01 டிசம்பர் 2022

மலேசியம் புலனத்தின் பதிவுகள் - 23.11.2022


23/11/2022, 5:22 am - Ratha Patchiappan: *காலம் போடும் கணக்கு*

இறைவனைத் தவிர யாராலும் மாற்ற முடியாது. அதனால் நல்லதை நினை... நல்லதை செய்... மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்... 🌹

23/11/2022, 7:28 am - Dhanasegaran Thevanathan: 🌸🙏🌹 நல்லதை செய்து நல்லதை நினைத்து நல்லலதை விதைப்பதே நலமிக்கச் செயல்...

23/11/2022, 10:04 am - Muthukrishnan Ipoh: அன்வார் நல்ல ஒரு தலைவர்... அரசியல் காரணங்களுக்காக ஒருவரால் பழி வாங்கப் பட்டார்...

23/11/2022, 11:05 am - Dhanasegaran Thevanathan: முந்தைய தேர்தலில் அன்வாரை முன்னிறுத்தி மக்கள் வாக்களித்தனர்... இப்போது மதம் என்ற வட்டத்தில் மக்களும் நாடும் சிக்கி தவிக்கின்றனர்... பொன் விளையும் பூமியில்... சமயம் எனும் போர்வையில் ஊழலுக்கு வரப்பு கட்டி நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

23/11/2022, 11:11 am - Selvakumar Sanmuka Thevar: ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போது எல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை..!!  வாழ்க வளர்க *தமிழன்*

23/11/2022, 11:11 am - Dhanasegaran Thevanathan: அரசர் நல்ல முடிவை அளிப்பார் என நம்புவோம்🙏🌹🌸

23/11/2022, 11:15 am - Vengadeshan: உண்மை ஆசான் சில தனி மனித வக்கிர புத்தியால் நாடே நாசமாகிறது 😭

23/11/2022, 11:15 am - Devi Kedah Kadaram: உண்மை... உலக நாடுகள் மத்தியில் மூவினமும் ஒன்றான மலேசியாவின் அழகான தோற்றத்தை தேர்தலுக்குப் பின்னர், சில அரசியல் கட்சிகள் உடைத்து தரைமட்டமாக்கி வருகின்றன...

23/11/2022, 11:35 am - Muthukrishnan Ipoh: கிழவர் இரும்புப் பிடி... மொசின் இன வெறி... அடி அவாங் மத வெறி... *எல்லாம் சுயநலம்*

23/11/2022, 11:38 am - Ratha Patchiappan: எவ்வளவு பெரிய  மத வெறியாக இருந்தாலும்  ஒருநாள் எவரும் மண்ணுக்குள்தான் போகனும். அப்போது மதம் இனம் தெரியாது...

23/11/2022, 11:42 am - Ratha Patchiappan: இந்த உண்மையை மொகைதீனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதனால் தான் இத்தனை அலைக்கழிப்பு.

23/11/2022, 11:44 am - Ratha Patchiappan: மனசு திக் திக் என்று அடித்து கொண்டு இருக்கிறது......?

23/11/2022, 11:47 am - Paul Servai: ஐயா... மாமன்னர் நாட்டை ஆட்சி செய்ய கட்டாயத்திற்கு வந்தால்... சட்டத்தில் இடம்  உண்டா?

23/11/2022, 11:49 am - Ratha Patchiappan: இவரின் ஆதங்கம் மிகவும் சரியே... உண்மை.. மனித நேயம்..

23/11/2022, 11:58 am - Vengadeshan: நாட்டையும் மக்களையும் பற்றி எந்தக் கவலையும் கிடையாது இவர்களுக்கு...

23/11/2022, 12:03 pm - Mahalingam Pada: இன வெறி ஊறிப் போன இக்காலத்தில் இதை சிந்திப்பார் யார்?

23/11/2022, 12:03 pm - Vengadeshan: எனக்கு தெரிந்து ஒரு வழி முறை இருப்பதாக நினைக்கின்றேன். தேர்தலில் வெற்றி அடைந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்தில்... இரு பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரைக் கட்சிக்கு அப்பாற்பட்டு மனசாட்சியின் படி வாக்களித்து தேர்வு செய்யலாம்.

23/11/2022, 12:03 pm - Vengadeshan: நாடாளுமன்றத்தை கூட்டி...

23/11/2022, 12:08 pm - Ratha Patchiappan: நல்ல முடிவை எதிர்ப்பார்ப்போம்....

23/11/2022, 12:21 pm - Cikgu Sivalingam: எதையும் சவாலாய் ஏற்றுக் கொள்ளும் தார்மீகம்...

23/11/2022, 12:32 pm - Muthukrishnan Ipoh: சட்டத்தில் இடம் இருக்கிறது. மாமன்னர் தனக்குப் பிடித்த ஒருவரைக் காப்பு பிரதமராக நியமிக்கலாம். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனால் இராணுவத்தைக் கொண்டு நாட்டை பாதுகாக்கலாம். அனைத்து உரிமைகளும் அவரிடம் உள்ளன. ஒன்றே ஒன்றைத் தவிர... சட்டம் இயற்றுவது... நாடாளுமன்றத்தின் மக்களவை மேலவை கொண்டு வந்த மசோதாவை சட்டம் ஆக்குவது. அவர் சம்மதிக்க வேண்டும்.

23/11/2022, 12:35 pm - Muthukrishnan Ipoh: (நம்ப) நிலைமையும் இதே நிலைமைதான். நடிக்கத் தெரியாது... அதனால் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

23/11/2022, 12:42 pm - Muthukrishnan Ipoh: நடக்கிற காரியம் இல்லை சார்... இராத்திரியோட இராத்திரியாக மொசக் குட்டி ஒரு கூட்டம் போட்டு ஒரு வழி பண்ணி விடும்... ஜால்ரா போட இருக்கவே இருக்கு கிளாந்தான் ஆடி அமாவாசை... மொசக்குட்டி தெரியும் தானே... செரட்டோன் அரசு கவிழ்ப்பின் கதாநாயகர்...

23/11/2022, 12:43 pm - Vengadeshan: ஆமாம் ஆசான் உண்மைதான் நீங்கள் சொல்வது இவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது...

23/11/2022, 12:46 pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்கள் அனைவரும் நல்லா இருக்கணும்... அன்வார் பிரதமர் ஆகணும்... இறைவா* 🙏💝

23/11/2022, 12:47 pm - Vengadeshan: பெரும்பாலான மக்களின் எண்ணம் இதுதான் ஆசான்...

23/11/2022, 12:49 pm - Muthukrishnan Ipoh: சபா சரவாக் ஒத்துழைக்க தயார்.
கேள்வி: யாருக்கு? 😇

23/11/2022, 12:49 pm - Vengadeshan: குழப்பமான தகவல்கள் ஆசான்...

23/11/2022, 1:01 pm - Chinna Rasu: நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மாவட்டங்கள் தோறும் பலப் படுத்தப்பட்டு உள்ளது. *மாமன்னர் நாளைய தினம் அனைத்து சுல்தான்களையும் சந்தித்துப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்*

23/11/2022, 1:34 pm - Dhanasegaran Thevanathan: அடுத்த கட்டம்

23/11/2022, 1:35 pm - Muthukrishnan Ipoh: மொசகுட்டிக்கு வாய்ப்பு பிரகாசம்...

*தென்னிந்திய தொழிலாளர் நிதி*

23/11/2022, 1:35 pm - Raja Sg Buluh: இந்தக் கட்டுரையை முழுதும்
படித்தேன். சாமிவேலு தகவலின்படி இந்திய சமுதாயத்தின் நன்மைக்காகவே தென்னிந்திய நிதி வாரியத்தை கலைக்க முடிவு செய்ததாகக் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தானே தமிழனின் நிலைமை ரொம்ப மோசமா போச்சு.

23/11/2022, 1:37 pm - Raja Sg Buluh: இந்தச் சாமி நல்லா வாயில வடை சுட்டுட்டு போய் சேர்ந்து விட்டார்.

23/11/2022, 1:38 pm - Muthukrishnan Ipoh: தென்னிந்திய நிதி கலைக்கப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் துன் சாமிவேலு மட்டும் அல்ல. அந்த வாரியத்தில் இருந்தவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.

23/11/2022, 1:44 pm - Ganeson Shanmugam Sitiawan: மலேசிய தென்னிந்தியர் நிதி விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, மறைந்த எழுத்தாளர் திரு.ஆதி குமணன் உரக்க குரல் கொடுத்தார்.

மகா கிழவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு  துன் சாமிவேலு  அவர்கள் தடுமாறினார் என்றே சொல்ல வேண்டும்.

ஆதி குமணின் உரத்த குரல், மகாதீரும் எதிர்ப்பார்க்கவில்லை.

விசயத்தை திசை திருப்ப மகா கிழவர் என்ன கூறினார் தெரியுமா?

மலேசிய இந்தியர்கள் இன்னும் தென்னிந்தியர்கள் அல்லர், மலேசியர்கள்.

இன்றும் நாம் இந்த நாட்டில் மலேசியர்களா என்றால் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ 😁😁😁 இதுதான் நிலைமை.

23/11/2022, 1:46 pm - Raja Sg Buluh: அருமை

23/11/2022, 1:51 pm - Muthukrishnan Ipoh: *SOUTH INDIAN LABOUR FUND (DISSOLUTION) ACT 1999* Incorporating all amendments up to 1 January 2006
PUBLISHED BY THE COMMISSIONER OF LAW REVISION, MALAYSIA
UNDER THE AUTHORITY OF THE REVISION OF LAWS ACT 1968 IN COLLABORATION WITH PERCETAKAN NASIONAL MALAYSIA BHD 2006

அரசாங்க நாடாளுமன்ற நிகழ்வுப் பதிவுகளில் அச்சிடப்பட்டு ஆவணமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுதான் கட்டுரையைத் தயாரித்து வருகிறேன்...

23/11/2022, 1:53 pm - Kanagarajan: மிக்க நன்றி ஐயா🌸

23/11/2022, 1:53 pm - Ganeson Shanmugam Sitiawan: சிறப்பு ஐயா

23/11/2022, 1:55 pm - Muthukrishnan Ipoh: திடீரென்று யாராவது நம் மீது வழக்கு தொடரலாம். ஆகவே முன்கூட்டியே சான்றுகளை வைத்து இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் போய் நின்று கொண்டு தடுமாறக் கூடாது. சட்டபூர்வமான ஆவணங்களைத் தூக்கிப் போட வேண்டும். அதோடு அவர்கள் கப் சிப்...

23/11/2022, 1:55 pm - Raja Sg Buluh: அருமை

23/11/2022, 1:58 pm - Vengadeshan: மிக்க நன்றி ஆசான்🙏

23/11/2022, 2:01 pm - Ve Sangkar Melaka: சிறப்பு 👍🏻👌🏻

23/11/2022, 2:17 pm - Ganeson Shanmugam Sitiawan: மாமன்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதாகக் கூறியுள்ளனர்

23/11/2022, 2:49 pm - Murugan Sivam: https://www.malaysiakini.com/news/645404

23/11/2022, 2:54 pm - Muthukrishnan Ipoh: ஒருக்கால் டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமரானால்... நம் இனத்தவர்கள் அதிக ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மற்றவர்களை முகம் சுழிக்கச் செய்யும். இதனால் வேறு பின்விளைவுகளும் வரலாம். எனவே, இதை உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது.

23/11/2022, 2:55 pm - Muthukrishnan Ipoh: இதை நாம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். சாலையில்  மற்றும் பொது இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

23/11/2022, 4:09 pm - Cikgu Sivalingam: பேதம் இருக்கும் வரையில் *சமதர்மம்*
என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும்.

*குட்டிக்கதை*

23/11/2022, 5:36 pm - Devi Kedah Kadaram: ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. இணையத்துல தேடிப் பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தை சொன்னான்.

"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே."

டாக்டரு சொன்னாரு..

"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தடவை வீதம் அஞ்சு முறை என்கிட்டே வாங்க.  சரி பண்ணிடலாம்!"

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?"

" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி.  நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹  சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "

" ஓ அப்டீங்களா? சரிங்க

டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில  காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிரச்சினை சரியாயிடுச்சு."

"ஓ! அப்டியா, எப்படி சரியாச்சி? "

"நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

"என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! "

"அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிரச்சினை பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு. அப்படியே கட்டிலை 2000-₹க்கு வித்துட்டு 200₹-க்கு பாய் வாங்கிட்டேன்.  இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. 😄

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

*படித்ததில் பிடித்தது*

23/11/2022, 7:57 pm - Muthukrishnan Ipoh: மலேசியாவின் 15-ஆவது பொதுத் தேர்தலின் போது, பாடாங் செராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் *கருப்பையா முத்துசாமி* மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். படித்துப் பாருங்கள்.

23/11/2022, 8:10 pm - Devi Kedah Kadaram: இனவாதம்  ஊழலை விட கொடியது...

23/11/2022, 8:44 pm - Ganeson Shanmugam Sitiawan: 13-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தலைக்கனம் பிடித்த அம்னோ தலைவர்கள் ஒரு சிலர் எங்களுக்கு மஇகா வேண்டாம், எங்களுக்கு மசீச வேண்டாம் என்று முழங்கினர்.

நாங்கள் மலாய்க்காரர்கள் ஆதரவுடன் தன்னிச்சையாக வெல்வோம் என்று கொக்கரித்தனர்.

14-ஆவது தேர்தலில் வரலாறு காணாத தோல்வி அடைந்தது தேசிய முன்னணி.

தலைக்கனத்தோடும், ஆணவத்தோடும் பேசிய அம்னோ கட்சியினர் இன்று மலாய்க்காரர்களாளேயே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர்.

மஇகா மற்றும் மசீச தலைவர்களுக்கு ஏன் PH வேண்டாம், ஏன் PN வேண்டும்.

BN + PH யுடன் இணைந்தால் ம.இ.கா-வுக்கும் , ம.சீ.ச-வுக்கும் அமைச்சர் பதவி என்பது கேள்விக் குறியாகும். PH-இல் சீனர் இந்தியர் தலைவர்கள் உள்ளனர்.

அதே BN + PN  உடன் இணைந்தால் நிச்சயம் அமைச்சர்கள் பதவி உண்டு.

இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்கினாலும் பரவாயில்லை, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்பது இவர்களது முக்கிய எதிர்பார்ப்பு.

23/11/2022, 8:47 pm - Muthukrishnan Ipoh: மிக மிக அருமையான அரசியல் பார்வை... 🎖️

23/11/2022, 8:51 pm - Ganeson Shanmugam Sitiawan: நன்றி ஐயா.

23/11/2022, 8:53 pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவின் கடைசி வரிகள்... 👍👍

23/11/2022, 9:10 pm - Dhanasegaran Thevanathan: சரியாகக் கணித்தீர்கள் தம்பி. சமூகமாவது பற்றாது. பல அம்னோக்காரர்கள் அம்னோ வீழ்ச்சிக்கு காரணமான PN வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மஇகா எங்களை வீழ்த்திய இந்திய சமூகத்தை ஒரு கை பார்கிறேன் என்கிறது. இந்தியர்களுக்கு ஏன் மஇகா மீது வெறுப்பு. அதை  சிந்திக்கவே இல்லை.

அம்னோ மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத்தான் கிராமத்து மலாய் மக்கள் PN-ஐ வெற்றி பெறச் செய்தனர் என்பதனை அம்னோ தலைவர்கள் உடனே உணர்ந்து விட்டனர். யார் தோற்றாலும் பதவியில் சுகம் கண்டவர்கள் நாட்டு நலனோ சமூக நலனோ துச்சம் 🙉🙊🙈

23/11/2022, 9:11 pm - Vengadeshan: அருமையான உரை. ஆனால் கேட்க வேண்டியவர்கள் கேட்பார்களா?😭

23/11/2022, 9:20 pm - Kumaran Marimuthu: சிந்திப்பதை இழந்துவிட்ட சமுதாயத்திற்கு நறுக்கென்று ஒர் கேள்வி. நம் சமுதாயத்தில் பெரும் பகுதி சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது ஐயா.

23/11/2022, 9:30 pm - Devi Kedah Kadaram: மிகச் சரியான ஆதங்கத்தையும் மனக் குமுறலையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்... நம்மவர்கள் காதில் இது விழுமா....

23/11/2022, 9:33 pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா... சிறப்பான  பதிவுகள்.... அமரர் திரு. கருப்பையா அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சிங்க ஐயா... அவரது அரசியல் ஈடுபாடு சிறப்பானவை என்று தெரிந்து கொண்டேன். மலாய், சீன சமூகத்தினர் இருந்தும் தமிழரான இவரை தேர்வு செய்தது, இவரின் நல்ல பண்பை வெளிபடுத்துகிறது. சிறப்புங்க ஐயா... 🙏🙏

23/11/2022, 9:35 pm - Barnabas: நன்றி ஐயா.

23/11/2022, 9:36 pm - Mahalingam Padavettan Penang: உண்மை தான் ஐயா... இந்த இனம் வித விதமான போதையிலும்... பல வகையான கேளிக்கையிலும்...

அடிப்படையிலான கல்வியறிவு கூட முழுமையாக பெறாத நிலையிலும்.. தன்னிலை மறந்து தான் தோன்றிச் சூழலில்... ஆணவத்தோடு சுய கட்டுப்பாடு இன்றி... ஊர் மெச்சிக்க வேண்டி தனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டு... சிந்திக்க மறந்த ஒரு இனமாக மாறி விட்டது இன்று.

அடிப்படையிலேயே மாற்றத்தை கொண்டு வந்தால் தான் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டு... பிற இனத்தவர்களின் பார்வைக்கு நாம் ஒரு அறிவார்ந்த இனம் என்றும் மதிக்கப்படும்  இனமாகவும் பார்க்கப் படுவார்கள்.

ஆனால், இன்றைய சூழ்நிலை தொடருமானால் நமது அடுத்த தலைமுறைக்கு இந்த நாட்டில் எதிர்காலமே இல்லை... பெற்றோர்கள் உணர்வார்களா?

சமுதாயத் தலைவர்களின் பங்கு இருக்குமா? அரசியல்வாதிகள் சமுதாய வளர்ச்சிக்கு பாடு படுவார்களா? சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...

23/11/2022, 9:36 pm - Muthukrishnan Ipoh: அருமையான பின்னூட்டம்... நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்யும் மனநிலையில் இல்லை... நம்முடைய இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் ஆரவாரம் தான் மலாய் மக்களின் வாக்குகளைத் திசை திருப்பி உள்ளன...

23/11/2022, 9:39 pm - Devi Kedah Kadaram: இப்படி  பேசி விட்டு எப்படி  இவர் அவர்களுடன்  கூட்டு சேருகிறார்❓ மதவாதப் பேச்சும் இனவாதப் பேச்சும் தீவிரவாதத்தை ஏற்படுத்துமே.... சரவாக் மக்கள்  விழித்துக் கொள்ள வேண்டும்.

(விக்கிப்பீடியாவில் பதிவு செய்வது)

23/11/2022, 9:40 pm - Muthukrishnan Ipoh: நம்மால் இயன்றதை உடனுக்குடன் செய்து விட வேண்டும். நமக்கு பிறகு யாராவது எவராவது செய்வார்கள் என்று நினைப்பதை காட்டிலும் நாமே இப்போதே செய்து விட வேண்டும்... ✌️

23/11/2022, 9:40 pm - Mahalingam Padavettan Penang: நன்றி வாழ்த்துக்கள்
ஐயா. தங்களின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு நன்றி.

23/11/2022, 9:41 pm - Muthukrishnan Ipoh: நம் மலேசியம் புலன அன்பர் ஆசிரியர் கணேசன் அவர்களின் குரல் பதிவு...

23/11/2022, 9:42 pm - Devi Kedah Kadaram: 👏🏻👏🏻👏🏻👏🏻

23/11/2022, 9:46 pm - Kalaivani Johnson: உங்களின் பணி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அளப்பரியதுங்க ஐயா.. மிக்க நன்றி... 🙏🙏

23/11/2022, 9:51 pm - Muthukrishnan Ipoh: இதைப் படித்ததும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி... மலேசியத் தமிழர்... மலாயாத் தமிழர் என்று எழுதி எழுதியே என் வாழ்நாளில் பாதி கரைந்து விட்டது... நன்றிம்மா 🙏

23/11/2022, 10:17 pm - Muthukrishnan Ipoh: கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல் குழப்பங்களினால் நம்முடைய தூக்கம் தான் கெடுகிறது. இன்றைக்காவது கொஞ்சம் சீக்கிரம் படுக்கப் போவோம். 🙏

23/11/2022, 10:19 pm - Kalaivani Johnson: கிளாந்தான் மக்களில் அடி அவாங்கை பிடிக்காதவர்களும் உண்டுங்க ஐயா... மத வெறி, இன வெறி பிடித்தவர்...😡

23/11/2022, 10:23 pm - Devi Kedah Kadaram: ஆடி அம்மாவாசைக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உரைக்காது... அவர் மதம் சார்ந்தவரகள் மட்டும் தான் சொர்க்கம் செல்லுவார்களாம்... போங்கள் நீங்கள் செல்லும் சொர்க்கம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அது எங்களுக்கு நரகமாகத்தான் இருக்கும். சீக்கிரம்  சொர்க்கம் செல்ல வாழ்த்துகள்.

23/11/2022, 10:25 pm - Ratha Patchiappan: 🌷🙏 அமரர் கருப்பையா  முத்துசாமி; தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவாகிய கட்டுரையை இப்போதுதான் படித்தேன். அவரின் தொண்டு மிகவும் பெரியது. தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி உதவியவர். தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. (அதிக பதிவால் கைபேசி அடிக்கடி MCO  போடுகிறது)

23/11/2022, 10:27 pm - Ratha Patchiappan: அமரர் கருப்பையா  முத்துசாமி அனைத்து மதத்தினரையும் அனுசரித்து போகும் நல்ல மனிதர்..

23/11/2022, 10:30 pm - Devi Kedah Kadaram: நிக் அஸிஸ் ... இப்போது இருந்தால் யாருக்கு  ஆதரவு தருவார்?

23/11/2022, 10:32 pm - Ratha Patchiappan: பாஸ் சமயவாதிகள் சொர்க்கத்தையும், நரகத்தையும் நேரில் பார்த்ததைப் போல் தெரிகிறது. ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை பாவம்... 🤪

23/11/2022, 10:35 pm - Devi Kedah Kadaram: பிரதமராக வருபவர் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க வேண்டும்.

23/11/2022, 10:41 pm - Mahalingam Padavettan Penang: மிக தெளிவாக உள்ளனர், இன்றைய இஸ்லாமிய இளையோர்கள்...

 

மலேசியம் புலனத்தின் பதிவுகள் - 22.11.2022


22/11/2022, 10:24 am - தேர்தல் காலத்தில் நம் மலேசியம் புலனத்தில் நிறைய படங்களைப் போட்டோம். அது காலத்தின் கட்டாயம். நம் இனத்திற்குப் போய்ச் சேர வேண்டிய படங்கள்.

22/11/2022, 10:29 am - நம் மலேசியத் தமிழர் இனத்தை அடுத்த இனம் அழிக்க வேண்டியது இல்லை... சொந்தமாகவே அழித்துக் 'கொல்லும்'.

22/11/2022, 10:32 am - Muthukrishnan Ipoh: பிருமாண்டமான சிலைகள் கட்டுவது... ஆளுயர மாலைகள் வாங்கி காசை கரி ஆக்குவது... உண்டியலில் காசைக் கொட்டி கோயில் பெரிசுகளை வளர்த்து விடுவது... இவற்றை எல்லாம் நிறுத்த வேண்டும்...

22/11/2022, 10:32 am - Vengadeshan: தற்போது அதுதான் நடக்கிறது. யார் விட்ட சாபமோ... வேதனையாக உள்ளது ஆசான்😭

22/11/2022, 10:32 am - Kalaivani Johnson: வணக்கம் ஐயா... நம் நாட்டு இந்தியத் தலைவர்கள் இப்போது பேசும் கருத்தை அவர்கள் பதவிக்கு வந்த காலம் தொட்டு இவ்வாறு பேசி, செய்ய வேண்டியவைகளை செய்திருந்தால், இன்று நம் சமுதாயத்திற்கு இந்த  நிலை ஏற்பட்டிருக்காது.

அந்த தலைவர்கள் நமது எதிரி அல்லவே. அவர்கள் நம் இனத்திற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய தவறி விட்டார்கள். அவர்கள் சரியாக செய்து இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களும் அவர்கள் பக்கம் தானே நின்றிருப்போம். இது தான் உண்மை....

22/11/2022, 10:33 am - Cikgu Segar: மிகவும் சரியான கூற்று

22/11/2022, 10:33 am - Vengadeshan: சொந்தமாக திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது ஆசான்

22/11/2022, 10:34 am - Balan Muniandy 2: உண்மைதான் ஐயா. ஆடிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணா இருக்கனும்

குறிப்பாக கல்வியில் வளமிக்க சமூகமாகவும் பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற சமூகமாகவும், சமுகச் சீகேட்டில் விடுபட்ட... இனமான மிக்க சமுதாயமாக மாறுவதற்கு தன்னை தயார்ப் படுத்தி கொள்ளவில்லை என்றால் இந்த நாட்டில் எப்படி நம்முடைய சரித்திரத்தை இழந்து தவிக்கின்றோமோ..

இதை போல நம் சமுதாயமும் இந்த நாட்டில் அடையாளம் இல்லாமல் போய் விடுவோம்... ஐயா

22/11/2022, 10:35 am - Cikgu Segar: தமது பதவியில் இருந்த போது ஒரு தலைவரின் ஏளன பேச்சு.. இன்று தே.மு. வின் தோல்விக்கு பிறகு இவருடைய பேச்சு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பது போல உள்ளது

22/11/2022, 10:35 am - Muthukrishnan Ipoh: அவர்கள் மீது குறை சொல்ல முடியாது... அவருக்கு முன்னால் இருந்த தலைவர்கள்... அடித்துப் பிடித்து ஏதாவது செய்து இருக்க வேண்டும். *மைக்கா* மூலமாக சாதித்து இருக்கலாம். ஆனால் பெரும் பின்னடைவு.

22/11/2022, 10:36 am - Muthukrishnan Ipoh: விடுங்கள்... இனி நடக்கப் போவதைப் பற்றி பார்ப்போம்.

22/11/2022, 10:38 am - Muthukrishnan Ipoh: இன்றைக்கு தமிழ் மலர் நாளிதழில் *தென்னிந்திய தொழிலாளர் நிதி*-யைப் பற்றிய கட்டுரைத் தொடர்... 4 பாகங்கள்... முதல் பாகம் இன்றைக்கு... படித்துப் பாருங்கள்...

22/11/2022, 10:39 am - Muthukrishnan Ipoh: நம் இனத்தின் வேதனைகள் பற்றி எழுதி உள்ளேன்... படித்துப் பாருங்கள்.

22/11/2022, 10:41 am - Muthukrishnan Ipoh: புலன அன்பர்களே எழுத்துப் பிழைகளைக் கவனியுங்கள்...

22/11/2022, 10:41 am - K Chandrasekaran Klang: சிறப்பான கேள்வி சிறப்பான விளக்கம்

22/11/2022, 10:45 am - Kennedy Arumugam Grik Perak: டத்தோ... மட்டுமல்ல, எல்லா தலைவர்களுமே இந்திய சமுதாயம் பிளவுபடாத ஆதரவு தெரிவித்த போதே செய்திருக்க வேண்டும்.

2008-ஆம் ஆண்டு தேர்தலிலே மஇகாவுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.

22/11/2022, 10:45 am - K Chandrasekaran Klang: ஆழ்ந்த சிந்தனை! சிறந்த கருத்து!

22/11/2022, 10:50 am - Muthukrishnan Ipoh: பெரியவர் துன் சம்பந்தன் காலத்திற்குப் பின்னர் நம் இனம் மிதிக்கப்பட்டு விட்டது... சத்தியமான உண்மை...

22/11/2022, 10:52 am - Kennedy Arumugam Grik Perak: ஆமாம் ஐயா. தன்னை முன்னிறுத்தினார்களே தவிர, சமுதாயத்தை முன்னிறுத்தவில்லை.

22/11/2022, 10:53 am - Dhanasegaran Thevanathan: துன் சம்பந்தனார் பின் நின்றதால் கூட்டுறவு சங்கம் பலம் பெற்றது. அதே ஆதரவு துன் சாமிவேலுவிற்கும் சமூகம் கொடுத்து ம.இ.கா.ஓல்டிங்ஸ் உருவானது. சமூகம் அடைந்த நன்மை என்ன... வேதனைக்கும் விருத்திக்கும் காரணம்... சமூகத் தலைவர்களால் ஒவ்வொரு திட்டமும் ஏமாற்றம் தானே 🙉

22/11/2022, 10:55 am - Cikgu Segar: அதன் பிறகும் திருந்தவில்லை. ஆணவ பேச்சு. மஇகா தான் இந்திய சமுதாயத்திற்கு சாதனைகள் செய்துள்ளது என தம்பட்டம் அடித்து பலரின் ஆத்திரம் அடைய வைத்துள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மஇகா கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை அது. அதை விடுத்து பிகேஆர் மற்றும் டிஏபி இந்திய தலைவர்கள் ஏன் செய்யவில்லை என ஏளனம்... இதை முதலில் விடட்டும். அப்புறம் பார்க்கலாம்

22/11/2022, 11:01 am - K Chandrasekaran Klang: தயவுசெய்து இந்த இராட்சசியின் (பூஜா) தொடர்பு எண்ணை எனக்கு கொடுக்கவும்.

22/11/2022, 11:04 am - Muthukrishnan Ipoh: தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு விக்கி அவர்கள் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு... ஆணவமான தம்பட்ட பேச்சுகள்தான் ம.இ.கா.வின் பின்னடைவிற்கு காரணம்... தொடர்ந்து பல தேர்தல்களில் மிக மோசமான பின்னடைவுகள். மலேசியத் தமிழர்கள் வெறுப்பு அடைந்து போய் விட்டார்கள். ம.இ.கா. வை சீரமைப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

22/11/2022, 11:22 am - Mahalingam Padavettan Penang: 💯 உண்மை ஐயா. ஆனால், இன்றைய சூழலில் எந்த தலைவர் சமுதாயத்தின் பால் அன்பும் பாசமும் சமுதாய உருமாற்றத்திற்கு முழு மூச்சாக உண்மையாக நேர்மையாக தெளிவான சிந்தனையோடு செயல்படுபவர்கள் யார் என்று எங்கே தேடுவது? யாரை நம்புவது...?  பெரும்பாலான இன்றைய தலைவர்கள்

1.பணம்
2.குண்டர் கும்பல்
3.சுயநலம்

என்ற சிந்தனையிலேயே இருக்கிறார்கள். அதனால், இன்றைய இந்திய சமுதாயத்தில் பெரும் மாற்றம் வர வேண்டும் என்றால் புதியதோர் அடுத்த கட்ட தலைமுறை தலைவர்கள் வர வேண்டும்... அடிமட்ட  மக்கள் சேவையிலிருந்து தொடர வேண்டும்... அப்போது தான் மாற்றம் வரும். புதியதோர் இந்திய சமுதாயத்தை உருவாக்க முடியும்...

22/11/2022, 11:25 am - Kalaivani Johnson: நிதர்சனமான உண்மைங்க ஐயா.... எனது ஆதங்கம் துன் சாமிவேலு அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்களும் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவில்லை. இளம் வயது டத்தோ சரவணன் வந்த பின் அவராவது செய்து இருக்கலாம்...

ஏமாற்றம் என்பது மட்டும் மிச்சமாகி விட்டது.... இப்போது தமிழர்கள் தான் அவரை ஆதரிக்காமல் தவறு செய்து விட்டார்கள் என்று சொல்வது வேதனை அளிக்கிறது.... எது எப்படி இருப்பினும் நம் இனம் கடந்து செல்ல தான் வேண்டும்.... இன்றைய முடிவில் தமிழர்கள் காக்கப்படும் ஆட்சி அமைந்தால் இறைவனுக்கு நன்றி... 🙏🙏

22/11/2022, 11:26 am - Perumal Kuala Lumpur: பிரார்த்தனை நிறைவேற வாய்ப்புள்ளது. பேராக்கிலும் பஹாங்கிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. மத்தியில் ஆட்சி இன்று அமைவது உறுதியாகலாம். என் கணிப்பு.

22/11/2022, 11:27 am - Kalaivani Johnson: அப்படி அமைந்து விட்டால் மகிழ்ச்சி சகோதரரே...நன்றி...🙏🙏

22/11/2022, 11:33 am - Muthukrishnan Ipoh: கடைசி நேரத்தில காலை வாரி விடலாம்...

22/11/2022, 11:34 am - Kalaivani Johnson: அப்படியும் நடக்கலாம் ஐயா...

22/11/2022, 11:35 am - Ganeson Shanmugam Sitiawan: உண்மை ஐயா

அப்படி நடக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

22/11/2022, 11:38 am - Muthukrishnan Ipoh: நல்ல தெளிவான சிந்தனை. நியாயமான பார்வையில் நேர்த்தியான கருத்துகள். ஒட்டு மொத்தமாக டத்தோ சரவணனைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. அவருக்கு முன்னால் இருந்த ம.இ.கா. தலைவர்கள் இனத்திற்குச் செய்ய வேண்டியதை அடித்துப் பிடித்து வாங்கிக் கொடுக்கவில்லை... செய்யவில்லை. அஞ்சு வருசம் கொடுங்கோ என்று காலத்தைக் கழித்து விட்டார்கள்.

22/11/2022, 11:39 am - Muthukrishnan Ipoh: கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்து விடலாம்... அதற்கு மூலகாரணமாக முகுதின் இருக்கலாம்... பாரிசானை நம்பலாம்... முகுதினை நம்பவே கூடாது...

22/11/2022, 11:41 am - Kalaivani Johnson: மிக உண்மைங்க ஐயா... இது தான் நம் இனத்தவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத விசயங்கள்.... நன்றிங்க ஐயா... 🙏🙏

22/11/2022, 11:43 am - Muthukrishnan Ipoh: தகவலுக்கு நன்றிம்மா கலைவாணி...

22/11/2022, 12:05 pm - Muthukrishnan Ipoh: *மலாயா தமிழர்களுக்கு துரோகம்*

*தென்னிந்திய தொழிலாளர் நிதி*  
(தமிழ் மலர் - 22.22.2022)

மலைகள் வாசிக்கும் மலைநாடு. அங்கே மலைக் காடுகள் சுவாசிக்கும் மழைக் காடுகள். அந்த மழைக்காடுகளின் மண்வாசனையில் வெள்ளைப் பால் வடித்த கித்தா காடுகள். அந்தக் கித்தா காடுகளின் வரலாற்றில் சத்தியம் பேசும் கறுப்புத் தோல்கள். வாய் இருந்தும் பேச முடியாத வாயில்லா பூச்சிகள். சுத்தமான அப்பிராணி ஜீவன்கள்.

அந்த அப்பாவிகள் தான் மலையூர் காட்டைக் கலைவள நாடாக மாற்றினார்கள். மலையூர் நாட்டைச் செல்வம் கொழிக்கும் சீதனச் சொர்க்கமாக மாற்றினார்கள். சீரும் சிறப்பும் கொழிக்கும் அழகு பூமியாக மாற்றிக் காட்டினார்கள். அப்படியே அந்த நாட்டை அழகு பார்த்தார்கள்.

அவர்கள் தான் மலாயா தமிழர்கள். மலேசியத் தமிழர்கள். ஆனாலும் அவர்களின் இரத்தமும்; அவர்களின் வியர்வையும் இப்போது வெறும் வெற்றுக் கொப்பளங்களாய்க் கொப்பளிக்கின்றன.

அவர்கள் பிறந்து வளர்ந்த அதே மண்ணிலே அவர்களுக்கு இன்று வரையிலும் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சரியான சமத்துவம் கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய கானல் நீர்க் கதை. அதுவே மலையூரில் நடந்த ஓர் அப்பாவி இனத்தின் வரலாற்றுக் கொடுமை.

மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல. இவர்களுக்குப் பின்னால் வந்த சில வந்தேறிகள் வாய்க் கூசாமல் பேசுகிறார்கள். நியாயமே இல்லை. மலாயா தமிழர்கள்  2000 ஆண்டுகளுக்கு முன்னரே மலையகத்தில் கால் பதித்து விட்டார்கள். வாழ்ந்து வழி காட்டி விட்டார்கள்.

மலையூர் மலாயா தமிழர்களின் சோகங்களை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மற்றவர்கள் கால் பதிப்பதற்கு முன்னரே மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் காலடிகளைப் பதித்து விட்டார்கள்.

எந்த ஒரு வரலாற்று ஆசிரியராலும் இந்தக் கூற்றை மறுக்க முடியாது. சத்தியமாகச் சொல்கிறேன். மலாயா தமிழர்களின் வரலாறு என்பது ஒரு பெரிய வரலாற்றுச் சோகம்.

கப்பலேறி வந்த அந்த ஏழைத் தமிழர்கள் அடிமைகளைப் போல வாழ்ந்தாலும் அவர்கள் திரும்பித் தாயகம் செல்வதற்கு 1907-ஆம் ஆண்டு தமிழர் இமிகிரேசன் நிதி (Tamil Immigration Fund) எனும் பெயரில் ஒரு நிதியகம் உருவானது.

அந்த நிதி என்ன ஆனது? எங்கே போனது? பஞ்சம் பார்க்க வந்த அந்தத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது? அவர்களுக்கு துரோகம் செய்யப் பட்டதா? அல்லது அந்த நிதி அவர்களைத் தூக்கி விட்டதா?

தமிழர் இமிகிரேசன் நிதி 1907-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. இந்த நிதியின் மற்றொரு பெயர் இந்தியக் குடிநுழைவு நிதி (Indian Immigration Fund). இந்த நாட்டிற்குச் சஞ்சிக் கூலிகளாக வந்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் தாயகத்திற்குத் திரும்பிப் போக உருவாக்கப்பட்ட ஒரு நிதி வாரியம்.

இதற்கு *தர்ம ஆர்டர்* எனும் இன்னொரு பெயரும் இருந்தது. அப்போதைய தமிழர்கள் அப்படித்தான் அழைத்தார்கள்.

இந்தியத் தொழிலாளர்களத் திருப்பி அனுப்பும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டாலும் பின்னர் காலத்தில் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களின் சமுதாயக் கடப்பாட்டை நிறைவு செய்வதிலும் அந்த வாரியம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. தாராளமாகச் சொல்லலாம். தப்பு இல்லை.

இந்திய இமிகிரேசன் நிதி 1958-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியில் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி (South Indian Labour Fund) எனப் பெயர் மாற்றம் கண்டது. புதிய பெயர்.

1958-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி வரையில் இந்திய இமிகிரேசன் நிதியில் இருந்த பணம்; அசையா சொத்துகள் அனைத்தும் தென்னிந்தியத் தொழிலாளர் நிதிக்கு மாற்றப் பட்டன. நன்றாகக் கவனியுங்கள்.

இந்தச் சொத்துகள் மூலமாகத் தான் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்தியத் தொழிலாளர் நிதியும் செயல்படத் தொடங்கியது.

தென்னிந்தியத் தொழிலாளர் நிதி எனப் பெயர் மாற்றம் செய்யப் படுவதற்கான காரணங்கள்:

முதல் காரணம்: நிதியுதவி தேவைப் படும் தென்னிந்தியத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்தல்.

இரண்டாவது காரணம்: மலாயாவில் வாழ்ந்து வந்த தென்னிந்தியத் தொழிலாளர்களையும் அவர்களின் ஆதரவில் வாழ்கின்றவர்களையும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைத்தல்.

மூன்றாவது காரணம்: மலாயாவுக்கு வந்து மரணம் அடைந்த தென்னிந்தியத் தொழிலாளர்களின் பிள்ளைகளை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பும் செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல்.

நான்காவது காரணம்: மலாயாவுக்கு வந்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் வயதாகித் திரும்பிப் போக முடியவில்லை என்றால் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நிதியுதவிகளைச் செய்தல்.

ஐந்தாவது காரணம்: வயதான அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளைக் காப்பாற்றுதல்; அவர்களின் மருத்துவம்; படிப்புச் செலவுகளுக்கு நிதியுதவி செய்தல்.

ஆறாவது காரணம்: தென்னிந்தியத் தொழிலாளர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய இதர தேவைகளை மனிதவள அமைச்சரின் அனுமதியுடன் நிறைவு செய்தல்.

இருப்பினும் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி தோற்றுவிக்கப் பட்டதற்கு மூலகாரணம் ஒன்றே ஒன்று தான். அவர்களின் நல்வாழ்வே மூல காரணம்.

அது மட்டும் அல்ல. அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப் பட்டு; அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப் படும் போது; அவற்றைச் சமன் செய்வதே தென்னிந்தியத் தொழிலாளர் நிதியின் மற்றும் ஒரு தலையாய நோக்கமாக இருந்தது.

இந்த நிதியை பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தான் உருவாக்கியது. அதற்கான நிதியை மலாயா பிரித்தானிய அரசாங்கம் தான் வழங்கியது. இப்படியும் சொல்லலாம்.

மலாயாவில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கிய வெள்ளைக்கார முதலாளிகளும் இதர நிறுவனங்களின் சொந்தக்காரர்களும் இணைந்து தான் இந்த நிதிக்கு சூடம் சாம்பராணி கொளுத்தி வாழ்த்துச் சொன்னார்கள்.

நல்ல எண்ணத்துடன் தான் செய்து இருக்கிறார்கள்.

தென் இந்தியாவில் இருந்து தமிழர்களை இங்கே நல்லபடியாகக் கொண்டு வர வேண்டும்; மன்னிக்கவும். நல்லபடியாகத் தூண்டில் போட்டு இழுத்து வர வேண்டும்; நல்லபடியாகக் கப்பல் பயணங்களை அமைத்துத் தர வேண்டும்; நல்லபடியாக அவர்கள் ஐலசா பாடிக் கொண்டு வர வேண்டும்.

மலாயாவில் உள்ள ரப்பர் தோட்டங்களைச் செழுமைப் படுத்த வேண்டும்; காட்டு மேட்டுச் சாலைகள், கானகத்துக் கம்பிச் சடக்குகளைச் செப்பனிட வேண்டும்; அப்படியே செக்கு இழுத்த செம்மறியாடுகளாக மாற வேண்டும்; மனித உணர்வுகளை மாமிசப் பிண்டங்களாக மாற வேண்டும்;

நல்லபடியாக நன்றாகக் கசக்கி எடுத்த பின்னர் அந்தச் சக்கைகளை அப்படியே குளிப்பாட்டிக் கொண்டு போய் அக்கரையிலே துப்பிவிட்டு வர வேண்டும். மறுபடியும் மன்னிக்கவும். அது வெள்ளைக்காரர்களின் தூர நோக்குச் சிந்தனைகள் அல்ல சொதப்பல்கள்.

அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். தூபம் போட்டார்கள். செய்தும் காட்டினார்கள். நல்லா இருக்கட்டும். ஆனால் என்ன ஆனது.

வெள்ளைக்காரர்கள் போனதும் அவர்களுக்குப் பின்னர் வந்த உள்ளூர் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களைச் சும்மா சொல்லக் கூடாது. பலரும் பக்கா பிக்கா பிந்து கோஷ்கள். அந்தச் சொத்துகளை எல்லாம் அப்படியே அழகாய் வடை சுட்டு வாயில் போட்டுக் கொண்டார்கள்.

(இதன் தொடர்ச்சியை வலைத் தளத்தில் பதிவு செய்த பின்னர் அறிவிக்கிறேன்)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.11.2022
(தமிழ் மலர் - 22.11.2022)

சான்றுகள்:

1. Jerry Bentley (1993). Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times. New York: Oxford University Press. ISBN 9780195076400.

2. Sadasivan, Balaji Sadasivan. The Dancing Girl: A History of Early India. pp. 135–136. ISBN 978-9814311670. - There is a possibility that the first wave of migration from South Asian subcontinent towards Southeast Asia happened when the Asoka's invasion towards Kalinga and Samudragupta's expedition towards the South.

3. (Coedès, George (1968). Walter F. Vella, ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1. பக்:52)

4. Sejarah SMA/MA Kls XI-Bahasa By H Purwanta, dkk
https://books.google.com.my/books?id=hgtVFGCJkj0C&pg=PT20&redir_esc=y#v=onepage&q&f=false

5. European Journal of Social Sciences – Volume 7, Number 3 (2009)

22/11/2022, 12:15 pm - Perumal Kuala Lumpur: உலக நடப்பையும் சமுதாய சீர்கேடுகளையும் அலசுகிறார். வாழ்த்தலாமே. பகிர்வுக்கு. நன்றி ஐயா

22/11/2022, 12:17 pm - Mahalingam Padavettan Penang: வாழ்த்துக்கள் ஐயா...
நன்றி.

22/11/2022, 12:19 pm - Ratha Patchiappan: எங்கோ கொண்டு செல்லும் நினைவலைகள்.... 🥲🥲.

22/11/2022, 12:23 pm - Devi Kedah Kadaram: நன்றிப்பா🙏🏻

22/11/2022, 12:24 pm - Ratha Patchiappan: 🌷🙏 கட்டுரையில் உள்ள ஐந்து விதமான நிதிகளை தென்னிந்திய  தொழிலாளர்களுக்கு வழங்கியதாகத் தெரியவில்லையே... தர்ம ஆர்டர் என்று கேள்வி பட்டது உண்டு.

ஆனால் அது  தென்னிந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக முறையாக கிடைத்ததா என்றும் தெரியவில்லையே... இங்கு கொண்டு வந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்கள் மீண்டும் தன் நாட்டுக்கு போனார்கள் என்பதும் கேள்வி குறிதான். நிதி என்ற பெயரில் எத்தனை ஏமாற்று வேலைகள்... கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. படிக்க வேதனையாகவும் இருக்கிறது 🙏🌷

22/11/2022, 12:26 pm - Morgan Kasinathan: படிக்கப் படிக்க ஆர்வமாக இருக்கிறது ஐயா. அருமை ஐயா.🙏🏼👍

22/11/2022, 12:26 pm - Muthukrishnan Ipoh: நல்ல கேள்வி... நியாயமான கேள்வி... அடுத்த அடுத்த கட்டுரைகளில் புள்ளிவிவரங்களைத் தருகிறேன்.

22/11/2022, 12:29 pm - Devi Kedah Kadaram: https://www.malaysiakini.com/let5ters/645158

 *PLEASE SHARE WIDELY. IT MUST DRAW THE PEOPLE'S ATTENTION NATIONWIDE & QUICKLY. Tq for your role in nation building.* 🌹🇲🇾

22/11/2022, 12:30 pm - Devi Kedah Kadaram: இப்படி  ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது...👆🏻

22/11/2022, 12:31 pm - Dhanasegaran Thevanathan: இது தொடர்பாக ஒரு நிருபர் கேள்வி‌ கேட்டபோது, இது‌ மலேசியா...‌ ‌தென்இந்தியர் என்பது காலாவதியான விசயம் என்றது கிழடு‌. நாம் மலேசியர்கள்... ‌இந்த நிதி மலேசியர்களுக்கு சொந்தம் என்று சொல்லி வாயில் போட்டு கொண்ட சோகக் கதை

22/11/2022, 12:35 pm - Raja Sg Buluh: பத்திரிகையில் கட்டுரையை படித்தேன். அருமை ஐயா.

22/11/2022, 12:35 pm - Muthukrishnan Ipoh: 1948-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை 27 ஆயிரத்து 399 தென்னிந்தியத் தொழிலாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அந்த வாரியம் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறது. 1948-ஆம் ஆண்டிற்கு முன்னர் உள்ள புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

மலேசிய அருஞ்சுவடிக் காப்பகத்தில் தேடிப் பார்த்தேன். உஹூம்... ஒரு சுவடும் இல்லை. 2004-ஆம் ஆண்டு வந்த சுனாமி பேரலைகளில் காணாமல் போய் இருக்கலாம். சொல்ல முடியாதுங்க.

22/11/2022, 12:40 pm - Mahalingam Padavettan Penang: நன்றி ஐயா.. அறியாத பல விடயங்களை பதிவு செய்தமைக்கு நன்றி... இந்த "தென்னிந்திய தொழிலாளர் நிதி"க்கு மறு வாழ்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதா? முடியுமா? வழி ஏதும்?

மனம் கனக்கிறது நாம் நம்பிய தலைவர்களே நமக்கு ஆணி அடித்து விட்டார்கள்... 😭😭😭😭😭😭😭😭

22/11/2022, 12:43 pm - Ratha Patchiappan: இன்றைய சேதி..

22/11/2022, 12:43 pm - Ratha Patchiappan: எப்படி பட்ட மோசடிகள் பாருங்கள்.. இவர்களை எல்லாம் தெய்வம் நின்றுதான் 😡

22/11/2022, 12:46 pm - Muthukrishnan Ipoh: இரண்டு தலைவர்கள் கூட்டாக சேர்ந்து வடை சுட்டு வாயில் போட்டுக் கொண்டார்கள். அந்த நிதியில் வங்கியில் இருந்த கடைசி 40 ஆயிரம் வெள்ளியும் காணாமல் போய் விட்டது. டத்தோ பழனிவேல் ஐயாவுக்கு தெரியும்... பாவம் அவர்... இருக்கிற இடமே தெரியவில்லை.

22/11/2022, 12:47 pm - Muthukrishnan Ipoh: பெயர் வேண்டாம்... துன் பட்டம் வாங்கியவர்...

22/11/2022, 12:47 pm - Raja Sg Buluh: இதுக்கு முழு காரணம் சாமிவேலுதான்.

22/11/2022, 12:47 pm - Mahalingam Padavettan Penang: இவர்கள் சமுதாய தலைவர்கள் இல்லை. மாறாக சுயநல கூட்டத்துக்கு தலைவர்கள்... இனியும் இந்த கூட்டத்தை நம்பி பலனில்லை.

22/11/2022, 12:50 pm - Dhanasegaran Thevanathan: கிழவன் காலத்திலேயே
சுட்டு விட்டார்கள். பழனிவேலு அப்பாவி

22/11/2022, 12:52 pm - Murugan Sivam: <Media omitted>

22/11/2022, 12:57 pm - Raja Sg Buluh: பாவம் அந்த மனுக்ஷன்

22/11/2022, 12:58 pm - Muthukrishnan Ipoh: BREAKING: BN looks set to stay out of any coalition govt https://www.thestar.com.my/news/nation/2022/11/22/bn-looks-set-to-stay-out-of-any-coalition-govt#.Y3w6CDyaJ2c.whatsapp

22/11/2022, 12:59 pm - Muthukrishnan Ipoh: கூட்டு அரசாங்கத்தில் இருந்து BN விலகிக் கொண்டது.

22/11/2022, 1:01 pm - Muthukrishnan Ipoh: PN + BN கூட்டு அரசாங்கம் அமையலாம்...

22/11/2022, 1:01 pm - Dhanasegaran Thevanathan: மூன்று ஆடுகளை யாராவது பார்த்திர்களா 👆👆👆👆👆👆👆👆👆

22/11/2022, 1:20 pm - DURAISINGAM Banting 2: பணத்துக்காக அலை மோதும் கூட்டம்

22/11/2022, 1:23 pm - Mahalingam Padavettan Penang: என்ன தான் நடக்குது ஐயா???????

22/11/2022, 2:08 pm - Muthukrishnan Ipoh: BN யாருடனும் அணி சேராதாம்... இஸ்மாயில் சப்ரி

22/11/2022, 2:16 pm - Devi Kedah Kadaram: அப்படி  என்றால்  பெரும்பாண்மை  பெற்ற கட்சி அரசாங்கம்  அமைக்கலாமே...

22/11/2022, 2:18 pm - Devi Kedah Kadaram: நாட்டின் நன்மையை கருதாத கூட்டணியுடன் ஏன் சேர வேண்டும். ..

22/11/2022, 2:19 pm - Devi Kedah Kadaram: வைத்தால் குடுமி.... இல்லனா... மொட்டை என்றால் எப்படி.....

22/11/2022, 2:21 pm - Chinna Rasu: இசாமுடின் எல்லா வேலையும் செய்து....

22/11/2022, 2:26 pm - Perumal Kuala Lumpur: சப்ரி யாக்கோப் அறிவிப்பு. அது அவரின் கருத்து மட்டுமே. ஜாஹிட், அம்னோ தலைவரின் அறிவிப்பு மட்டுமே இறுதியானது. அடுத்து அகோங் அவரது அறிவிப்பு உறுதுயானது என்று ஏற்றுக் கொள்ளலாம்

22/11/2022, 2:28 pm - Raja Sg Buluh: பேசாம இந்த நபரை பிரதமரா போடலாம்!!!!

22/11/2022, 2:30 pm - Devi Kedah Kadaram: <Media omitted>

22/11/2022, 2:31 pm - Muthukrishnan Ipoh: மாமன்னர் முடிவுதான் இறுதி முடிவு...

22/11/2022, 2:42 pm - Muthukrishnan Ipoh: உலகிலேயே இனவாதத்தில் இரண்டாவது நிலையில் இந்த நாடு...

22/11/2022, 2:43 pm - Muthukrishnan Ipoh: மாமன்னர்... நேரலை

22/11/2022, 2:45 pm - Muthukrishnan Ipoh: இன்னும் முடிவு தெரியவில்லை

22/11/2022, 2:49 pm - Muthukrishnan Ipoh: மாமன்னர் விரைவில் முடிவு செய்வதாக அறிவிப்பு...

22/11/2022, 3:04 pm - Muthukrishnan Ipoh: மொகைதீன் அரண்மனையில் உள்ளார்

22/11/2022, 3:05 pm - Raja Sg Buluh: ஏன் அங்கு இருக்கிறார்

22/11/2022, 3:06 pm - Muthukrishnan Ipoh: மானன்னர் மனசை மாற்ற...

22/11/2022, 3:06 pm - Raja Sg Buluh: கெஞ்சிக் கேட்கவா?

22/11/2022, 3:07 pm - Raja Sg Buluh: உறவுகளைச் சொல்லி பிரதமர் ஆகவே?

22/11/2022, 3:08 pm - Muthukrishnan Ipoh: ஒரு வகையில் உறவினர் தானே...

22/11/2022, 3:08 pm - Raja Sg Buluh: ஆமாவா

22/11/2022, 3:10 pm - Chinna Rasu: மூசாம் பூனையின் மனைவி வகையில்தான் தூரத்து உறவாம்

22/11/2022, 3:11 pm - Muthukrishnan Ipoh: தூரத்து உறவு ✌️

22/11/2022, 3:14 pm - Raja Sg Buluh: நன்றி ஐயா. மலேசிய இந்தியர்கள் மிக நீண்ட காலமாகவே மலேசியர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டில் மலாய்க்காரர்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் ஒரு காலத்தில் அம்னோவின் முக்கிய தலைவர்கள் தேர்தல் காலங்களில் இன வாதம் தூண்டி விட்டு வாக்கு வேட்டை ஆடுவார்கள்.

இந்தியர்களை பெண்டாத்தாங் என்றும் பூமி புத்ரா அல்ல என்றும் இரண்டாம் தர குடி மக்களாகவே நடத்தி வருகின்றனர்.

இன்றைய காலக் கட்டத்தில் அம்னோ தலைவர்கள் குறிப்பாக 2008 ஆம் ஆண்டுக்கு இந்த இனத்துவேசம் மற்றும் மதத்துவேசம் தூண்டு வதை சற்று குறைத்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்தியர்கள் ஆதரவு வேண்டும் என்று அம்னோ கருதுவதால்.

ஆனால் ம.இ.கா. தலைவர்கள் 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தியர்கள் புறக்க கணித்த பிறகும் திருந்திய பாடு இல்லை.

அன்று அம்னோவிலிருந்து இன்று பெர்சத்துவில் இருப்பவர்கள் மீண்டும் இன வாதம், மத வாதம் தூண்ட தொடங்கி விட்டனர்.

நாம் மலேசியர்களாகவே வாழ மிக நீண்ட காலமாக தொடங்கி விட்டோம்.ஆனால் மலாய் அரசியல்வாதிகள் தான் நம்மை ஒதுக்கி வைப்பதும் புறக்கணிப்பதுமாக மிக நீண்ட காலமாக செயல் பட்டு வருகின்றனர்.

மலேசிய இந்தியர்களுக்கு

1. வீட்டு வசதி,
2. வேலை வாய்ப்பு. அரசுத் துறையிலும் தனியார் துறையிலும்.
3. உயர் கல்வி வாய்ப்பு.
4. வியாபார லைசென்ஸ்.
5. சிறு தொழில் ஊக்கு விப்பு.
6. சொந்த தொழில் செய்ய அரசு நிலம் வங்குதல்.
7. அவரவர் சமய வழி பாட்டுக்கு உரிய மரியாதை வழங்குதல். சமய உரிமை.
8. இன ரீதியாக ஒரங்கட்டாமல் இருப்பது

போன்ற புறக்கணிப்புகளை எந்த அரசு வந்தாலும் மேற்கொள்ளாமலிருப்பதை உறுதி செய்வது முக்கியம் ஐயா.

இந்தியர்கள் குண்டர் கும்பலாக மாறுவதை சமூகமும் அரசும் இணைந்து பாடு படுவது காலத்தின் கட்டாயம்.

ஆனால் நமது துரதிட்டம் நமது இந்தியர் கட்சியே குண்டர் கும்பலை வளர்ப்பதும், பாதுகாப்பதும், ஊக்குவிப்பதாக இருப்பதும்.

மொத்தத்தில் ம.இ.கா. முதலில் திருந்த வேண்டும். திருந்தாவிட்டால் இந்தியர்கள் புறக்கணிப்பால் ம.இ.கா. அழிந்து விடும்.

ஆனால் மலேசிய இந்தியர்கள் மலாய்க்காரர்கலோடு இணைந்து வாழ தொடங்கி விட்டனர் என்பதற்கு அடையாளம் தான் பி.கே. ஆர் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும் அதில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளவும் தொடங்கி விட்டனர்.

22/11/2022, 3:38 pm - Kennedy Arumugam Grik Perak: மாமன்னரின் துணைவியாரும், முகைதீன் யாசின் துணைவியாரும் உறவினர்களாம்.

22/11/2022, 3:38 pm - Paul Servai: <Media omitted>

22/11/2022, 3:40 pm - Devi Kedah Kadaram: ஆமாம்  சகோ....

(மருத்துவமனையில் 1.00 வெள்ளி கட்டணத்திற்கு ரொக்கம் ஏற்றுக் கொள்ளப்படல்லை)

22/11/2022, 3:59 pm - Ratha Patchiappan: இந்த சகோதரி நடப்பதைதான் சொல்கிறார், நம் அரசாங்கம் ஏதேதோ புதியதாக கொண்டு வருகிறது....

இதை ஏன் மக்களுக்கு தெரியப் படுத்தாமல் கடைசி நேரத்தில் இப்படி நோயாளிகளை அலைக்கழிக்கிறார்கள்... இந்த திட்டம் மக்களுக்கு எந்த விதத்தில் பயண்படும் என்று தெரியவில்லையே......?😣😣..

22/11/2022, 4:03 pm - Kalaivani Johnson: ஆமாம் சகோதரி... இது எனக்கு புது தகவல்... முன்பு மருத்துவமனைக்கு சென்ற போது, RM. 1.00 தான். ஒரு வெள்ளித் தாள் வாங்கிக் கொள்வார்கள்... இப்போது ஏன் இப்படி என்று புரியவில்லை.. 🤔?

22/11/2022, 4:05 pm - Kalaivani Johnson: ஆமாம் தம்பி, கடந்த தேர்தலில்  22 மாதங்களுக்கு பிறகு, பின் வழியாக மொகிதீன் ஆட்சிக்கு வந்த போது, மாமன்னரின் உறவுக்காரர் என்று தெரிய வந்தது....

22/11/2022, 4:34 pm - Cikgu Sivalingam: அரசியல்:-

நாட்டில் கட்சியைவிட நிலையான காரியங்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் நடக்கவேண்டும்.

கட்சியும், அரசும் தனியாக இருக்கவேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக்கூடாது  -  இணைந்தும் போய் விடக்கூடாது -- தனித் தன்மையுடன் தனித் தனியாக இருக்க வேண்டும்.

22/11/2022, 4:35 pm - Kennedy Arumugam Grik Perak: யாரிடமும் பெரும்பான்மை இல்லை என பேரரசர் அறிவித்தார்.

22/11/2022, 4:37 pm - Devi Kedah Kadaram: என்ன  சொல்வதென்று தெரியவில்லை. ... நம் இனத்துக்கு மட்டும் இப்படி நடக்கிறதா... அந்த அம்மா மற்றவர்களும் இப்படித்தான்  பணம் செலுத்தினார்களா என்று கேட்டு அறிந்திருக்க வேண்டும். Jinjang பகுதியில்  மட்டும் இப்படி  கேட்கிறார்களா...

அடியேன் நேற்று  என் பிள்ளைகளை அரசாங்க கிளினிக்கு அழைத்து சென்று  இருந்தேன்...அங்கு  ஒரு வெள்ளி  நோட்டு தான் வாங்கினார்கள். ..

22/11/2022, 4:39 pm - Devi Kedah Kadaram: <Media omitted>

22/11/2022, 4:39 pm - Kalaivani Johnson: நேற்று நீங்கள் கிளினிக் சென்ற போது ஒரு வெள்ளி கொடுத்து உள்ளீர்கள்...இவருக்கு ஏன் இப்படி? புரியவில்லை சகி..

22/11/2022, 4:40 pm - Devi Kedah Kadaram: நம்மவர்களுக்கு நடக்கும் கொடுமையோ.... 🤔

22/11/2022, 4:42 pm - Kalaivani Johnson: இருக்கலாம் சகி... என்ன சொல்வது என்று தெரியவில்லை... 😔

22/11/2022, 4:45 pm - Devi Kedah Kadaram: இதைப் பற்றியும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ... நடப்பது  நடக்கட்டும். ஆட்டுவிப்பது அவன்தானே...

22/11/2022, 5:02 pm - Paul Servai: சரி .. மஞ்சள் சட்டை என்ன சொல்கிறார்?

22/11/2022, 5:03 pm - Ratha Patchiappan: தேவியார் சொல்வதுப் போல இந்த ஒரு வெள்ளி  விசயம் எல்லா இடங்களிலும் இல்லை என்றே தெரிகிறது... ஒரு சில இடங்களில்தான் நடைமுறையில் செயல்படுகிறதோ? 🤔🤔..

22/11/2022, 5:04 pm - +65 8806 1214: <Media omitted>

22/11/2022, 5:06 pm - Kalaivani Johnson: வயது முதிர்ந்தவர்கள் எப்படி? வங்கி அட்டை பயன்பாடு அவர்களுக்கு சாத்தியமாகுமா?

22/11/2022, 5:07 pm - Muthukrishnan Ipoh: தூரத்து உறவு... பெரியப்பா சித்தாப்பா அக்கா தங்கைகள்...

22/11/2022, 5:09 pm - +65 8806 1214: நடைமுறைக்கு வந்தாயிற்று சகோதரி அமல் படுத்தும் முன் அரசாங்கம் யோசித்து இருக்க வேண்டும்.

22/11/2022, 5:09 pm - Devi Kedah Kadaram: எங்கள் ஊர் பக்கத்து ஊரான சுங்குரும்பை போன்ற அரசாங்க மருத்துவமனைகளில் வெளிநோயளிகளைப் பார்ப்பதற்கு  இன்னமும்  ஒரு வெள்ளி நோட்டு தான் வாங்குகிறார்கள். Pakar  கிளினிக்குகளில் 5 வெள்ளி நோட்டு வாங்குவார்கள் அம்மா...

22/11/2022, 5:09 pm - Kalaivani Johnson: இப்படியும் ஒரு பிரச்சினை ... காணொலி ☝️☝️

22/11/2022, 5:10 pm - Muthukrishnan Ipoh: இது புதிது அல்ல... சென்ற ஆண்டு நவம்பர் மாதமே அறிவித்து விட்டார்கள். E Wallet மூலமாக... நம்முடைய் அடையாள அட்டையை அதற்குப் பயன்படுத்தலாம்...

22/11/2022, 5:10 pm - Devi Kedah Kadaram: அப்படியா சகோ🤔.... தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏻

22/11/2022, 5:11 pm - Devi Kedah Kadaram: சரியான கேள்வி👍🏻

22/11/2022, 5:12 pm - Devi Kedah Kadaram: ஆமாவா....

22/11/2022, 5:12 pm - Devi Kedah Kadaram: அப்படி என்றால் இங்கு இன்னும் அமலுக்கு வரவில்லை. ...

22/11/2022, 5:13 pm - Muthukrishnan Ipoh: Cashless Society எனும் ரொக்கப் பணம் பயன்பாடு இல்லாத அரசாங்கத்தை உருவாக்குவதில் ஒரு மாற்றம்..

22/11/2022, 5:13 pm - Kalaivani Johnson: இதில் எல்லாம் மாற்றங்கள்,  ஆனால் எதில் மாற்றம் வேண்டுமோ,  அதில் இல்லைங்க ஐயா...

22/11/2022, 5:14 pm - Muthukrishnan Ipoh: சில இடங்களில் card reader வந்து சேராமல் இருக்கலாம்...

22/11/2022, 5:14 pm - Devi Kedah Kadaram: அப்படித்தான் போலும்....

22/11/2022, 5:15 pm - Devi Kedah Kadaram: நல்ல வேளை இன்று அதைப் பற்றி  தெரிந்துக் கொண்டேன்...🙏🏻

22/11/2022, 5:16 pm - Muthukrishnan Ipoh: அதுதான் 18 வயது பிள்ளைகளை வாக்காளர்களாக மாற்றி... பணம் கொடுத்து கிளாந்தான் திராங்கானுவை சாய்த்து விட்டார்களே...

22/11/2022, 5:18 pm - Kalaivani Johnson: ஆமாங்க ஐயா... மத வெறியர்களாக வருங்கால பிள்ளைகள் மாறிட வழி வகுத்து விட்டார்கள்.... 😡

22/11/2022, 5:18 pm - Ratha Patchiappan: சென்ற ஆண்டே இது நடைமுறைக்கு வந்தது விட்டது என்றால்  ஏன் இதை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை, இது யார் தவறு... மக்களை அலைகழிப்பது ஏன்...‌

22/11/2022, 5:21 pm - Muthukrishnan Ipoh: அவர் இனத்தவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் 5000 வெள்ளி... கோரேங் பீசாங் பர்கர் கடை வைத்து இருந்தால் 3000  வெள்ளி... இது மாற்றம் தானே...

22/11/2022, 5:22 pm - Muthukrishnan Ipoh: வானொலி தொலைக்காட்சியில் அறிவித்து விட்டார்கள்...

22/11/2022, 5:22 pm - Kalaivani Johnson: பாருங்கள் ஐயா... பாகுபாடு வெறித்தனமாக மாறி விட்டது....

22/11/2022, 5:23 pm - Muthukrishnan Ipoh: கோரேங் பீசாங் கடைக்கு வங்கியில் கடன் வாங்கி இருந்தால் கடன் தள்ளுபடி...

(புக்கிட் தாகார் பள்ளி மாணவர்கள் வேன் பிரச்சினை)


22/11/2022, 5:23 pm - Devi Kedah Kadaram: அட கடவுளே.... பதவி இருந்தால் தான் மக்களுக்கு உதவுவார்களா... இதெல்லாம் அநியாயம்... மீண்டும்  மீண்டும்  தவறுகள்  தொடர்கதையாக இருக்கிறது... திருந்தவே மாட்டார்கள் போலும்....

22/11/2022, 5:25 pm - Ratha Patchiappan: நேரம் பார்த்து காயை நகர்த்தும் மோகனின் செயல் சரியா.....?

22/11/2022, 5:27 pm - Kalaivani Johnson: அங்கு வரும் பதிலை கேட்பீர்களா சகி, சகோதரி.... PH  அவர்களிடமே கேளுங்கள் வேன் வேண்டும் என்று.... ஹாஹாஹா, இவர்கள் மக்கள் பிரதிநிதிகள்?

22/11/2022, 5:27 pm - Muthukrishnan Ipoh: *நீ எனக்கு என்ன செய்தாய்? நான் உனக்கு உதவி செய்ய?* ம.இ.கா. சுலோகம்

22/11/2022, 5:27 pm - Kalaivani Johnson: கேட்டீர்களா

22/11/2022, 5:28 pm - Ratha Patchiappan: நம்மவர்களுக்கு  வாரி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லையே... அவர்கள் ஆங்காங்கே வைத்து இருந்த சிறு சிறு கடைகளை உடைத்து போட்டார்களே பெரிய அநியாயம்...😡

22/11/2022, 5:29 pm - Kalaivani Johnson: சரி தவறை யார் பார்க்கிறார்கள் சகோதரி....உன்னால் எனக்கு என்ன லாபம் கணக்கு இது....

22/11/2022, 5:29 pm - Muthukrishnan Ipoh: https://www.thevibes.com/articles/news/78168/live-after-wtc-istana-negara-the-next-scene-as-country-awaits-new-govt

22/11/2022, 5:31 pm - Muthukrishnan Ipoh: *அன்வார் 10-ஆவது பிரதமர*

22/11/2022, 5:32 pm - Raja Sg Buluh: This message was deleted

22/11/2022, 5:33 pm - Muthukrishnan Ipoh: அன்வார் பெரும்பான்மையைத் தேடி நிரந்தரமான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்...

22/11/2022, 5:34 pm - Raja Sg Buluh: மிக்க மகிழ்ச்சி.

22/11/2022, 5:36 pm - Muthukrishnan Ipoh: இது ஒரு பழிவாங்கல் என்பது என் கருத்து... E wallet இல்லாதவர்களிடம் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனும் விதிமுறையும் உள்ளது...

22/11/2022, 5:37 pm - Devi Kedah Kadaram: படிக்கும் பிள்ளைகளுக்கு எதை விதைக்கிறார்கள்... பிள்ளைகள் இந்தச் செயலை மறக்க மாட்டாரகள்....

22/11/2022, 5:38 pm - Kalaivani Johnson: மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா.... நிரந்தர பிரதமராக 5 வருடம் நல்லாட்சி மலர்ந்தால் மகிழ்ச்சி... 🙏

22/11/2022, 5:39 pm - Ratha Patchiappan: இதுவரை அனுபவித்த கணக்கை என்ன வென்று சொல்வது?

22/11/2022, 5:40 pm - Muthukrishnan Ipoh: இனிமேல் பாருங்கள்... GPS GRS எல்லாம் ஓடி வந்து சேர்ந்து கொள்வார்கள்...

22/11/2022, 5:40 pm - Muthukrishnan Ipoh: இன்னும் ஒரு விசயம்

22/11/2022, 5:40 pm - Devi Kedah Kadaram: ஆமாம் ✌🏻

22/11/2022, 5:41 pm - Muthukrishnan Ipoh: BN கண்டிப்பாக விரைவில் சேர்ந்து கொள்ளும்... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

22/11/2022, 5:41 pm - Kalaivani Johnson: சாத்தியம் ஐயா.. பார்ப்போம்...😄

22/11/2022, 5:42pm - Muthukrishnan Ipoh: நடக்கும் என்பது ஓர் எதிர்ப்பார்ப்பு...

22/11/2022, 5:43 pm - Ratha Patchiappan: இது எல்லாம் தெரிந்தது தானே.....! நல்ல வாயன் சம்பாதிக்க...

22/11/2022, 5:44 pm - Muthukrishnan Ipoh: Many PH/PKR leaders also lost to PN.... It's Malay swing to race religion factor created by Muhyiddin. Why MIC blaming the poor Indian voters?

22/11/2022, 5:48 pm - Muthukrishnan Ipoh: Anwar has been appointed as PM for now and he has to proof his majority in Dewan Rakyat. No SD. Vote of Confidence in Parliament only valid.

22/11/2022, 5:53 pm - Muthukrishnan Ipoh: The PM post is still vacant

22/11/2022, 5:54 pm - Kalaivani Johnson: காத்திருந்து பார்ப்போம் ஐயா...நீங்கள் சொல்வது உண்மை... ஆனால் சிரிப்பு வருகிறதுங்க ஐயா... என்ன பேச்சு என்ன திமிர்..... BN சேராது பாக்காத்தானோடு என்று... பார்ப்போம்....

22/11/2022, 5:54 pm - Muthukrishnan Ipoh: இஸ்மாயில் சப்ரி தற்காலிகமாக வகித்த இடைக்கால பிரதமர் பதவிதான் அன்வாருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

22/11/2022, 5:55 pm - Muthukrishnan Ipoh: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தன் பெரும்பான்மையை வாக்கெடுப்பின் மூலமாக காட்ட வேண்டும்.

22/11/2022, 5:57 pm - Kalaivani Johnson: ஆமாம் தம்பி.... தோலுரித்த பிறகு தெரிகிறது அவர்களின் சுயநலம்....

22/11/2022, 5:57 pm - Muthukrishnan Ipoh: சபா சரவாக் கை கொடுத்தால் அன்வாருக்கு பி.என். தேவைப் படாது...

22/11/2022, 5:57 pm - Kennedy Arumugam Grik Perak: ஐயா... எனக்கு ஒரு சந்தேகம்.

பாரிசான் மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவு இல்லை என்று கூறிவிட்டார்கள். பேராக் மாநிலத்தில் பாரிசானும், பக்கத்தானும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார்கள். பகாங்கில் ஆட்சியமைக்க பாரிசானும், பெரிக்காத்தானும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது என்ன விதமான அரசியல் ஐயா?

22/11/2022, 5:58 pm - Kalaivani Johnson: அப்படி அமைந்தால் மகிழ்ச்சிங்க ஐயா....

22/11/2022, 5:58 pm - Muthukrishnan Ipoh: ஆனால் சாகிட் கண்டிப்பாக வந்தாக வேண்டும்... 😇😇

22/11/2022, 5:59 pm - Muthukrishnan Ipoh: நாடாளுமன்றம் வேறு சட்டமன்றம் வேறு.

22/11/2022, 5:59 pm - Kalaivani Johnson: நல்ல கேள்வி தம்பி... நானும் என் மகளிடம் இதை பற்றிய கேள்வி கேட்டேன்.... என்ன நிலை இது?

22/11/2022, 5:59 pm - Muthukrishnan Ipoh: மத்தியில் ஆட்சி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

22/11/2022, 6:00 pm - Muthukrishnan Ipoh: மாநிலத்தில் ஆட்சி அமைக்க சட்ட மன்ற உறுப்பினர்கள்

22/11/2022, 6:02 pm - Muthukrishnan Ipoh: இடைக்காலப் பிரதமர்... 10-ஆவது பிரதமர் அல்ல...

22/11/2022, 6:02 pm - Kennedy Arumugam Grik Perak: சரி ஐயா. ஏதாவது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமே.

அடுத்த வருடத்தில் வரும் சிலாங்கூர், பினாங்கு மற்றும் பல மாநில தேர்தல்களில் இவர்களுடைய அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்?

22/11/2022, 6:03 pm - Muthukrishnan Ipoh: அதனால் தான் ஓட்டுப் போடும் போது 2 வாக்கு அட்டைகள் கொடுப்பார்கள்.

22/11/2022, 6:03 pm - Muthukrishnan Ipoh: ஒன்று சட்டமன்றம்... மற்றொன்று நாடாளுமன்றம்...

22/11/2022, 6:04 pm - Muthukrishnan Ipoh: பெரிக்காதான் பெரும்பான்மை பெறும்

22/11/2022, 6:04 pm - Kalaivani Johnson: ஆனால் ஒன்று தான் கொடுக்கப்பட்டது ஐயா

22/11/2022, 6:04 pm - Muthukrishnan Ipoh: சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவில்லை.

22/11/2022, 6:06 pm - K Chandrasekaran Klang: அரசியலில் இது சகஜமப்பா. நம் நாட்டிற்கு இது புதுமையாக இருக்கலாம். ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இது ஏற்கனவே நடந்துவிட்டது. ஒவ்வொரு மனிதன் எப்படி தனி உலகமோ அதேபோல் ஒவ்வொரு விடையமும் தனித் தனி  விடயமே!

நாடாளுமன்றம் வேறு! சட்டமன்ற வேறு! இடைத் தேர்தல் வேறு! பொது தேர்தல் வேறு! இதை வேறுபடுத்திக் கொள்ள தெரியாமல் போய் விழுந்தது தான் பாரிசான் நேஷனல் அரசாங்கம்.

22/11/2022, 6:07 pm - Kalaivani Johnson: ஓ அப்படி என்றால் சரிங்க ஐயா...🙏

22/11/2022, 6:07 pm - K Chandrasekaran Klang: ஒரு நதியில் இரு முறை குளிக்க முடியாது.

22/11/2022, 6:09 pm - Muthukrishnan Ipoh: https://ta.wikipedia.org/s/bg5g

விக்கிப்பீடியாவில் விளக்கமாக எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள்...

மலேசியாவில் பொதுத் தேர்தலின் போது மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தலும் சேர்ந்து நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சில மாநிலங்களில் மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் நடத்தப்பட மாட்டா.

பாக்காத்தான் ஹரப்பான்; பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநிலங்கள், அவற்றின் முழு பதவிக் காலத்தை முடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளன.

பாக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களும்; பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான கெடா, கிளாந்தான், திராங்கானு மாநிலங்களும்; தங்கள் மாநிலச் சட்டமன்றங்ளைக் கலைக்கப் போவது இல்லை என்று உறுதி செய்துள்ளன.

22/11/2022, 6:15 pm - Kalaivani Johnson: ஐயா உங்களுக்கு மிக்க நன்றி, தேர்தல் சார்ந்த ஆட்சி, அரசியல், அரசாங்கம் என்று அனைத்தையும் உங்கள் மூலம் பலர் இங்கு தெரிந்து கொண்டார்கள் என்றால் மிகையில்லை தான்.... உங்களின் எழுத்துப் படிவங்களுக்கு என்றென்றும் தலை வணங்குகிறேன்.... நிறைய விசயங்கள் இந்த தேர்தல் காலங்களில் தெரிந்து கொண்டேன்.... மீண்டும் நன்றிங்க ஐயா.... 🙏🙏🙏

22/11/2022, 6:36 pm - Cikgu Sivalingam: பழம் பெரும் வரலாற்றின் மெய்ம்மையே‌ கூறும்  செவ்விய‌  நாவிராதலின் *செந்நாவலர்* முத்துக்கிருஷ்ணன் ஐயா அவருக்கு வணக்கமும்‌ வாழ்த்தும்.

22/11/2022, 6:56 pm - Murugan Sivam: இன்னும் அன்வார்தான பிரதமர் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை....

22/11/2022, 7:05 pm - Muthukrishnan Ipoh: *செரட்டோன் 2*

22/11/2022, 7:29 pm - Muthukrishnan Ipoh: வணக்கம் ஐயா... பெரிய மனது... பெரிய வார்த்தைகள்... உற்சாகச் சொல் வதனங்கள்... நன்றிங்க. தங்களுக்கும் இனிய தமிழ் வாழ்த்துகள் 🙏🌸

22/11/2022, 9:10 pm - Raja Sg Buluh: ஆளும் கட்சியா இருக்கும் போதே ஒன்னும் செய்யவில்லை!!!? எதிர்க்கட்சியா இருந்து மக்களுக்கு சேவை செய்யப்போராங்க!

22/11/2022, 9:34 pm - DURAISINGAM Banting 2: வணக்கம் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு பேச்சு ஒரு கேடா...

22/11/2022, 9:36 pm - Murugan Sivam: ஒன்றும் செய்யல.... அப்போது பாக்காதான் செய்யட்டும்...

22/11/2022, 9:40 pm - Muthukrishnan Ipoh: பாரிசானைப் பற்றி என்ன சொன்னாலும் ஏன் கோபப் படுகிறீர்கள்...

22/11/2022, 9:41 pm - Murugan Sivam: கோபப்படவில்லை.... பாக்கதான் செய்யட்டும் என்றேன்....

22/11/2022, 9:58 pm - Raja Sg Buluh: இந்த நபருக்கு இப்ப பிரதமர் பதவி பைத்தியம் பிடித்துவிட்டது.

22/11/2022, 10:00 pm - Muthukrishnan Ipoh: பைத்தியம் முற்றிவிட்டது... நாலு பெண்டாட்டிக்கரர்... கண்டிப்பாக... 😇😇

22/11/2022, 10:12 pm - Muthukrishnan Ipoh: புதிதாக ஒரு பொதுத் தேர்தல் நடத்தப் படலாம். பெரிக்காத்தான் தன்னுடைய இடங்களைக் கூட்டி மோதின் பிரதமர் பதவிக்கு வரலாம். கணிப்புகள்...

22/11/2022, 10:27 pm - Chinna Rasu: அரண்மனையில் 92 பேரை வைத்துக் கொண்டு மொகிதின் ஆடிய நாடகம். வெட்ட வெளிச்சமானது.