05 பிப்ரவரி 2021

மலேசியா தமிழ்ப் பள்ளிகளில் 2021-ஆம் ஆண்டு பதிவு சரிவு

05.02.2021

பதிவு செய்தவர் - பி.கே.குமார், ஈப்போ

மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி - குமரன் வேலு

தமிழ்ப் பள்ளிகளில் 2021 முதலாம் ஆண்டுக்குப் பதிந்த மாணவர் எண்ணிக்கையிலும்  மொத்த மாணவர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.

எண்ணிக்கையில் தொடர் சரிவுகள் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

1. குறைந்த எண்ணிக்கையில்  மாணவர்கள் கொண்டப் பள்ளிகள் மூடுவிழா காணும்.

2. புதிய ஆசிரியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட மாட்டார்கள்.

3. சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தேசியப்பள்ளிக்கு இடம்மாற வேண்டியது வரும்.

4. தலைமை ஆசிரியர் மற்றும் துணைத்தலைமை ஆசிரியர் பதவிகள் பறிபோகும்.

ஆண்டு - முதலாம்  ஆண்டு - மொத்தம்
               
2018       13771           81583           
2019       13281           81420
2020       12578           80743
2021       12489           79 870

2019 ஆம் ஆண்டை விடவும் 2020-இல் 683 குறைந்து; கடந்த 2020-ஆண்டை விடவும் 2021-இல் 873 மாணவர்கள் குறைந்து விட்டனர். 2020-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 369 பள்ளிகள் நகர்ப் புறங்களில் இருக்கின்றன. 158 பள்ளிகள் கிராமபுறப் பள்ளிகள்.

நகரம் - புறநகரம் - மொத்தம்

பள்ளிகள் - (நகரம்) 369 - (புறநகரம்) 158 - (மொத்தம்) 527

மாணவர் - (நகரம்) 72,891 - (புறநகரம்) 17,852 - (மொத்தம்) 80743

(மேல்காணும் தரவு கல்வியமைச்சின் கல்வி ஆய்வுத் திட்டப் பிரிவால் வெளியிடப்பட்டது)

90 விழுக்காடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நகர்ப்புறங்களில் இருக்கின்றனர். வெறும் 10 விழுக்காடு மட்டுமே கிராமபுறத்தைச் சேர்ந்தவர்கள்.

நகர்ப் புறங்களில் புதிய பள்ளிகளை நிருமாணிப்பதும், கிராமப்புறப் பள்ளிகளை நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்த்தலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஓரளவு வழிகோலும். மறுப்பதற்கு இல்லை.

ஆனால், தரவுகளின் இயல்பைப்  பார்க்கும் பொழுது மாணவர் எண்ணிக்கையின் சரிவுக்கு நம்மினத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதே முக்கியக் காரணம் என்பது என்னுடைய தெளிவு.

வீட்டிற்கு 7 - 8 குழந்தைகள் இருந்த காலம் மலையேறி இப்பொழுது 2 - 3 என்றாகி விட்டது. வாழ்க்கை செலவினமும் கல்விச் செலவினமும் அதிகரிக்க அதிகரிக்க பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வருகிறது நமது இனம்.

இது தொடர்பாகக் கடந்த ஆண்டில் ஓர் பதிவைச் செய்திருந்தேன். அப்பொழுதே எச்சரித்தேன். மக்கள் தொகையில் ஏற்படும் வீழ்ச்சி, நமக்கு அரசியல், கல்வி, பொருளாதார ரீதியாக எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதே நிலைமை நீடித்தால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பதிந்திருப்பர் என்பதை ஓரளவுக்கு கணித ரீதியாக அனுமானிக்கலாம்.

Nt =  P x e ^ ( rt)


t =  ஆண்டுகள்

P = மக்கள் தொகை (நடப்பு ஆண்டில்)

r = மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம்

2020 (நடப்பு ஆண்டு) மாணவர் எண்ணிக்கை = 80743

t = 30 ஆண்டுகள் (2050-இல்)


ஆண்டுக்கு சராசரியாக 700 மாணவர்கள் குறைந்து வருவதாக எண்ணிக் கொள்வோம் (தரவுகள் அவ்வாறே காட்டுகின்றன).

அதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் -700/80, 743= - 0.867%   (-) மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்று பொருள்

r = - 0.867%= 0.00876

e = 2.718 (மாறிலி)

N = 80743 x (2.718) ^ ( -0.00876x30) =  61, 875


2030 ஆண்டுவாக்கில் நமது மாணவர் எண்ணிக்கை 61000 ஆக குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

ஏறக்குறைய 20,000 மாணவர்களை இழக்க நேரிடும். பின்பு, 30 மாணவருக்கு  ஓர் வகுப்பறை என்றால், ~700 வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு:

1. தேசியப் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கும் மாணவர்களைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் திருப்ப வேண்டும். அப்படி வரும் போது புதிய வசதியான பள்ளிக்கூடங்கள் தேவைப்படும். புதிய தமிழ்ப் பள்ளிகள் நகர்ப் புறங்களில் கட்டப்பட வேண்டும்.

2. இந்தியர்களின் பிறப்பு விகிதத்தில் ஏற்றம் ஏற்பட வேண்டும். வீட்டுக்கு 4-5 பேராவது குழந்தைகள் தேவை.

- குமரன் வேலு
 

உலகின் முதல் பெண் மருத்துவர் எலிசபெத் பிளாக்வெல்

03.02.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம்

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரும், பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடியுமான எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1821) பிறந்தார். தந்தை சர்க்கரை ஆலை உரிமையாளர். 1830-ல் குடும்பம் நியூயார்க் நகரில் குடியேறியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒஹியோவுக்கு இடம்பெயர்ந்தனர். தந்தை 1838-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

l குடும்ப செலவை சமாளிக்க, சகோதரிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கினார் எலிசபெத். பள்ளியை வெற்றிகரமாக நடத்தமுடியாததால், டியூஷன் வகுப்புகள் எடுத்தார். சிறுகதைகள் எழுதினார். இசை கற்றார். மகளிர் உரிமை தொடர்பான போராட்டங்கள், பிரச்சாரங்களில் பங்கேற்றார்.

l இவரது தோழி ஒருவர் பிறப்புறுப்பு தொற்றுக்காக ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஒரு பெண் டாக்டர் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இவரிடம் வேதனையுடன் கூறினார். ‘நீ ஏன் மருத்துவம் படிக்கக் கூடாது’ என்றும் கேட்டார். அதுவே மருத்துவம் படிக்கும் உந்துதலை இவரிடம் ஏற்படுத்தியது.

l 12 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார். ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்த காலம் என்பதால், இவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் இவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. ‘ஒரு பெண்ணை சேர்ப்பதா, வேண்டாமா?’ என்று 150 மாணவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

l படிப்பின்போதும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். அனைத் தையும் சமாளித்து 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். அமெரிக் காவிலேயே முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண் என்ற பெருமை பெற்றார்.

l உயர்கல்விக்காக ஐரோப்பா சென்றார். அப்போதும் நிராகரிக்கப் பட்டார். பாரீஸில் உள்ள லாமெடர்னைட் என்ற மருத்துவமனையில், மருத்துவர் என்பதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

l ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது இவரது கண்ணில் ரசாயன திரவம் பட்டதால், ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். இதனால், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை நிராசையானது. பின்னர், நியூயார்க் திரும்பியவர், மருத்துவப் பணியைத் தொடங்கினார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரைகளை எழுதினார்.

l பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்த தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஒரு மருத்துவமனை திறந்தார். இவரது தங்கையும் மருத்துவம் படித்து, அமெரிக்காவின் 3-வது பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவினார்.

l இங்கிலாந்து அரசால் ‘பெண் டாக்டர்’ என்று 1865-ல் அங்கீ கரிக்கப்பட்டார். இவரது தீவிர முயற்சியால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ஃபார் வுமன்’ என்ற கல்வி நிறுவனம் 1874-ல் தொடங் கப்பட்டது. லண்டன் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

l கடும் போராட்டங்கள், தடைகள், சவால்கள், அவமானங்களை சந்தித்தாலும் அனைத்தையும் வென்று, பெண்களின் மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிய எலிசபெத் பிளாக்வெல் 89-வது வயதில் (1910) மறைந்தார்.


நூறு கறுப்பு சிவப்பு எறும்புகள்

03.02.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன் கங்கார் பூலாய்

நூறு கறுப்பு எறும்புகளையும்; நூறு சிவப்பு எறும்புகளையும் சேகரித்து; ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால் எதுவும் நடக்காது. ஒரு பிரச்சினையும் வராது.

ஆனால் நீங்கள் அந்த ஜாடியை எடுத்துப் பலமாகக் குலுக்கி ஒரு மேசையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்தது என்ன  நடக்கும்?

நீங்கள் குலுக்கிய வேகத்தில் ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் ஒன்றுக்கு ஒன்று தாக்கி ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும். சிவப்பு கறுப்பை எதிரி என்றும் கறுப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்.

ஆனால் உண்மையில் எதிரி அந்த ஜாடியை அசைத்தவர் யார் என அந்த  எறும்புகளுக்குத் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. அப்படி செய்தவர் ஹாயாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டு இருப்பார்.

அது போல் இந்த சிக்கலான சமுதாயத்திலும் இதே நிலைதான். சாதி மத அரசியல் வெறியர்கள் குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் வக்கிரங்கள்.

குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் எதையும் நம்பி விடாதீர்கள். எங்கு பார்த்தாலும் வதந்திகள்... வதந்திகள்... மட்டும் தான். பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

எந்த விசயத்திலும் பொது புத்தியோடு அணுக வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுவதற்கு முன் நம்மை நாமே, ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த ஜாடியை குலுக்கியது யார்?

வெங்கடேசன்: எதையும் ஆராயமல் உணர்ச்சி வசப்படுவதால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது யார் பொறுமையுடன் இருக்கிறார்கள்?

தேவி கடாரம்: அருமை நல்ல பதிவு




 

04 பிப்ரவரி 2021

மலேசியம் ஹைக்கூ கவிதைகள்

04.02.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

ராதா பச்சையப்பன்: தமிழ் ஹைக்கூ கவிதைகள். நன்று.

தனசேகரன் தேவநாதன்:
படிக்க படிக்க பரவசப் படுத்தியது தங்கள் படைப்பு.

ரஞ்சன் கங்கார் பூலாய்: 90-களில் ஹைக்கூ கவிதைகள் தொட்டால் பற்றிக்குமே என்ற நிலையில் இருந்தது. கால ஓட்டத்தில் அவை மறக்கடிக்கப் படுவது வேதனை. ஆனால் தாங்கள் சமீப காலமாக ஹைக்கூ கவிதைகளைப் பதிவிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

தேவி கடாரம்: ஹைக்கூ கவிதைகளுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு காலத்தில் வார, மாத இதழ்களில் அலங்கரித்த ஹைக்கூ கவிதைகள் இன்று சிலரால் மட்டுமே விரும்பப் படுகிறது.

ரஞ்சன் கங்கார் பூலாய்: உண்மைதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போய் விட்டது. ஆனால் ஹைக்கூ கவிதை அப்படியல்ல. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. 




கலியுகம் பற்றி மகாபாரதம்

04.02.2021

மகாபாரதம் பற்றிய காணொலியைப் பதிவு செய்ததும், ஒருவர் அழைத்துப் பேசினார். இந்து மதம் தமிழர்களின் மதம் அல்ல. அதைப் பற்றி ஏன் பெருமையாகக் காணொலிப் பதிவுகளை எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டார். என்ன பதில் சொல்லலாம். அந்தக் காணொலியைப் பதிவு செய்தது தப்பா? தூங்கப் போகும் நேரத்தில் மனதில் சன்னமாய்ச் சின்ன இறுக்கம். அவரிடம் வாதம் செய்யலாம். ஆனால் தூக்கம் கெடும்.

பாலன் முனியாண்டி: தூங்குபவனை எழுப்பி விடாலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவரை எழுப்பவே முடியாது என்பதை போல... இவருடன் வாதம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட வாதம் பண்ணாமல் இருப்பதே சிறப்பு.

முருகன் சுங்கை சிப்புட்: அவருக்கு தெரிந்த ஒன்றை உங்கள் முன் வைத்துள்ளார். அவர் சொல்வது ஏதும் தவறு இருந்தால், அதை சரிப்படுத்த வேண்டியது தங்கள் கடமை. அதை விடுத்து உதாசீனப் படுத்துவது படித்தவர்களுக்கு அழகல்ல.

தனசேகரன் தேவநாதன்:
புள்ளி வைக்க இயலா விவாதங்கள்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அவரைப் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பார்ப்பதில் அழகு இல்லை.

பௌத்தம் ஒரு மதம். சீக்கியம் ஒரு மதம். கிறிஸ்துவம் ஒரு மதம். அந்த மதங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் கதையாகச் சொல்லும் போது சிலரும் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். குட் வெரிகுட் என்று பின்னூட்டம் வழங்குகிறார்கள்.

ஆனால் இந்து மதத்தின் கதைகளைச் சொல்லும் போது மட்டும் (வாழ்வியல் தத்துவங்கள்) ஏன் சிலருக்கு சினம் வருகிறது. புரியவில்லை. ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காமல் போகட்டும். அது அவருடைய 'பசால்'. அதற்காக மற்றவர்களின் இந்து மதக் கருத்துகளை எதிர்ப்பதில் நியாயம் இல்லை.

பி.கு: இந்தப் பதிவைப் படம் பிடிச்சு மற்ற புலனங்களில் போட்டு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... தமிழம் இயக்கத்துக்கு எதிரானவன் என்று பிரசாரம் செய்யாமல் இருந்தால் கோடி புண்ணியம். ஏற்கனவே பட்டு இருக்கிறேன்.

ராதா பச்சையப்பன்:
ஆமாம் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். நமக்கு தான் தெரிவது இல்லை.

கரு. ராஜா: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது போன்ற விவாதங்களை தவிர்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
இந்து எனும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக பல முறை வம்புக்கு இழுத்து பல முறை என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி ஓர் இந்துவத்வா என்றால் அதற்கு நாம் இங்கே என்ன செய்வது... இந்து என்பது ஒரு மதம். சிலர் சமயம் என்கிறார்கள். அதன் கீழே சைவம், சைவ சித்தாந்தம், என்பது எல்லாம் பிரிவுகள் அல்லது சமயப் பிரிவுகள்.

தினகரன் சுப்பிரமணியம் தங்காக்:
விடுங்கள் ஆசான் மனிதம் காப்போம்.

தேவிசர கடாரம்: முற்றிலும் உண்மை ஐயா. தெளிவாக சொல்லி இருக்கிறீகள். நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால் அது நம் கருத்து. அதை மற்றவர் மேல் திணிப்பது அநியாயம்.