11 ஜனவரி 2021

சுங்கை தீமா தமிழ்ப்பள்ளி மூடும் நிலையில்... ஜெயகோபாலன்

09.01.2021

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் அப்பள்ளி மூடும் நிலையை எதிர் நோக்கி உள்ளதாக பேராக் மாநில ம இ காவின் கல்விக் குழுவின் தலைவர் ஜெயகோபாலன் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டில் மார்ச் மாதம் வரை ஒரே மாணவர் மட்டும் கல்வி பயின்று வந்தார். இந்த ஆண்டில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு சென்று விட்டதால் இந்த ஆண்டு வரை ஒரு மாணவர் கூட பதிவு செய்யப் படாமல் உள்ளது.


ஜெயகோபாலன்

சுங்கை தீமா தோட்டத்தில் பணி புரிந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு சென்று விட்டதால் மாணவர்கள் இல்லாத நிலையை இப்பள்ளி எதிர் நோக்கி உள்ளது.

ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரமான லங்காப் நகரில் தமிழ் பள்ளி இல்லாததாலும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாலும் சுங்கை தீமா தமிழ் பள்ளியின் லைசன்ஸ் கொண்டு லங்காப்பில் தமிழ்ப் பள்ளி கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஜெயகோபாலன் தெரிவித்தார். இது 09.01.2021 மக்கள் ஓசை செய்தியாகும்.

சுங்கை தீமா தமிழ் பள்ளி

மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு இருப்பதால்

பேராக் மாநிலத்தில் உள்ள கீழ்ப் பேராக் தமிழ்ப் பள்ளிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. இவ்வாறு 2020 அக்டோபர் 5-ஆம் தேதி தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

இந்த நிலையில், கல்வி அமைச்சின் பதிவின்படி மாணவர்கள் 13-0க்கும் குறைவாக உள்ள பள்ளிகள் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளியாக கருதப் படுகிறது.

கீழ்ப் பேராக் மாவட்டத்தில் சுங்கை தீமா பள்ளி ஒரு மாணவரும் இல்லாத பள்ளியாக உள்ளது. 100 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளையும் அடையாளப் படுத்தியுள்ளனர்.

இரண்டே பள்ளிகள்தான் எண்ணிக்கையில் 130 மாணவர்களுக்கும் மேலாக உள்ள பள்ளிகளாக விளங்கிக் கொண்டு இருக்கின்றன.

இந்த மாவட்டத்தில் கடந்த 1960-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்து வந்துள்ளன. மாணவர் எண்ணிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் பள்ளிகளின் எதிர்காலம் பெரும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.





 

1 கருத்து: