93 வயதான *புஷ்பநாதன் லெட்சுமணன்* ஈப்போ பத்து காஜா நகரைச் சேர்ந்தவர். பத்து காஜா பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்.
மலேசியாவின் பழைமையான தடகளப் போட்டியாளர். வெற்றி பெற ஆசை இருந்தால் வயது தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
யோகா பயிற்சியுடன் ஒவ்வொரு நாளும் 2 கி.மீ. மெது ஓட்டம். அதன் மூலமாகத் தன் உடல் தகுதியைப் பராமரித்து வருகிறார். உடல் எடை 53 கிலோ.
மனைவியின் பெயர் மங்கலேஸ்வரி. வயது 90. ஒரே மகள் சாந்தி. இரு பேரப் பிள்ளைகள். 1982-ஆம் ஆண்டு ராஜா சூலான் இடைநிலைப் பள்ளியில் இருந்து பதவி ஓய்வு பெற்றார்..
கோலாலம்பூர் 2019 மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 150 விநாடிக்குள் ஓடி, தங்கம் வென்று மலேசியர்களை அசர வைத்த மனிதர்.
2018-ஆம் ஆண்டு மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் மற்றும் 400 மீ. ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
1957-ஆம் ஆண்டில் இருந்து ஓட்டப் பந்தயத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது, அவர் உதவி தடகளப் போட்டி அரங்க மேலாளராகவும், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக நிகழ்வுகளில் தடகள தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார்.
(மலேசியம்)
16.04.2022

