17.12.2020
வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும். இப்படிச் சொல்பவர் சமூக ஆர்வலர்; தொழில் அதிபர் ஈப்போ புந்தோங் பி.கே.குமார்.
மலேசிய நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் நிறையவே ஆதரவுகளை வழங்கியவர். வழங்கி வருபவர். இந்த நாட்டில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியவர்.
தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காகத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.
தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்தி வருகிறார்.
மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காக நிறைய செலவு செய்தவர். (பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம்). அதையும் தாண்டிய நிலையில் அவர் இந்த மலேசியம் புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார். வாழ்த்துகிறோம்.
மலேசியம் புலனத்தின் அன்பர் பி.கே.குமார் அவர்கள் எழுதிய நூல் வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் எனும் விழிப்புணர்வு நூல். ஒவ்வோர் இல்லத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் அல்ல. படிக்க வேண்டிய நூல்.
படித்துப் பாருங்கள். மணிமணியான வர்த்தக அறிவுரைகளை வழங்குகிறார். -முத்துக்கிருஷ்ணன்:
Amachiappan: நிறைய வியாபார, வாணிக ( தொழில் தொடங்க ) நல்ல கருத்துக்கள் நிறைந்த தரமான புத்தகம். வெளியீட்டு அன்று நானும் கலந்து புத்தகமொன்றை வாங்கினேன். அருமை.
Chandran Larkin Johore: ஈப்போ பி.கே.குமார் அவர்களின் ‘வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
Amachiappan: எழுதிய ஐயா பி.கே. குமாரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குப் புத்தகத்தை அனுப்பித் தருவார்.
BK Kumar: முகவரி தாருங்கள் இலவசமாக அனுப்புகிறேன்
Vengadeshan: வாழ்க வளமுடன் இறைவன் அருளால் தொடரட்டும் நற் பணி 👏👏👏👏👏🙌🙏