13 ஆகஸ்ட் 2021

தெலுக் இந்தான் கோவிந்தன் ஆசிரியர்

13.08.2021

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பளியின் முன்னாள் தலைமையாசிரியர். நேற்று கோவிட் 19- தொற்றினால் காலமானார். மிகவும் அமைதியானவர். இரண்டு தடுப்பூசிகள் போட்டும் கோவிட் இறப்பு. நம்ப முடியவில்லை.


வெங்கடேசன்: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள்தான் அதிகமாக இறந்து போகிறார்கள். என்னவென்றே புரிய வில்லை ஐயா 🤷‍♀️

நெடுஞ்செழியன் பிரிக்பீல்ட்ஸ்: தடுப்பு ஊசி போட்டு விட்டால் கோறணி தொற்றாது என்ற அறியாத்தனத்தில் எற்படும் அலட்சிய போக்கின் விளைவு

கலைவாணி ஜான்சன்: கொடுமை ஐயா.. இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தொற்று கண்டு இறப்பது.. நம்மவர்களின் மரணங்கள் அதிகம் ஐயா... வேதனை... ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராதா பச்சையப்பன்: நாம் யாருக்கும், பிறந்த நாள், திருமணநாள் போன்ற நல் வாழ்த்துகளைக் கூறுவதை விடுத்து, இப்படி  இரங்கல், அனுதாபம் ஆத்ம சாந்தி ஓம் நமசிவாய என்றுதான் கூறிக் கொண்டு இருக்கிறோமே...

இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு... என்னவோ, ஏதோ என்று பயந்து பயந்து  வாழப் போகிறோம். அலைபோசி சத்தம் வந்தாலும் முன் போல் சந்தோசமாக எடுப்பதை விட்டு, எடுக்கலாமா, வேண்டாமா? யாருக்கு என்னவோ" என்ன சேதியை சொல்லப் போகிறார்களோ என்று தினம் தினம் மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது.

நிம்மதியாக உண்டு, உறங்கவும் இயலவில்லையே" இவற்றை நாம் கடந்து போவது எப்போது என்று மனம் அழுகிறது. தீர்வு எப்போது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் 😭🙏🙏.

கலைவாணி ஜான்சன்: மிக உண்மை சகோதரி....கைப்பேசி அழைப்பு, அனைவரையும் பயத்தில் ஆழ்த்துகிறது.

தேவிசர கடாரம்: உண்மை சகி... நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு இன்றைய சூழலில் அதுவும் சம்பவமாகிவிடக்கூடாது... அதுவே என் பிராத்தனை.

கலைவாணி ஜான்சன்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். சகோதரி. ஏற்புடையது. ஏற்றுக் கொள்வோம்...

தேவிசர கடாரம்: இன்றைய சூழ்நிலையில் நம்மவர்களின் இறப்பு விகிதம் மனவேதனையை அதிகரிக்கிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை வேண்டாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் இரண்டு தடுப்பூசி போட்டாச்சு... தைரியமாக வெளியில் செல்லலாம் என்று அலச்சிய போக்கோடு செயல் படுகிறார்கள். இரண்டுமே வேதனையை அளிக்கிறது. 🥺

வெங்கடேசன்: ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்னுடைய நண்பர்கள் சிலர் இப்படிதான் அலட்ச்சியமாக இருக்கிறார்கள். தடுப்பூசியை பற்றிய விழிப்புனர்வு மிக குறைவு. தடுப்பூசி செலுத்திய பிறகு நம் உடலில் அது எப்படி செயல் படுகிறது என்று தெரிந்து வைத்து கொள்வது இல்லை 🤷‍♀️

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த அனுதாபங்கள்...! நித்தமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் மரண செய்திகள். இறைவா... உலக மக்கள் அனைவரையும் இந்த பெருந்தொற்றில் இருந்து காப்பாற்றுவாயக...!

கரு ராஜா: நாட்டில் மரணச் செய்தி மிக சர்வ சாதாரணமாக வந்து கொண்டு இப்பதைப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமே. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ள ஐ எம் ரெடி.

கலைவாணி ஜான்சன்:
இறப்பு அனைவர்க்கும் உரியது. நேரம் வரும் போது, போய்த் தான் ஆக வேண்டும். ஆனால் நான்கு பேர் இல்லாத மரணம். சிந்திக்க வேண்டும் சகோதரரே 🙏

தனசேகரன் தேவநாதன்: பாசமும் நேசமும் நிறைந்த மனிதர்கள் வேதனையை தாங்க இயலாது என்பது இயற்கையின் விதி. காலம் மட்டுமே ஆறுதல் அளிக்க முடியும். மனோதைரியம் அனைவருக்கும் கிட்ட இறைவன் அருள்வானாக. ஓம் நம சிவாய.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக