15 ஜனவரி 2024

போகி பண்டிகை

 இமயவர்மன், திருச்சி - 15.01.2024


🎉 போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும்!. இது பின்னர் மருவி போகிப் பண்டிகை என்றாகி விட்டது.

🎉 வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. போகிப் பண்டிகை பொங்கலுக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது. 


🎉 பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர்.

🎉 இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி நாளன்று புதிதாக வீட்டிற்குக் கொண்டு வருவார்கள்.

காப்புக் கட்டுதல் :

🎉 போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் பூ காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு-ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

🎉 மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் வருவதைத் தடுக்கும். விஷ முறிவுக்கு உதவும்.

🎉 வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை வரவிடாமல் தடுக்கும். ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளைத் தடுக்கும். தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.

இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :

🎉 மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு.

🎉 மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.

பழைய பொருட்களை எரித்தல் :

🎉 பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துவார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். 

அதனோடு மட்டுமல்லாமல்  மனதில் இருக்கும் துயரங்களையும் அழிப்பதால் இப்பண்டிகையைப் போக்கி என்றனர். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். 

அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாடத்தின் வெளிப்பாடாகும்.

10 ஜனவரி 2024

வாழ்க்கையில் நீக்குதல் கோட்பாடு

THEORY OF ELIMINATION IN  LIFE 


பெருமாள், கோலாலம்பூர் (10.01.2024)

வாழ்க்கையில் நீக்கப் படுவதற்கான 3 நிலைகள்:

60 வயதில், பணி செய்த இடம் உங்களை நீக்குகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையின் போது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக அல்லது ஆற்றல் மிக்கவராக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சாதாரண நபராகத்தான் திரும்புவீர்கள்.

எனவே, உங்கள் கடந்தகால வேலையில் இருந்து மேன்மையின் மனநிலையையும் உணர்வையும் பற்றிக்கொள்ளாதீர்கள், உங்கள் ’ஈகோ’-வை விடுங்கள், அல்லது நீங்கள் உங்கள் இலகுவான உணர்வை இழக்க நேரிடலாம்!


70 வயதில், சமூகம் உங்களை படிப்படியாக நீக்குகிறது.

நீங்கள் சந்திக்கும் மற்றும் பழகிய நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் குறைவாக இருப்பார்கள், மேலும் உங்கள் முன்னாள் பணியிடத்தில் யாரும் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள். 
 
ஏனென்றால், இளைய தலைமுறைக்கு உங்களைத் தெரியாது; மேலும் நீங்கள் அதைப் பற்றி சங்கடமாக உணரக் கூடாது!

80 வயதில், குடும்பம் உங்களை மெதுவாக நீக்குகிறது.

உங்களுக்கு பல பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் மனைவியுடனோ அல்லது உங்களுடனோ வாழ்வீர்கள்.

உங்கள் பிள்ளைகள் எப்போதாவது வருகை தந்தால், அது அன்பின் வெளிப்பாடாகும். எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீவிரமாக இருப்பதால், குறைவாக வருகை தந்தால் அதற்கு அவர்களைக் குறை கூறாதீர்கள்!

90 வயதில், பூமி உங்களை தவிர்க்க விரும்புகிறது. இந்தக் கட்டத்தில், சோகமாகவோ துக்கமாகவோ இருக்க வேண்டாம்,

ஏனென்றால் இதுவே வாழ்க்கையின் வழி, எல்லோரும் இறுதியில் இந்தப் பாதையைத் தான் பின்பற்றுவார்கள்!

எனவே, நம் உடல்கள் இன்னும் நல்ல நிலையில் இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்!

நீங்கள் விரும்புவதைச் சாப்பிடுங்கள், நீங்கள் விரும்புவதைக் குடியுங்கள், விளையாடுங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் விசயங்களைச் செய்யுங்கள்.


நினைவில் கொள்ளுங்கள், உங்களை நீக்காத ஒரே விசயம் வாட்ஸ்அப் குழு மட்டுமே. எனவே, குழுவில் அதிகம் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு வணக்கம் சொல்லுங்கள், உங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், வருத்தப்பட வேண்டாம்!

எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருங்கள். இந்த்ச் செய்தி மூத்த குடிமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

(பதில் இடுகைகள்)

உலக வாழ்க்கையை
நாளும்
நினைத்தாலே
ஈகோ 
என்ற கேள்விக்கே இடமில்லை.

இனி எப்படி வாழ்வது
என்று
இப்பொழுது தான்
திட்டமிடவேண்டுமா,
இதற்கு எப்பவோ
தயாராகி
இருந்திருக்கவேண்டும்.

வாழும் வரை
போராடு
உண்மைதான்.

உடலில்
வலுவுள்ளவரை
போராடி
மகிழ்ந்து
மடிவோம்.
அவ்வளவுதான்.

நமது வயதினிலே
வேறு 
என்ன செய்வது.
எல்லாம்
அவன் செயல்
என்று
வாழ்ந்த காலங்களை
அசை போட்டுக்கொண்டு
உடம்பையும்
கவனித்துக்கொண்டு
நமது
நேரம் வரும்போது
இறைவனே
அழைத்துக்கொள்வான்.

பிறப்பும்
இறப்பும்
அவன் கையிலே.

தற்காலிக
இடமாக
இந்த பூலோகத்தில்
தங்க வாய்ப்பளித்த
இறைவனுக்கு
நாளும்
நன்றி சொல்லி
நம் நாளை
எதிர்நோக்குவோம்.

சரணம் சொல்லி
மரணம் காண்போம். ta

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம்

மகாலிங்கம், பினாங்கு (07.01.2024)

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம், பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரிலிருந்து, அன்றைய போர்ட் வேல்ட்; இன்றைய கோலா செபத்தாங் வரையில், ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பெற்றது. 


அன்று தைப்பிங் நகரில் உள்ள ஈய இலம்பங்களில் எடுக்கப்பட்ட ஈயக் கட்டிகளை போர்ட் வேல்ட் துறைமுகத்திற்கு எடுத்து செல்ல உருவாக்கப் பட்டது தான் இந்த இரயில் தண்டவாளம்.

இன்றைக்கு ஒட்டு மொத்தமாக இந்தப் பகுதிகள் அனைத்தும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. வித விதமான வியாபாரங்கள் நடைப் பெறுகின்றன; வித வித மான உணவுகள், கருவாடுகள், கடல் பயணம் என்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்.

உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள்...

(பதில் இடுகைகள்)

பெருமாள், கோலாலம்பூர்

இதிலே 
பழமையும்
புதுமையும்
இருக்கையிலே...

மலேசியா முழுமையும்
துடைத்தொழிக்க
காரணமென்ன...

பழயனவற்றை
இன்றும்
பாதுகாத்து
வரும் அரசு
ஏன்
அத்தகைய மாற்றத்தை
முன்னெடுத்தது
என்பதை
அன்றைய KTM நிர்வாகம் பதிலலித்தால் சிறப்பாக இருக்கும்...

இப்படி பழசும்
பதுசும்
பார்வையில்
விழுந்தால்
அந்த கால
நினைவலைகள்
சிறகடித்துப்போகும்...

கண்டிப்பாக
சுற்றுப் பயணிகளை
கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன.
MATIC பின்னோக்கி நகருமா. ta