பதிவு செய்தவர்: தனசேகரன் தேவநாதன்

தனசேகரன் தேவநாதன்: மலேசிய தமிழரின் இரத்த வியர்வையைப் பறைசாற்றும் நினைவுச் சின்னம். இளவயதில் பெற்றோர்களுக்கு மங்கு துடைக்க போகாத பிள்ளைகள் உண்டோ தோட்டத்திலே... இந்த மங்கில் என் தாயாரின் நிரையில் வாலியில் பால் சேர்த்த ஞாபகம் வருகிறது. (1960)
முருகன் சுங்கை சிப்புட்: குரங்குகளின் விளையாட்டு பொருட்கள் இந்த மங்கு
தேவி சர: இது தான் மங்கு என்பதை இப்போது தான் பார்க்கிறேன்... என் அம்மா தோட்டத்து வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பார்த்து படித்து கருத்தும் எழுதி விட்டேன் அப்பா... 👌👍🏻
மகாலிங்கம் படவேட்டான்: தமிழினத்திற்குச் சோறு போட்ட மங்கு...
கரு ராஜா சுங்கைபூலோ: [11:42 am, 27/06/2021] Raja Sg Buluh: ரப்பர் மரத்தில் கம்பியில் கட்டி தொங்க விட்டதும் மங்குதான். அந்தக் காலக்கட்டத்தில் தோட்டங்களில் பீங்கான் தட்டு பாவிப்பது இல்லை. ஒரு மாதிரி இரும்பு தகட்டில் வெள்ளை நிறத்தில் சாயம் பூசிய மங்கில் சாதம் சாப்பிட்டதை ஒரு சிலர் மறந்திருக்க முடியாது.
இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் அந்த மங்கு கீழே விழுந்ததும் சில்லு பட்டுவிடும். அதை எல்லாம் தோட்டத்து மக்கள் பெரிது படுத்துவதில்லை. என் தாயார் அடிக்கடி இப்படி சொல்லுவார்.
ஏண்டா சாப்பிட்ட மங்கை கழுவவில்லை என்று. இப்படி எல்லாம் நம் தோட்டத்து வாழ்க்கை முறை. இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்க்ஷ்டக்காரப் பிள்ளைகள். கொடுத்து வைத்த பிள்ளைகள்.

ராதா பச்சையப்பன்: பலருக்கும் சின்ன வயது ஞாபகத்தை நினைவு படுத்தி விட்டது இந்த பால் மங்கு. இதைச் சிலர் அவரவர் வீட்டிலும் உபயோகித்தார்கள். வயதானவர்கள் வெற்றிலை, பாக்கு இடிக்க உதவியது. செல்லப் பிராணிகளுக்குப் பால், தண்ணீர் ஊற்றி வைக்க உதவியது. சிலர் கிச்சனிலும் உபயோகித்தார்கள்.
இந்த மங்கு ஆற்றிய சேவைகளைத்தான் மறக்க, மறைக்க முடியுமா? சரித்திரப் புகழ் பெற்றது. சில சமயம் இந்த மங்கை துடைக்கும் போது, உள்ளே இருக்கும் சிறு சிறு கல்கள் கையில் வெட்டி இரத்தம் வந்த சம்பவம் எனக்கு நிறையவே உள்ளது.
சில தோட்டங்களில் பிளாஷ்டிக் மங்கும் உபயோகத்தில் இருந்தது. சிலர் இந்த வகை மங்குகளை இன்றும் நினைவுச் சின்னமாக வைத்துள்ளார்கள். இந்த மங்கை கேட்டால் பல கடந்த காலக் கதைகளைச் சொல்லும். பழையதை நினைவுக்கு கொண்டு வந்த இதன் பதிவாளருக்கு நன்றிகள். 🙏🙏👌🌹.
பாரதிதாசன் சித்தியவான்: உண்மைதான் ஐயா
தனசேகரன் தேவநாதன்: பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது சிறிய ஓடையில் ஓடும் தண்ணீரை இந்த பால் பங்கு கொண்டு அள்ளி அள்ளிக் குடித்து கும்மாளம் போட்டாலும் வாந்தியும் இல்லை பேதியும் இல்லை. கலாராவும் இல்லை. கொரானாவும் இல்லை.
இன்று மினரல் நீர் சுகாதாரம் கொடிகட்டி பறக்குதே ஏன்? மாதவா கேசவா மகேஸ்வரா...
பெருமாள் கோலாலம்பூர்: 👍 உண்மை. அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த மங்கைத் தலைகீழாகத் திருப்பி சுட்ட வசம்பை உரசி பொட்டு வைப்பார்கள் அந்தக் கால பெண்பால் பெருசுகள் 👌
ராதா பச்சையப்பன்: உண்மை. 💯/💯. இன்னும் சில, பல கதைகளும் உள்ளன இந்த மங்கில்... கால தாமதமாக மங்கு துடைக்கப் போனதால், அந்த மங்கில் அடி வாங்கிய கதைகளும் அடங்கும் 🙏🌹.
கலைவாணி ஜான்சன்: பழைய நினைவுகள்... பால் மரக் காட்டினில், பனி பெய்யும் வேளையில்... 😊
தேவி சர >>> கரு ராஜா: அருமை ஐயா... தங்கள் அம்மாவின் நினைவுகளா இவை... சில்லு என்றால் என்ன... எனக்கு புரியவில்லை... ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்ஷடக்கார பிள்ளைகள்...🙁 இப்ப உள்ள பிள்ளைகள் பாவம் ஐயா... தெருவில் ஓடியாடி விளையாட முடியவில்லை...
வீட்டில் விடியோ கேம் அல்லது திறன் பேசி, கணினி என்று உட்கார்ந்த இடத்திலேயே நண்பர்கள் இல்லாமல் தனியாக விளையாடுகிறார்கள்.
மேலும், உடன் பிறப்புகள் இருந்தால் கூட தனியாகவே இம்மாதிரியான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நாம் தான் ஐயா அதிர்ஷ்டசாலிகள்... வெறும் காலோடு தெருவில் நண்பர்களோடு விளையாடினோமே அது தான் அன்றைய பிள்ளைகளுக்கு பொற்காலம்.
கூட்டஞ்சோறு ஆக்கி ஆளுக்கொரு இலை பறித்து ஒன்னா உக்காந்து சாப்பிட்டோமே அது பொற்காலம்... நம்ம பொன்னான காலம். அதுவே அதிர்ஷ்ட பிள்ளைகளின் காலம் 🥰.😔🥺
கரு ராஜா >>> தேவி சர: வணக்கம் தேவி. சில்லு என்பதற்கு விளக்கம் கேட்டீர்கள். இப்ப தான் பார்த்தேன். காலயில் தோட்டத்திற்குப் போயிருந்தேன்.
ஒரு கண்ணாடிக் கோப்பை லேசாக இடிப்பட்டால், உடையாது. அதற்கு வீரு விட்டுடுச்சுனு சொல்லுவோம்.
அந்தக் காலத்தில் தோட்டத்தில் உணவு அருந்துவதற்கு ஒருவிதமான தட்டு எல்லா வீட்டிலும் உபயோகப் படுத்தினார்கள். அது லேசான இரும்பில் செய்யப்பட்டு, மேலே வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.
கீழே விழுந்ததும் வெள்ளை நிறம் லேசாக வெளியாகி அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் கருப்பாய் இருக்கும். இதைத்தான் நாங்கள் சில்லு விட்டுடுச்சு என்போம். அந்த மாதிரி பாத்திரங்கள் இப்ப புழக்கத்தில் இல்லை. ராதாவுக்கும் இதே பதில்தான்.
தேவி சர: அப்படியா ஐயா. எனக்கு விளங்கி விட்டது... அந்தப் பாத்திரம் என் கற்பனைக்கு வந்து விட்டது. நன்றி ஐயா. 🙏🏻
ராதா பச்சையப்பன்: 🙏 மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது எனக்கும் புரிந்தது. நானும் தோட்டப் புறத்தில் வாழ்ந்தவள் தானே. நீங்கள் சொல்லும் அப்போது உள்ள அந்த மங்கு, குவளை, தட்டுகள் இன்றும் சிலர் வைத்து உள்ளார்கள். ஒரு சொருகல்.
என் பக்கத்து வீட்டு அம்மாவுக்கு எட்டும் ஆண் பிள்ளைகள். அந்த அம்மா, பெரிய இரண்டு மகன்களுக்கு தனித் தனி தட்டில் சாப்பாட்டைப் போட்டு கொடுத்து விட்டு, மற்ற ஆறு பையன்களுக்கும் சகோதரர் திரு. கருப்பையா சொன்ன அந்த மாதிரியான பெரிய தட்டில் எல்லாச் சோறு கறிகளையும் போட்டுக் கொடுப்பதை... அதில் ஒரு பெரிய பையன் பிசைந்து கொடுத்து எல்லா பையனுங்களும் சாப்பிடுவார்கள்.
கடைசியாகச் சாப்பிட்டு முடிக்கும் பையன்தான் தட்டை கழுவி வைக்க வேண்டும். அந்த அம்மாவில் அவ்வளவு தட்டையும் கழுவ இயளாது. அவங்களும் தோட்டத்தில் வேலை செய்பவர்தான். பக்கத்து வீடு என்பதால் இதை தினமும் பார்ப்பேன். 😃🙏🌹.
பெருமாள் கோலாலம்பூர்: நான் ஆயக் கொட்டகையில் இருந்த போது அந்த ஆயா தன் வீட்டில் சமைத்த உணவை (சோறு, கறி, காய்கறி) கலந்து பிசைந்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஓர் உருண்டை பிடித்து கொடுப்பார்.
அம்மாதிரியான தாயுள்ளம் கண்டு இன்று மனம் நெகிழ்கிறேன். பால் டின் மட்டுமே இலவசமாக தோட்ட நிர்வாகம் கொடுக்கும். அது 1956-இல் நடந்த சம்பவம்.
ராதா பச்சையப்பன்: 🌹🙏 அருமையான பதிவு. இதை அப்படியே வலைத்தளத்தில் பதிவேற்றிய நம் புலன தலைவருக்கு என் இரு கரம் கூப்பி, தலை வணங்குகிறேன். இப்படி ஒருவர் நமக்கு எல்லாம் கிடைத்து நாம் செய்த பலண் என்று தான் சொல்ல வேண்டும்.
நாம் எதிர் பார்த்தோமா நம்முடைய எழுத்துப் படிவங்கள் வலைதளத்தில் பதிக்கப் படும் என்று... நம் பின்னால் வரும் நம் சந்ததியினர் இந்தப் பதிவைப் படித்து பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்... தோட்டப்புற வாழ்க்கையில் இரப்பர் மரம் சீவி ரப்பர் பால் எடுக்கும் முறையை... இது ஒரு நல்ல பதிவு. தலைவருக்கு நன்றிகள். 🙏
தனசேகரன் தேவநாதன்: நியாயமான பாராட்டுக்கள். நன்றி அம்மா.
ராதா பச்சையப்பன் >>> தனசேகரன் தேவநாதன்: இன்று இப்படி ஒரு தலைப்பை பதிவு செய்தவரே நீங்கள் தானே உங்களுக்கும் நன்றிகள். இப்படி ஒரு பால் மங்கைப் போட்டு, பலரின் மனதில் பல வருடங்களாக மறைந்து இருந்த ஆதங்கத்தை வெளியில் வந்து தங்கள் கருத்துகளை கூற வைத்தது எவ்வளவு பெரிய விசயம்.
கடந்த காலத்தை எத்தனைப் பேர் இன்று அசை போட்டு பார்த்து இருப்பார்கள். அதில் நானும் ஒருத்தி. தலைப்பைப் பதிவு செய்தவருக்கும்; தங்கள் மனதில் உள்ளதை எழுதோவியமாக பதிவு செய்தவர்களுக்கும், அதை அழகாக வடிவமைத்து வலைதளத்தில் பதிவேற்றியவருக்கும் நன்றியும் பாராட்டயும் தெரிவித்துக் கொள்கின்றேன். 🙏🌹.
பெருமாள் கோலாலம்பூர்: தலைவரின் எண்ணங்கள் புலன உறுப்பினர்களை விட ஜெட் வேகத்தில் பறக்கிறது. இம்மாதிரியான ஜாம்பவான்களோடு எழுத்துலகில் பயணிப்பது பெரும் மகிழ்ச்சி என்பேன். அருமை தலைவரே.