற்பித்து வந்தேன். மின்னியல் படித்துக் கொடுக்கும் ஒரு மூத்த விரிவுரையாளர், நான் என இருவர் மட்டுமே அங்கு இந்தியர்கள். நாங்கள் இருவருமே ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம்.

நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வேறு இனத்தவர் ஒருவர் நிரந்தரப் பணியாளராக வேலைக்குச் சேருகின்றார்.

நிறுவனம் நிறைய இலாபம் சம்பாத்தித்து உள்ளதால் அந்த ஆண்டு எல்லோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. எனக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 1.2 மடங்கு ஊக்கத் தொகையும்; இன்னொரு இந்தியருக்கு 1.5 மடங்கும், புதிதாக வந்த நண்பருக்கு 2.0 மடங்கும் வழங்கப் பட்டது. இவ்வகைப் இனப் பாகுபாடு என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டு வகையான வஞ்சிப்புகள். ஒன்று வேலை நிரந்தரம் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியைக் காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும். இரண்டாவது, ஊக்கத் தொகை வழங்குவதில் காட்டப்படும் பாகுபாடுகள்.

அரசாங்கப் பணியில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தம் பெறுவார்கள். மேற்படிப்புக்கு உபகார சன்பளம், பணி ஓய்வுத் தொகை, இலவச மருத்துவ வசதி, விடுமுறை என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  வேலை பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால் அரசாங்க வேலையே சிறந்தது என்று மனம் எண்ணலாயிற்று.

ஐந்து ஆண்டுகள் தனியார் துறையில் இருந்தாயிற்று. அது போதும். இனி அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முடிவு செய்தேன். அந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற்று விட்டது. துன் மகாதீர்தான் அப்போது பிரதமராக இருந்தார்.

அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் அந்த வாய்ப்பு நெருங்கி வந்தது. 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' எனும் முழக்கம் உண்மையில் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.






கரு. ராஜா பிறந்தநாள் வாழ்த்துகள் 2021

09.07.2021

(மலேசியம் புலனத்தின் 20 அன்பர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். நன்றி.)

ராதா பச்சையப்பன்: இன்று புலன நிர்வாகி சகோதரர் திரு. கருப்பையா அவர்களுக்கு பிறந்த நாள்... உங்களை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன் சகோதரரே! நீங்கள் இது போன்று பல ஆயிரம் பிறந்த நாளைக் காண வேண்டும். இறைவன் அருள்புரிவாராக. உங்கள் சகோதரி இராதா🙏


வெங்கடேசன்: இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் .வாழ்க வளமுடன்

தனசேகரன் தேவநாதன்: அண்ணன் கரு. இராஜா அவர்கட்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... என்றென்றும் நலமுடன்...

தேவி கடாரம்: இனிய அகவை தின நல்வாழ்த்துகள் ஐயா...

கணேசன் சண்முகம் சித்தியவான்:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.

ஜீவன் தங்காக்: @Raja Sg Buluh ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐

உதயகுமார் கங்கார்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன்.

டத்தோ தெய்வீகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு.இராஜா அவர்களே.

பி.கே. குமார்: ஐயா கருப்பையா அவர்களுக்கு அகவைதின நல்வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.வாழ்க நலத்துடன்.

வேலாயுதம் பினாங்கு: திரு. கருப்பையா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். வாழ்க நலமுடனும் & வளமுடனும்.

செபஸ்டியன் கோப்பேங்: ஐயா அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துகள். வாழ்க வளமடனும் நலமுடனும். 🙏

குமரன் மாரிமுத்து: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கரு ஐயா. நீங்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ ஈசனை வேண்டுகிறேன். வாழ்க வளத்துடன்.

முருகன் சுங்கை சிப்புட்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா.. வாழ்க வளமுடன்

கவிதா தனா: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

கென்னடி ஆறுமுகம்: இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஐயா.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கரு. ராஜா அவர்களுக்கு இன்று இனியநாள்... அவர் நலமாகப் பயணிக்க மலேசியம் புலனத்தின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்க பல்லாண்டு... பல்லாண்டுகள்... 💐💐

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள் ஐயா

மகாலிங்கம் படவேட்டான்: மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்... அன்புடன்

சிவகுரு மலாக்கா: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா...

செல்லையா செல்லம்: இனிய பிறந்தநாள்  வாழ்துக்கள்  ஐயா

பாலன் முனியாண்டி: அன்பு நிலைபெற, ஆசை நிறைவேற, ஈடில்லா இந்நாளில், உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரனாய் எண்ணத்தில் இனிமையாய், ஏற்றத்தில் பெருமையாய், ஐயம் நீங்கி, ஒற்றுமை காத்து ஒரு நூற்றாண்டு, ஒளவை வழிகண்டு வாழிய நீர் பல்லாண்டு..

இன்று தனது பிறந்த நாளைக் காணும் தமிழ் திரு. கருப்பையா அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்று போல் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்... அன்புடன் மலேசியம் புலன குடும்பத்தினர்...
 
பொன் வடிவேல்: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா, நல்ல ஆரோக்கியத்துடன் சிறந்த அறிவாற்றலுடன் நல்ல ஆயுளுடன் நம்முடன் பயணிக்க இறைவன் ஆசீர்வதிப்பார்.- பொன்.வடிவேல், ஜோகூர்பாரு 

டாக்டர் ஜெயஸ்ரீ: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! 

கரு. ராஜா: வணக்கம் புலன நண்பர்களே, இன்று 75 வயது. காலையிலேயே நண்பர் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முதல் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். தொடர்ந்து மலேசிய  புலன நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். உங்கள் அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.