30 மார்ச் 2021

சிறைக் கைதிக்கு மனைவி கடிதம்

 30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

அன்புள்ள கணவருக்கு... நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே... குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னால் இருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன். நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடம் இருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளை எல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.


குங்குமம் மகிமை

30.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.

மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.

வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.

குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.


படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப் படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

5. தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத் தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

7. ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித் தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

10. குங்குமம் இரு புருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக் கொள்ளும் மற்றவைகளை குங்குமத்திற்கு கீழே இட்டுக் கொள்ள கூடாது.

குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.

பெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.

குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலை பெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும்.

இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோயில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர்.

நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை. சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.

நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.

ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  

மதுரை மீனாட்சி ஆலயத்தின் தாழம்பூ மண குங்குமம் உலகப்பிரசித்தி பெற்றது.     

நன்றி: தினகரன் ஆன்மீகம்    

 

24 மார்ச் 2021

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது

24.03.2021

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளன. அது தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம்  22-க்கு 11 எனும் வாக்குகளில் நிறைவேறி உள்ளது.

இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, நேபாளம், உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை (abstain).

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்காள தேசம், கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளித்தன.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் மலேசியாவின் பெயர் இடம் பெறவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற 2021 பிப்ரவரியில் முறையீடு செய்தது.

இப்படி ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப் படுவது இலங்கை அரசுக்கு அனைத்துலக அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாகும்.

IN FAVOUR 22


Argentina 🇦🇷
Armenia 🇦🇲
Austria 🇦🇹
Bahamas 🇧🇸
Brazil 🇧🇷
Bulgaria 🇧🇬
Côte d’Ivoire 🇨🇮
Czechia 🇨🇿
Denmark 🇩🇰
Fiji 🇫🇯
France 🇫🇷
Germany 🇩🇪
Italy 🇮🇹
Malawi 🇲🇼
Marshall Islands 🇲🇭
Mexico 🇲🇽
Netherlands 🇳🇱
Poland 🇵🇱
Republic of South Korea 🇰🇷
Ukraine 🇺🇦
United Kingdom of Great Britain and Northern Ireland 🇬🇧
Uruguay 🇺🇾

AGAINST 11

Bangladesh 🇧🇩
Bolivia 🇧🇴
China 🇨🇳
Cuba 🇨🇺
Eritrea 🇪🇷
Pakistan 🇵🇰
Philippines 🇵🇭
Russia 🇷🇺
Somalia 🇸🇴
Uzbekistan 🇺🇿
Venezuela 🇻🇪

ABSTAIN 14

Bahrain 🇧🇭
Burkina Faso 🇧🇫
Cameroon 🇨🇲
Gabon 🇬🇦
India 🇮🇳
Indonesia 🇮🇩
Japan 🇯🇵
Libya 🇱🇾
Mauritania 🇲🇷
Namibia 🇳🇦
Nepal 🇳🇵
Senegal 🇸🇳
Sudan 🇸🇩
Togo 🇹🇬

மலேசியம்
24.03.2021

சான்றுகள்:

1. https://www.tamilguardian.com/

2. https://www.bbc.com/tamil/global-56496711

 

உளவியல் தகவல்கள்

24.03.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

1. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டு இருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்து இருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக் கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம். மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்தி இருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம்... புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தைச் சந்திப்பவர்கள் யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால்; ஒன்று அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல் அவர்கள் ஒரு போதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம். யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக தடவை கூறி விவாதித்தால், அதை அவர் செய்து இருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்.

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருத முடியும். அவர் அந்த பதற்றத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.  

14. ஒருவர் அதிகாலையில் விழிப்பவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்.

15. ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்து இருப்பவராக இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.  

16. ஒரு மனிதன் ஆகக் குறைந்தது 6 மணி நேரம் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவருக்கு பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

17. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts (முடியாது/ கிடைக்காது/ இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts பேசுபவராக இருப்பார்.




 

23 மார்ச் 2021

இறை தூதர் - என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு

23.03.2021

இறை அறிவு..
இப்புவியல் ..
கற்றோர்..
அறிவாரோ ..?



இறையின்..
விவேகம்...
மர்மம்..
மானுடம்...
புரிவாரோ.?

ஆண்டவர்..
அறிவே..
அனைத்திற்கும்..
ஆரம்பம்..!

இறைவனின்..
தூதரே..
அறிவின்..
போதகர்..!

இறை ஞானம்..
பெற்றிட..
இறை தூதரை..
ஏற்போம்..!


என்.எஸ். மணியம். ஜொகூர் பாரு