09.01.2021
பதிவு செய்தவர்: பூபதி
ஒரு தமிழ் பள்ளி மாணவர் முனைவர் நிலைக்கு தன் வாழ்க்கையை உயர்த்தி, உலகத் தமிழர்களுக்குப் பெருமை செய்து உள்ளார். தமிழ்ப்பள்ளியில் படித்து தமிழுக்கும் பெருமை செய்து உள்ளார். அவர்தான் கவின் அருணாசலம். தமிழ்ப் பள்ளிகளுக்கு மற்றும் ஒரு பொற்கலசம்.
4th Year Masters Project (Energy Generation Application with 2D Materials) October 2018 – April 2018
University College London with a masters degree in Physics. September 2015 – Present
இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் கிடைத்த வெகுமதியாகவே கருதுகிறோம்.
மனம் கனக்கிறது. முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் தம்பி. வாழ்த்துகள் அருண்.
அந்தச் சாதனைக் கலசத்தின் தந்தையார் சீ.அருண் நாடறிந்த வரலாற்று ஆசிரியர். எழுத்தாளர். நூலாசிரியர். இந்த மலேசியம் புலனத்தில் ஓர் அன்பர். இனிமையான நண்பர். மிக அமைதியானவர். சீ.அருண் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். தமிழ் மொழிப் பற்றாளர்.
மட்டடற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அருண். கவின்மிகு இளைஞருக்கும் அந்த இளைஞரின் தந்தையார் அருண் அவர்களுக்கும் இனிய இனிய வாழ்த்துகள். நல்லா இருப்பாய் மகனே. தொடர்ந்து சாதனைகள் புரிய இறைவனை இறைஞ்சுகின்றோம்.
குமரன் மாரிமுத்து: தொடக்கப்பள்ளி காலம் தொட்டே இந்தப் பையன் எனக்கு நன்கு அறிமுகம். அமைதியானவன்; ஆனால், கூமையான பார்வையும் மதியும் கொண்டவன். இந்த பையனின் தந்தை நாடறிந்த சிறந்த எழுத்தாளர் திரு. அருண். (நம் புலன உறுப்பினரும் கூட).
தந்தையாரின் கணினியில் பழுதுபார்க்கும் போதே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மிகவும் உன்னிப்பாக கவனிப்பான். 'பையன், நோண்டி நோண்டி கேள்விகள் கேட்பான், பார்த்துக்குங்க', இது அப்பா. பையனோ அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு என்னிடம் கேள்விகளை அடுக்கி விடுவான். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை.
ஒவ்வொரு படிநிலைகளிலும் மிகச் சிறந்த தேர்ச்சி. பையன் இப்போது முனைவர் பட்டம் பெறப் போகும் இளைஞன்.
தமிழ்ப்பள்ளி படித்து மிளிரும் இன்னொரு நட்சத்திரம். வாழ்க வளத்துடன் கவின்.
Methodist College Kuala Lumpur (MCKL), Malaysia (GCE A-Level) July 2013 – December 2014
One of the 50 students nationwide to be awarded a full scholarship by the Higher Education Ministry of Malaysia (MyBrainSC) to pursue integrated masters in Physics in the UK.
Tamil Language AS Level (A), Top in Malaysia.
Awarded “Top Achiever Bursary” (100% full tuition fee waiver) by Methodist College Kuala Lumpur.
Completed “Chinese for Beginners” course on Coursera.com by Peking University, China with an overall score of 96%.
Language : English (Native), Tamil (Native) , Malay (Fluent), Mandarin (Beginner), Korean (Beginner)
IT Skills : Python (Coding) Linux and api.ai (programming), Proficiency in MS Office (Word, Excel, PowerPoint)
Interest : Dancing, Badminton, Playing Chinese Yo-yo and Travelling
வாழ்த்து தமிழா. தொடரட்டும் உமது சாதனை. போற்றட்டும் வையகம்.மலரட்டும் பெற்றோர் மனம். பூரிக்கட்டும் பெற்ற வயிறு.
பதிலளிநீக்கு