11 ஜனவரி 2021

இயக்குனர் – இயக்குநர் எது சரி?

09.01.2021

தவறாக எழுதப்படும் சொற்களும்; குழப்பம் தரும் சொற்களும்

இடப்புறம் உள்ளது தவறு. வலப்புறம் உள்ளது சரி.

அருகாமை – அருகில், அருகமை

அதிருஷ்டம் – அதிர்ஷ்டம்

ஆச்சர்யம் – ஆச்சரியம்

ஆவண செய்க – ஆவன செய்க

அர்ஜூன் - அர்ஜுன்

அறுவருப்பு - அருவருப்பு

அறுகம்புல் - அருகம்புல்

இருபத்தி மூன்று - இருபத்து மூன்று

இவைகள் - இவை

இயக்குனர் – இயக்குநர்

இறுக்கம் - இருக்கம்

உடற்கூறாய்வு - உடற்கூராய்வு

உத்திரவாதம் – உத்தரவாதம்

உளமாற - உளமார

எண்ணை – எண்ணெய்

ஏற்கனவே – ஏற்கெனவே

ஒருசில – சில

ஓட்டுனர் – ஓட்டுநர்

கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்

கருப்பு - கறுப்பு

கறுமை - கருமை

காணல் நீர் - கானல் நீர்

காலணி - காலனி – (குடியிருப்பு)

காலனி - காலணி – (செருப்பு)

காலம்காலமாக - காலங்காலமாக

காலாற – காலார

கீழ்க்கண்ட – கீழ்க்காணும்

கைமாறு - கைம்மாறு

கொப்பளம் – கொப்புளம்

கோர்வை – கோவை

கோர்த்தல் – கோத்தல்

சன்னதி - சன்னிதி

சித்தரிப்பு - சித்திரிப்பு

சுயேட்சை – சுயேச்சை

சுமூகம் - சுமுகம்

சுவற்றில் - சுவரில்

சுறுக்குதல் - சுருக்குதல்

தகறாறு - தகராறு

திருமணம் செய்தார் - திருமணம் செய்துகொண்டார்

தொலைப்பேசி - தொலைபேசி

தற்கொலை செய்தார் - தற்கொலை செய்துகொண்டார்

தூரம் – தொலைவு

நஞ்சை – நன்செய்

நடத்துனர் - நடத்துநர்

நாகரீகம் - நாகரிகம்

நியாபகம் - ஞாபகம்

நிருத்தம் - நிறுத்தம்

நினைவுகூறுதல் - நினைவுகூர்தல்

பதட்டம் – பதற்றம்

பிரச்சனை / பிரச்னை - பிரச்சினை

புஞ்சை – புன்செய்

புள்ளிவிபரம் - புள்ளிவிவரம்

பெருநர் - பெறுநர்

பெறுனர் – பெறுநர்

பெறும்பாடு - பெரும்பாடு

பொருமல் - பொறுமல்

பொருத்தவரை - பொறுத்தவரை

மனதாற - மனதார

மறுகுதல் - மருகுதல்

மறுவிவருதல் - மருவிவருதல்

மாதாந்திர – மாதாந்தர

முஸ்லீம் - முஸ்லிம்

வம்சாவழி - வம்சாவளி

வலது புறம் – வலப்புறம்

வரையரை - வரையறை

வாராந்திர - வாராந்தர

வாழ்த்துக்கள் – வாழ்த்துகள்

வெய்யில் – வெயில்

தொகுப்பு: மலேசியம்
09.01.2021

சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி மூடும் நிலையில்... ஜெயகோபாலன்

09.01.2021

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் அப்பள்ளி மூடும் நிலையை எதிர் நோக்கி உள்ளதாக பேராக் மாநில ம இ காவின் கல்விக் குழுவின் தலைவர் ஜெயகோபாலன் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டில் மார்ச் மாதம் வரை ஒரே மாணவர் மட்டும் கல்வி பயின்று வந்தார். இந்த ஆண்டில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு சென்று விட்டதால் இந்த ஆண்டு வரை ஒரு மாணவர் கூட பதிவு செய்யப் படாமல் உள்ளது.


ஜெயகோபாலன்

சுங்கை தீமா தோட்டத்தில் பணி புரிந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு சென்று விட்டதால் மாணவர்கள் இல்லாத நிலையை இப்பள்ளி எதிர் நோக்கி உள்ளது.

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரமான லங்காப் நகரில் தமிழ் பள்ளி இல்லாததாலும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாலும் சுங்கை தீமா தமிழ் பள்ளியின் லைசன்ஸ் கொண்டு லங்காப்பில் தமிழ்ப் பள்ளி கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஜெயகோபாலன் தெரிவித்தார். இது 09.01.2021 மக்கள் ஓசை செய்தியாகும்.

சுங்கை தீமா தமிழ் பள்ளி

மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு இருப்பதால்

பேராக் மாநிலத்தில் உள்ள கீழ்ப் பேராக் தமிழ்ப் பள்ளிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. இவ்வாறு 2020 அக்டோபர் 5-ஆம் தேதி தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

இந்த நிலையில், கல்வி அமைச்சின் பதிவின்படி மாணவர்கள் 13-0க்கும் குறைவாக உள்ள பள்ளிகள் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளியாக கருதப் படுகிறது.

கீழ்ப் பேராக் மாவட்டத்தில் சுங்கை தீமா பள்ளி ஒரு மாணவரும் இல்லாத பள்ளியாக உள்ளது. 100 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளையும் அடையாளப் படுத்தியுள்ளனர்.

இரண்டே பள்ளிகள்தான் எண்ணிக்கையில் 130 மாணவர்களுக்கும் மேலாக உள்ள பள்ளிகளாக விளங்கிக் கொண்டு இருக்கின்றன.

இந்த மாவட்டத்தில் கடந்த 1960-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்து வந்துள்ளன. மாணவர் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் பள்ளிகளின் எதிர்காலம் பெரும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.





 

ஆட்டோ - கைரோ தன்னியக்கக் கொட்பளவி

09.01.2021

பதிவு செய்தவர்  - கென்னடி ஆறுமுகம், கிரீக்


1923 ஜனவரி 9-ஆம் தேதி. உலகின் முதல் ஆட்டோ - கைரோ (Auto Gyro) வாகனத்தில், ஜுவான் டி லா சியர்வா (Juan de la Cierva) எனும் ஸ்பானியப் பொறியாளர், மாட்ரிட் நகரில் பறந்து காட்டினார். அந்த வாகனத்தை உருவாக்கியவரும் அவரே.

ஆட்டோ - கைரோ (Auto Gyro); கைரோ - காப்ட்டர் (gyrocopter); கைரோ - பிளேன் (gyroplane); போன்ற பல பெயர்களின் அழைக்கப்படும் இது ஹெலிகாப்டர் போலவே இருக்கும். இது ஒரு பறக்கும் வாகனம். தமிழில் தன்னியக்கக் கொட்பளவி.

உண்மையில் சியர்வா உருவாக்கிய ஆட்டோ - கைரோதான், தற்காலத்திய ஹெலிகாப்பட்டர்கள் உருவாக்க அடிப்படையாக அமைந்தது.

ஸ்பானிய இராணுவத்துக்கு, குண்டுவீச்சு விமானம் ஒன்றை வடிவமைக்கும் போட்டி 1921-இல் நடத்தப்பட்டது. அதற்காக மூன்று என்ஜின்கள் கொண்ட விமானம் ஒன்றை சியர்வா வடிவமைத்தார்.

ஆனால் சோதனைப் பறப்புகளில் திடீரென்று என்ஜின்கள் நின்று போயின. விமானம் விழுந்து விட்டது. குறைவான வேகங்களில் பறக்க முடியவில்லை. அதுதான் சிக்கல் என்று உணர்ந்த சியர்வா, அதைச் சரி செய்ய உருவாக்கியதே இந்த ஆட்டோ - கைரோ.

Juan de la Cierva

பார்ப்பதற்கு ஹெலிக்காப்டர் போன்றே தோற்றம் அளித்தாலும், ஆட்டோ - கைரோவின் மேல் இருக்கும் சுழல் இறக்கை, என்ஜினால் இயக்கப் படாமல், தானாகச் சுழலக் கூடியது.

மாறாக, அந்தக் காலத்திய விமானத்தின் முன்புறத்தில் புரொப்பெல்லர் பொருத்தப்பட்டு இருக்கும். அது முன்புறமாக உந்தித் தள்ளவதுடன், அதன்மூலம் உருவாகும் காற்றால், மேலே பொருத்தப்பட்டு இருக்கும் சுழல் இறக்கை தானாகச் சுழன்று, காற்றின் அழுத்தத்தால் ஆட்டோ - கைரோவைப் பறக்கச் செய்கிறது.

An autogyro is characterized by a free-spinning rotor that turns because of the passage of air through the rotor from below.

The downward component of the total aerodynamic reaction of the rotor gives lift to the vehicle, sustaining it in the air.

A separate propeller provides forward thrust, and can be placed in a puller configuration, with the engine and propeller at the front of the fuselage, or in a pusher configuration, with the engine and propeller at the rear of the fuselage.

அதனால், ஆட்டோ - கைரோ பறப்பதற்கு ஓடுதளம் தேவை. ஆனால், இறங்குவதற்குத் தேவை இல்லை. செங்குத்தாகவே இறங்கும். புரொப்பெல்லர் உருவாக்கும் காற்றால் சுழல்வதற்கும், அதே காற்றின் அழுத்தத்தால் பறப்பதற்கும் ஏற்ற வகையில், சுழல் இறக்கையின் கோணங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

1939-இல் சோவியத்துக்கும், பின்லாந்துக்கும் இமிடையே நடைபெற்ற குளிர்காலப் போரில், சோவியத் படைகள் ஆட்டோ - கைரோக்களைப் பயன்படுத்தின.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஜெர்மெனி, ஜப்பான் படைகளும் இதனைப் பயன்படுத்தின. இதற்கிடையில், தற்காலத்திய ஹெலிக்காப்டர்கள் உருவாக்கப்பட்டு, விமானத்தால் செய்ய முடியாத பணிகளுக்கு அவை பயன்படத் தொடங்கின.

இதனால், இராணுவம் உள்ளிட்டவற்றில் பயன்பாடு குறைந்தாலும், இன்னும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு ஆட்டோ - கைரோ பயன்படுத்தப் படுகிறது.

கிளைடரைப் போன்று, பொழுது போக்குக் கருவியாகப் பெரும் அளவில் பயன்படுத்தப் படுகிறது. இதன்மூலம் உலகைச் சுற்றி வரும் பயணம் கூட ஒரு முறை முயற்சிக்கப் பட்டது. 12,100 கி.மீ. பயணித்த பின் மோசமான வானிலையால் கைவிடப் பட்டது.

அதிக வேகமாக மணிக்கு 189 கி.மீ. பறந்தவர் இங்கிலாந்து வான்படை அலுவலர் கென் வாலிஸ் (Wing Commander Ken Wallis). 2002-ஆம் ஆண்டில் தன்னுடைய 89-ஆவது வயதில் மீண்டும் முயற்சித்தார். 207 கி.மீ. வேகத்தில் பறந்தார். அதன் மூலம், அதிக வயதில் சாதனை புரிந்த விமானி என்று இரட்டைச் சாதனைகளையும் செய்தார்.

On 16 November 2002, at 89 years of age, Wallis increased the speed record to 207.7 km/h (129.1 mph) – and simultaneously set another world record as the oldest pilot to set a world record.


10 ஜனவரி 2021

கவின் அருணாசலம்

09.01.2021

பதிவு செய்தவர்: பூபதி

ஒரு தமிழ் பள்ளி மாணவர் முனைவர் நிலைக்கு தன் வாழ்க்கையை உயர்த்தி, உலகத் தமிழர்களுக்குப் பெருமை செய்து உள்ளார். தமிழ்ப்பள்ளியில் படித்து தமிழுக்கும் பெருமை செய்து உள்ளார். அவர்தான் கவின் அருணாசலம். தமிழ்ப் பள்ளிகளுக்கு மற்றும் ஒரு பொற்கலசம்.

4th Year Masters Project (Energy Generation Application with 2D Materials) October 2018 – April 2018

University College London with a masters degree in Physics. September 2015 – Present

இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் கிடைத்த வெகுமதியாகவே கருதுகிறோம்.

மனம் கனக்கிறது. முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் தம்பி. வாழ்த்துகள் அருண்.

அந்தச் சாதனைக் கலசத்தின் தந்தையார் சீ.அருண் நாடறிந்த வரலாற்று ஆசிரியர். எழுத்தாளர். நூலாசிரியர். இந்த மலேசியம் புலனத்தில் ஓர் அன்பர். இனிமையான நண்பர். மிக அமைதியானவர். சீ.அருண் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழ் மொழிப் பற்றாளர்.

மலேசிய வானொலியின் செய்திக் காணொலி

மட்டடற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அருண். கவின்மிகு இளைஞருக்கும் அந்த இளைஞரின் தந்தையார் அருண் அவர்களுக்கும் இனிய இனிய வாழ்த்துகள். நல்லா இருப்பாய் மகனே. தொடர்ந்து சாதனைகள் புரிய இறைவனை இறைஞ்சுகின்றோம்.

குமரன் மாரிமுத்து:
தொடக்கப்பள்ளி காலம் தொட்டே இந்தப் பையன் எனக்கு நன்கு அறிமுகம். அமைதியானவன்; ஆனால், கூமையான பார்வையும் மதியும் கொண்டவன். இந்த பையனின் தந்தை நாடறிந்த சிறந்த எழுத்தாளர் திரு. அருண். (நம் புலன உறுப்பினரும் கூட).

தந்தையாரின் கணினியில் பழுதுபார்க்கும் போதே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மிகவும் உன்னிப்பாக கவனிப்பான். 'பையன், நோண்டி நோண்டி கேள்விகள் கேட்பான், பார்த்துக்குங்க', இது அப்பா. பையனோ அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு என்னிடம் கேள்விகளை அடுக்கி விடுவான். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை.

ஒவ்வொரு படிநிலைகளிலும் மிகச் சிறந்த தேர்ச்சி. பையன் இப்போது முனைவர் பட்டம் பெறப் போகும் இளைஞன்.


இன்று காலை செய்தியில் கவின் குரல் கேட்டது அடையாளம் கண்டு கொண்டேன். குரலிலே அறிவின் முதிர்ச்சி, நம்பிக்கையின் வெளிப்பாடு, சமுதாய சிந்தனை... எப்பப்பா, நான் பார்த்த பையனா இவன்?

தமிழ்ப்பள்ளி படித்து மிளிரும் இன்னொரு நட்சத்திரம். வாழ்க வளத்துடன் கவின்.

Methodist College Kuala Lumpur (MCKL), Malaysia (GCE A-Level) July 2013 – December 2014

One of the 50 students nationwide to be awarded a full scholarship by the Higher Education Ministry of Malaysia (MyBrainSC) to pursue integrated masters in Physics in the UK.

Tamil Language AS Level (A), Top in Malaysia.

Awarded “Top Achiever Bursary” (100% full tuition fee waiver) by Methodist College Kuala Lumpur.

Completed “Chinese for Beginners” course on Coursera.com by Peking University, China with an overall score of 96%.

Language : English (Native), Tamil (Native) , Malay (Fluent), Mandarin (Beginner), Korean (Beginner)

IT Skills : Python (Coding) Linux and api.ai (programming), Proficiency in MS Office (Word, Excel, PowerPoint)

Interest : Dancing, Badminton, Playing Chinese Yo-yo and Travelling




 

வேர்களைத் தேடி - டாக்டர் சுபாஷினி

09.01.2021

வேர்களைத் தேடி: தமிழ் நாகரிகம் தொடர்பான தொல்லியல் தடயங்கள். Search of our Roots: Archaeological Evidences Related To Tamil Civilization.

டாக்டர் கே.சுபாஷினி - தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர். Dr.K.Subashini – Founder and President of Tamil Heritage Foundation.

அமைப்பாளர்: பொதுநல நடவடிக்கைக்கான தமிழ் கனடிய மையம். Organizer: Tamil Canadian Centre for Civic Action

https://www.torontotamil.com/event/search-of-our-roots-archaeological-evidences-related-to-tamil-civilization/