29 ஜூன் 2021

கங்கா நகரப் பேரரசு - 29.06.2021


கணேசன் சித்தியவான்: 20 ஆண்டுகளுக்கு முன் பெருவாஸ் Kg Kota வளைவில் makam Raja Cholan என்று பெயர் பலகை இருந்தது. இப்பொழுது makam Raja Beruas என்று உள்ளது. பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பாடலில் கங்கையின் வாசம் தென்றலில் வீசும்... ராஜ ராஜ சோழனின் வம்சம்... என்று தொடங்கும்

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நல்ல தகவல். கங்கா நகரத்தைப் பற்றி ஏற்கனவே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி இருக்கிறேன். இப்போது ஆசிரியர் கணேசன் கொடுத்த தகவலையும் உடனடியாக இணைத்து விட்டேன். நன்றிங்க.

கங்கா நகரம் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/s/3wfv

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான் தம்பி. அதே போல் இந்த மாவட்டத்தின் பந்தாய் ரெமிஸ் பட்டணத்தின் பிரதான சாலையின் பெயர் jalan Ganga negara என்று இருந்தது. இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

மகாலிங்கம் படவெட்டான்: அற்புதம் ஐயா.. நன்றி வாழ்த்துகள்... புருவாஸ் நகரமும் அதன் சுற்றுப்புறமும் கடந்த 60 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு உண்டு... தெரிந்த விடயம் கொஞ்சம் தான்.. ஆனால், தங்களின் இந்த கட்டுரையைப் படித்து இன்னும் பல சரித்திர புரிதல் ஏற்பட்டுள்ளது... 🌹🙏🏽🌹

மோகன் காசிநாதன்: முற்றிலும் உண்மை. பல மறைக்க பட்டது. இதற்கு ஒரே வழி, மீண்டும் அங்கே ஆய்வு நடத்த வேண்டும். அதுவும் இந்தியர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளி வரும். இது நடக்காதா என பல நாட்கள் ஏங்கியது உண்டு. என்று தீருமோ இந்த தாகம். 🙏

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆய்வு நடத்தலாம். நல்ல  கருத்து. அதற்கு ஏற்படும் செலவை யார் ஏற்றுக் கொள்வது. தங்களைப் போல கருத்து முன்வைப்பாளர்கள் நிதியுதவி செய்தால் நாங்கள் தயார். தாங்கள் நிதியுதவி செய்ய முடியுமா ஐயா? அங்கே கேட்கலாம் இங்கே கேட்கலாம் எனும் மீண்டும் கருத்துகள் வேண்டாம். உங்களால் இயன்றால் நிதியுதவி செய்யுங்கள்.

கோத்தா கெலாங்கி ஆய்வுகளில் நம் தமிழ் ஆய்வாளர்கள் பல்லாயிரம் செலவு செய்து விட்டார்கள். அதில் நானும் ஒருவன். உதவி செய்ய எந்த அமைப்பும் முன் வரவில்லை. மூடி மறைக்கும் மேலாதிக்கத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என உதவி செய்ய மறுக்கிறார்கள்.

எல்லோரும் இந்தியர்களாக இருக்க வேண்டும். முடியுமா? 2013-ஆம் ஆண்டில் களம் இறங்கி ஆய்வு செய்து, சேகரித்த தகவல்களைக் கொண்டு 'கங்கா நகரம்' கட்டுரையைத் தயாரித்தேன் என்பதைப் பணிவுடன் முன் வைக்கிறேன். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: உண்மைதான். ஐயா தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆய்வுகளும் அதே பரிதாபம் தான் போல. உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்;

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு; நமது தமிழர்களின் தடயங்களை ஆய்வு செய்ய என்னதான் செய்தார்கள். மாநாடு கூடியது. சிறப்பாக நடத்தி முடித்தோம் என மங்கலம் பாடியதோடு சரி. தமிழ் நாட்டுத் தொல்லியல்துறை உள்நாட்டிலேயே ஓணான் பிடிக்க முடியவில்லை. நம்ப நாட்டிற்கு வந்து விடுவார்ளா என்ன.

தங்களைப் போன்ற தன்னார்வப் பணியால் தான் நாங்கள் கொஞ்ச நஞ்சம் சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறோம். தற்சமயம் தாங்கள் செய்து கொண்டிருப்பதே பெரும் பணி. பார்ப்போம். எதிர்காலம் எப்படியோ?

தாங்கள், சுக்கை பட்டாணி நடராஜா; டாக்டர் ஜெயபாரதி இன்னும் இலைமறை காயாக சிலர் எடுத்த முயற்சிகள் வீண் போகாமல் இருக்க வேண்டும் என்பதே. நமது எண்ணம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: அங்கே தமிழர்களின் தடயங்களை இராத்திரி நேரத்தில் மறைக்கிறார்கள். இங்கே விடியல் காலையில் மறைக்கிறார்கள். தவிர மலாயா தமிழர்கள் எனும் உணர்வில் எவ்வளவோ செலவாகி விட்டது. எங்கேயாவது முதலீடு செய்து இருக்கலாமே என்று சமயங்களில் நினைப்பதும் உண்டு. விடுங்கள். யாருக்காக செலவு செய்தோம். நம் எதிர்காலச் சந்ததியினரின் விழிப்பு உணர்வுக்காகச் செலவு செய்தோம். அந்த மனநிறைவு போதும்.

 

பிரதமருக்குப் போன் செய்யும் பெண்கள்



மலாக்கா முத்துகிருஷ்ணன்: பிரதமருக்கு போன் செய்யும் அளவிற்கு நம் பெண்கள் முன்னேறி விட்டார்கள். அதிக உரிமை கொடுத்தால் பாவம் ஆண்கள்... 😞

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இது ரொம்ப நல்லா இருக்கு!!! தொடர்ந்தால் பெண்கள் செய்யும் எல்லா வேலையையும் மறந்து விடுவார்கள்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவு என்று புந்தோங் பக்கிரிசாமி அனுப்பி வைத்தது...

ராதா பச்சையப்பன்: பெண்களுக்குச் சம உரிமை என்பது சும்மா தானா? பிரதமரிடம்  பேசியதில் நீங்கள் எல்லாம் பெண்கள் எங்களை நினைத்து பெருமைப்பட வேண்டுமே தவிர, பொறாமை படக் கூடாது. 😃🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  அதற்கு புருசன்காரனை இப்படியா வேலை வாங்குவது. பாவம் அந்த புருசன்காரன்.

தேவி சர: இல்லை அப்பா... பாவம் பெண்கள் இன்று பல வீடுகளில் ஆண்கள் பெண் சம்பாத்தியத்தில் தான் வாழ்கிறார்கள்.... அதுவும் படித்த பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் சொகுசு வாழ்க்கைதான்...

மலாக்கா முத்துகிருஷ்ணன்: இது எங்களைப் போன்றவர்களுக்கு அல்ல. இப்போது உள்ள இளைஞர்கள் சிலருக்குப் பொருந்தி வரும். இதுவரை என் மனைவியை வேலைக்கு அனுப்பியது கிடையாது.

முன்பு என் சம்பளத்தில் கடைசி பத்து வெள்ளிகள் (50 வெள்ளி) மட்டுமே என் சொந்தச் செலவு. மற்ற நூறு வெள்ளிகள் எல்லாம் குடும்பத்திற்கு... பல வருடங்கள்.

கரு. ராஜா: சுபாங் ஜெயா: இடுப்பு உடைந்துவிடும்.

ராதா பச்சையப்பன்:  கட்டினதில் இருந்து கடைசி வரையிலும் நாங்க செய்யும் போது யாருக்கும் எங்கள் மீது பரிதாபமே வரவில்லையே. அத்தி பூத்த மாதிரி ஒரு சில நாட்கள் செய்தால், அதற்குப் பெயர் கொடுமையா? இந்தக் கொடுமையை எங்க போய் சொல்வது. இந்த ‌கொரோனா வந்ததே இப்படி பட்ட ஆண்களால் தான். மனைவி தினம் படும் கஷ்டம் இப்பவாவது தெரிதால் சரி.🙏🌺.

ராதா பச்சையப்பன்:  >>>> கரு. ராஜா, சுபாங் ஜெயா: அண்ணா, நீங்களுமா?😳😳😱 நீங்க இப்படி சொல்வீங்க என்று நினைத்துப் பார்க்கவில்லை. அண்ணியின் மீது அலாதி பிரியம் கொண்டவர் நீங்கள். நம்ப முடியவில்லை 😳🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: ஒவ்வொரு வீட்டிலும் எந்தக் கணவன் என்ன வேலை செய்வான் என்று யாருக்கும் தெரியாது. அதே சமயத்தில் வீட்டு வேலைக்கு இப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்... வெளியே போய் மாடாய் உழைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

தனசேகரன் தேவநாதன்: கொடுமை... கொடுமை. என் மலேசியம் புலனம் பக்கம் போனால் அங்கே இரண்டு கொடுமை கொண்டை கட்டி ஆடுதோ இராதா அம்மா 😃😄😀🤣

மலாக்கா முத்துகிருஷ்ணன்: எனக்குத் தெரிந்த ஒருவர் மூன்று வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறார். காலையில் ஜே.கே.ஆர். வேலை. பிற்பகலில் மீன் மார்க்கெட் வேலை. இரவில் ஜாகா வேலை. இப்படி மூன்று வேலை செய்தவர் சீக்கிரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டார். நல்ல உழைப்பாளி.

ராதா பச்சையப்பன்: 🙏இப்படி உழைத்தவர் ஒருவர், தன் பிள்ளைகள் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்களே, அந்த அப்பாவும் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தார். நீங்க சொன்னவருக்கு ஏதாவது நோய் இருந்திருக்கும். 😃🙏.

ராதா பச்சையப்பன்:  >>>> தனசேகரன் தேவநாதன்: நீங்களுமா சகோதரரே! எனக்கு சப்போட் பண்ண இந்தப் புலனத்தில் ‌பெண்கள் யாருமே இல்லையா சகோதரிகளே? 😢😳😳.

தனசேகரன் தேவநாதன்: தாய் குலம் என்றுமே தெய்வத்திற் நிகர். வருத்தம் வேண்டாமே... 🌹🙏🌹🙏🌹🙏

தேவி சர:>>>> தனசேகரன் தேவநாதன்: அப்படி சொல்லுங்கள் ஐயா👍🏻👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்: நான் இருக்கேன் பயப்படாதேமா... ஆனாலும் இன்றைக்கு மட்டும்... என் ஆண் இனத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன். நான் ஆண்கள் கட்சி. 😃😃😃

தேவி சர:இந்தக் கேலிசித்திரம் வரைந்தவர் வீட்டில் இப்படித்தான் இருப்பார் போலும்... 🤷🏻‍♀️

தனசேகரன் தேவநாதன்: எடுத்து விட்டார் துப்பாக்கியை தேவி அம்மா...

தேவி சர: அவர் வரைந்த படத்திற்கு நம் புலனத்தில் இப்படி விமர்சனம் வரும் என்று அடியேன் எதிர்பார்க்கவில்லை...

மகாலிங்கம் படதேவன்: உணர்ந்து வரைந்துள்ளாரோ?

தேவி சர:அவர் உணர்ந்து வரைந்துள்ளார்.... ஆனால்.... விமர்சனம் இப்படி வருகிறதே... 🤔ம்...

முருகன் சுங்கை சிப்புட்: தாயின் கருவறையில் முதலில் தோன்றியவள் பெண் என்று நினைக்கிறேன்.பெண்களுக்கே என் ஓட்டு.

தேவி சர:நன்றி ஐயா🙏🏻. ஒர் ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் குடும்பத்தை நடத்தி விடுவாள்.

கலைவாணி ஜான்சன்: அருமை சகோதரி.... விட்டுக் கொடுக்கும் மனம் வர வேண்டும்... 👏🏻👏🏻

ராதா பச்சையப்பன்: உண்மையைதான் சொன்னேன். எங்களுக்கு மாத வருமானமே போதுமானது. என்னால் கொடுக்க முடியவில்லை என்றாலும் இல்லாதவர்களுக்கு  கொடுப்பதுதான் முறை. கடந்த காலங்களில் நானும், என்னவரும் ம.இ.கா. நிர்வாகத்தில் இருந்தோம். நான் தலைவி. எங்களுக்கு என்று எதுவும் கேட்பதில்லை. அவர்களும் எதுவும் கொடுத்தது இல்லை. எங்களுக்கு வருத்தமும் இல்லை. நாங்கள் சிறப்பாகவே இருக்கிறோம். நன்றி சகோதரி 🙏🙏🌺.

செல்லையா செல்லம்: .இப்படி வேலை செய்வது என்ன பிரச்சினை நம் இல்லத்து அரசிகளுக்கு  கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  கெமர் நாட்டுப் பெண்கள் தங்களின் கணவன்மார்களை வீட்டு வேலைகள் செய்ய அனுமதிப்பது இல்லை.

கரு. ராஜா: கல்யாணம் முடிந்து என் மனைவி என் வீட்டிற்கு வந்ததும், சொன்ன முதல்வார்த்தை, எங்கள் வம்சத்தில் நாங்கள் கணவனை சமையல் கூடத்திஏகு அனுமதிப்பது இல்லை என்று கூறினார். இன்னும் அது தொடர்கிறது. அவர்கள் வெளிநாடு சுற்றுலா போகும் போது மட்டுமே சமையல் பிரச்னை வரும்.

ராதா பச்சையப்பன்:  உண்மைதானே! அன்று  சொன்னதை, இன்றும் அண்ணி கடைபிடித்து  தானே வருகிறார். பிறகு என்ன?👌

மலாக்கா முத்துகிருஷ்ணன்:  எல்லோருடைய வீட்டிலும் பெண்கள் அப்படி நடந்து கொண்டால் புண்ணியம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

ராதா பச்சையப்பன்: 🙏 என் திருமணம் 16- வயதில்... வீட்டு வேலை சமையல் எல்லாம் என் பிறந்த வீட்டில் நான்தான் செய்வது. அதைப் பார்த்த என் மாமி என்னை தன் மருமகளாக்கினார். தனியாகப் போகும் வரை எல்லாம் நான்தான் செய்தேன்.

குளத்திலிருந்து தண்ணீரைக் காண்டா போட்டு தூக்கி வருவது. விறகு பொறுக்குவது எல்லாம். என் நாத்திகள் உதவுவார்கள்.

என்னவரை என் மாமி ஒரு வேலை செய்ய விடுவது இல்லை. தலைமகன் செல்லமாக பார்ப்பார். தனியாக வந்தும் எல்லா வசதிகளும் இருந்தும், என்னவர் எந்த வேலையும் வீட்டில் செய்வது இல்லை.

அவருடைய அரசாங்க வேலையை மட்டுமே செய்வது உண்டு. குடிக்கத் தண்ணீர் வேண்டுமானாலும் நான்தான் எடுத்து அவர் கையில் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் வந்த பிறகும் அப்படியே.

டி, காப்பி கலக்கக் கூட தெரியாது. இவர் தன் பெண் பிள்ளைகளையும் எந்த வேலையும் செய்ய விடுவது இல்லை. ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்றாலும் நான்தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.  

பிள்ளைகளும் அவரோடுதான் இருப்பார்கள். அந்தச் சமயத்தில் கோபம் வரும் பாருங்க... உங்க பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பும் போது, வரதட்சனையாக வீட்டு வேலைக்கு ஒரு‌ ஆளையும் அனுப்பி வைங்கனு கத்துவேன். 🙏🌺.

மலாக்கா முத்துகிருஷ்ணன்: கொடுத்த வைத்த கணவர்...  👍

கரு. ராஜா: கொடுத்து வைத்தக் கணவர் அவர்

ராதா பச்சையப்பன்: நீங்களும் நிறையவே கொடுத்து வைத்தவர் தான் அண்ணா. எல்லா வகையிலும் அண்ணி சிறப்பானவர் தானே! எல்லோருமே ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் தான். உண்மைதான். அடுத்தப் பிறவி என்று ஒன்று இருந்தால் அவரே மீண்டும் என்னவராக வர வேண்டும். 🙏🙏🌺.

கரு. ராஜா: அப்படியே நடக்கட்டும். நீங்கள் கேட்ட வரம் கொடுத்து விட்டேன். மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே பக்தா.

 

கோலா சிலாங்கூர் இந்தியர்களுக்கு உதவிப் பொருள்கள்


கரு. ராஜா, சுபாங் ஜெயா: இந்த கேள்வி ராதாவுக்கு? மேற்கண்ட உதவித் திட்டத்தின் கீழ் உங்களுக்குப் பொருள் ஏதாவது கிடைத்ததா?

ராதா பச்சையப்பன்: உதவி பெற்ற இடம் எல்லாம்  காப்பாருக்கும், ஜெரத்திற்கும் இடையில் உள்ளது. மாவட்டம் தான் கோலசிலாங்கூர். எங்கள் இடத்துக்கு இது போன்ற உதவிகள் வருவது குறைவு தான். அப்படியே வந்தாலும் மலாய்க்காரர்களுக்குத் தான்; மலாய்க்காரர்களுக்குத் தான் கொடுப்பார்கள்.

இதை எப்பவும் நான் எதிர் பார்ப்பதில்லை. எனக்கு ஓர் அளவு வசதி உண்டு. இவை எல்லாம் மிகவும் ஏழ்ழையில் கஷ்டப் படுபவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அப்படி கிடைத்தால் பெறும் மகிழ்ச்சி அடைவேன். தீபாவளிக்கும் நம்மவர்களுக்கு, பணமாகவோ, பொருளாகவோ கொடுப்பார்கள். இன்று வரை எதையும் நான் வாங்கியதும் இல்லை. கேட்டதும் இல்லை. அதை விரும்புவதும் இல்லை. ஏழைகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தாலே போதுமே. கேட்டதற்கு நன்றி சகோதரரே. 🙏🌺

மலாக்கா முத்துகிருஷ்ணன்: சபாஷ் 👏👏👏. இப்படித்தான் இருக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை... வெரிகுட்...

 

27 ஜூன் 2021

பழங்கால விவசாயப் பழமொழிகள்

பதிவு செய்தவர்: கலைவாணி ஜான்சன்


🌝 தவளை கத்தினால் மழை

🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ

🌝 அகல உழவதை விட ஆழ உழுவது மேல்

🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

🌝 சொத்தைப் போல் விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு. கடைசி மரமும் விஷம் ஏறிக் கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும் - இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம். இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

அன்புடன்,
உங்கள் விவசாய நண்பன்

 பின்னூட்டங்கள்:

ராதா பச்சையப்பன்: படித்து பார்த்தேன். இது வரை எனக்கு தெரியாத விவசாய பழமொழிகளும் உண்டு. அருமை🙏🌹

நாகப்பன்: உண்மை... முன்னோர்கள் சொல்மிக்க மந்திரமில்லை.

 

 

பால் மங்கு பழைய நினைவுகள்


பதிவு செய்தவர்:  தனசேகரன் தேவநாதன்


தனசேகரன் தேவநாதன்: மலேசிய தமிழரின் இரத்த வியர்வையைப் பறைசாற்றும் நினைவுச் சின்னம். இளவயதில் பெற்றோர்களுக்கு மங்கு துடைக்க போகாத பிள்ளைகள் உண்டோ தோட்டத்திலே... இந்த மங்கில் என் தாயாரின் நிரையில் வாலியில் பால் சேர்த்த ஞாபகம் வருகிறது. (1960)

முருகன் சுங்கை சிப்புட்: குரங்குகளின் விளையாட்டு பொருட்கள் இந்த மங்கு

தேவி சர: இது தான் மங்கு என்பதை இப்போது தான் பார்க்கிறேன்... என் அம்மா தோட்டத்து வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பார்த்து படித்து கருத்தும் எழுதி விட்டேன் அப்பா... 👌👍🏻

மகாலிங்கம் படவேட்டான்: தமிழினத்திற்குச் சோறு போட்ட மங்கு...

கரு ராஜா சுங்கைபூலோ: [11:42 am, 27/06/2021] Raja Sg Buluh: ரப்பர் மரத்தில் கம்பியில் கட்டி தொங்க விட்டதும் மங்குதான். அந்தக் காலக்கட்டத்தில் தோட்டங்களில் பீங்கான் தட்டு பாவிப்பது இல்லை. ஒரு மாதிரி இரும்பு தகட்டில் வெள்ளை நிறத்தில் சாயம் பூசிய மங்கில் சாதம் சாப்பிட்டதை ஒரு சிலர் மறந்திருக்க முடியாது.

இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் அந்த மங்கு கீழே விழுந்ததும் சில்லு பட்டுவிடும். அதை எல்லாம் தோட்டத்து மக்கள் பெரிது படுத்துவதில்லை. என் தாயார் அடிக்கடி இப்படி சொல்லுவார்.

ஏண்டா சாப்பிட்ட மங்கை கழுவவில்லை என்று. இப்படி எல்லாம் நம் தோட்டத்து வாழ்க்கை முறை. இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்க்ஷ்டக்காரப் பிள்ளைகள். கொடுத்து வைத்த பிள்ளைகள்.


ராதா பச்சையப்பன்: பலருக்கும் சின்ன வயது ஞாபகத்தை நினைவு படுத்தி விட்டது இந்த பால் மங்கு. இதைச் சிலர் அவரவர் வீட்டிலும் உபயோகித்தார்கள்.  வயதானவர்கள் வெற்றிலை, பாக்கு இடிக்க உதவியது. செல்லப் பிராணிகளுக்குப் பால், தண்ணீர் ஊற்றி வைக்க உதவியது. சிலர் கிச்சனிலும் உபயோகித்தார்கள்.  

இந்த மங்கு ஆற்றிய சேவைகளைத்தான் மறக்க, மறைக்க முடியுமா? சரித்திரப் புகழ் பெற்றது. சில சமயம் இந்த மங்கை துடைக்கும் போது, உள்ளே இருக்கும் சிறு சிறு கல்கள் கையில் வெட்டி இரத்தம் வந்த சம்பவம் எனக்கு நிறையவே உள்ளது.

சில தோட்டங்களில் பிளாஷ்டிக் மங்கும் உபயோகத்தில் இருந்தது. சிலர் இந்த வகை மங்குகளை இன்றும் நினைவுச் சின்னமாக வைத்துள்ளார்கள். இந்த மங்கை கேட்டால் பல கடந்த காலக் கதைகளைச் சொல்லும். பழையதை நினைவுக்கு கொண்டு வந்த இதன்‌ பதிவாளருக்கு நன்றிகள். 🙏🙏👌🌹.

பாரதிதாசன் சித்தியவான்: உண்மைதான் ஐயா

தனசேகரன் தேவநாதன்: பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது சிறிய ஓடையில் ஓடும் தண்ணீரை இந்த பால் பங்கு கொண்டு அள்ளி அள்ளிக் குடித்து கும்மாளம் போட்டாலும் வாந்தியும் இல்லை பேதியும் இல்லை. கலாராவும் இல்லை. கொரானாவும் இல்லை.

இன்று மினரல் நீர் சுகாதாரம் கொடிகட்டி பறக்குதே ஏன்? மாதவா கேசவா மகேஸ்வரா...

பெருமாள் கோலாலம்பூர்: 👍 உண்மை. அந்தக் காலத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த மங்கைத் தலைகீழாகத் திருப்பி சுட்ட வசம்பை உரசி பொட்டு வைப்பார்கள் அந்தக் கால பெண்பால் பெருசுகள் 👌

ராதா பச்சையப்பன்: உண்மை. 💯/💯. இன்னும் சில, பல கதைகளும் உள்ளன இந்த மங்கில்... கால தாமதமாக மங்கு துடைக்கப் போனதால், அந்த மங்கில் அடி வாங்கிய கதைகளும் அடங்கும் 🙏🌹.

கலைவாணி ஜான்சன்: பழைய நினைவுகள்... பால் மரக் காட்டினில், பனி பெய்யும் வேளையில்... 😊

தேவி சர >>> கரு ராஜா: அருமை ஐயா... தங்கள் அம்மாவின் நினைவுகளா இவை...  சில்லு என்றால் என்ன... எனக்கு புரியவில்லை... ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... இப்ப உள்ள பிள்ளைகள் அதிர்ஷடக்கார பிள்ளைகள்...🙁 இப்ப உள்ள பிள்ளைகள் பாவம் ஐயா... தெருவில் ஓடியாடி  விளையாட முடியவில்லை...

வீட்டில் விடியோ கேம் அல்லது திறன் பேசி, கணினி என்று உட்கார்ந்த இடத்திலேயே நண்பர்கள் இல்லாமல் தனியாக விளையாடுகிறார்கள்.

மேலும், உடன் பிறப்புகள் இருந்தால் கூட தனியாகவே இம்மாதிரியான விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாம் தான் ஐயா அதிர்ஷ்டசாலிகள்... வெறும் காலோடு தெருவில் நண்பர்களோடு விளையாடினோமே அது தான் அன்றைய  பிள்ளைகளுக்கு பொற்காலம்.

கூட்டஞ்சோறு ஆக்கி ஆளுக்கொரு இலை பறித்து ஒன்னா உக்காந்து சாப்பிட்டோமே அது பொற்காலம்... நம்ம பொன்னான காலம். அதுவே அதிர்ஷ்ட பிள்ளைகளின் காலம் 🥰.😔🥺

கரு ராஜா >>> தேவி சர: வணக்கம் தேவி. சில்லு என்பதற்கு விளக்கம் கேட்டீர்கள். இப்ப தான் பார்த்தேன். காலயில் தோட்டத்திற்குப் போயிருந்தேன்.

ஒரு கண்ணாடிக் கோப்பை லேசாக இடிப்பட்டால், உடையாது. அதற்கு வீரு விட்டுடுச்சுனு சொல்லுவோம்.

அந்தக் காலத்தில் தோட்டத்தில் உணவு அருந்துவதற்கு ஒருவிதமான தட்டு எல்லா வீட்டிலும் உபயோகப் படுத்தினார்கள். அது லேசான இரும்பில் செய்யப்பட்டு, மேலே வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருக்கும்.

கீழே விழுந்ததும் வெள்ளை நிறம் லேசாக வெளியாகி அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் கருப்பாய் இருக்கும். இதைத்தான் நாங்கள் சில்லு விட்டுடுச்சு என்போம். அந்த மாதிரி பாத்திரங்கள் இப்ப புழக்கத்தில் இல்லை. ராதாவுக்கும் இதே பதில்தான்.

தேவி சர: அப்படியா ஐயா. எனக்கு விளங்கி விட்டது... அந்தப் பாத்திரம் என் கற்பனைக்கு வந்து விட்டது. நன்றி ஐயா. 🙏🏻

ராதா பச்சையப்பன்: 🙏 மகிழ்ச்சி. நீங்கள் சொன்னது எனக்கும் புரிந்தது. நானும் தோட்டப் புறத்தில் வாழ்ந்தவள் தானே. நீங்கள் சொல்லும் அப்போது உள்ள அந்த மங்கு, குவளை, தட்டுகள் இன்றும் சிலர் வைத்து உள்ளார்கள். ஒரு சொருகல்.       

என் பக்கத்து வீட்டு அம்மாவுக்கு எட்டும் ஆண் பிள்ளைகள். அந்த அம்மா, பெரிய இரண்டு மகன்களுக்கு தனித் தனி தட்டில் சாப்பாட்டைப் போட்டு கொடுத்து விட்டு, மற்ற ஆறு பையன்களுக்கும் சகோதரர் திரு. கருப்பையா சொன்ன அந்த மாதிரியான பெரிய தட்டில் எல்லாச் சோறு கறிகளையும் போட்டுக் கொடுப்பதை... அதில் ஒரு பெரிய பையன் பிசைந்து கொடுத்து எல்லா பையனுங்களும் சாப்பிடுவார்கள். 

கடைசியாகச் சாப்பிட்டு முடிக்கும் பையன்தான் தட்டை கழுவி வைக்க வேண்டும். அந்த அம்மாவில் அவ்வளவு தட்டையும் கழுவ இயளாது. அவங்களும் தோட்டத்தில் வேலை செய்பவர்தான். பக்கத்து வீடு என்பதால் இதை தினமும் பார்ப்பேன். 😃🙏🌹.

பெருமாள் கோலாலம்பூர்: நான் ஆயக் கொட்டகையில் இருந்த போது அந்த ஆயா  தன் வீட்டில் சமைத்த உணவை (சோறு, கறி, காய்கறி) கலந்து பிசைந்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஓர் உருண்டை பிடித்து கொடுப்பார்.

அம்மாதிரியான தாயுள்ளம் கண்டு இன்று மனம் நெகிழ்கிறேன். பால் டின் மட்டுமே இலவசமாக தோட்ட நிர்வாகம் கொடுக்கும். அது 1956-இல் நடந்த சம்பவம்.

ராதா பச்சையப்பன்: 🌹🙏 அருமையான பதிவு. இதை அப்படியே வலைத்தளத்தில் பதிவேற்றிய நம் புலன தலைவருக்கு என் இரு கரம் கூப்பி, தலை வணங்குகிறேன்.  இப்படி ஒருவர் நமக்கு எல்லாம் கிடைத்து நாம் செய்த பலண் என்று தான் சொல்ல வேண்டும்.

நாம் எதிர் பார்த்தோமா நம்முடைய எழுத்துப் படிவங்கள் வலைதளத்தில் பதிக்கப் படும் என்று... நம் பின்னால் வரும் நம் சந்ததியினர் இந்தப் பதிவைப் படித்து பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்... தோட்டப்புற வாழ்க்கையில் இரப்பர் மரம் சீவி ரப்பர் பால் எடுக்கும் முறையை... இது ஒரு நல்ல பதிவு. தலைவருக்கு நன்றிகள். 🙏

தனசேகரன் தேவநாதன்: நியாயமான பாராட்டுக்கள். நன்றி அம்மா.

ராதா பச்சையப்பன் >>> தனசேகரன் தேவநாதன்: இன்று  இப்படி ஒரு தலைப்பை  பதிவு செய்தவரே நீங்கள் தானே உங்களுக்கும் நன்றிகள். இப்படி ஒரு பால் மங்கைப்  போட்டு, பலரின் மனதில் பல வருடங்களாக  மறைந்து இருந்த ஆதங்கத்தை  வெளியில் வந்து தங்கள் கருத்துகளை  கூற வைத்தது எவ்வளவு பெரிய விசயம்.

கடந்த காலத்தை எத்தனைப் பேர் இன்று அசை போட்டு பார்த்து இருப்பார்கள். அதில் நானும் ஒருத்தி. தலைப்பைப் பதிவு செய்தவருக்கும்; தங்கள் மனதில் உள்ளதை எழுதோவியமாக பதிவு செய்தவர்களுக்கும், அதை அழகாக வடிவமைத்து வலைதளத்தில் பதிவேற்றியவருக்கும் நன்றியும் பாராட்டயும் தெரிவித்துக் கொள்கின்றேன். 🙏🌹.
 
பெருமாள் கோலாலம்பூர்: தலைவரின் எண்ணங்கள் புலன உறுப்பினர்களை விட ஜெட் வேகத்தில் பறக்கிறது. இம்மாதிரியான ஜாம்பவான்களோடு எழுத்துலகில் பயணிப்பது பெரும் மகிழ்ச்சி என்பேன். அருமை தலைவரே.