09.01.2021
பதிவு செய்தவர் - கென்னடி ஆறுமுகம், கிரீக்
1923 ஜனவரி 9-ஆம் தேதி. உலகின் முதல் ஆட்டோ - கைரோ (Auto Gyro) வாகனத்தில், ஜுவான் டி லா சியர்வா (Juan de la Cierva) எனும் ஸ்பானியப் பொறியாளர், மாட்ரிட் நகரில் பறந்து காட்டினார். அந்த வாகனத்தை உருவாக்கியவரும் அவரே.
ஆட்டோ - கைரோ (Auto Gyro); கைரோ - காப்ட்டர் (gyrocopter); கைரோ - பிளேன் (gyroplane); போன்ற பல பெயர்களின் அழைக்கப்படும் இது ஹெலிகாப்டர் போலவே இருக்கும். இது ஒரு பறக்கும் வாகனம். தமிழில் தன்னியக்கக் கொட்பளவி.
உண்மையில் சியர்வா உருவாக்கிய ஆட்டோ - கைரோதான், தற்காலத்திய ஹெலிகாப்பட்டர்கள் உருவாக்க அடிப்படையாக அமைந்தது.
ஸ்பானிய இராணுவத்துக்கு, குண்டுவீச்சு விமானம் ஒன்றை வடிவமைக்கும் போட்டி 1921-இல் நடத்தப்பட்டது. அதற்காக மூன்று என்ஜின்கள் கொண்ட விமானம் ஒன்றை சியர்வா வடிவமைத்தார்.
ஆனால் சோதனைப் பறப்புகளில் திடீரென்று என்ஜின்கள் நின்று போயின. விமானம் விழுந்து விட்டது. குறைவான வேகங்களில் பறக்க முடியவில்லை. அதுதான் சிக்கல் என்று உணர்ந்த சியர்வா, அதைச் சரி செய்ய உருவாக்கியதே இந்த ஆட்டோ - கைரோ.
பார்ப்பதற்கு ஹெலிக்காப்டர் போன்றே தோற்றம் அளித்தாலும், ஆட்டோ - கைரோவின் மேல் இருக்கும் சுழல் இறக்கை, என்ஜினால் இயக்கப் படாமல், தானாகச் சுழலக் கூடியது.
மாறாக, அந்தக் காலத்திய விமானத்தின் முன்புறத்தில் புரொப்பெல்லர் பொருத்தப்பட்டு இருக்கும். அது முன்புறமாக உந்தித் தள்ளவதுடன், அதன்மூலம் உருவாகும் காற்றால், மேலே பொருத்தப்பட்டு இருக்கும் சுழல் இறக்கை தானாகச் சுழன்று, காற்றின் அழுத்தத்தால் ஆட்டோ - கைரோவைப் பறக்கச் செய்கிறது.
An autogyro is characterized by a free-spinning rotor that turns because of the passage of air through the rotor from below.
The downward component of the total aerodynamic reaction of the rotor gives lift to the vehicle, sustaining it in the air.
A separate propeller provides forward thrust, and can be placed in a puller configuration, with the engine and propeller at the front of the fuselage, or in a pusher configuration, with the engine and propeller at the rear of the fuselage.
அதனால், ஆட்டோ - கைரோ பறப்பதற்கு ஓடுதளம் தேவை. ஆனால், இறங்குவதற்குத் தேவை இல்லை. செங்குத்தாகவே இறங்கும். புரொப்பெல்லர் உருவாக்கும் காற்றால் சுழல்வதற்கும், அதே காற்றின் அழுத்தத்தால் பறப்பதற்கும் ஏற்ற வகையில், சுழல் இறக்கையின் கோணங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.
1939-இல் சோவியத்துக்கும், பின்லாந்துக்கும் இமிடையே நடைபெற்ற குளிர்காலப் போரில், சோவியத் படைகள் ஆட்டோ - கைரோக்களைப் பயன்படுத்தின.
இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஜெர்மெனி, ஜப்பான் படைகளும் இதனைப் பயன்படுத்தின. இதற்கிடையில், தற்காலத்திய ஹெலிக்காப்டர்கள் உருவாக்கப்பட்டு, விமானத்தால் செய்ய முடியாத பணிகளுக்கு அவை பயன்படத் தொடங்கின.
இதனால், இராணுவம் உள்ளிட்டவற்றில் பயன்பாடு குறைந்தாலும், இன்னும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு ஆட்டோ - கைரோ பயன்படுத்தப் படுகிறது.
கிளைடரைப் போன்று, பொழுது போக்குக் கருவியாகப் பெரும் அளவில் பயன்படுத்தப் படுகிறது. இதன்மூலம் உலகைச் சுற்றி வரும் பயணம் கூட ஒரு முறை முயற்சிக்கப் பட்டது. 12,100 கி.மீ. பயணித்த பின் மோசமான வானிலையால் கைவிடப் பட்டது.
அதிக வேகமாக மணிக்கு 189 கி.மீ. பறந்தவர் இங்கிலாந்து வான்படை அலுவலர் கென் வாலிஸ் (Wing Commander Ken Wallis). 2002-ஆம் ஆண்டில் தன்னுடைய 89-ஆவது வயதில் மீண்டும் முயற்சித்தார். 207 கி.மீ. வேகத்தில் பறந்தார். அதன் மூலம், அதிக வயதில் சாதனை புரிந்த விமானி என்று இரட்டைச் சாதனைகளையும் செய்தார்.
On 16 November 2002, at 89 years of age, Wallis increased the speed record to 207.7 km/h (129.1 mph) – and simultaneously set another world record as the oldest pilot to set a world record.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக