30 ஜூன் 2021

உங்கள் நிலத்தில் உங்களைக் கேட்காமல் கோயில் கட்டினால்?

பதிவு: இரா. சந்திரா, ஊத்தான் மெலிந்தாங்.

உங்கள் வீட்டு நிலத்தில் முன்பின் பழக்கம் இல்லாத ஒருவர்; அறிமுகம் இல்லாத ஒருவர்; உங்களைக் கேட்காமல் ஒரு கோயிலைக் கட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள். அதே போலத்தான் அடுத்தவர் நிலத்தில் போய் கோயிலைக் கட்டிக் கொண்டு ‘உடைச்சிட்டான் உடைச்சிட்டான்’ என்றால் யார் மீதுங்க தப்பு.


ஒரு பெரிய மரத்தைப் பார்த்துவிடக் கூடாது. அந்த மரம் இருக்கும் நிலம் யாருடையது நிலம் என்று பார்ப்பது இல்லை. கேட்பது இல்லை. உடனே நான்கு மரத் தூண்களை நிறுத்தி நாலு தகரத்தைப் போட்டு அங்கே ஒரு குடிசைக் கோயிலைக் கட்டி விடுவது.

காளியாத்தா; முனீஸ்வரர் பைரவன் பேரைச் சொல்லி அன்றாடம் பத்து பேரை கூப்பிட்டு பூசை செய்வது. நாலு நம்பர் கேட்பது.

இராத்திரியில் குடி கூத்து கும்மாளம். அப்புறம் மஞ்சள் பத்திரிகை அடித்து ஊர் ஊராய் வசூல் வேட்டைக்கு கிளம்பி விடுவது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி திருவிழா.

மலேசியாவில் ஏறக்குறைய 220,000 கோயில்கள் இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இவற்றுள் ஏறக்குறைய 20 ஆயிரம் கோயில்கள் மட்டுமே பதிவு செய்யப் பட்டவை.

மற்றவை எல்லாம் புறம்போக்கு நிலங்களில்; அரசாங்க நிலங்களில்; தனியார் நிலங்களில்; அனுமதி இல்லாமல் கட்டப்பட்டவை. எந்த நேரத்திலும் உடைபடலாம்.

அண்மையில் சுபாங் பகுதியில் உடைபட்ட கோயில் தனியார் நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டப் பட்டது. பதிவு செய்யப்படவில்லை. யாருடைய நிலத்திலோ நிலத்தின் சொந்தக்காரருக்குத் தெரியாமல் கட்டப்பட்ட கோயில்.

உடைபட்டதும் சமூகத் தலைவர்கள் மீதும்; அரசியல் தலைவர்கள் மீதும்; இந்து சங்கத்தின் மீதும் பாய்வது. தப்பை உங்கள் மீது வைத்துக் கொண்டு நியாயம் கேட்பதும் தப்பு. இந்த இலட்சணத்தில் வீடியோ செய்து பரப்பி விடுவது.

அடுத்தவர் நிலத்தில் அனுமதி இல்லாமல் கோயில் கட்டுவதை நிறுத்துங்கள். நிலத்தின் சொந்தக்காரருக்குத் தெரியாமல் கோயில் கட்டுவதை நிறுத்துங்கள். இந்து சமயத்தை மற்ற மதத்தவர் கேவலப் படுத்துவதையும் நிறுத்துங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மஞ்சள் பத்திரிகை அடித்து ஊர் ஊராய் அலைவதையும் நிறுத்துங்கள்.

பின்னூட்டங்கள்:

தனசேகரன் தேவநாதன்: இந்து சமயம் அசிங்கப் படுவதற்கு இப்படிப் பட்டவர்கள் தான் முக்கிய காரணம்... என்று மாறுவார்கள் 😘😩😢

கரு. ராஜா, கோலாலம்பூர்: [6:58 pm, 30/06/2021] Raja Sg Buluh: இதில் இருந்து ஒன்றை மட்டும் நல்லா புரிந்து கொண்டேன். காலியாக இருக்கும் நிலத்தை அடிக்கடி போய் பார்த்து விட்டு வர வேண்டும் போல இருக்கு? கொஞ்ச நாள் அந்தப் பக்கம் போகவில்லை என்றால் நமக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்று நினைக்கிறேன்.

[6:59 pm, 30/06/2021] Raja Sg Buluh: பிறகு போனால் நமக்கே சாம்பிராணி போடும் நிலையும் வரலாம்.

[7:24 pm, 30/06/2021] Raja Sg Buluh: என் நிலத்தில் ஒரு கேமரா போட்டு வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

வெங்கடேசன்: அருமை இதை சொன்னால் சில நண்பர்களுக்கு கோபம் வருகிறது ஐயா. 🤷‍♀️🤷‍♀️

கணேசன், உலு திராம்: அந்தப் பதிவை ஆதரிக்காதவர்கள்; அவர்களும் அப்படிப்பட்ட கோயில்களை வைத்து காசு பார்த்துக் கொண்டு இருக்கலாம். உண்மை சுடும்.

பாலன் முனியாண்டி:
தெய்வ பக்தி இருக்கவேண்டும் தப்பில்லை .... கண்மூடிதனமாக இருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட
வேண்டும்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக