27 டிசம்பர் 2020

வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் - ஈப்போ பி.கே.குமார்

17.12.2020

வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும். இப்படிச் சொல்பவர் சமூக ஆர்வலர்; தொழில் அதிபர் ஈப்போ புந்தோங் பி.கே.குமார்.

மலேசிய நாட்டின் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் நிறையவே ஆதரவுகளை வழங்கியவர். வழங்கி வருபவர். இந்த நாட்டில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியவர்.

தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காகத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.

தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்தி வருகிறார்.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காக நிறைய செலவு செய்தவர். (பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம்). அதையும் தாண்டிய நிலையில் அவர் இந்த மலேசியம் புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறார். வாழ்த்துகிறோம்.

மலேசியம் புலனத்தின் அன்பர் பி.கே.குமார் அவர்கள் எழுதிய நூல் வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் எனும் விழிப்புணர்வு நூல். ஒவ்வோர் இல்லத்திலும் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் அல்ல. படிக்க வேண்டிய நூல்.

படித்துப் பாருங்கள். மணிமணியான வர்த்தக அறிவுரைகளை வழங்குகிறார். -முத்துக்கிருஷ்ணன்:

Amachiappan: நிறைய வியாபார, வாணிக ( தொழில் தொடங்க ) நல்ல கருத்துக்கள் நிறைந்த தரமான புத்தகம். வெளியீட்டு அன்று நானும் கலந்து புத்தகமொன்றை வாங்கினேன். அருமை.

Chandran Larkin Johore: ஈப்போ பி.கே.குமார் அவர்களின் ‘வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.

Amachiappan: எழுதிய ஐயா பி.கே. குமாரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குப் புத்தகத்தை அனுப்பித் தருவார்.

BK Kumar: முகவரி தாருங்கள் இலவசமாக அனுப்புகிறேன்

Vengadeshan: வாழ்க வளமுடன் இறைவன் அருளால் தொடரட்டும் நற் பணி 👏👏👏👏👏🙌🙏


 

இள மரணங்கள் அதிகரிப்பு - இமயவர்மன் மதுரை

17.12.2020

Imayavarman: தற்போது இள மரணங்கள் அதிகம் ஏற்படுகின்றன. அவர்களின் மரணங்கள் உறவுகள் அற்ற அந்நியர்களையும் உலுக்கிப் போடுகின்றன. அவர் குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றனர். குடும்பத் தலைவனின் இறப்புக்குப் பிறகு அந்தக் குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப் படுகின்றன.

இது விதி அல்ல. இன்றைய மனிதனின் அலட்சிய போக்கும், அவன் வாழ்வியல் தவறுகளும் தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

மனிதனின் ஆயுள்காலம் இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்...

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை

2. இரவில் கண் விழித்து இருத்தல்

3. காலை உணவை தவிர்த்தல்.

4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.

5. பணத்தை நோக்கிய ஓட்டம்

6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்

7. கவலைகளைக் கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பைத் தொட்டி அல்ல. உணவை வெறும் ஒப்பேத்தலாக மாற்றாதீர்கள்.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னைத் தானே சீராக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தை வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதிய அளவு நீர் அருந்துங்கள். இளநீர் போன்றவை மிக நல்லது.

பச்சையாக உண்ணக் கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக் கடலை, வெள்ளரி பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததைத் தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்வதைக் குறையுங்கள்.

உடற்பயிற்சி, உணவை போல் அத்தியாவசியமான ஒன்று. மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்துப் பேசி சந்தோசமாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களைப் பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளைக் கண்டு களியுங்கள்.

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாகப் பூணுங்கள்.

வாழ்க்கை ஓர் அற்புதமான பரிசு. அதை அவமதித்து விடாதீர்கள்.

   இமயவர்மன் மதுரை





தமிழ் மொழியில் கனடா தேசியப் பாடல்

17.12.2020

கனடா தேசியப் பாடலின் பெயர் ஓ கனடா. சர் அடோல்ப் பசில் ரூட்டியர் (Sir Adolphe Basile Routhier) என்பவரால் 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ராபர்ட் ஸ்டான்லி வீர் (Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழியில் கவிஞர் கந்தவனம் என்பவரால் 2017-ஆம் ஆண்டு மொழி ஆக்கம் செய்யப்பட்டது.

கனடா நாட்டின் 150-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டார்கள். வழக்கமாகத் தமிழர் பண்பாட்டைப் பெருமை செய்து வரும் கனடா அரசு; அந்த நாட்டு தேசியப் பாடலைத் தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டி உள்ளது. கனடா நாட்டில் தமிழ் மொழிக்கு என்றும் எப்போதும் தனி மரியாதை.

தமிழர்களின் கலாசார நாட்களைக் கொண்டாடுவது; பொது அறிவிப்புகளைத் தமிழில் அறிவிப்பு செய்வது; தமிழர்களின் நிகழ்ச்சிகளில் தலைவர்கள் கலந்து கொள்வது; தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்வது என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்து வருகிறார்கள். உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தவர் கனடா பிரதமர் ஜஸ்டின் (Justin Trudeau). தமிழர்களின கலாச்சார பண்டிகையான பொங்கலுக்குத் தமிழில் வாழ்த்து தெரிவித்தவர். தமிழர்களின் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி உலகத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

இங்கே மாதிரி கனடாவில் மதவாதம் இல்லை. இனவாதம் இல்லை. வந்தேறிகள் இராமாயணமும் இல்லை.

(மலேசியம்)
17.12.2020 - 6:47 pm

Perumal Kuala Lumpur: பழந்தமிழர் வரலாற்றை கற்கவே இந்தப் புலனத்தில் கைகோர்க்கிறேன்

Chandran Larkin Johore:
இந்தப் புலனம் ஒரு சிறப்பான புலனமாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து இந்தப் புலனத்தில் தமிழ்ப்பள்ளி; கோயில் இந்தியாவின் பொருளாதாரம் பற்றி பேசினால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இனி வரக்கூடிய காலங்களில், இந்த மலேசியா நாட்டில், மலேசியா வாழ் இந்தியர்களின் பொருளாதாரம் எப்படி இருக்கப் போகிறது என்று பேசினால் சிறப்பாக இருக்கும். இனி வரக்கூடிய நம்முடைய சங்ததிகள் இந்த நாட்டில் எப்படி வாழப் போகின்றனர் என்பதைத் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.



மலேசியாவில் சாதிகளை மறந்து வருகிறோம் - சுங்கை சிப்புட் முருகன்

17.12.2020

**** Tanjavur: முத்து பையனுக்கு பெண் தேடி வருகிறேன். வயது 28. உடையார் நத்தமன்.

புலன நிர்வாகம்: மாப்பிள்ளை தேடுங்கள். பெண் தேடுங்கள். பிரச்சினை இல்லை. ஆனால் சாதிகள் வேண்டாமே. இந்தப் புலனம் ஒரு மலேசியப் புலனம். மலேசியாவில் சாதி சனம் சடங்கு சம்பிரதாய ஐதீகங்களுக்கு நாங்கள் மரியாதை வழங்குவது இல்லை. மன்னிக்கவும் ஐயா.

இந்தப் புலனம் தமிழர்களின் வரலாறு; சமுதாய மறுமலர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கும் புலனம். சாதிகள் இல்லையடி பாப்பா என்பதே எங்களின் நிலைப்பாடு. நாங்கள் மலேசியாவில் சாதிகளை ஒழித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

Murugan SSiput:
வணக்கம் அய்யா. ஒழிப்பது மட்டும் அல்ல. மீன்டும் மறந்தும் முளைக்கவும் கூடாது. இங்கே மலேசியாவில் நாம் சாதிகளை மறந்து வருகிறோம். சிலர் நினைவு படுத்துகிறார்கள். எத்தனை பாரதியார்கள் வந்தாலும் மாற்றவே முடியாது...

ஆரியப் பண்பாடுகளை நாங்கள் இங்கே மலேசியாவில் மறந்து வருகிறோம். தயவு செய்து கிளற வேண்டாம். மீண்டும் ஒரு நினைவூட்டல்.

இது மலேசியப் புலனம். இங்கே சாதிகள் தொடர்பான செய்திகளுக்கு இடம் இல்லை. ஆரியத்தை ஆராதனை செய்வதைத் தவிர்த்து வருகிறோம். இது தொடர்பான பதிவுகள் போதும். வேறு பயனுள்ள தகவல்களைப் பரிமாறுவோம்.


 

டத்தோ சரவணன் விழுதுகள் பேட்டி - பொன் ரங்கன்

17.12.2020

விழுதுகளில் தோழர் டத்தோ சரவணன் தகவல் சிறப்பு. மற்றவை காலத்துக்கு ஏற்றதாக இல்லை. சமுதாயக் குரல் தீர்வு அதிபுத்திசாலிகளிட்ம் இல்லீங்க... சமயத்தைப் பற்றி பேச ஆளுமை மிக்கவர்கள் பலர் உள்ளனர்.

நாத்திகத் திராவிடச் சிந்தனை மிக்க உங்களுக்கு ஏன் சார் ஆத்திக ஆய்வு? பட்ஜட் பேச்சில் என்ன சாதித்தீர்கள்? ஊடகச் சக்தியை உங்கள் திறமைக்கு ஏற்றவாறு இன்னும் ஆக்ககரமான முன்னெடுப்புக்கு ஆளுங்கள். எல்லாம் எதிர் மறை ஆய்வுகள். சிக்கல்கள்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் கொல்வது போதாது என்று நீங்கள் வேறு இனத்தை மேலும் தாழ்வடையச் செய்கிறீர்கள். நம்மைத் தோற்கடித்த ஆளும் கட்சி எதிர்க்கட்சிப் பேடிகளின் பேட்டிகள் வேண்டாம்.

தீர்வை நோக்கிப் பயணியுங்கள். அமைச்சுகளில் உள்ள வணிக வாய்ப்புகள், பொருளாதாரத் திட்டங்கள், ஏன் எச்.டி.எப்.ஆர். பயிற்சிகள், சமூகம், சுகாதாரம், விவசாயம், தயாரிப்புத் துறை, சேவைத் துறை, டிஜிட்டல் மார்கெட்டிங், இ-கோமர்ஸ் என்று போங்கள்.

சமுதாயக் குறை தீர்க்க யாருமில்லை! சும்மா ஊடகத்தில வேடிக்கை முகங்களைக் காட்டி வேடிக்கை காட்ட வேண்டாம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக உள்ளது.

தனி மனிதப் புலமைகள் தடுமாறுகின்றன. செல்வ மலர் குரலில் மட்டும் பொறுப்பு தெரிகிறது. உங்கள் கேள்விகள் நல்லா இருந்தாலும் பதில்கள் மேல் தட்டுப் பெரிய ஆட்களுக்கு மட்டும்.

பாமர மக்கள் சந்தா கொடுக்கும் ஏழைகளுக்கு ஓர் இட்டிலி கடை போட பண்டார் ராயாவிலோ, நகராண்மையிலோ ஒரு லைசன்ஸ் எடுப்பதற்குச் சொல்லித் தாருங்கள். புண்ணியமாகப் போகும். அரசு, அரசியல் ஆர்ப்பரிப்பு வேண்டாம். நம் இனத்ததைப் பொறுத்த மட்டில் அது தீராத சொறி சார். நன்றி.

பொன் ரங்கன். தமிழர் குரல்; சிலாங்கூர்.