12.07.2021
கோலாசிலாங்கூர் ஓர் அழகிய துறைமுகப் பட்டினம். சிறப்பு வாய்ந்த சிலாங்கூரில் சிருங்காரம் பாடும் ஒரு சின்னப் பொக்கிசம். மலாக்கா நீரிணையைச் சார்ந்த நிலப்பகுதி. பச்சைப் பசேல் சதுப்புநிலக் காடுகள்.
கிள்ளான் மாநகரில் இருந்து 50 கி.மீ. கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. ஓர் அமைதியான ஊர். ஆனாலும் அங்கே ஒரு பெரிய காலப் பெட்டகமே புதைந்து கிடக்கிறது.

அதிகாலை கடல் வெள்ளப் பெருக்கு.
கோலாசிலாங்கூர் ஆறும், மலாக்கா கடலும் சங்கமமாகும் இடம்.

கோலா சிலாங்கூருக்குப் போனதுமே முதலில் உங்கள் கண்களில் படுவது கோலா சிலாங்கூர் (Kuala Selangor) எனும் பிருமாண்டமான வெள்ளை எழுத்துச் சுவர்கள் தான். மெலாவாத்தி குன்றின் (Bukit Melawati) கரும்பச்சைக் கானகத்து உச்சியில் அந்த எழுத்துகள் ஜொலிக்கின்றன.
இன்று காலையில் ராதா பச்சையப்பன் எடுத்த படம்.
மெலாவாத்தி குன்றில் இருந்து மலாக்கா நீரிணையில் போகும் கப்பல்களைப் பார்க்க முடியும். துறைமுகத்திற்கு வரும் கப்பல்களைப் பார்க்க முடியும். தவிர கீழே கோலா சிலாங்கூர் பட்டினத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நன்றாகவே கவனிக்க முடியும்.
கோலா சிலாங்கூரின் வரலாறு 16ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. சிலாங்கூர் ஆறு மலாக்கா நீரிணையில் வந்து கலக்கும் முகத்துவாரத்தில் தான் இந்தச் சிலாங்கூர் குன்று இருக்கிறது. இங்கே தான் ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. அதை இப்போது மெலாவாத்தி கோட்டை என்று அழைக்கிறார்கள்.

உண்மையில் இங்கே இரு கோட்டைகள் உள்ளன. மெலாவாத்தி குன்றின் மீது ஒரு கோட்டை. அதற்கு மெலாவாத்தி கோட்டை என பெயர். இன்னொரு கோட்டை இரு கி.மீ. அப்பால் தஞ்சோங் கிராமாட்டில் உள்ளது.
சிலாங்கூர் குன்றின் சுற்றுப்புறங்கள் அனைத்திலும் நெட்டைக் குத்தலான கருங்கல் பாறைகள். அவ்வளவு சுலபமாக மேலே ஏறிப் போய்விட முடியாது.
கீழே சிலாங்கூர் ஆறு வளைந்து வளைந்து நெளிந்து போகிறது. ஆற்றின் இரு மருங்கிலும் அடர்ந்த காண்டா சதுப்புக் காடுகள். மேலே குன்றின் மீது இருக்கும் கோட்டைக்கு இவையே நல்ல தற்காப்பு அரண்கள். 16ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்த சுல்தான் முகனட்டின் மகன் துன் முகமட் (Tun Mahmud) கட்டியது.

அந்தக் காலக் கட்டத்தில் ஜொகூர் ஆட்சியின் கீழ் தான் கோலா சிலாங்கூர் இருந்தது. துன் முகமட் அங்கிருந்து கோலா சிலாங்கூர் நிலப்பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். (சான்று: A History of the Peninsular Malays with Chapters on Perak & Selangor; R.J. Wilkinson, C.M.G (Pub Kelly & Walsh Ltd.)
17ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ்காரர்கள் சிலாங்கூரில் குடியேறினார்கள். கி.பி. 1756ஆம் ஆண்டு ராஜா லூமு (Raja Lumu) என்பவரைத் தங்களின் முதல் சுல்தானாக நியமித்தார்கள். ராஜா மூமுவின் பெயர் சுல்தான் சலிஹுடின் ஷா எனப் பெயர் மாற்றம் கண்டது.

இவர்தான் மெலாவாத்தி கோட்டைக்கு ஒரு புது வடிவம் கொடுத்தவர். கருங்கற்களைக் கொண்டு கோட்டைச் சுவர்களுக்கு வலிமை கொடுத்தவர். கோட்டையைச் சுற்றிலும் பீரங்கிகளையும் நிறுத்தி வைத்தவர்.
(சான்று: http://www.sabrizain.org/malaya/sgor5.htm - Raja Lumu, who took the title Sultan Salehudin Shah, established himself at the Kota Malawati)

பின்னூட்டங்கள்
தனசேகரன் தேவநாதன்: நீலக் கடல் அவைதான்... எந்தன் நெஞ்சின்
அலைதான் கண்ணம்மா... பாரதியார் கவிதை
கோலாசிலாங்கூர் காலை வேளையில்... அழகிய காட்சிகள்... நதிக் கரைகளைச் சுத்தம் செய்தால் அழகியச் சுற்றுலா தளங்களாக ம்றுவடிவம் பெறலாம்...
ஏற்கனவே இன்று காலையில் பதிவானவை... இருப்பினும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.
நம் நாட்டுப் படங்கள்... நம் புலன உறுப்பினர் இன்று காலை எடுத்த படங்கள்... Photo genuine உள்ளது. அசல் தன்மைகள்.
இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கு நிழல்படக் கலைத் தன்மை உள்ளது. வாழ்த்துகள்.
இராதா பச்சையப்பன்: இதில் இப்படி ஒரு கண்ணம்மா கதை இருப்பது தெரியாமல் போனதே.
கரு. இராஜா: கடல் சார்ந்த பட்டிnஅம், நதிச் சார்ந்த நகரங்கள் மற்ற நகரங்களை விட அழ்காக இருக்கும். இந்த அழகை ரசிப்பதற்காகவே நான் அடிக்கடி கோலாசிலாங்கூர் போவதுண்டு. என் வீட்டிலிருந்து கோலசிலாங்கூருக்கு 60 நிமிடப் பயணம்.
நான் முறை சீனா, ஷங்காய் நகருக்குப் போயிருந்தேன். ஷங்காய் நகரமும் ஒரு நதிச்சார்ந்த நகரம். இரவு நேரத்தில் அந்த நதியில் பயணம் செய்வது, சொல்ல வார்த்தை இல்லை. இரு கரைகளிலும் வானளாவிய கட்டிடங்கள் கண்ணைக் கவரும்.

அடுத்து பாங்காக், இதுவும் ஒரு நதி சார்ந்த நகரம். இதுவும் ஷங்காய் மாதிரி தான் இருக்கும். பாங்காக் நகரத்திற்கு மூன்று முறை சுற்றுலா போய் இருக்கிறேன்.
வியட்நாம் சொல்லவே தேவை இல்லை. வடக்கில் இருந்து தெற்கு தெற்கு வரை மீகோங் நதி பாய்கிறது. பெரும்பாலும் வியட்நாம் நகரங்கள் நதி ஓரமாக அமைந்திருக்கிறது. 7 முறை வியட்நாம் போயிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

இராதா பச்சையப்பன்: நன்றி சொல்ல எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவும் இல்லை, நினைக்கவும் இல்லை. அனைத்துக்கும் நன்றி நல்குகிறேன். நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக