14 ஆகஸ்ட் 2021

செஞ்சோலை சிறுவர் இல்லப் படுகொலை

14.08.2021

2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் நாள் தமிழரின் வரலாற்றில் துயர் படிந்த ஒரு நாளாகும்.

தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம். உலகத்திலேயே அதிகளவு பெண்கள், அதுவும் பள்ளிக்கூட  மாணவிகள் ஒட்டு மொத்தமாகக் கொல்லப் பட்டது ஒரு வரலாறாக மாறி இருக்கிறது.


உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்தச் சாதனையை இலங்கை அரசாங்கம் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி அதிகாலை வேளையில் நடத்தி முடித்தது.

வன்னிப் பகுதியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய இடங்களில் இருந்து கல்விப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 61 மாணவிகள் சில மணித் துளிகளில் மரணித்து போனது ஈழ மண்ணை சோகத்தில் மூழ்கடித்தது.

இந்தப் பயிற்சி  வகுப்புகள் ஆகஸ்ட் 11, 2006-இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.


ஆனால் பயிற்சி வகுப்புகள் தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டனர் .

பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப் போய் கிடந்தன. துள்ளிக் குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாகக் கிடந்தன. கனவுகளைச் சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக் கொண்டு கிடந்தது.

அதிகாலை வேலை கிணற்றடியிலும், கழிப்பறையிலும், சமையலறையிலும், தத்தம் கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டனர் .

காலை வேளையில் இலங்கை அரசின் வெறி பிடித்து வந்த கிபிர் விமானங்கள் ஆறு முறை குண்டுகளைக் கொட்டியது. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது.


மாணவிகள் வாயிலின் ஊடாக ஓட முடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது. அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நான்கு திசைகளிலும் போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது .

மாணவிகள் எந்தத் திசை வழியாகவும் வெளியே ஓட முடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப் பட்டது.

அங்கிருந்த நூற்றுக் கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் இரத்தக்கறை மாறாது இருக்கிறது.


உலக வரலாற்றில் நடந்த மறக்க முடியாத கொலைகளில் பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட இந்த நாளை தமிழர்களால் எப்படி மறக்க முடியும்?

நன்றி: சங்கதி -கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

பின்னூட்டங்கள்:

வெங்கடேசன்: கொடூர அரக்கக் குணம் கொண்டவர்களால் கொல்லப்பட்ட நம் பிள்ளைகளுக்கு இதய பூர்வ அஞ்சலி். எவ்வளவு உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்டனர். உலகமே இன்று வரை, கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வேதனை. இனப் படுகொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். மனித குலமே வெட்கித் தலை குனிய வேண்டும் 😡😡

தேவிசர கூலிம்: படிக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. கொடும் பாவிகளை இன்னும் அந்த இறைவன் விட்டு வைத்திருக்கிறாரே...

முகில்: தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி வரலாறு படைப்பது உண்மைதான். போற்றுகிறோம். ஆனால் செஞ்சோலையில் குண்டுவீசி 400 குழந்தைகள் கொல்லப் படுவதற்கும்; தொடர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் படுவதற்கும் காரணமாக இருந்த சிங்கள அரசிற்குத் துணை போனவர்கள் ஒரு கொலைஞர் குடும்பம் தானே..இதை எந்த வரலாற்றில் சேர்ப்பதாம்?

இதற்குத் துணை போன குடும்பத்தாரைத் தூக்கி வைத்துப் புகழும் இனத்தவரைத் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப் படுகிறேன்.

தமிழீழத்தில் தமிழன மக்களை அழிப்பதற்குத் துணை போன குடும்பத்தின் புகழாரங்களைத் தயவு செய்து இந்தப் புலனத்தில் பகிர வேண்டாம்.

வெங்கடேசன்: இனத் துரோகி. இவர் நினைத்து இருந்தால் ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். தன் மக்களுக்காக இனத்தையே பலி் கொடுத்தவர். துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது 😭

முருகன் சுங்கை சிப்புட்:

முகில்: ஓர் இனம் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கும் போது, தன் மகளுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடியவர். அவர் குடும்பத்தின் இனம் மானம் காக்க வேண்டும். அப்படித்தானே.

சாப்பிடுகிற சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடும் எந்தத் தமிழரும் ஓர் இனத்தை அழித்தக் குடும்பத்திற்குப் பரிந்து பேச மாட்டார்.

முருகன் சுங்கை சிப்புட்: எப்படி அய்யா. வெறும் வாய்மொழியிலா..? செயலிலா? அதையும் சொல்லி விட்டால் நம் இனத்தில் தான் இன மானம் காக்க நிறைய போராளிகள் உள்ளனரே உடனே திரண்டு விடுவார்கள்.

மொத்தமாக ஓர் இனம் போரால் அழிந்து, வறுமையில் வாடிக் கொண்டும், அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம். அந்த வருடத் தீபாவளியை பட்டாசு வெடித்துக் தானே கொண்டிருந்தோம். எங்கே போச்சு நம் இன உணர்வு அய்யா...

முகில்: இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே புலனத்தில் ஒரு வாக்குவாதம். அதில் தாங்கள் சொன்னது: தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்படும் போது மலேசியத் தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பூப்பறித்துக் கொண்டு இருந்தார்களா என்று கேட்டீர்கள். நினவு இருக்கிறதா. நீங்கள் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை.

அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, இன்றைக்கு அந்தக் கொலக்காரக் குடும்பத்திற்குப் பரிந்துரை செய்வது போல ‘இன மானம் காப்போம்’ என்று சப்போர்ட் பண்ணுவது, அறவே எனக்குப் பிடிக்கவில்லை.

முருகன் சுங்கை சிப்புட்: திசை திருப்பவில்லை அய்யா. வழியைச் சொல்லுங்கள்... நான் வாய் சொல் வீரன் அல்ல. கலைஞர் எனக்கும் எதிரிதான்😡

முகில்: இப்படித்தான் அன்றைக்கும் கேட்டீர்கள். என்னத்த வழி சொல்வது. முதலில் உங்களுக்கு என்று ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தமிழீழ மக்கள் சாகடிக்கப் படுவதற்கு துணை போன குடும்பம் என் எதிரிகள் என்று வைராக்கியக் கொள்கை வேண்டும்.

கொலக்காரக் குடும்பம் ஆயிரத்தெட்டு நன்மைகள் செய்தாலும் செத்துப் போன இரண்டு இலட்சம் தமிழர்கள் மீண்டு வந்துவிடப் போவது இல்லை.

ஆச்சு பூச்சு என்றால் மலேசியத் தமிழர்கள் தீபாவளி கொண்டாடி பட்டாசு கொளுத்தினார்கள் என்று கதையை மாற்றி விடுவது.... போதும்.

நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள். சிராங்கூன் ரோட் அம்மாச்சி பூக்கடையில் பூமாலை கட்டிக் கொண்டு இருந்தீர்களா.

தயவு செய்து எதைப் பற்றி பேசுகிறோமோ அதைப் பற்றி பேசுங்கள்... தீபாவளி பட்டாசு கதை எல்லாம் வேண்டாம். சரிபட்டு வராது.

முருகன் சுங்கை சிப்புட்: உண்மை அய்யா... மீண்டும் சொல்கிறேன் நான் இனமானம் உள்ளவன்.  அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி போட்டு விட்டு தப்பித்து கொள்ள நினைக்காதவன். தப்பு என் மீதும் உண்டு... உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் உண்டு. "பழமையே பேசிக் கொண்டு எதிர்காலத்தை பற்றி துளி அளவும் சிந்திக்காதவர்கள் நாம்"

முகில்: சரிங்க ஐயா. நீங்க இனமானம் உள்லவர். எங்களுக்கு எல்லாம் இல்லை. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள். தயவு செய்து திசை திருப்ப வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. பிறகு பார்ப்போம்.

முருகன் சுங்கை சிப்புட்: நான் நிறுத்திக் கொள்கிறேன் அய்யா. ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.

முகில்: ஏற்கனவே டென்சன்.. இதில் இன்றைக்கு வேறு. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் எனக்கும் பிரசர் எகிறிப் போய் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும். நிறுத்திக் கொள்கிறேன். நன்றி.

வெங்கடேசன்: உடல் நலத்தில் கவனம் தேவை ஐயா🙏

முருகன் சுங்கை சிப்புட்: தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான். நன்றி

முகில்: நான்கு வயதிலேயே காது குத்தி விட்டார்கள். ஏழு வயதில் அரிச்சுவடியை மணலில் எழுத, காதில் போட்டு இருந்த கடுக்கனைக் கழற்றினேன். மறுபடியும் குத்த வேண்டியது இல்லை. 🙏

தனசேகரன் தேவநாதன்: ஈழத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் அன்றைய சூழ்நிலையில் செய்ய இயன்றதைச் செய்தார்கள். எப்படி என்ன என்று கேட்காதீர்கள் செய்தவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் 💪💪💪💪💪💪😄

ஜீவன் தங்காக்: உண்மை

முருகன் சுங்கை சிப்புட்: இனி இந்த புலனத்தில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை. இதுவரை உங்களுடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சி... நிறைய கற்றுக் கொண்டேன். அருமையான குடும்பம். கருத்துச் சுதந்திரம் மட்டுமே இல்லை. மிகுந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன்! அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏

[10:50 pm, 14/08/2021] Satya Francis: ஒரு தந்தை இல்லாமல் நாங்கள் எப்படி ஒரு குடும்பமாக பயணம் செய்ய முடியும்? தயவுடன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் ஐயா...

[10:52 pm, 14/08/2021] Satya Francis: வணக்கம் ஐயா. இப்படி எல்லாம் நீங்கள் விடை பெற்றுக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது?

முகில்: இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் சாகடிக்கப் பட்டதை ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்களாம். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்தது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தானாம்

அநியாயத்தை நியாயப் படுத்த கதைகள் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனசாட்சி இல்லாமல் எப்படிங்க இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா? நியாயமே இல்லை. 🙏

கரு ராஜா சுங்கை பூலோ: ஆமாம் முருகன் சொன்ன கருத்தை ஏற்க முடியாது.

கணேசன் சண்முகம்: உண்மை ஐயா.

கரு ராஜா சுங்கை பூலோ: தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அராஜகம்.

[11:05 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஈழத தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருப்பார் கள்

[11:08 pm, 14/08/2021] Raja Sg Buluh: தமிழ் நாட்டுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ஏற்க முடியவில்லை.

[11:10 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு சில சூடு சொரனை இல்லாத தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!!!!!?

[11:11 pm, 14/08/2021] Raja Sg Buluh: எல்லாத் தமிழனையும் சூடு சொரனை இல்லாதவர்கள் என்று நினைக்க வேண்டாம்

[11:13 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு கருத்து சொல்லும் போது யோசித்து சொல்லனும்.

[11:15 pm, 14/08/2021] Raja Sg Buluh: கருத்து சுதந்திரம் என்று ஏற்க முடியாத கருத்துக்களைச் சொல்வது தப்பு. உலகமே அழுதது. இதை உலக தமிழர்கள் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா??????

கணேசன் சண்முகம்: உலகத் தமிழர்கள் மனதில் ஆழமாய் பதிந்த மரணச் சம்பவம்.


முகில்: இந்த முகங்களைப் பாருங்கள். எத்தனை வயது. இந்தக் குழந்தைகள் தான் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகள். இவர்கள் மட்டும் அல்ல. 400 குழந்தைகள்.

இந்த மாதிரி சின்னஞ்சிறுசுகளைக் கொன்று போட்ட கூட்டத்திற்குத் துணை போன கும்பலுக்கு பரிவு காட்டுவது நியாயமா?

இப்படி எல்லாம் நடந்த பிறகு ’தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்..புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார் என்று கதை சொல்வது நியாயமே. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.

Raja Sg Buluh: இதை எல்லாம் எப்படி மறக்க முடியும்???

கணேசன் சண்முகம்: கண்டிப்பாக மறக்க முடியாத சம்பவம். உடல் சிதைந்த , உயிரற்ற உடல்கள்.

வெங்கடேசன்: உண்மையான தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். காலப் போக்கில் மறக்கடிக்கப் படலாம். ஆனால் வரலாற்றை மாற்ற இயலாது. கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்கள் இன்னும் சிலர் சாட்சிகளாக உயிருடன் இருக்கிறார்கள்.

ராதா பச்சையப்பன்: அன்று சேதி கேட்டு அழுததை, இன்றும் நினைத்து பாருங்கள். இனியும் இது போன்று வேண்டாமே...








 

தந்தைகளின் இறுதிக்காலம்

14.08.2021

தந்தைகளின்  இறுதிக்காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும்; முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரைக் கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்.

மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, ’மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும்’ என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடம் இருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர்.

எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காகக் கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
.
பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதை செய்து இருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

வயதானவர்களுக்குத் தனிமை மிக கொடுமையானது. ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கி கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி. இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்துத் தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

குடும்பத் தலைவன் என்பவன் அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்று எல்லாம் வாழ்ந்து விட்டவன்.

தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்.

ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.

பின்னூட்டங்கள்

தேவிசர கூலிம்: அருமையான அவசியமான பதிவு... முற்றிலும் உண்மையான கருத்துகள்... என் தந்தையின் ஞாபகம் வருகிறது. அப்பாவிற்காகவே மாதத்தில் இரண்டு முறை வீட்டிற்கு செல்வேன்.

அம்மா தவறி விட்டதால் அப்பாவை நாங்கள் நன்றாகவே பார்த்துக் கொண்டோம். இருந்தும் அவர் பாதுகாவலர் வேலைக்குச் செல்வார். யார் கையையும் எதிர் பார்க்க மாட்டார்.

சிறப்பான உணவு செய்தால், கணவரிடம் வேலைக்குச் செல்லும் வழியில் அப்படியே கொடுத்துச் செல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புவேன். இதைப் படித்தவுடன் அதெல்லாம் ஞாபகம் வருகிறது.

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா. தந்தையர்களுக்காக இந்தப் பதிவு. வரிக்கு வரி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. இன்றில்லை. தந்தையர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். சிறப்பு.

பெருமாள் கோலாலம்பூர்: பிள்ளைகளுக்காக ஒரு தந்தையின் எதிர்பார்ப்பை அழகாக விவரித்துள்ளீர். ஆனால் பெற்றவர்கள் கொடுத்தே பழக்கப் பட்டவர்கள். பிள்ளைகளிடம் கேட்டுப் பெறாதவர்களாகவே வாழ்ந்து உள்ளனர்.👍👌

ராதா பச்சையப்பன்: 🌻🙏படித்ததும் மனம் அழுகிறது. எட்டு வயதிற்குப் பிறகு தந்தை பாசம் இல்லை. அப்பாவுக்குச் செல்லப் பெண் நான். திருமணத்திற்குப் பிறகும் மாமனாரும் இல்லை. பார்த்ததும் இல்லை. இதை எல்லாம் நினைக்கையில் வேதனைதான். 🙏🌻

வெங்கடேசன்: கலங்க வேண்டாம் மா. பெண் பிள்ளைகள் கலங்கக் கூடாது. உங்களுக்கு நாங்கள் அனைவரும் தந்தை மாதிரிதான். நீங்கள் எல்லோரும் எங்களுக்குப் பிள்ளைகள் தான். கலங்க வேண்டாம் 👍🙌🙌

பாலன் முனியாண்டி: இன்றைய பிள்ளைகள் உணர்வார்களா என்பது கேள்வி குறிதான் ஐயா.

காரணம் அன்று முதியோர் இல்லம் பார்ப்பதற்கு அரிதாக இருந்தது.
இன்று பார்க்கின்ற இடமெல்லாம் முதியோர் இல்லத்தை  காண முடிகின்றது. இதற்கு என்ன காரணமென்று நினைக்கின்றீர்கள்.....

 இந்த கட்டுரை படித்தபோது  கண்கள் கலங்கின....


13 ஆகஸ்ட் 2021

மலேசியத் தமிழர்களுக்கு குலசேகரன் உதவிகள் செய்யவில்லையா?

13.08.2021

மாண்புமிகு குலசேகரன் அமைச்சராகச் சேவை செய்த காலத்தில், அவர் மலேசிய தமிழர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் அமைவதற்கு முன்னர், பக்காத்தான் ஹரப்பான் கட்சி ஒரு கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டது. வழக்கமாக எல்லாக் கட்சிகளும், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாக அந்தக் கொள்கை விளக்க அறிக்கையில் சொல்வார்கள்.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

2018-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹரப்பான் கட்சி வெளியிட்ட அந்தக் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்து, மாண்புமிகு குலசேகரனைத் தரம் தாழ்த்திச் சிறுமைப் படுத்தும் ஒரு காணொலி ஊடகங்களில் பரவலாகி வருகிறது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் காணொலியும் பதிவாகி உள்ளது.

சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டிவிட வேண்டுமா என்று அந்தக் காணொலிப் பதிவாளர் கேட்கிறார். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கரு. ராஜா: இந்த அம்மணி நியாயமாகப் பேசுறாங்க... ஒரு தமிழனை, குறை சொல்ல, தமிழர்கள் தான் வருகிறார்கள்.

......: நியாயமான கருத்துரை. மாண்புமிகு குலசேகரன் அமைச்சரானதும் ஏற்கனவே இருந்த அதிகாரம் என்ன என்ன செய்து இருக்கிறது; அந்த அதிகாரத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதைக் கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்கவே ஆறு மாதங்கள் பிடித்தன. கோப்புகள் மேல் கோப்புகள்.

இவர் அமைச்சராவதற்கு முன்பு இருந்தே நண்பராக இருந்தவர். அதனால் சில பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார். பொதுவில் பகிர இயலாது. அரசு நிந்தனையாகலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வெளியே தெரியாமல் நம் இனத்திற்கு நிறைய உதவிகள் செய்து உள்ளார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா.

......: உங்களுக்கும் அதைப் பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்

தேவிசர கடாரம்: இவர் இந்திரா காந்தியின் வழக்கிற்கு பணம் வாங்கவில்லை என்று கேள்விப்பட்dஉ இருக்கிறேன்...

......:உண்மைதான். இந்திராகாந்தியின் பிரச்சினை இந்த நாட்டுத் தமிழர்களின் பிரச்சினை எனும் முன்னெடுப்பில் நகர்ந்தவர். ஒரு கட்டத்தில் அவர் பணிபுரிந்த பாலர் பள்ளியில் அவருக்கு ஊழியப் பிரச்சினை; ஊதியப் பிரச்சினை. அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டவர். இங்கு விளக்கமாகச் சொல்ல இயலாது. புரிந்து கொள்ளும்மா...

சித்தியவான் சனாதன ஆசிரமம்

தனசேகரன் தேவநாதன்: சித்தியவான் சனாதன ஆசிரம குழந்தைகளின் அடையாள அட்டை பிரச்சனைகளை 90 சதவிகிதம் தீர்வு கண்டவர். பொறுப்பில் இல்லாத போதும் இருந்த போதும் அந்த ஆசிரமத்திற்கு இன்று வரை உதவி வருபவர்.

இவ்விடம் வந்தால் ஆசிரமக் குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடும் அன்பான மனிதர். தனது பதவி காலத்தில் பெரிய மானிய தொகையை ஆசிரம குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கியவர். சித்தியவான் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் 🙏🌹👌🙏🌹👌

......: தகவலுக்கு நன்றிங்க. ஆயர் தாவார், சித்தியவான் பகுதிகளில் தமிழர்கள் பலருக்கு நீல அடையாள அட்டைகள்; குடியுரிமை சான்றிதழ்கள் பெற்றுத் தந்துள்ளார். உண்மை.

சித்தியவான் சனாதன ஆசிரமம்

கணேசன் சண்முகம் சித்தியவான்: தெரியும் ஐயா. அன்றைய நிகழ்வை நான் தான் வழி நடத்தினேன். அமைச்சர் என்ற முறையில் சிறப்பான சேவையை செய்தார் ஆசிரமத்திற்கு.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தகவலுக்கு நன்றிங்க கணேசன் ஐயா. கண்ணுக்குள் ஈரம் இருப்பது நமக்கும் தெரியாது. வெளியே உள்ளவர்களுக்கும் தெரியாது. கண்ணுக்கு மட்டுமே தெரியும்.

வெங்கடேசன்: ஒருவரை பற்றி நன்கு ஆராயாமல் கண்டபடி புலனங்களில் திட்டுவது நம் மக்களுக்கு வா(வே)டிக்கையாகி விட்டது 🤷



 

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

சாரதா நயனதாரா சாந்தி பெறுக

13.08.2021

செல்வி சாரதா நயனதாரா, முன்னாள் நயனம் ஆசிரியர் இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகள். இராஜகுமாரன் அவர்கள் மறைந்த ஆதி. குமணன் அவர்களின் அண்ணன் ஆவார். கோவிட் தொற்று காரணமாக நயனதாரா மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. 


அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறோம்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா சாந்தி பெற இறைவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறோம். 


பாதாசன்: நம்பமுடியவில்லை. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. செல்வி சாரதா நயனதாரா, இராஜகுமாரன் அவர்களின் கண்ணுக்குக் கண்ணான மகளின் மரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அன்பு மகளை இழந்து மீளாத் துயரில் வீழ்ந்துள்ள அன்னையாருக்கும் அமரர் ஆதி. இராஜகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த கழிவிரங்கலைப் பதிவு செய்கிறேன்.

செல்வி சாரதா நயனதாரா அவர்களின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனின் திருவடிகளைப் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.


ராதா பச்சையப்பன்: பார்க்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. ஓம் நமசிவாய. ஓம் சாந்தி ஓம் சாந்தி🙏🙏.

மலையாண்டி மலாக்கா: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவா இந்த மண் மீது வாழும் எங்கள் இனத்தின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆழ்ந்த இரங்கல்.

கரு ராஜா: ஆழ்ந்த இரங்கல். நாட்டில் மரணச் செய்தி மிகs சர்வ சாதாரணமாக வந்து கொண்டிப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது.


கலைவாணி ஜான்சன்: மரணங்களின் ஓலங்கள்.... ஜீரணிக்க முடியவில்லை.... என்னவென்று சொல்வது. மலேசிய மண்ணில் தமிழுக்காக கோலோச்சிய ஒவ்வொரு ஜீவன்களையும் மரணம் தழுவிச் செல்வது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை.... நயனதாராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

வெங்கடேசன்: ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆந்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.😭

தனசேகரன் தேவநாதன்: அழகிய முத்தாரம் அறுந்து போனதே... என்று தணியும் இந்த வேதனை இறைவா இறைவா ஓம் நமசிவாய


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இறைவா... என்ன சொல்வது என்று தெரியவில்லை. வாழ வேண்டிய வயது. ஆதி. இராஜக்குமாரன் தன் வாழ்நாளில் தன் மகளுக்காகவே வருத்தப் பட்டவர். மலேசியம் அன்பர்களின் ஆழ்ந்த இரங்கல்... ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

விஜயசிங்கம்: என் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏

உதயகுமார் கங்கார்: ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் நமசிவாய.

மகாலிங்கம் படவேட்டான்: ஆழ்ந்த இரங்கல்... ஓம் நமசிவாய... ஓம் சாந்தி சாந்தி சாந்தி..

செல்லா செல்லம்: ஓம் சாந்தி  🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி