தொகுப்பு: ராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்
ஐடா சோபியா ஸ்கட்டர்
(பிறப்பு: டிசம்பர் 9, 1870 – இறப்பு: மே 23, 1960)
தமிழ்நாட்டுப் பெண்களின் அவலநிலையைப் போக்குவதற்காகவும்; புபோனிக் கொள்ளை நோய், காலரா மற்றும் தொழுநோய்க்கு எதிரான போராட்டத்திற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் அழகிய பெண்மணி. அவரின் வரலாறு வருகிறது. படியுங்கள்.
1877-ஆம் ஆண்டு இந்திய நாட்டில் கடுமையான பஞ்சம். பசி. பட்டினி. இறப்பு எண்ணிக்கை 50 இலட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவு இல்லாத நிலை!

அந்தக் கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு வழங்குவதற்காக இந்தியாவிற்கு வந்தன. அப்படி ராணிப் பேட்டைக்கு வந்தவர்தான் ஒரு டாக்டர்.
அவருடைய பெயர் ஜான் (Dr. John Scudder). இவரின் மகள் ஐடா ஸ்கடர். 14 வயது.
ஒரு நாள் இரவு கதவு தட்டப் படுகிறது. ஐடா கதவை திறக்கிறாள். ஒரு பிராமணர் நின்று கொண்டு இருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாங்க" என்று பதறுகிறார்.
அதற்கு ஐடா, "நான் டாக்டர் அல்ல. என் அப்பாதான் டாக்டர்... கொஞ்சம் இருங்க... அவரை எழுப்புறேன்" என்கிறார்.
"இல்லம்மா... என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்க பிராமண ஆளுங்க... பெண்ணைக் கணவன் இல்லாத பிற ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவைத் தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார்.
ஐடா தன் தந்தையைப் பற்றிக் கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டுப் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பி விடுகிறார்.
அந்தப் பெண்களுக்கு ’என்ன ஆச்சோ ஏது ஆச்சோ’ என்று இரவு எல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா.
மறுநாள் காலை அந்தக் கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து செல்லப் படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பித் தேம்பி அழுகிறாள் ஐடா.

"என்ன தேசம் இது? பெண்களைப் படிக்க வைக்க மாட்டாங்களாம். பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களைப் படிக்க விடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்தப் பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதம் ஏற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டர் ஆகிறார்.
சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்தக் காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே, அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.
தமிழகத்தில் இறந்து போன அந்தப் பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவமனை தேவை என்பதை உணர்கிறார்.
பல நாடுகளில் இந்தியாவின் அவல நிலையைச் சொல்லி நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது.

இனி ஒரு கர்ப்பிணியைக்கூட சாக விடமாட்டேன் என்கிற உறுதியுடன் 19-ஆம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.
மருத்துவமனை கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாத பாடுபட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையைக் கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப் பெருமை வாய்ந்தது. ஒரு நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சி.எம்.சி. (Christian Medical College - Research Institution in Vellore) மருத்துவமனை.
யார் இந்த பெண்? இவர் ஏன் தமிழர்களுக்காக அழுதார்? இவர் ஏன் தமிழர்களுக்காக உருகினார்? இவர் ஏன் தமிழர்களுக்காகவே வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து 5 இளம் பெண்களைத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சி தருகிறார் ஐடா. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்.
தமிழகப் பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை.
ஆனால், ஒரு பெண் தனியாளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது. இலட்சக் கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டு இருக்கிறது!

"ஐடா" என்ற மனித தெய்வத்துக்கு மட்டும் இல்லை. இன்றைய ஆபத்தான சூழலில் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளாடை தாய்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!
1928-ஆம் ஆண்டில் இவருடைய (Ida Sophia Scudder) பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் வேலூரில் ஒரு மருத்துவமனைக் கல்லூரி (Vellore Christian Medical Center) கட்டப்பட்டது. 2000 படுக்கைகள்.
இந்த மருத்துவமனைக் கல்லூரி கட்டப் படுவதற்கு ஐடா சோபியா, அமெரிக்காவில் சேகரித்த நிதி 4 மில்லியன் அமெரிக்க டாலர் (1930 ஆண்டு கணக்கு).

ஐடா சோபியா மருத்துவமனைக் கல்லூரி, இதுவரை 6000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. இவர்களில் ஏறக்குறைய 5000 பேர் பெண்கள்.
இந்த மருத்துவமனைதான் உலகத்திலேயே பெரிய கிறிஸ்துவ மருத்துவமனை.
இந்த அம்மையாரின் பெயரில் வேலூரில் Ida Scudder School எனும் பெயரில் ஒரு பள்ளிக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள்.
ஆகஸ்டு 12, 2000-இல், இவருக்கு இந்திய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டது.
இந்திய அரசு கெய்சர் - இ - இந்து எனும் பொற் பதக்கத்தை அளித்து சிறப்பு செய்தது.

அவர் பெயரில் Ida Scudder Award எனும் விருது உருவாக்கப்பட்டு ஆண்டு தோறும் உலகம் முழுமைக்கும் வழங்கப் படுகிறது.
இவரைப் பற்றி 10 நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.
இந்திய நாட்டு வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் ஒரு சகாப்தம்.
(மலேசியம்)
06.02.2022

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக