03 ஜனவரி 2021

மொழிகளைத் தொலைத்த நாடுகளில் இலங்கை? - ஜெயஸ்ரீ கண்ணன்

 26.12.2020   

இலங்கையில் இப்போதைக்கு உள்ள மும்மொழிகளும் சிறப்புற்று இருக்கலாம். பயன்பாட்டில் இருக்கலாம். இருப்பினும் இன்றைய காலத்தில் தமிழ் மொழியை மட்டும் தனித் தேவைக்கு தவிர்த்துக் கொள்ளும் நிலை அங்கே உள்ளது.

ஆனாலும் காலப் போக்கில் மற்ற மொழிகள் மெல்ல மெல்ல சிதைவு அடையலாம். வாய்ப்புகள் உள்ளன. சீன மொழி முதன்மையாகி நிற்கலாம். நிலைமை மோசமாகி வருகிறது.  

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் உள்ள பெயர் பலகை ஒன்றில் முதல் மொழியாக சிங்களம் உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது. மூன்றாவது மொழியாக சீன மொழி எழுதப்பட்டு உள்ளது. தமிழ் மொழி காணமல் போய் விட்டது.

சில பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி அறவே இல்லை. மிகவும் வருந்தத்தக்க விசயமாகும்.

இந்த நிலையில் பொது நலணைக் கருத்தில் கொண்டு அந்தந்த மொழியாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் மொழியைத் தொலைத்த நாடுகளில் இலங்கையும் இடம் பிடிக்கலாம்.


உங்கள் விருப்பப்படி வாழுங்கள் - பி.கே. குமார்

26.12.2020

இங்கே நிரந்தரம் என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறும். அதனால் தொடர்ச்சியாக உங்களைத் திறமை  உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவது இல்லை.

எல்லோரிடமும் ஏதோ ஒரு குறை. ஏதோ ஓர் அவமானம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. தோல்வியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம்.

தோல்வி என்பது பிரச்சினையே இல்லை. இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலில் இருந்து வெளியேறுங்கள். இத்தாலியில் ஒரு வார்த்தை Memento Mori. ஆங்கிலத்தில் remember that you will die.

அதாவது "நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கத் தான் போகிறோம்”. இதை எப்போதும் நினைவில் கொள்வோம். அந்த ஒரு நாள் என்பது 50 வருடங்கள் கழித்து வரலாம். அல்லது அடுத்த ஐந்து மணி நேரத்திலும் வரலாம்.

Death is inevitable. இது தான் நம் அனைவருக்குமான முடிவு. இது தான் முடிவு என்று உள் வாங்கிய பின், எல்லா அலப்பறைகளும், ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அடங்கி விடும்.

நாளைக்கு காலையில் மரணம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சாந்த சொரூபியாக மாறி விடுவீர்கள் அல்லவா. அதைப் பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். மன அமைதி எல்லாவற்றையும் மாற்றும்.

உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அபத்தங்கள் நமக்கே பிடிபட ஆரம்பிக்கும். தன்னை அறிதலை விட வேறெந்த கடவுளும் தேவை இல்லை.

முதலில் குடும்பமும் நட்பும் தான் முக்கியம். சண்டைகள், கோபங்கள், மனவருத்தங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லாக் குடும்பங்களிலும் உண்டு. Ignore the micro, focus on the Macro.

குடும்பத்திற்காக சுயநலமாக இருக்க வேண்டும் என்றால் தாராளமாக இருங்கள். ஆக பணம், புகழ், விருப்பங்கள், சண்டைகள், விவாதங்கள் எதுவுமே நிலைக்கப் போவதில்லை.

கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பத்து வருடங்கள் கழித்து இது எல்லாம் அப்பவே பண்ணி இருக்கணும் என்று ஆற்றாமையில் புலம்பாதீர்கள்.

நம்ம சமூகத்தின் மிகப் பெரிய சிக்கல், மேற்கத்திய மக்களைப் போல நாம் வெளிப்படையான ஆட்கள் கிடையாது. உள்ளுக்கு உள்ளேயே வைத்துக் கொண்டு வெதும்பும் சமூகத்தில் வாழ்கிறோம். பேசுங்கள். பாராட்டுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்ளுங்கள்.

இப்படி தான் வாழ வேண்டும் என்கிற எல்லை எதுவும் கிடையாது. சந்தோஷங்கள், துக்கங்கள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் வெவ்வேறு. இது தான் சரி என்று இங்கே எதுவுமே இல்லை.

இது உங்களுடைய வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை, அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை நீங்கள் தான் வரையறுக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப் பட்ட வாழ்க்கையும் சரியே. அவர் இப்படி, இவர் அப்படி என்று எல்லாம் யோசிக்காதீர்கள். பணம் முக்கியம். சிக்கல்களைத் தீர்க்க பணம் அவசியம். அதே சமயத்தில் எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.

2021-ஆம் ஆண்டு கடுமையான ஏற்றத் தாழ்வுகளை கொண்டதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். நினைவில் வையுங்கள். 



02 ஜனவரி 2021

கண்ணதாசன் வாழ்வியல் தத்துவங்கள் - இமயவர்மன் மதுரை

29.12.2020

* கல்லூரியில் படிக்கும் போது ஓர் இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

* கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

* இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

* ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

* இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்தம் இல்லாமல் தோன்றும்.

* வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும் போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

* பக்குவம் அற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

* பக்குவம் வர வர, இரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

* நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

* இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள். நாற்பது வயதிற்கு மேலே தான், நல்ல பெண்ணைத் தேர்ந்து எடுக்கும் 'தெளிவு' அவனுக்கு வரும்.

* கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில் தான் அவன் கவனம் செலுத்துவான்.

* காதலித்துத் தோற்ற பின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

* விளையாட்டுத் தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

* எதையும் சுலபத்தில் ஏற்றுக் கொண்டு 'அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

* எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

* பக்குவமற்ற நிலை என்பது இரண்டு 'எக்ஸ்ட்ரீம்’ நிலை.

* ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும்; அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

* பக்குவ நிலைக்குப் பெயரே 'நடு நிலை'.

* பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல. அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

* ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

* இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை. பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.

* உடம்புகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது. நாற்பதிற்கு மேலே தானே 'இது வாய்வு’, 'இது பித்தம்’ என்கிற புத்தி வருகிறது.

* டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

*  'முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

* அந்த நிலையில் 'எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற "துணிவு" வருகிறது.

* அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, 'இதைத்தான் செய்யலாம்’, 'இப்படித்தான் செய்யலாம்’ என்ற "தெளிவு" வருகிறது.

* இனி விஷயத்திற்கு வருகிறேன்.

* 'ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

* உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

* தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமே கூட 'அனுதாபம்' காட்டும் "ஞானி"யாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

* வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் 'நிதானம்' அடிபட்டுப் போகிறது.

* ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

* சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

* முதற் கட்டம் ஒன்றுமே புரியாத 'உணர்ச்சிக் கூத்து'.

* இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, 'மயங்கிய நிலை'.

* மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட 'ஞானநிலை'.

* இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு. சுவாமி விவேகானந்தரைப் போல…

* அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

* மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத் தானே பக்குவ நிலையை அடைய வேண்டி இருக்கிறது!

* எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

* ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

* தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் அதிகம்.

* ஒன்று, தூங்குவது என்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும். விழிப்பது என்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

* தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

* 'மனப்பக்குவம்’ என்பது "அனுபவங்கள்" முற்றிப் பழுத்த நிலை.

* அந்த நிலையில் எதையுமே 'இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

* 'இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

* எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாத்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆத்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாத்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆத்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதி இருக்கிறார். நல்லது.

* 'இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவை இல்லை.

* எதைக் கேட்டாலும் 'இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

* ஆனால் 'உண்டு’ என்று சொல்பவனுக்குத் தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

* “பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

* ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

* பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

* நாத்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும். காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் 'இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

* ஆனால், ஆத்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு விளக்கம் சொல்லியாக வேண்டும். சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் புரிய வைக்க வேண்டும்.

* ஒன்றை ஒப்புக் கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

* ஆத்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

* அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியது இல்லை.

* வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

* ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாத்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

* பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

* 'கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் 'எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

* 'மரணம்’ என்று உணரப்படும் போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

* எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாத்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

* மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நன்கு பக்குவப் பட்டவர்கள் தம் வாழ்நாளிலேயே காண முடிகிறது.

* இப்போது எல்லாம், 'போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டு கொள்ளக் கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

* காரணம், வயது மட்டுமல்ல, 'பக்குவம்'.

* செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்து இருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

* என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும்  கொண்டு வந்து நிறுத்தி, 'யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

* என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; 'அனுபவம்'.

* தலைப்பை மீண்டும் நினைவு படுத்துகிறேன். அதன் பெயரே 'பக்குவம்’.

* பக்குவமாய் வாழுங்கள்.

* வாழ்வதன் பயனை உணருங்கள்.

* வாழ்வின் பலனை அனுபவியுங்கள்.

-கவியரசர் கண்ணதாசன்.



 

ஆலயத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு உண்டியல் - ஆதி சேகர், கோலக்கிள்ளான்

29.12.2020

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ஆண்டவனை வணங்கிவிட்டு...

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பாகவன் முதற்றே உலகு

என்ற தமிழ்மொழிக் குறளுக்காக உண்டியலில் ரி.ம 1.00 வெள்ளியைப் போட்டாலும்...

(கண்டிப்பாகப் போடுவார்கள்... நம் இனத்தவர்கள்... புரிந்து கொண்டார்கள் தமிழ் மொழியின் அவசியத்தை)

எத்தனையோ தமிழ்ப்பள்ளிகளுக்கு கொடுத்து உதவிகள் செய்து இருக்கலாம்...

ஆலயத்தில் உண்டியலில் போட்ட பணம்...

ஆரம்பத் தமிழ்ப் பள்ளியில் தமிழ்ப் பாடமாகத் தமிழ்ப் பிள்ளைகளுக்குப் போதிக்கப் படுகிறது என்ற திருப்தியாவது ஒவ்வொரு தமிழரிடமும் இருந்து இருக்கும்.

அது சரி... ஆலயத்தில்... அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு...

ஆலயத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு உண்டியல் வைக்கலாம்... தவறு இல்லையே...

தமிழ் வாழ... தமிழ்பள்ளிக்கு என ஓர் உண்டியல் வைப்பது தவறாக இருக்குமோ...

மனதில் பட்டதைச்  சொடுக்கி விட்டேன்.

இன்று ஆண்டு இறுதி செவ்வாய்க் கிழமை; ஆண்டு இறுதி பொளர்ணமியும் கூட...

இந்தப் பொளர்ணமியில் எல்லாத் தடைகளும் கஷ்டங்களும் நீங்கி...

உலகத் தொற்று நோயாக விளங்கும் கொரோனா-19 என்ற நோயும் நீங்கி....

சிறப்பாக வாழ்வில் செழிக்கப் பிரார்த்தனைகள் செய்வோம்.

ஊடகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகச் செய்திகளைக் கையடக்கத்திற்குள் கொண்டு வந்து ராஜ நடைபோடும் மலேசியம் புலனத்தின் அனைத்துப் புகழும் புலனத்தின் அன்பர்களைச் சாரும்..!


 

தமிழ்ப்பெண் பிரியம்வதா நோபல் பரிசு? - பி.கே.குமார்

28.12.2020

பிரபஞ்ச வெளி என்பது எல்லைகளை வரையறுக்க முடியாத அளவில் பறந்து விரிந்து கிடக்கும் ஓர் அகண்ட பிருமாண்டம். எண்ணற்ற அதிசயங்கள். எண்ணற்ற ஆச்சரியங்கள். எளிதில் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள். அத்தனையும் புரியாத மர்மங்கள்.

அந்த மர்ம அண்டத்தில் இன்னும் முழுவதுமாக அவிழ்க்கப் படாத முடிச்சுகளில் ஒன்று கருப்பு துளைகள் (black holes). இந்தக் கருந்துளை பூமியில் இருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் பிடிக்கும் என்று பொருள். சூரியன் பிறந்ததே சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான்.
 
இந்தக் கருப்பு துளைகள் பற்றிய விண்ணியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதில் ஒரு புதிய விசயத்தைத் தன் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்து; உலகநாடுகளில் உள்ள விண்ணியல் ஆய்வாளர்களை எல்லாம் வியக்க வைத்து இருக்கிறார். ஓர் இந்திய பெண் விஞ்ஞானி. பிரியம்வதா (Priyamvada Natarajan) எனும் பிரியா.

டெல்லியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன். ஓர் எஞ்சினீயர். தாயார் லலிதா நடராஜன். ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர்.

மேற்படிப்புக்கு அமெரிக்கா போனவர். உலகப் புகழ் பெற்ற அமெரிக்க MIT பல்கலைக்கழகத்தில் விண்ணியலில் முதுகலை. தொடர்ந்து முனைவர் பட்டங்கள். தற்போது அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் விண்ணியல் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.

தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பவர். டென்மார்க் நாட்டின் கியூபன் ஹோவன் விண்ணியல் பல்கலைகழகத்தில் சிறப்புப் பேராசியராக அழைக்கப்பட்டு இருப்பவர். டெல்லி பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராகவும் கௌரவிக்கப்பட்டு இருப்பவர்.

உலக விண்ணியல் விஞ்ஞானிகள் பிரமித்துப் போகும் அளவிற்கு இவர் சமீபத்தில் கண்டு பிடித்திருப்பது என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள கருப்பு துளைகளை பற்றி நாம் சற்றுப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
விந்தைகள் நிறைந்த பேரண்ட வெளியில் ஒரு பகுதி இந்த கருங்குழிகள் அல்லது கருந்துளைகள் (Black Hole). இவை வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டவை. இந்தக் கருந்துளைகள் தாமும் ஒளிரா; தன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்கா.
 
எனவே கருந்துளையை நேரடியாகப் பார்க்க முடியாது. நேரடியாகப் பார்க்க முடியா விட்டாலும் கருந்துளையை இனம் காண வானவியலாளர்கள் வேறு வழிகளைக் கண்டுள்ளனர்.

அதன் மிகக் கூடுதலான ஈர்ப்பு விசையின் காரணமாக, அதைச் சுற்றி இருக்கும் வான் முகில்கள், விண்மீன்களைப் பிடித்துக் கபளீகரம் செய்துவிடும்.

அவ்வாறு அருகில் உள்ள பொருள்களைக் கபளீகரம் செய்யும் போது அந்தப் பொருள்கள் மேலே எறிந்த கல் நேரே கீழே விழுவது போல நேரடியாகக் கருந்துளையில் விழாது. வாஷ்பேசினில் நீர் சுழன்று சுழன்று துளைக்குள் விழுவது போலக் கருந்துளையைச் சுற்றிச் சுற்றிப் பொருள்கள் விழும்.

இதன் சுற்றுப் பாதையில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கும் கோள்களின் வேகம், அவற்றில் இருக்கும் நிலைகளின் மூலம் இந்த கருந்துளைகளின் அமைப்பை கணக்கீடுகள் மூலம் எப்படி இருக்கும் எனக் கணித்து இருக்கிறார்கள்.

வளரும் தொழில் நுட்பம் கைகொடுக்க; பெரும் அளவில் கணினிகள் மூலமும் இராட்சதத் தொலைநோக்கிகள் மூலமும் இந்தக் கணக்கீடுகளை உறுதி செய்து இருக்கிறார்கள்.

இந்தக் கருந்துளைகள் இருக்கும் அடர்கருப்பு பகுதி வாழ்நாள் முடிந்த பின் எரிந்து போன நட்சத்திரங்களின் கூட்டம் என்றும்; அவற்றுடன் புதிதாக எரிந்த நட்சத்திரங்கள் சேர்வதால் அவை வரம்பின்றி வளர்கின்றன என்றும் சொல்லப் பட்டது.

இந்தப் பின்னணியில் பிரியம்வதா கடந்த சில ஆண்டுகளில் தனது தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலம் கருந்துளைகளை உருவாக்கும் அடிப்படையான அடர்கருப்பு பொருள்களின் (dark matter) இயல்புகளையும்; கருந்துளைகள் உருவாகி வளர்வது குறித்தும்; ஆராய்ந்து அறிக்கைகள் கட்டுரைகள் தந்திருக்கிறார்.

பல காலமாக நம்பப் பட்டு வந்தது போல இந்த கருங்குழிகள் இறந்த நட்சத்திரங்களின் தொகுப்பு இல்லை. அவை ஒரு வாயுவாக தானாகவே உருவாகி மிக வேகமாக வளர்ந்து ஒரு கட்டத்தில் தன் வளர்ச்சியைத் தானே நிறுத்திக் கொண்டு விடுகிறது.

கருந்துளைகளுக்கும் வரம்பு, விளிம்பு உண்டு என்பது தான் இவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கும் விசயம். இந்த முடிவு இப்போது விண்ணியல் விஞ்ஞானிகளுக்கு பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இது கரும் துளைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்லப் போகிறது.

அவர் முதன்முதலாக கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அறிவித்து இருக்கும் இந்த ஆராய்ச்சியின் முடிவு உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது!

"ராமன் விளைவு", "சந்திரசேகர் வரையறை" என்பதைப் போல "பிரியா வரம்பு" என்பதும் பேசப்பட்டு வருகிறது.

பிரியம்வதாவின் இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவருக்குப் பல நாடுகளின் நிறுவனங்களின் விருதுகளும் பெலோஷிப்புகளும் வழங்கி இருக்கின்றன. சுவீடன் நாட்டில் வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதை மிக விரைவில் இவர் பெறுவார் என விஞ்ஞான உலகம் கணித்து இருக்கிறது.

ஆண்டு தோறும் தவறாமல் பாரதிக்கு விழா எடுத்து அதில் அரிய சாதனைகள் செய்தவரைத் தேர்ந்தெடுத்து "பாரதி விருது" வழங்கும் வானவில் பண்பாட்டுக் கழகம் இந்த ஆண்டின் பாரதி விருதுக்குப் பெருமைக்குரிய இந்த தமிழ்ப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது.

வானத்தையும் வானத்தின் விண்மீன்களையும் அளப்போதோடு நின்று விடாமல் விண்ணியல் சாத்திரத்தில் தமிழ் மக்கள் தேர்ச்சி பெற்று அவர்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும் என கனவு கண்டவன் பாரதி. அந்தக் கனவை மெய்ப்பித்து இருக்கும் இந்தப் பெண்ணை அந்த விருதுக்குத் தேர்வு செய்து இருப்பது சாலப் பொருத்தமாகும்.

Early life

Priya Natarajan was born in Coimbatore, Tamil Nadu in India to academic parents. She is one of three children. Natarajan grew up in Delhi, India and studied at Delhi Public School, R. K. Puram.

Education

Natarajan has undergraduate degrees in Physics and Mathematics from M.I.T. She was also enrolled in the M.I.T. Program in Science, Technology & Society and the M.I.T. Program in Technology and Public Policy from 1991 to 1993.

She did her graduate work in theoretical astrophysics at the Institute of Astronomy, University of Cambridge in England, where she was a member of Trinity College and was elected to a Title A Research Fellowship that she held from 1997 to 2003.

Prior to coming to Yale, she was a visiting postdoctoral fellow at the Canadian Institute for Theoretical Astrophysics in Toronto, Canada.

Research areas

Natarajan has done extensive work in the following fields:

Gravitational lensing- combining strong and weak lensing analysis techniques; use of lensing as a probe to study galaxy evolution in clusters via local weak shear effects; weak lensing by large-scale structure; using lensing as a probe of the shapes of dark matter halos; and understanding intrinsic correlations in the shapes of galaxies.

Clusters of galaxies- using lensing, X-ray and Sunyaev-Zeldovich data in conjunction to study the dynamics of galaxies in clusters; velocity anisotropy of galaxy orbits; characterizing cluster growth and evolution in phase space and physics of the relaxation process.

Accretion physics- issues of the alignment of the spin of disks and the central black holes; the evolution of warped accretion disks; Lense-Thirring precession; the Blandford-Znajek mechanism, and the accretion history of supermassive black holes.

Issues in galaxy formation and the fueling of quasars- the connection between high redshift galaxies, active galactic nuclei and their central black holes; the black hole mass function; role of quasars and their outflows in galaxy formation; kinematic Sunyaev-Zeldovich effect from quasars; the physics of feedback processes in galaxy formation; stellar contributors to the X-ray background and the evolution of neutral gas with redshift.

Binary black holes- the merger and evolution of supermassive black hole binaries in gas-rich galaxy cores; the electro-magnetic and gravitational wave signatures from these systems; the implications for structure formation at high redshifts.

Gamma-ray bursts- the relation of gamma-ray burst rates to the globally averaged star formation rate, the morphology and properties of gamma-ray burst host galaxies in the optical, and sub-mm wave-bands, the SN-GRB connection.

Honors and awards

Natarajan was awarded the Emeline Conland Bigelow Fellowship at the Radcliffe Institute of Harvard University in 2008. In 2009, she was awarded a Guggenheim Fellowship.

Natarajan was also the 2009 recipient of the India Abroad Foundation's "Face of the Future" Award and the recipient of the award for academic achievement from the Global Organization for the People of Indian Origin (GOPIO).

Natarajan was elected a fellow of the Royal Astronomical Society in 2009, the American Physical Society in 2010, and the Explorers Club in 2010.

She was awarded a JILA (Joint Institute for Laboratory Astrophysics) Fellowship in 2010. In January, 2011 she was awarded an India Empire NRI award for Achievement in the Sciences in New Delhi, India.

She was the Caroline Herschel Distinguished Visitor at the Space Telescope Science Institute in Baltimore for 2011–2012.

In addition to her current appointments at Yale and Harvard, she also holds the Sophie and Tycho Brahe Professorship, Dark Cosmology Center, Niels Bohr Institute at the University of Copenhagen, Denmark and was recently elected to an honorary professorship for life at the University of Delhi.

சான்றுகள்:


1. https://en.wikipedia.org/wiki/Priyamvada_Natarajan

2. Natarajan, Priyamvada (2016). Mapping the Heavens: The Radical Scientific Ideas That Reveal the Cosmos. Yale University Press. ISBN 978-0300204414.