05 பிப்ரவரி 2021

நூறு கறுப்பு சிவப்பு எறும்புகள்

03.02.2021

பதிவு செய்தவர்: ரஞ்சன் கங்கார் பூலாய்

நூறு கறுப்பு எறும்புகளையும்; நூறு சிவப்பு எறும்புகளையும் சேகரித்து; ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால் எதுவும் நடக்காது. ஒரு பிரச்சினையும் வராது.

ஆனால் நீங்கள் அந்த ஜாடியை எடுத்துப் பலமாகக் குலுக்கி ஒரு மேசையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்தது என்ன  நடக்கும்?

நீங்கள் குலுக்கிய வேகத்தில் ஒன்றும் புரியாத அந்த எறும்புகள் ஒன்றுக்கு ஒன்று தாக்கி ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும். சிவப்பு கறுப்பை எதிரி என்றும் கறுப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்.

ஆனால் உண்மையில் எதிரி அந்த ஜாடியை அசைத்தவர் யார் என அந்த  எறும்புகளுக்குத் தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. அப்படி செய்தவர் ஹாயாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டு இருப்பார்.

அது போல் இந்த சிக்கலான சமுதாயத்திலும் இதே நிலைதான். சாதி மத அரசியல் வெறியர்கள் குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் வக்கிரங்கள்.

குறிப்பாக மதம் சார்ந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் பதிவிடும் பகிரும் எதையும் நம்பி விடாதீர்கள். எங்கு பார்த்தாலும் வதந்திகள்... வதந்திகள்... மட்டும் தான். பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

எந்த விசயத்திலும் பொது புத்தியோடு அணுக வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டை இடுவதற்கு முன் நம்மை நாமே, ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த ஜாடியை குலுக்கியது யார்?

வெங்கடேசன்: எதையும் ஆராயமல் உணர்ச்சி வசப்படுவதால் தான் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது யார் பொறுமையுடன் இருக்கிறார்கள்?

தேவி கடாரம்: அருமை நல்ல பதிவு




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக