01 ஜூலை 2022

பண்ணைக் கோழி ஆபத்துகள்

நாட்டுக் கோழி இறைச்சி ஆரோக்கியமானது. ஆனால் தற்போது பலர் வளர்ப்புக் கோழி, பண்ணைக் கோழி மீது அதிக மோகம் கொண்டு உள்ளனர்.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்கு பலவித வேதிப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். மற்றும் இதன் வளர்ச்சி 40 நாட்களில் முழுமை அடைகின்றது. அதாவது நாற்பதே நாட்களில் ஒரு கோழிகுஞ்சு பெரிய கோழியாகி விடுகிறது.


அவ்வளவு மருந்துப் பொருட்களை கோழியின் உணவில் கலந்து சீக்கிரமாகப் பெரிதாகிவிட வளர்க்கிறார்கள். அந்தக் கோழியின் உடலில் இருக்கும் பலதரப்பட்ட மருந்துகள் இறைச்சியின் மூலமாக உங்களின் உடலுக்குள் போய் பலவித இன்னல்களை ஏர்படுகின்றன.

பண்ணைக் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளன. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

பண்ணைக் கோழியை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்ணைக் கோழியை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப் பொருட்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆண்களின் இனப் பெருக்கச் சக்தியினை பாதிக்கின்றது.

பண்ணைக் கோழியின் வளர்ச்சிக்காகச் சேர்க்கப்படும் இராசயனம்; பெண்களை விரைவில் வயதாகச் செய்கின்றது. விரைவில் மூப்பு அடையச் செய்கின்றது.

முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படையச் செய்கின்றது.

சான்று:

http://moonchat.in/health/broiler-chicken-side-effects-7-health-hazards-of-eating-broiler-chicken/


 

பெற்றோர் பராமரிப்பு நலன் சட்டம் 2007 (மலேசியா)

*Maintenance and Welfare of Parents and Senior Citizen Act 2007*
*Section 125 of the Code of Criminal Procedure 1973*

60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதைக் கொண்ட பெற்றோர்களுக்கும்; தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாத பெற்றோர்களுக்கும்; அவர்களின் பராமரிப்புக்காக, அவர்களின் பிள்ளைகள் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும்.

(The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 seeks to make a legal obligation for children and legal heirs to provide maintenance to senior citizens.)


அல்லது பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவு, உடை, தங்கும் இடம், மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்.

(Maintenance is defined in Section 2(b) of the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 as “maintenance includes provision for food, clothing, residence and medical attendance and treatment.”)

அவ்வாறு செய்யத் தவறிய பிள்ளைகளிடம் இருந்து, பெற்றோர்கள் தங்களின் பராமரிப்புக்காக ஒரு மொத்தத் தொகையைப் பிள்ளைகளிடம் இருந்து கோருவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.

(The Act allows its residents aged 60 years and above who are unable to provide for themselves, to claim for maintenance in the form of monthly allowance or a lump sum from their children who are capable of supporting them but are not doing so.)

1973 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-ஆவது பிரிவின் கீழ் அல்லது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007-இன் கீழ்; பெற்றோர்கள் தங்களின் பராமரிப்புக்காக பிள்ளைகளிடம் இருந்து பண உதவி கோரலாம். மலேசியாவில் சட்டம் அமலில் உள்ளது.

(Parents can claim maintenance either under Section 125 of Code of Criminal Procedure, 1973 or under Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.)

செய்யும் முறை:

தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் என்று, தங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள சமூக நலனபிவிருத்தி இலாகாவில் (Social Welfare Department) புகார் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் கட்டணம் இல்லை. இலவசம்.
 
அதன் பின்னர் பிள்ளைகளை அழைக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள். 15% அவர்களின் ஊதியத்தில் இருந்து வெட்டப்பட்டு பெற்றோர்களின் கவனிப்புக்காக பெற்றோரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் படலாம்.

(தொகுப்பு: மலேசியம்)
(கருத்துகள் வழங்கிய டத்தோ வாசு அவர்களுக்கு நன்றி)
(30.06.2022)

சான்றுகள்:

1. https://www.malaysianbar.org.my/article/news/legal-and-general-news/general-news/no-more-abandoned-parents


 

29 ஜூன் 2022

அனுராதா ரமணன்

தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர். (Anuradha Ramanan). (ஜூன் 29, 1947 – மே 16, 2010). புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப் படங்களாகவும் வெளிவந்து இருக்கின்றன.

இவரின் சில படைப்புகள் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

அனுராதா தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் 1947-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார்.


இவரின் கணவர் ரமணன். இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஓவியக் கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977-ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரின் எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியர் சேர்ந்து வாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டு இருந்தார்.

30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 நெடுங்கதைகளையும் 480 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவரின் சிறை சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

கூட்டுப் புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.

அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991-இல் பெற்றது.


இவரின் கதையைக் கொண்டு 1988-இல் வெளியான (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.

இவரின் மற்றொரு கதை மிதிலேயி சீதையரு (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளி வந்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக் கண்டேன் தோழி ஆகிய இவரின் கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டு உள்ளன.

(தொகுப்பு: மலேசியம்)
29.06.2022



 

02 ஜூன் 2022

லேடாங் மலை தேசியப் பூங்கா

லேடாங் மலை தேசியப் பூங்கா; (Gunung Ledang National Park); மலேசியா, ஜொகூர் மாநிலம், தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இந்தப் பூங்கா 2005-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் சுமார் 160 வகையான பறவைகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. லேடாங் மலை (Gunung Ledang; Mount Ophir), மலேசியா, ஜொகூர் - மலாக்கா மாநிலங்களின் எல்லையில் உள்ளது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

லேடாங் மலையின் பெயரில் இந்தத் தேசியப் பூங்காவிற்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

(மலேசியம்)
02.06.2022

https://ta.wikipedia.org/s/b1qu


18 ஏப்ரல் 2022

புஷ்பநாதன் லெட்சுமணன்

93 வயதான *புஷ்பநாதன் லெட்சுமணன்* ஈப்போ பத்து காஜா நகரைச் சேர்ந்தவர். பத்து காஜா பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தவர்.

மலேசியாவின் பழைமையான தடகளப் போட்டியாளர். வெற்றி பெற ஆசை இருந்தால் வயது தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

யோகா பயிற்சியுடன் ஒவ்வொரு நாளும் 2 கி.மீ. மெது ஓட்டம். அதன் மூலமாகத் தன் உடல் தகுதியைப் பராமரித்து வருகிறார். உடல் எடை 53 கிலோ.

மனைவியின் பெயர் மங்கலேஸ்வரி. வயது 90. ஒரே மகள் சாந்தி. இரு பேரப் பிள்ளைகள். 1982-ஆம் ஆண்டு ராஜா சூலான் இடைநிலைப் பள்ளியில் இருந்து பதவி ஓய்வு பெற்றார்..

கோலாலம்பூர் 2019 மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் 150 விநாடிக்குள் ஓடி, தங்கம் வென்று மலேசியர்களை அசர வைத்த மனிதர்.



2018-ஆம் ஆண்டு மலேசிய ஓப்பன் மாஸ்டர்ஸ் மற்றும் 400 மீ. ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

1957-ஆம் ஆண்டில் இருந்து ஓட்டப் பந்தயத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது, அவர் உதவி தடகளப் போட்டி அரங்க மேலாளராகவும், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக நிகழ்வுகளில் தடகள தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார்.

(மலேசியம்)
16.04.2022