05 ஜனவரி 2022

பறக்கும் அணில்

பறவைகள் பறப்பதைப் போல பறக்கும் அணிலால் பறக்க முடியாது. ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்குக் காற்றில் மிதந்த படியே தாவ முடியும். ஓர் உயரமான மரத்தில் ஏறி அங்கு இருந்து கீழே பாய்கிறது.


இதன் கால்களை ஒரு சவ்வுத் தோல் இணைக்கிறது. அதன் உதவியால் கொஞ்ச தூரம் பறக்க முடிகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கால்களை விரைப்பாக நீட்டிப் பாயும். அதைப் பார்க்கும் போது அணில் பறப்பதைப் போல இருக்கும். உண்மையில் அணில்களால் பறக்க இயலாது.

(மலேசியம்)
02.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக