பண்டைய எகிப்தின் புகழ் மிக்க மன்னன் இரண்டாம் ராம்செஸ் (Ramesses II). அவன் கட்டிய பல கோயில்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு கோயிலாக அமைவது லுக்ஸோர் கோயில் (Luxor).
இக்கோயிலின் முன்புறத்தில் இரண்டு ஒபிலிஸ்க் (Obelisk) நிற்கும் வகையில் அவன் கட்டினான். அந்த இரண்டு ஒபிலிஸ்களில் ஒன்று இன்றைக்குப் பாரிஸ் நகர மையத்தை அலங்கரித்து நிற்கிறது.

22 மீட்டர் உயரம் கொண்டது இந்த ஒபிலிஸ்க். 1936-ஆம் ஆண்டு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாகப் பிரான்சில் பிரகடனப் படுத்தப்பட்டது. கொன்கோர்ட் மெட்ரோ ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு பக்கத்தில் இது அமைந்திருக்கிறது.
மன்னன் இரண்டாம் ராம்செசைப் புகழும் வகையில் ஹீரோக்ளிப்ஸ் (Hieroglyphs) எழுத்துக்களால் இந்த ஒபிலிஸ்க் கற்பாறை சின்னத்தில் நான்கு பகுதிகளிலும் குறியீடுகள் கீறப்பட்டு உள்ளன.
பாறைக் கீறல்கள் என்பது நமக்கு புதிய ஒன்றல்ல அல்லவா? நம் சேர சோழ பல்லவ பாண்டிய மன்னர்கள் கோயில் கல்வெட்டுகளில் பண்டைய தொல் தமிழ் எழுத்துக்களால் பல செய்திகளை ஆவணப்படுத்தி இருப்பது போல, பண்டைய எகிப்தில் ஹீரோகிளிப்ஸ் எழுத்துக்களால் பண்டைய எகிப்திய மன்னர்கள் தங்கள் புகழ் பாடலையும் பல செய்திகளையும் செதுக்கி வைத்திருக்கின்றனர்.
எகிப்தில் இருந்த இந்த ஒபிலிஸ்க் எப்படி பிரான்சுக்கு வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம்.

ஏறக்குறைய 3000 ஆண்டு பழமையான இந்த ஒபிலிஸ்க் 1833 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி பாரிஸ் நகரை வந்தடைந்தது. நைல் நதிக் கரையில் கப்பலில் ஏற்றப்பட்டு எகிப்தின் அலெக்சாண்டிரியா பகுதிக்கு வந்து பிரான்சின் சார்புக் துறைமுகப் பகுதியில் இது வந்தடைந்தது.
அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 25 அக்டோபர் மாதம் 1836 ஆம் நாள் இது மன்னர் லூயி பிலிப் அவர்களால் தற்போது உள்ள இடத்தில் நிறுவப்பட்டது.
எகிப்தை ஆண்டு வந்த ஒட்டோமான் மாமன்னன் முகமது அலி பாஷா அவர்களால் இது ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.

ஒபிலிஸ்க் என்பது என்ன என்று பலருக்கும் கேள்வியாக இருக்கலாம். எகிப்தியர்களைப் பொறுத்தவரை தங்கள் கடவுள்களை வழிபடவும் சிறப்பிக்கவும் இறந்து போன தங்கள் மன்னர்களைப் பிரதிபலிக்கவும் ஒரு சின்னமாக இருப்பது தான் ஓபிலிஸ்க்.
பண்டைய நாகரிகங்களில் மன்னர்களைக் கடவுளாக காணும் முறை வழக்கில் இருந்தது தான். எகிப்திய பண்டைய நாகரிகமும் இதற்கு விதிவிலக்கல்ல.
பொதுவாகவே ஒபிலிஸ்க் தூண்கள் ஒற்றையாக இல்லாமல் இரட்டையாக வைப்பதுதான் இயல்பு. ஒபிலிஸ்க் தூணின் மேற்பகுதி சூரிய கடவுளான ரா (Ra) கடவுளைப் பிரதிபலிக்கின்றது.
இன்று ஐரோப்பியர்கள் பரவிய பல்வேறு நாடுகளில் ஒபிலிஸ்க் தூண்கள் வரலாற்றுச் சின்னமாக நிற்பதை நாம் காண முடியும். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டிசியில் கேப்பிட்டல் மண்டபத்தை நோக்கியவாறு பிரம்மாண்டமான எகிப்திய ஒபிலிஸ்க் நிறுத்தப்பட்டிருக்கிறது.
பல தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எகிப்திய பண்டைய நாகரிகம். அந்த நாகரிகத்தின் முக்கிய சின்னம் ஒபிலிஸ்க். கடந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கிருத்துவ அடிப்படை சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த குரல்களின் பிரதிபலிப்பாகவும் ஒபிலிஸ்க் சின்னத்தை நிறுவிய செயல்பாடுகளைக் காணலாம் என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டிலும் ஒபிலிஸ்க் வடிவிலான சின்னங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. என்ன... ஆச்சரியமாக உள்ளதா?
உங்களில் யாருக்காவது உடனே பார்க்க வேண்டும் எனத் தோன்றினால் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிர்புறத்தில் முந்தைய கருப்பர் நகரத்தையும் வெள்ளை நகரத்தையும் பிரிக்கும் எல்லைக் கோட்டில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட ஒபிலிஸ்க் ஒன்று நிற்பதைச் சென்று பாருங்கள். தொடர்வேன்.
-சுபா