13 ஜனவரி 2021

மலாயா தமிழர்களின் வாழ்வியல் முட்டுக்கட்டை - ஆதி சேகர், கோலாகிள்ளான்

12.01.2021

ஒரு காலத்தில் ஆசியா கண்டத்தின் சிங்கம். அமெரிக்காவுக்குத் தலை வணங்காமுடி. மலேசியா தொழில்நுட்பத்தின் தந்தை. புதிய மலேசியாவின் தந்தை. சாதனைத் தந்தை. மண்ணின் மைந்தர்களின் புதிய பரிமாற்றக் கடவுள் என்று எல்லாம் பெயர் எடுத்து; கண்ணீர் வடித்து; அம்மு நோ மாநாட்டில் ஒப்பாரி எல்லாம் வைத்து; நடிக்காத நாடகம் எல்லாம் நடித்து; நடிகர் திலகத்தின் செவாலியர் விருதையே விஞ்சி மிஞ்சிப் பேர் எடுத்தவர்.

மொத்த மேம்பாட்டியான் "காண்ரேட்" எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு...  கைகூலிகளுக்கு "டிப்சாக’ பல காண்ரேட்டுகளைக் கொடுத்து... மண்ணின் மைந்த இனத்தவர்களிடையே இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை இனம்... மதம்... அடிப்படையில் பேதமாக்கி... அரசியலோடு அந்த இனத்தவர்கள் நகர வேண்டும் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிச் சொல்லி...

தமிழர்களையும்... சீனர்களையும்... அந்தச் சமுகத்தினரிடம் இருந்து பிரித்து...  நயவஞ்சகமாகத் தமிழர்கள் மீது பிள்ளையார் சுழி போட்டு... தமிழர் இனத்தைச் சின்னச் சின்னமாய் அழித்து... இந்த நாட்டில் தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றப் பாதைக்குப் பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும் படி எல்லாத் துறைகளிலும்...

அழகாக... சத்தம் இல்லாமல்... தண்ணீருக்குள் நீந்திச் செல்லும் முதலை போல் தடை செய்து... சீனர்களின் வெளிப்படை வியபாரம்... மேம்பாட்டு நிர்வாகப் பணிகள்... தொழில் துறைகளில் முட்டுக் கட்டைகளைப் போட்டு... அவர்களையும் முடக்கி... அவர்கள் செய்யும் தொழில் திறமைகளில்...

மைந்தர் இனத்தவர்களைக் காலத்தின் கட்டாயமாகச் செயல்பட வைத்து இனம்... மதம்... அடிப்படையில் உட்படுத்திச் செய்ய வேண்டும் என்று பல அம்முனோ மாநாட்டில் மறைமுகமாக வற்புறுத்தி அவர்களுக்குப் பல சலுகைகள்... அவர்களுக்கு என்றே...

உதவித் திட்டமாகத் திட்டம் தீட்டி... அதில் பல விபரீதங்கள் நடந்தாலும் அதை அரசியல் ரீதியாக கையாலாகாத முயற்சிக்கு வழிவகுத்து... தற்காத்து... மீண்டும்... மீண்டும்... அவர்களுக்கு வாய்ப்பு தந்து தூக்கி... தூக்கி... ஊட்டி... ஊட்டி...

ஒரு காலத்தில் தமிழர்கள் இல்லையேல்; தார் ரோடு இல்லை என்ற சூழ்நிலையை மாற்றி; இன்று அந்த இனத்தவர் "காண்ரேட்" இல்லையேல் "மானா ஆடா ஜாலான்.." என்று பேசும் அளவுக்கு... பல துறைகளில் நம் இனத்திற்க்கும் சீன இனத்திற்கும் அழுத்தம் தந்து....

தூக்கிவிட்ட ஐயா தூண் அவர்களை... இன்று... அவரின் இனமே பிரார்த்தனை செய்கிறது போய்யானு... உன் காலம் முடியட்டும் என்று... பார்த்தீர்களா....!

இவர் கெட்டவராகவே இருக்கட்டும்... ஆனால் இவர் இனத்துக்கு இவர் எங்கே...? நம் இனத்தின் சாதனைத் தலைவர் எங்கே?

இவர் இவ்வளவும் செய்தும்... அரசியல் ரீதியில் இவரின் இனமே தூற்றுகிறது. ஆனால் அந்த இனத்தின் வாழ்வியல் முன்னேற்றத்தில் இவர்தான் ஏணிப்படி.

நம் இனம் சொந்த உணர்வோடு... உத்வேகத்தோடு... எழ இருந்த நேரத்தில்...

தலைவர்... இனத்துக்குக் கை கொடுத்து தூக்க வழி இருந்தும்... தூக்காமல் குழியை மட்டும் ஆழமாக... எழ முடியாமல் அளவுக்குத் தோண்டி... இன்று அமைதியாக இருக்கிறார்.

நம்மவர்களின் பெருந்தன்மைக்கு எல்லையே இல்லை. நம்பிக்கை இருக்கிறது நம்மவர்களுக்கு... எந்தத் தடைகள் போட்டாலும் தன் நம்பிக்கையில் முன்னேற முடியும் என்று... இது தான் காலத்தின் கோலம்.

எது எப்படியோ மீண்டும் பல இனம் கொண்ட அரசியல் கட்டமைப்பு திரும்புமா என்பது கொஞ்சம் கடினம் தான் இந்த நாட்டில்.

ஒரே வாய்ப்பு பல்லின சமுதாயத்தோடு ஒன்றிப் போகும் தலைவரையும்; கட்சியையும்; மக்கள் வரும் தேர்தலில் அடையாளம் கண்டு பெரும் ஆதரவோடு பல இடங்களில் வெல்ல வைக்க வேண்டும். முக்கியமாக நாடாளுமன்ற நாற்காலி எண்ணிக்கையில் கூடுதல் வேண்டும்.

தாய்க் கட்சிக்கு லாபம்... தமிழர்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளும். நம் இனம் ஆதரிக்கவில்லை என்று... இதற்கு மாற்றம்... நம் இனத்தினரிடையே ஒரு வழி என்றால்...

அக்கரை இரத்த உறவுகளின் ஒற்றுமையோடு... கைகோர்த்து... ஒரே ஓசையோடு ஒரே இன மக்கள் தமிழர்கள் என்று புதிய பரிமாற்றத்தோடு மாற்றம் கண்டால்... இங்கும் மாற்றம் காணும் என்பது என் யூகம். காரணம்...

இந்தியா தமிழ்நாட்டை முன்வைத்தே அதே பாவனையிலேயே நம் அரசியல் தலைவர்களின் நகர்வுகள் இருப்பதாக என் உணர்வு.

தமிழுக்கும்... இந்நாட்டின் தமிழர்களின் உரிமைக்கும்... நமக்காக விடாப்பிடியாக அரசாங்கத்திடம் குரல் கொடுத்து இருந்தால் நமக்கு இப்போது உள்ள சூழ்நிலை வந்து இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து.

இவ்வளவு வரலாற்றுச் சான்றுகளை இந்த நாட்டில் நம் தமிழ் இனத்திற்காக முயற்சி எடுத்து எழுதிய பல எழுத்தாளர்கள் இல்லை என்றால் இப்போது உள்ளவர்கள் பல பேருக்கு... தெரியுமோ... தெரியாதோ... எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கண்ணீர் சிந்தி கூறிய வரலாற்று உண்மைக் கூற்றுகள் தலைவர்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ...

நம்மில் பல பேருக்கு தெரியாமலே போய் இருக்கும். இவ்வேளையில் ஐயா முத்து அவர்களுக்கும் இதர வரலாற்று படைபாளிகளுக்கும் நாம் நன்றியை இரு கரம் கூப்பி கூறி ஆகத் தான் வேண்டும்.

நாம் பாவப்பட்ட இனமாக... இந்த நாட்டில் தலைவர்கள் என்ற தவக்களையை நம்பி மோசம் போனோம். வரும் காலம் தான் புதிய பொங்கல் மாதத்திற்குப் பிறகு பதில் கூறவேண்டும்.

இது என் தனிப்பட்ட கருத்து. பிழை இருப்பின் பொருத்து அருள்க... ஆதி. 🙏 🙏

 

12 ஜனவரி 2021

சிந்தனை - என். எஸ். மணியம். ஜொகூர் பாரு

12.01.2021

மனிதன்
சிந்திக்க
துவங்கி விட்டால்..
சிந்தனை அவரை
இயக்க
துவங்கி விடும்..!

உயர்ந்த சிந்தனை
செய்து வந்தால்
உன் செயலை
உயர்வாக..
ஆக்கி விடும்..!!

சிந்தனையும் செயலும்
உயர்வானால் ..
வெற்றியும் பலனும்
பெரிதாகும்..!!

சிந்தனை எனும்
திறவுகோல்..
வாழ்வின் தத்துவங்களை
திறந்து காட்டும்..!

சிந்தனை தாயென்றால்
அறிவு அதன்
குழந்தை...!!


என். எஸ். மணியம். ஜொகூர் பாரு.

கரப்பான் பூச்சி கோட்பாடு

12.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

கரப்பான்பூச்சி ஒன்றை மையமாக கொண்ட கதை. இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி குறித்த ஒரு தெளிவை உருவாக்கும் என்பது உண்மை.  

ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கு இருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சல் போட ஆரம்பித்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.

மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்தக் கரப்பானைத் தன் மீது இருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்தக் கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதி இழந்து காணப்பட்டது.

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பணியாளர் சூழ்நிலையைச் சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்தப் பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்து இருக்கும் கரப்பானின் நடத்தையைக் கவனித்தார்.

அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதைப் பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசி எறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியில் இருந்து சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கியது.

அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படி எனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதியை இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமும் இல்லாமல் அதை மிக நேர்த்தியாகக் கையாண்டார்.

எனவே அந்த பெண்களின் நடத்தைக்குக் கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்தக் கரப்பான் பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதி இழக்கச் செய்யவில்லை.

அவர்களின் வாக்குவாதத்தைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்து இருக்கிறது. என் அமைதியைக் குலைத்து இருக்கிறது.

* சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்து இருக்கிறது.

நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மன கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்"

* எந்தவொரு சிக்கலும் என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் உருவாக்குவது இல்லை. அந்தக் குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகின்றன. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது,

பதில் அளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கொள்ளும் ஒன்றைத் தவிர.

அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதில் அளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விசயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் அதற்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப் படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்து இருக்கிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையைக் கொண்டாடத் தொடங்குவீர்கள்!

நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

விளக்கம்:

இது சுந்தர் பிச்சை சொன்ன கதை அல்ல. அவர் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அவ்வளவுதான். உண்மையில் ஹரி ராவ் எனும் இந்தியா நாட்டு செய்தியாளர் தன் வலைத்தளத்தில் 2013-ஆம் ஆண்டில் பயன்படுத்திய கதை ஆகும்.

No. Google CEO Sundar Pichai didn't Narrate the Cockroach Theory. Internet posts and blogs with a title, "Cockroach Theory- A beautiful speech by Sundar Pichai" has been going viral since 2015. Verify.Wiki research shows the story was not narrated by Sundar Pichai.

https://verify.wiki/wiki/No._Google_CEO_Sundar_Pichai_didn%27t_Narrate_the_Cockroach_Theory

கட்டுரையின் ஆங்கிலப் பதிவு:

At a restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady. She started screaming out of fear. With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach.

Her reaction was contagious, as everyone in her group also got panicky. The lady finally managed to push the cockroach away but… it landed on another lady in the group. Now, it was the turn of the other lady in the group to continue the drama.

The waiter rushed forward to their rescue. In the relay of throwing, the cockroach next fell upon the waiter. The waiter stood firm, composed himself and observed the behavior of the cockroach on his shirt. When he was confident enough, he grabbed it with his fingers and threw it out of the restaurant.

Sipping my coffee and watching the amusement, the antenna of my mind picked up a few thoughts and started wondering, was the cockroach responsible for their histrionic behavior?

If so, then why was the waiter not disturbed? He handled it near to perfection, without any chaos. It is not the cockroach, but the inability of those people to handle the disturbance caused by the cockroach, that disturbed the ladies.

I realized that, it is not the shouting of my father or my boss or my wife that disturbs me, it’s not the traffic jam that upsets me, it’s my inability to manage my reaction to what happens around me.

Famous Stoic Philosopher Epictetus wrote: Some things are in our control and others not. Things in our control are opinion, persuit, desire, aversion, and, in a word, whatever are our own actions. Things not in our control are body, property, reputation, command, and, in a word, whatever are not our own actions

A core principle of Stoicism is that we can influence the world around us, and we can’t always control what we feel or think, but we can always control how we act.

As Victor Frankl wrote in in Man’s Search for Meaning: Between stimulus and response there is a space. In that space is our power to choose our response. In our response lies our growth and our freedom.

Next time you’re in a compromising situation, consider it an opportunity to grow this space.

 

நீரிழிவு சிகிச்சை

11.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1922 ஜனவரி 11-ஆம் தேதி. இந்த நாளில்தான் இன்சுலின் (Insulin) முதன்முறையாக ஒரு மனித நோயாளிக்குச் செலுத்தப் பட்டது. கனடாவின் டொரண்ட்டோ பொது மருத்துவமனையில்; 14 வயது நீரிழிவு நோயாளிக்குச் செலுத்தப் பட்டது.

On January 11, 1922, Leonard Thompson, a 14-year-old diabetic who lay dying at the Toronto General Hospital, was given the first injection of insulin.

அந்தக் காலத்திலேயே, இளவயதில் நீரிழிவு இருந்து உள்ளது என்பதுடன், கி.மு.1500-ஆம் ஆண்டுகளில் எகிப்தில் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. அதே காலத்தில் இந்திய மருத்துவர்களும் மதுமேகம் என்ற பெயரில் இந்த நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.

கிமு 500 - 400-களில், சுஷ்ருதா, சாரகா ஆகிய இந்திய மருத்துவர்கள், இரு வகை நீரிழிவு உள்ளதைக் கண்டுபிடித்தார்கள். முதல்வகை இளமையோடும், இரண்டாம் வகை உடல் பருமனோடும் தொடர்புடையது என்றும் பதிவு செய்துள்ளனர்.

டயாபடீஸ் என்ற சொல் முதன்முறையாக கி.மு. 250-இல் கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வளவு நீண்ட வரலாறு இருந்தாலும், இந்த நோய்க்கான காரணத்தை அறிய முடியாமல் மருத்துவ உலகம் தவித்தது.

1889-இல் ஆஸ்கார் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வோன் மெரிங் ஆகியோர், நலமாக இருந்த ஒரு நாயின் உடலில் இருந்து கணையத்தை அகற்றிய போது, அதற்கு நீரிழிவு உண்டானதைக் கண்டு அறிந்தனர்.

1910-இல் எட்வர்ட் ஆல்பர்ட், நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட வேதிமத்தின் பற்றாக் குறையுடன் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு இன்சுலின் என்று பெயர் சூட்டினார்.  

1921-இல் பிரடரிக் பேண்ட்டிங் (Frederick Banting); சார்லஸ் பெஸ்ட் (Charles Herbert Best) ஆகியோர் மின்கோவிஸ்கியின் சோதனையைத் தலைகீழாகச் செய்து, அதாவது கணையத்தின் சுரப்பை நாய்க்குச் செலுத்தி நீரிழிவு கட்டுப்படுவதைக் கண்டுபிடித்தனர்.

இவர்கள் ஜேம்ஸ் காலிப் உதவியுடன் மாடுகளின் கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு, மேற்குறிப்பிட்ட அந்த நோயாளி இந்த நோயால் எப்படியும் இறந்து விடுவார் என்ற நிலையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டு அவரது உயிரையும் காப்பாற்றினர்.

நீரிழிவுக்கு முதன்முறையாக ஒரு நம்பகமான சிகிச்சை உருவானது. பேண்ட்டிங் பிறந்த நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.



வீடுகளில் சமைப்பது நின்றதால் அமெரிக்காவில் என்ன நடந்தது?

11.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார்

சமையல் அறையைத் தனியார்க் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது; வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டால்; குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும் என்று 1980-இல் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் தீர்க்கத் தரிசனமாகக் கூறினார்கள்.

அதாவது வீட்டில் சமைப்பதை நிறுத்தி விட்டு; கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது. இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்து விட்டன என்றார்கள்.

அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது. சமையல் கலை மட்டும் அல்ல. அதுவே குடும்பக் கலாச்சாரத்தின் மையப்புள்ளி.

சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.

சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்கக் குடும்பங்களின் நிலை என்ன?

1971-இல் மொத்தக் குடும்பங்களில் ணவனும் - மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.

2020--இல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.

அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்த சூழல் இன்று தங்கும் வீடுகளாகி விட்டது. அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்; ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்; 19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள். 6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண் - பெண் சேர்ந்து தங்கும் இடங்கள்.

இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாதப் பெண்களுக்குப் பிறக்கின்றன. அதில் பாதிக் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு பிறக்கின்றன. இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும், 74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவாகரத்தில் முடிகின்றன.

வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால் திருமணம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா ஓர் உதாரணம்.

அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண் உரிமைவாதிகள்; கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள். குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.

வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப் போகிறது. ஏராளமான தொற்று வியாதிகள் வருகின்றன. சேமிப்பும் குறைகிறது.

எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல
உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்குக் கூட அவசியம்.

இதிலிருந்து அனைத்து நன்மைக்கும் பெண்கள் இன்றியமையாத கடவுளின் படைப்பு என்பதை ஆண்கள் உணரலாம்.

மேலும் ஆன்மிக ரீதியாக சமைப்பவரின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள்
அவர் சமைக்கின்ற உணவிலும் வரும் என்பதும் உண்மை; நம்பிக்கையும் கூட.

ஆதலால்தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஓட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர். ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்; Swiggy, Zomato, Food Panda, Food Uber, Grab Food போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்; மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக் கொண்டு வருகிறது.,

இது ஒரு பேராபத்து... நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாகத் தீர்மானிக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு தற்போது சீன நாட்டு முதலீடுகளும் வந்துள்ளன.

முன்பு எல்லாம் நம் முன்னோர்கள் யாத்திரை அல்லது சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர்ச் சாதங்களைக் கட்டிக் கொண்டு செல்வார்கள்.

நம் தர்மத்தில் வாழ்க்கை முறையில் பெண்களை, குறிப்பாக மனைவியை,
போஜ்யேஷு மாதா, அதாவது உணவூட்டுவதில் தாய், என்கிறது சம்ஸ்கிருத சுபாஷிதம்.

ஆகையால்  வீட்டிலேயே சமையல் செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள். காலையில் எறும்புக்கும் பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் உணவிடுங்கள். குடும்பமாய் இருங்கள். ஒற்றுமையாய் வாழுங்கள்.