17.12.2020
விழுதுகளில் தோழர் டத்தோ சரவணன் தகவல் சிறப்பு. மற்றவை காலத்துக்கு ஏற்றதாக இல்லை. சமுதாயக் குரல் தீர்வு அதிபுத்திசாலிகளிட்ம் இல்லீங்க... சமயத்தைப் பற்றி பேச ஆளுமை மிக்கவர்கள் பலர் உள்ளனர்.
நாத்திகத் திராவிடச் சிந்தனை மிக்க உங்களுக்கு ஏன் சார் ஆத்திக ஆய்வு? பட்ஜட் பேச்சில் என்ன சாதித்தீர்கள்? ஊடகச் சக்தியை உங்கள் திறமைக்கு ஏற்றவாறு இன்னும் ஆக்ககரமான முன்னெடுப்புக்கு ஆளுங்கள். எல்லாம் எதிர் மறை ஆய்வுகள். சிக்கல்கள்.
தமிழ்ப் பத்திரிக்கைகள் கொல்வது போதாது என்று நீங்கள் வேறு இனத்தை மேலும் தாழ்வடையச் செய்கிறீர்கள். நம்மைத் தோற்கடித்த ஆளும் கட்சி எதிர்க்கட்சிப் பேடிகளின் பேட்டிகள் வேண்டாம்.
தீர்வை நோக்கிப் பயணியுங்கள். அமைச்சுகளில் உள்ள வணிக வாய்ப்புகள், பொருளாதாரத் திட்டங்கள், ஏன் எச்.டி.எப்.ஆர். பயிற்சிகள், சமூகம், சுகாதாரம், விவசாயம், தயாரிப்புத் துறை, சேவைத் துறை, டிஜிட்டல் மார்கெட்டிங், இ-கோமர்ஸ் என்று போங்கள்.
சமுதாயக் குறை தீர்க்க யாருமில்லை! சும்மா ஊடகத்தில வேடிக்கை முகங்களைக் காட்டி வேடிக்கை காட்ட வேண்டாம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக உள்ளது.
தனி மனிதப் புலமைகள் தடுமாறுகின்றன. செல்வ மலர் குரலில் மட்டும் பொறுப்பு தெரிகிறது. உங்கள் கேள்விகள் நல்லா இருந்தாலும் பதில்கள் மேல் தட்டுப் பெரிய ஆட்களுக்கு மட்டும்.
பாமர மக்கள் சந்தா கொடுக்கும் ஏழைகளுக்கு ஓர் இட்டிலி கடை போட பண்டார் ராயாவிலோ, நகராண்மையிலோ ஒரு லைசன்ஸ் எடுப்பதற்குச் சொல்லித் தாருங்கள். புண்ணியமாகப் போகும். அரசு, அரசியல் ஆர்ப்பரிப்பு வேண்டாம். நம் இனத்ததைப் பொறுத்த மட்டில் அது தீராத சொறி சார். நன்றி.
பொன் ரங்கன். தமிழர் குரல்; சிலாங்கூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக