17 ஜனவரி 2021

நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்

17.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

விழுந்தால் அழாதீர்கள்... எழுந்திருங்கள்!

தோற்றால்  புலம்பாதீர்கள்... போராடுங்கள்!

கிண்டல் அடித்தால் கலங்காதீர்கள்... மன்னித்து விடுங்கள்!

தள்ளினால் தளராதீர்கள்... துள்ளியெழுங்கள்!

நஷ்டப் பட்டால் நடுங்காதீர்கள்... நிதானமாய் யோசியுங்கள்!

ஏமாந்து விட்டால் ஏங்காதீர்கள்... எதிர்த்து நில்லுங்கள்!

நோய் வந்தால் நொந்து போகாதீர்கள்... நம்பிக்கை வையுங்கள்!

கஷ்டப் படுத்தினால் கதறாதீர்கள்... கலங்காமலிருங்கள்!

உதாசீனப் படுத்தினால் உளறாதீர்கள்.. உயர்ந்து காட்டுங்கள்!

கிடைக்கா விட்டால் குதிக்காதீர்கள், அடைந்து காட்டுங்கள் !

மொத்தத்தில் நீங்கள் பலமாவீர்கள்...

சித்தத்தில் நீங்கள் பக்குவமாவீர்கள்...
 

 

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

17.01.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன், கங்கார் பூலாய், ஜொகூர்

    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

   என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்...

    என்ன பாட தோன்றும்

    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

    காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

    காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

    தாலாட்டு பாட தாயாகவில்லை

    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

    நிலவில்லா வானம் நீரில்லா மேகம்

    பேசாத பெண்மை பாடாது உண்மை

    கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

    பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

    தனிமையில் கானம் சபையிலே மோனம்

    உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

    அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

   என்னைப் பாட சொன்னால் என்ன பாட தோன்றும்... 

   என்ன பாட தோன்றும்
 


ஜொகூர் உலு திராம் மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

17.01.2021

ஜொகூர் உலு திராம் மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலு திராம் நகரில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு இலவசமாக வரலாம்.

SRJK TAMIL LADANG MADOS ULU TIRAM , JOHOR FREE TRANSPORT FOR ALL STUDENTS

தமிழ்ப் பள்ளிகளைத் தக்க வைக்கத் தோள் கொடுக்கும் தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

(மலேசியம்)
17.01.2021 


பெண்கள் நிறம் மட்டுமே வேறு

17.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

ஒரு நாட்டு மன்னன் தன் அரன்மனையில் நாட்டியம் ஆட வந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப் பட்டான்.

அப்பெண்னோ மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குலதொழில் வேண்டாம்.... மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றாள்.

மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கத்தான் வேண்டும்... வா நான் இந்த நாட்டிற்கே உன்னை அரசி ஆக்குகிறேன் என்றான்.

அப்பெண் எவ்வளவோ வாதாடியும் விடவில்லை மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள் அப்பெண்!

சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாருங்கள் விருந்து வைக்கிறேன், அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம் என்றாள்.

மன்னனும் சென்றான். அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள்.

மன்னன் எனக்குச் சாப்பிட பொறுமை இல்லை, நீயே ஊட்டி விடு என்று கூறினான்.

அப்பெண்ணும் ஊட்டி விட்டாள். மன்னன் சுவைத்தான். விருந்து முடிந்தது.

மன்னனிடம் கேட்டாள்; "மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது மன்னா?"

மன்னன் "நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான்.

பெண்; "மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே" என்றாள்.

"தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான் மன்னன்.

இது கதையாக இருந்தாலும் உண்மை அதுதானே!

 


மலேசியம் புலனத்தில் தமிழ்... தமிழ்...

15.01.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

இந்தப் புலனத்தி்ல் சேர்ந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைப் பார்க்கிறேன். படிக்கிறேன். நிறைய புதுத் தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன்.

இங்கு பயணம் செய்வது பயனான செயல். உங்கள் கட்டுரைகளை நாளிதழ்களில் படித்து வியந்து இருக்கிறேன். ஓர் எழுத்தாளராக மட்டுமே நீங்கள் எனக்கு அறிமுகம்.

ஆனால்... இந்தப் புலனத்தின் வழி நீங்கள் எனக்கு ஓர் ஆசானாக, அப்பாவாக, சகோதரனாகத் தெரிகின்றீர்கள்.

புலனத்தில் பல பதிவுகள். பலவற்றைப் பார்த்தவுடன் கருத்து தெரிவிப்பேன். சிலவற்றைப் படித்து விட்டு பிறகு கருத்து தெரிவிப்பேன். அலுவல்கள் பல இருப்பதால் வலைத் தளத்தை நேரம் கிடைக்கும் பொழுது நிதானமாகவும் அமைதியாகவும் பார்த்துப் படிக்கிறேன்.

மேலும் நிறைய புதுச் சொற்களை இங்கு கற்றுக் கொண்டு வருகிறேன். பதிவுகளைப் பதிவு செய்யும் முகம் தெரியாத அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பயணம் செய்வோம்.

கென்னடி ஆறுமுகம்: மட்டற்ற மிக்க மகிழ்ச்சி சகோதரி. அனைவருடைய பதிவுகளுக்கும் உடனே பின்னூட்டம் தரும் நண்பர்களில் தாங்களும் ஒருவர். மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து பயணிப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மைதான்... பெரும்பாலான பதிவுகளுக்கு பின்னூட்டம் வழங்குவதில் முதன்மை வகிக்கிறார்... இவரை பார்த்து மற்றவர்களும் சோம்பலை முறிக்கலாம்.... கொசு மருந்தை முகத்தில் அடித்தாலும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்... விடுங்கள்...

ரஞ்சன் கங்கார் பூலாய்: புலனத்தில் தங்களின் ஈடுபாட்டைக் கண்டு வியக்கிறேன். தொடருங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
மனதை நெகிழச் செய்த பதிவு. முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மலேசியம் ஒரு புலனம் அல்ல. அது ஒரு குடும்பம். ஒரு குடும்பமாகப் பழகுகிறோம். நமக்குத் தெரிந்ததை; பார்த்ததை; படித்ததை; கேட்டதை மற்ற அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மகிழ்ச்சி அடைகின்றோம். அந்த மகிழ்ச்சியில் தான் பெரிய இன்பமே தொற்றி நிற்கின்றது.

இந்தப் புலனத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் இளைஞர்கள் என பலர் பயணிக்கின்றனர். பெரியவர்கள் என்று சொல்லும் போது வயதில் மூத்தவர்கள். பெரும்பாலும் மூத்தவர்கள் எடுக்கும் முடிவு அனுபவம் சார்ந்ததாக இருக்கும். அவர்களின் பதிவுகளில் முதிர்ச்சியும் தென்படும்.

சில புலனங்களில் கண்டதைப் போனதை அள்ளிக் கொட்டுவார்கள். நிர்வாகிகளின் கண்டிப்பு இல்லாமல் போவதே அதற்கு காரணம். இங்கே அப்படி இல்லை. கண்டிப்பும் இருக்கும். ஏச்சும் பேச்சும் இருக்கும். எனக்கு வயது 70-க்கும் மேலாகிறது. அதனால் என்னை ஒரு தகப்பனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

அந்த வகையில் எனக்கு இந்தப் புலனத்தின் நிறையவே மகன்கள்; மகள்கள். அவர்களில் ஒருவர் தான் தாங்கள். பல ஆண்டுகள் பேஸ்புக் ஊடகத்தில் பயணித்து அண்மையில் இந்த வாட்ஸ் அப் புலனத்திற்கு வந்து உள்ளீர்கள். தொடர்ந்து பயணியுங்கள்.

இந்தப் புலனத்தில் நிறைய கல்விமான்கள் உள்ளனர். மேலும் சேர்க்க உள்ளோம். தவிர சின்ன வயதில் கெட்டிக்காரத் தனமாய் ஓர் இளைஞர் நம் புலனத்தில் வலம் வருகின்றார். கென்னடி ஆறுமுகம். அழகிய தகவல் களஞ்சியம். நன்றி சொல்கிறோம்.

தொடர்ந்து பயணிப்போம். மேலும் ஒரு தகவல். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 12 - 14 மணி நேரம் வேலை செய்கிறேன். அதைப் பற்றிய ஒரு சின்ன பதிவு உள்ளது. எத்தனை மணிக்கு எழுவது; எத்தனை மணிக்கு மீண்டும் படுக்கைக்குச் செல்வது; அது வரையில் என்னென்ன வேலைகள். அதைப் பற்றிய பதிவு. பின்னர் பதிவு செய்கிறேன். நன்றிம்மா தேவி.

தேவி கடாரம்: நன்றி ஐயா... இந்தப் புலனத்தில் என்னைக் கவர்ந்தது... தமிழ். புலனம் முழுக்கத் தமிழ்... தமிழ்... தமிழ்... அனைத்தும் தமிழ்... எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்.

வேறு எந்தப் புலனத்திலும் இல்லாததை இந்தப் புலனத்தில் பார்க்கிறேன். பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .உங்களின் அடுத்த பதிவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்து இருக்கிறோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மிக்க மகிழ்ச்சி. தமிழ் இனிக்கும். அந்த இனிமையைத் தங்களின் பதிவுகளில் காண்கிறோம். இனிமைகள் இதயங்களிலும் தொடரட்டும். நன்றிம்மா...