27 டிசம்பர் 2020

தமிழ் மொழியில் கனடா தேசியப் பாடல்

17.12.2020

கனடா தேசியப் பாடலின் பெயர் ஓ கனடா. சர் அடோல்ப் பசில் ரூட்டியர் (Sir Adolphe Basile Routhier) என்பவரால் 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ராபர்ட் ஸ்டான்லி வீர் (Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழியில் கவிஞர் கந்தவனம் என்பவரால் 2017-ஆம் ஆண்டு மொழி ஆக்கம் செய்யப்பட்டது.

கனடா நாட்டின் 150-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டார்கள். வழக்கமாகத் தமிழர் பண்பாட்டைப் பெருமை செய்து வரும் கனடா அரசு; அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டி உள்ளது. கனடா நாட்டில் தமிழ் மொழிக்கு என்றும் எப்போதும் தனி மரியாதை.

தமிழர்களின் கலாசார நாட்களைக் கொண்டாடுவது; பொது அறிவிப்புகளைத் தமிழில் அறிவிப்பு செய்வது; தமிழர்களின் நிகழ்ச்சிகளில் தலைவர்கள் கலந்து கொள்வது; தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்வது என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்து வருகிறார்கள். உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தவர் கனடா பிரதமர் ஜஸ்டின் (Justin Trudeau). தமிழர்களின கலாச்சார பண்டிகையான பொங்கலுக்குத் தமிழில் வாழ்த்து தெரிவித்தவர். தமிழர்களின் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி உலகத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

இங்கே மாதிரி கனடாவில் மதவாதம் இல்லை. இனவாதம் இல்லை. வந்தேறிகள் இராமாயணமும் இல்லை.

(மலேசியம்)
17.12.2020 - 6:47 pm

Perumal Kuala Lumpur: பழந்தமிழர் வரலாற்றை கற்கவே இந்தப் புலனத்தில் கைகோர்க்கிறேன்

Chandran Larkin Johore:
இந்தப் புலனம் ஒரு சிறப்பான புலனமாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து இந்தப் புலனத்தில் தமிழ்ப்பள்ளி; கோயில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இனி வரக்கூடிய காலங்களில், இந்த மலேசியா நாட்டில், மலேசியா வாழ் இந்தியர்களின் பொருளாதாரம் எப்படி இருக்கப் போகிறது என்று பேசினால் சிறப்பாக இருக்கும். இனி வரக்கூடிய நம்முடைய சங்ததிகள் இந்த நாட்டில் எப்படி வாழப் போகின்றனர் என்பதைத் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக