இராஜேந்திரன் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் இராஜேந்திர சோழன், 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும்; தான் கடாரத்தை விட்டுத் தாயகத்துக்குத் திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும்; தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் இராஜேந்திர சோழன் விட்டுச் செல்லவில்லை என்று ஆவணங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.

(Menurut kajian dan manuskrip yang ditemui mendedahkan Raja Chola hanya bertapak di Kedah selama 66 tahun sebelum pulang semula ke tempat asal tanpa membawa dan meninggalkan apa-apa pengaruh.
Ia sekali gus menolak dakwaan kedatangan Raja Chola itu bermakna penduduk asal Tanah Melayu adalah Tamil, sebaliknya ketika itu sudah wujud orang Melayu meskipun belum beragama Islam sehingga kedatangan Parameswara.
Profesor dari Pusat Penyelidikan Dasar dan Kajian Antarabangsa (CenPRIS), Universiti Sains Malaysia (USM), Prof Datuk Dr Ahmad Murad Merican, berkata orang Melayu perlu mengakui semasa 700 ke 800 tahun dahulu sebelum kedatangan Islam, agama yang dianuti pada ketika itu Hindu dan Buddha.
“Pada ketika ini terdapat kecelaruan hingga menyebabkan banyak fakta mengenai asal-usul orang Tamil dan orang Melayu disalah erti.
“Bagaimanapun melalui kajian dan manuskrip yang ditemui, sedikit sebanyak dapat menjelaskan asal-usul kedatangan masyarakat Tamil ke sini,” katanya ketika ditemui pada Forum Migrasi Pertama Masyarakat Tamil ke Tanah Melayu di sini.
Pada forum itu, masyarakat India yang hadir didedahkan dengan penemuan beberapa manuskrip yang menjelaskan sejarah asal-usul mereka dari India ke Kepulauan Melayu, Afrika dan Eropah.
Ahmad Murad berkata, forum itu begitu menarik kerana dapat menjelaskan kecelaruan yang berlaku baru-baru ini, sekali gus memberi pendedahan kepada masyarakat mengenai sejarah tanpa wujudnya elemen hasutan.
“Ini juga sesuatu yang berguna dan memberi kesedaran kepada orang Tamil mengenai sejarah serta warisan mereka,” katanya.
Sementara itu, Timbalan Ketua Menteri II Pulau Pinang, Dr P Ramasamy menegaskan setiap sejarah perlu diperkukuhkan dengan fakta dan bukannya semata-mata emosi serta politik.
Katanya, masyarakat Tamil perlu mengakui bahawa sejak 3,000 tahun dahulu penduduk asal di Tanah Melayu ialah orang Melayu.
“Penduduk asal Tanah Melayu ialah orang Melayu cuma pada ketika itu agama mereka bukan Islam tetapi Hindu dan Buddha sehinggalah wujudnya sultan yang memeluk Islam lalu diikuti seluruh rakyat pada ketika itu.
“Isu yang timbul hari ini kerana berlakunya salah faham ekoran tidak menemui fakta yang tepat dan berputar-belit serta menimbulkan kecelaruan yang perlu diperbetulkan,” katanya.
Tegasnya, setiap perkara berkaitan sejarah jika tidak mempunyai bukti maka ia perlu dirujuk kepada pakar sejarah dan sejarawan untuk mendapatkan maklumat lebih tepat.
“Seperti yang dihuraikan dalam forum ini cukup jelas kepada masyarakat India mengenai asal-usul dan migrasi yang berlaku,” katanya)
(Adakah Orang Asli itu Orang Athi Tamilan dari Pentas Kumari Kandam. Sejarah suatu bangsa bermula sejak mereka mula berjalan. Sejarah Chola Tamil dan Sejarah Melayu 3000 tahun Adalah sejarah terbaru. Sejarah Penduduk Asli lebih tertua lagi.)
முகில்: பதிவிற்கு நன்றி ஐயா. கல்வியாளர்கள் பயன்படுத்தும் ஆழமான மலாய் மொழிப் பதிவு. சாதாரண அன்பர்களுக்கு அதன் விவரங்கள் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை.
தங்களுக்குப் புரிந்து இருப்பதால் தான் இங்கு பதிவு செய்து உள்ளீர்கள். ஆகவே என்ன ஏது என்று தயவு செய்து விளக்கம் கொடுங்கள். அல்லது மொழிபெயர்த்து வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இராஜேந்திரன் கெப்போங்: எனக்கும் வெகுநாட்களாக இப்படி ஒரு சந்தேகம் உண்டு. ஏன் ஓராங் அஸ்லிகள் இராஜேந்திர சோழனின் படையெடுப்புக்குப் பின் இங்கே அடைக்கலமாகிப் போன சிதறல்களாக இருக்கக் கூடாது .
நாளடைவில் மொழி நாகரீகம் மறந்து போன தமிழ் இனமாக இருக்கக் கூடுமோ எனும் சந்தேகம் எனக்கும் மனதளவில் நிழலாடுகிறது.
ஆனால் இதுவரை ஓராங் அஸ்லிகளின் பூர்வீகம் பற்றிய ஆழமான ஆய்வு இருந்ததாகத் தெரியவில்லை. என் கணிப்பு தவறாகவும் இருக்கலாம். இராஜேந்திர சோழனின் படையில் இருந்து சிதறிப் போன சிப்பாய்களின் சிதறலாகக் கூட இவர்கள் இருக்கலாம். தவறிருந்தால் மன்னிக்கவும்.
ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங் 🙏
முகில்: இதைப் பற்றி போன 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் மலரில் இரு கட்டுரைகள் எழுதி விட்டேன். பழைய தமிழ் மலர் பத்திரிகைப் புரட்டிப் பாருங்கள் ஐயா... நன்றி.
பெருமாள் கோலாலம்பூர்: மலாக்கா சிட்டிகளும் மொழி மறந்தவர்கள் ஆகின்றனர். அவர்களுக்கும் ,ஓராங் ஆஸ்லி தொடர்பையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
முகில்: நல்ல அருமையான கருத்து. முன்மொழிபவர்தான் முன்னுதாரணமாய் அமைய வேண்டும். முன்மொழிந்த தாங்கள் முன்னெடுத்து ஆய்வு செய்வதே சிறப்பு. எப்போது என்று சொல்லுங்கள். என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.
ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாக்கா செட்டிகள் என்பவர் வியாபார சமூகமாகும். மலாக்காவில் வியாபார நிமித்தம் வந்த இந்திய வம்சாவளியினரின் சந்ததியினரே மொழி மறந்து போன தமிழர்களாக இருக்கலாம்.
தனசேகரன் தவநாதன்: இன்று ஐயாவின் மலாயா கணபதி கட்டுரை போற்றி பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் இந்த நாட்டில் நமது மூன்னோர்களின் தியாக வரலாறு. பேரப் பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்து சொல்ல மறக்காதீர்கள் நன்றி ஐயா.
முகில்: மிக்க நன்றிங்க ஐயா... சிரமப்பட்டு எழுதப்பட்டது. பத்திரிகையில் வெளிவந்த மலாயா தமிழர்களின் வரலாற்றுக் கட்டுரைகளை இங்கேயும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அவற்றை எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கலாம். நம் வாரிசுகளுக்குக் கொண்டு செல்லலாம்.
ஆனால் என்ன... இன்னும் சில நாட்களில் இதே புலனத்தில் ‘யார் இந்த மலாயா கணபதி’ என்று கேட்பார்கள். ஆய்வு செய்யுங்கள் என்று சொல்வார்கள். சற்று சிக்கலான பிரச்சினை தான்.
ராஜா சுங்கை பூலோ: கவிஞர் அவர்களுக்கு, இந்த செய்தி குறித்து கொஞ்சம் விளக்கம் சொன்னால், என்னைப் போன்ற மலாய் புரியாத வர்கலுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.
ராஜேந்திரன் ராஜகோபால் கெப்போங்: மலாயாவிற்கு படையெடுத்து வந்த பேரரசன் ராஜேந்திர சோழன் 66 வருடங்கள் கடாரத்தை ஆட்சி செய்ததாகவும் தான் கடாரத்தை விட்டு தாயகத்துக்கு திரும்பிய போது ஆட்சி பொறுப்பை மலாய் ஆட்சியாளர்களிடமே விட்டு சென்றதாகவும் தான் கடாரத்தை ஆட்சி செய்ததற்கான எந்த ஒரு அடையாளத்தையும் தடயங்களையும் பேரரசன் ராஜேந்திரசோழன் விட்டுச்செல்லவில்லை என்று ஆவனங்கள் சொல்வதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இந்த கூற்று எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பது விளங்கவில்லை.
டாக்டர் சுபாஷிணி: மலாயாவிற்கு கிபி பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் படை வீரர்கள் வந்து தாக்கி வெற்றி கொண்டு சென்றார்கள். ராஜேந்திர சோழனின் பிரதிநிதி இங்கு ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். இதுபற்றிய செய்திகள் கம்போடிய அரச ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ராஜேந்திர சோழன் நேரடியாக கடல் கடந்து அன்றைய மலாயாவில் கடாரம் வரவில்லை. அவரது படைத்தளபதிகள் மட்டுமே வந்தார்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதனை உறுதி செய்ய அதே காலகட்டத்தில் ராஜேந்திர சோழன் மேற்கொண்ட பல்வேறு போர்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. இன்றைய இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்கள் பலவற்றை இராஜேந்திரனின் படைகள் படிப்படியாக கைப்பற்றிய காலகட்டம் அது. அதுமட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் இலங்கையிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இன்று கிடைக்கின்ற சோழர்கால கல்வெட்டுகள் பற்றிய தொகுதிகள் இது பற்றிய விரிவான விளக்கத்தை வழங்குகின்றன. தமிழக தொல்லியல் துறையை அணுகினால் தொடர்பு கொண்டால் அங்கிருந்து நீங்கள் கல்வெட்டுகள் தொடர்பான ஏராளமான நூல்களை பெறலாம்.
கணேசன் சண்முகம்: நல்ல தகவல். தகவலுக்கு நன்றி.
மகாலிங்கம் படவெட்டான்: நன்றி.. நல்ல தகவல்... இது வரை இராத்திரி சோழனின் நேரடி தலைமையில் தான் தென்கிழக்கு பகுதியில் போர் நடந்ததாக அறிவோம்... நன்றி வாழ்த்துகள்.
தேவிசர: அருமை... தன் நாட்டை விட்டு வெளி வரமலேயே தன் படைகளை அனுப்பி பல தேசங்களை வெற்றிக் கொண்டவர் இராஜேந்திர சோழன். பெரிய படை பலம், அந்த கால கட்டத்தில் தமிழரிடம் தான் இருந்தது... பெருமை தரும் வரலாறு.
முகில்: திருவாலங்காட்டுச் செப்பேடுகள். சகோதரி முனைவர் சுபாஷிணியின் பார்வைக்கு...
இராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் 14-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி குறிக்கப்பட்டு உள்ளது. அதாவது கி.பி.1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தின் மீது படையெடுத்த செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.
கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், அவனுடைய படைகளையும் யானைகளையும் பிடித்துக் கொண்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டு உள்ளது.
சங்கராம விஜயோத்துங்கவர்மன் (Sangrama Vijayatunggavarman) என்பவர் இந்தோனேசியாவை ஆட்சி செய்த சைலேந்திரா வம்சாவளி மன்னர் மாறன் விஜயதுங்கவர்மன் என்பவரின் மகன். சங்கராம விஜயோத்துங்கவர்மன் தான் கடாரத்தின் கடைசி ஆட்சியாளராகவும் இருந்தவர்.
இராஜராஜனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பில் நான்கு படைத் தளபதிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்தார்கள். இதையே நான் என்னுடைய கட்டுரைகளில் பல முறை வலியுறுத்தி வந்துள்ளேன். அந்தமான தீவு தான் அவர்களின் முதல் படையெடுப்பு.
கி.பி. 1021-ஆம் ஆண்டில் இராஜேந்திரனின் படைகள் மேலைச் சாளுக்கியத்தின் மீது படையெடுத்தக் காலக் கட்டம். அது பெரிய போர். பல ஆண்டுகள் நீடித்த போர். அந்தக் கட்டத்தில் ஈழத்திலும் ஒரு போர்.
தவிர தென்னகத்தில் பாண்டியர், சேரர்களுக்கு எதிராகவும் போர்கள். ஆக இராஜேந்திரனின் முழுக் கவனமும் தெற்கு ஆசியாவில் முழுமையாக இருந்த காலக் கட்டம். மீண்டும் பல ஆண்டுகள் நீடித்த போர். 1025-ஆம் ஆண்டில் இராஜந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பு நடந்தது.
அவர் கடாரத்தைக் கொள்வதற்காக தன் படைத் தளபதிகளை அனுப்பி வைத்தார் எனும் தங்களின் கருத்து ஏற்புடையது.
சாளுக்கியப் போரிலும்; ஈழத்துப் போரிலும்; மேற்கில் சேர நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டு தன் அரசை விரிவாக்கம் செய்து கொண்டு இருந்த காலக்கட்டத்தில் இராஜேந்திர சோழன் கடாரத்திற்கு வந்து இருக்க முடியுமா? ஓர் ஐயப்பாடு.
கடாரத்திற்கு வந்தவர்கள் அவருடைய படைத் தளபதிகளாக ’இருக்கலாம்’ என்பதே என்னுடைய நிலைப்பாடும்கூட.
ராதா பச்சையப்பன்: 🌷🙏மிகவும் சிறப்பு👌🙏🌷.
மலாயா தீபகற்பத்தில் இருந்த தாம்பிரலிங்கா பேரரசின் மீது, கெமர் பேரரசர் முதலாம் சூர்யவர்மன் போர் தொடுப்பதற்கு முன்னர் சோழ மன்னர் இராஜேந்திரனிடம் உதவி கோரினார்.
இராஜேந்திர சோழனுடன் சூர்யவர்மனின் கூட்டணியைத் தெரிந்து கொண்ட பிறகு, தாம்பிரலிங்கா அரசு, ஸ்ரீவிஜய பேரரசின் உதவியை நாடியது.
அப்போது ஸ்ரீ விஜய அரசின் பேரரசராக இருந்த சங்கராம விஜயோத்துங்கவர்மன், தாம்பிரலிங்காவிற்கு உதவி செய்ய முன் வந்தார்.
இதைப் பார்த்த இராஜேந்திர சோழன் தன் படைகளைத் தென்கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினார் என்று வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.
இன்னும் ஒரு விசயம். சோழப் பேரரசும்; கெமர் பேரரசும்; இரண்டும் இந்து சிவ சைவ மதத்தைப் பின்பற்றியவை.
ஸ்ரீ விஜய அரசும் தாம்பிரலிங்கா அரசும் அந்தக் கட்டத்தில் மகாயன புத்த மதத்தைப் பின்பற்றியவை.
ஆக கடாரத்தின் மீதான படையெடுப்பை... இந்து சிவ சைவ மதத்திற்கும்; மகாயன புத்த மதத்திற்கும் இடையே நடந்த படையெடுப்பாகவே நான் கருதுகிறேன்.
-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
டாக்டர் சுபாஷிணி: ஆம். ராஜேந்திரன் காலத்து சூழலில் கிழக்காசிய பகுதிகளில் மிக பலம் பொருந்திய ஒரு கடற்படை சோழ கடற்படை என தாராளமாகச் சொல்லலாம்.
விஜயநகர அதாவது அன்றைய மலாயா இந்தோனேசியா பகுதியை ஆண்ட அரசு சீனாவிற்கான வணிகத்தில் சோழர்களின் ஈடுபாட்டை குறைக்க பல முயற்சியை செய்தார்கள்.
கடாரத்திற்கான இந்த படையெடுப்பு அதனை முறியடித்து இப்பகுதியில் நிலையான வணிகப் போக்குவரத்தை தமிழ் வணிகர்கள் மேற்கொள்ள அக்காலகட்டத்தில் வழிவகுத்தது.
தனசேகரன்: முனைவர் சுபாஷிணி அவர்களின் பதிவிற்கு உங்கள் கருத்து எப்பொழுது பதிவாகும் என காத்திருந்தேன் ஐயா. சிறப்பான விளக்கம் நன்றி ஐயா🌹💕👌🙏
கணேசன் சண்முகம்: அருமையான விளக்கம் ஐயா
வெங்கடேசன்: அருமையான கட்டுரை மிக்க நன்றி. ஐயா. இதை பார்க்கும் பொழுது எனக்கு இலங்கையில் நடந்த யுத்தம் நினைவிற்கு வருகிறது
ராஜேந்திரன் கெப்போங்: ஆம்! மிக ஆச்சரியமான அதிசயமான நம்ப முடியாத சேனை பரிவார கடல் பயணங்கள். 🙏
டாக்டர் சுபாஷிணி: குழுவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த மாத இதழை ஒவ்வொரு பக்கங்களும் படித்து பயன் பெறலாம். தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவும் பல நல்ல சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தவும் இது வழி வகுக்கும்.
பொதுவாக பகிரப்படும் செய்திகள் போல ஒதுக்கி விடாமல் தரவிறக்கம் செய்து நேரம் எடுத்து வாசித்து பயன் பெற கேட்டுக்கொள்கிறேன்.
முகில்: மிக்க மகிழ்ச்சிமா சுபாஷிணி... தங்களின் தமிழ்ச் சேவைகள் தொடர வேண்டும். உலகம் முழுமைக்கும் மிளிர வேண்டும். சலைக்காமல் எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இந்தப் பெண்ணுக்கு தூக்கமே வராதா என்று வியந்து போனதும் உண்டு... வாழ்த்துகிறேன். 🙏🌹