29 ஜூன் 2022

அனுராதா ரமணன்

தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர். (Anuradha Ramanan). (ஜூன் 29, 1947 – மே 16, 2010). புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப் படங்களாகவும் வெளிவந்து இருக்கின்றன.

இவரின் சில படைப்புகள் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

அனுராதா தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் 1947-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார்.


இவரின் கணவர் ரமணன். இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஓவியக் கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977-ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரின் எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியர் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டு இருந்தார்.

30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 நெடுங்கதைகளையும் 480 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரின் சிறை சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.

அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991-இல் பெற்றது.


இவரின் கதையைக் கொண்டு 1988-இல் வெளியான (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.

இவரின் மற்றொரு கதை மிதிலேயி சீதையரு (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளி வந்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக் கண்டேன் தோழி ஆகிய இவரின் கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டு உள்ளன.

(தொகுப்பு: மலேசியம்)
29.06.2022



 

02 ஜூன் 2022

லேடாங் மலை தேசியப் பூங்கா

லேடாங் மலை தேசியப் பூங்கா; (Gunung Ledang National Park); மலேசியா, ஜொகூர் மாநிலம், தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இந்தப் பூங்கா 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 160 வகையான பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லேடாங் மலை (Gunung Ledang; Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் உள்ளது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

(மலேசியம்)
02.06.2022

https://ta.wikipedia.org/s/b1qu


18 ஏப்ரல் 2022

புஷ்பநாதன் லெட்சுமணன்

93 வயதான *புஷ்பநாதன் லெட்சுமணன்* ஈப்போ பத்து காஜா நகரைச் சேர்ந்தவர். பத்து காஜா பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்.

மலேசியாவின் பழைமையான தடகளப் போட்டியாளர். வெற்றி பெற ஆசை இருந்தால் வயது தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

யோகா பயிற்சியுடன் ஒவ்வொரு நாளும் 2 கி.மீ. மெது ஓட்டம். அதன் மூலமாகத் தன் உடல் தகுதியைப் பராமரித்து வருகிறார். உடல் எடை 53 கிலோ.

மனைவியின் பெயர் மங்கலேஸ்வரி. வயது 90. ஒரே மகள் சாந்தி. இரு பேரப் பிள்ளைகள். 1982-ஆம் ஆண்டு ராஜா சூலான் இடைநிலைப் பள்ளியில் இருந்து பதவி ஓய்வு பெற்றார்..

கோலாலம்பூர் 2019 மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 150 விநாடிக்குள் ஓடி, தங்கம் வென்று மலேசியர்களை அசர வைத்த மனிதர்.



2018-ஆம் ஆண்டு மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் மற்றும் 400 மீ. ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

1957-ஆம் ஆண்டில் இருந்து ஓட்டப் பந்தயத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது, அவர் உதவி தடகளப் போட்டி அரங்க மேலாளராகவும், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக நிகழ்வுகளில் தடகள தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார்.

(மலேசியம்)
16.04.2022


04 மார்ச் 2022

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டி

மலேசியச் சகோதரிகள் சாதனை

உகாண்டா அனைத்துலகப் பூப்பந்து 2022 போட்டியில் மலேசியச் சகோதரிகளான கஸ்தூரி 21; வினோசா 20; மதிப்புமிக்க உகாண்டா பூப்பந்து 2022 பட்டத்தை வென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.


உகாண்டா,  கம்பாலாவில் உள்ள எம்.டி.என். அரங்கில் 2022 பிப்ரவரி 24 முதல் 27 வரை இந்தப் போட்டி நடைபெற்றது.


The Uganda International Challenge 2022 dramatically ended with a great piece of news as sisters, Kasturi, 21, and Venosha, 20, created a sensation as they earned the most prestigious title at the recent tournament. The tournament took place at the  MTN Arena, Kampala, Uganda on 24th till 27th of February 2022 creating buzz over social media platforms.

(மலேசியம்)

 

02 மார்ச் 2022

மலேசியத் தமிழ்ச் சிறுமியின் எதிர்ப்பு அட்டை


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில், கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், மலேசியத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் எதிர்ப்பு அட்டை. 

கோலாலம்பூர் ரஷ்ய தூதரகத்தின் முன் எதிர்ப்பு பதாகைகள்


கோலாலம்பூரில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர்.


உக்ரைன் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் கோலாலம்பூர் கோபுரம். 2020 ஆகஸ்டு 24-ஆம் தேதி எடுத்த படம்.

(மலேசியம்)
(பிப்ரவரி 28, 2022)