15 ஜனவரி 2021

கோட் சூட் வடிவேலு

13.01.2021

எப்படி எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... புத்தாக்கத்தின் புதிய பரிமாணத்தில் கோட் சூட் வடிவேலு...

நாட்டுக்கு ஏற்ற நல்ல தலைவர்கள்

14.01.2021

பதிவு : தினமலர் 16.10.2020

மலேசியாவில் தற்போது அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. அங்கு பிரதமர் முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மகாதீர் முகமது, அன்வர் இப்ராகிமின் உதவியோடு 60 ஆண்டுகளாக மலேசியாவில் நீடித்து வந்த ஒருங்கிணைந்த மலாய் தேசிய அமைப்பு ஆட்சியை கவிழ்த்து வெற்றி கண்டார்.




இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், முகைதின் யாசின், மகாதீர் முகமது ஆகியவர்கள் ஆவர். இவர்கள் மூவருக்குள்ளும் தற்போது பிரிவினை ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று அன்வர் இப்ராகிம் மலேசிய அரசரை சந்தித்து இது குறித்து பேசினார். கூட்டணியின் உதவியோடு முகைதின் யாசின் ஆட்சியை கவிழ்க்க மகாதீர் முகமது முயன்று வருகிறார்.

மலேசியாவில் நிலையான ஆட்சி அமையாததால் எப்போது வேண்டுமானாலும் தற்போது உள்ள ஆட்சி கலைக்கப் படலாம் என மகாதீர் முகமது சொல்கிறார்.


வண்ணம் பூசாத உயிரோவியங்கள்

14.01.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன், கங்கார் பூலாய்




வண்ணம்  பூசாத உயிரோவியங்கள்...  இவர்கள் தான் நிஜம்

வெங்கடேசன்: அழகிய தேவதைகள்





தம்பூன் தமிழர்களுக்கு பொங்கல் பொருட்கள் அன்பளிப்பு

14.01.2021

பதிவு செய்தவர்: பி. கே. குமார்

தைத் திருநாளாம் பொங்கல் நாளை ஒட்டி பேராக், தம்பூன் (TAMBUN) தொகுதியைச் சேர்ந்த நம் மக்களில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பொங்கல் பானைகளும்; பொங்கல் பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்கப் பட்டன.

Covid 19 தொற்று காரணத்தினால் வெளியே சென்று கூட்டம் கூட்டமாகக் கொண்டாடுவதைத் தவிர்க்கவும்; அதே சமயத்தில் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து அவரவர் இல்லம் தோறும் பொங்கல் வைப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் பொருட்கள் வழங்கப் பட்டன.

பொங்கல் பொருட்களைப் பெற்றுக் கொண்ட நம் மக்கள் இந்தத் தம்பூன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் DATO SERI AHMAD FAIZAL BIN DATO AZUMU அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

#ParlimenTambun063

 




நல்ல முயற்சி. நல்ல முன்னெடுப்பு. மனதார வாழ்த்துகிறோம். 




மலேசிய மக்களுக்கு எப்போது விடியல்

14.01.2021

பதிவு செய்தவர்: முரு மாதவி

பின் கதவின் வழி நுழைந்திட்ட அரசாங்கம்; நிலை அற்ற ஆட்சியில் தடுமாறுகிறது. ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றத்தில்! நாடாளுமன்றம் ஒரு காட்சிப் பொருளாக திகழ்கின்றது!

கொள்கை அற்றவர்களால் நிர்வாகத்தில் தடுமாற்றம்! இதனோடு கொரோனாவின் கொட்டம்!

நிறைந்த வளங்களையும்; இயற்கையில் அழகிய நாடு மலேசியா. ஒற்றுமைக் குழைவை ஏற்படுத்த நாய்(க்) வந்தது! அதோடு சரி! நாட்டில் பல தரப்பட்ட பிரச்சினைகள்!

வளம் நிறைந்த நாட்டில் நிர்வாகக் குறையினால் இன்னல் படுவது மக்களே! சரி செய்வதற்கு எந்த அரசியல்வாதியும் முயல்வது இல்லை! தன்னலப் போக்கும்... உழலும் கூட.!

கொட்டம் அடங்குமா! நல்லது நடக்காதா என ஏங்கித் தவிக்கிறார்கள் மலேசிய மக்கள்! சிரமத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு என்றைக்கு அந்த விடியல்!

குமரன் மாரிமுத்து: நிருவாகத் திறமை இன்மையும், தான் கொண்ட மதத்தின் பெயரில் இனவாதம் புரியும் அரசியல் வியாபாரிகளால் பற்பல இன்னல்கள். உலக அரங்கில் பீடுநடை போட வேண்டிய நாடு, இன்று தன்மானம் இழக்கும் பரிதாப நிலையில்...

தினகரன் சுப்ரமணியம் தங்காக்: உண்மை தான் ஐயா. இப்போது மலேசியாவில் சமூக நீதி குறைந்து விட்டது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: இனவாத அரசியல் வாதிகளால் குறிப்பாக... நம்மினத்தவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறோம்...

தேவி சரஸ் கடாரம்: இறைவனுக்கே வெளிச்சம்🤷🏻‍♀️

கரு. ராஜா, சுங்கை பூலோ: தம்பி கத்தரிக்காய் 1 கிலோ 12 வெள்ளி. இத்தனைக்கும் அது இந்த நாட்டில் விளையும் ஒரு காய். அதுவும் நம்மவங்க கத்தரிக்காய் போடாமல் சாம்பார் சமைப்பது இல்லை. விலைகள் தாறுமாறாக உயர்ந்திடுச்சு. லஞ்சம் வாங்கும் நபருக்கு பிரச்னை இல்லை. நம்மை போன்றவர்களின் நிலைமை?

ராதா பச்சையப்பன்:
கத்தரிக்காய்  ‌கிலோ 12 வெள்ளியா? கேட்கவே தலை சுற்றுகிறது😇. எனக்குச்‌ சமையலில்‌ கத்தரிக்காய் ‌தான்‌ முதலிடம் வகிக்கிறது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: நம்மைப் போன்றவர்களுக்கு திண்டாட்டம்தான்...

Muru Mathavi: இந்த நாடு அரசியல் வாதிகள் கிட்ட மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.