04.02.2021
மகாபாரதம் பற்றிய காணொலியைப் பதிவு செய்ததும், ஒருவர் அழைத்துப் பேசினார். இந்து மதம் தமிழர்களின் மதம் அல்ல. அதைப் பற்றி ஏன் பெருமையாகக் காணொலிப் பதிவுகளை எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டார். என்ன பதில் சொல்லலாம். அந்தக் காணொலியைப் பதிவு செய்தது தப்பா? தூங்கப் போகும் நேரத்தில் மனதில் சன்னமாய்ச் சின்ன இறுக்கம். அவரிடம் வாதம் செய்யலாம். ஆனால் தூக்கம் கெடும்.
பாலன் முனியாண்டி: தூங்குபவனை எழுப்பி விடாலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவரை எழுப்பவே முடியாது என்பதை போல... இவருடன் வாதம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட வாதம் பண்ணாமல் இருப்பதே சிறப்பு.
முருகன் சுங்கை சிப்புட்: அவருக்கு தெரிந்த ஒன்றை உங்கள் முன் வைத்துள்ளார். அவர் சொல்வது ஏதும் தவறு இருந்தால், அதை சரிப்படுத்த வேண்டியது தங்கள் கடமை. அதை விடுத்து உதாசீனப் படுத்துவது படித்தவர்களுக்கு அழகல்ல.
தனசேகரன் தேவநாதன்: புள்ளி வைக்க இயலா விவாதங்கள்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அவரைப் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பார்ப்பதில் அழகு இல்லை.
பௌத்தம் ஒரு மதம். சீக்கியம் ஒரு மதம். கிறிஸ்துவம் ஒரு மதம். அந்த மதங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் கதையாகச் சொல்லும் போது சிலரும் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். குட் வெரிகுட் என்று பின்னூட்டம் வழங்குகிறார்கள்.
ஆனால் இந்து மதத்தின் கதைகளைச் சொல்லும் போது மட்டும் (வாழ்வியல் தத்துவங்கள்) ஏன் சிலருக்கு சினம் வருகிறது. புரியவில்லை. ஒருவருக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காமல் போகட்டும். அது அவருடைய 'பசால்'. அதற்காக மற்றவர்களின் இந்து மதக் கருத்துகளை எதிர்ப்பதில் நியாயம் இல்லை.
பி.கு: இந்தப் பதிவைப் படம் பிடிச்சு மற்ற புலனங்களில் போட்டு மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... தமிழம் இயக்கத்துக்கு எதிரானவன் என்று பிரசாரம் செய்யாமல் இருந்தால் கோடி புண்ணியம். ஏற்கனவே பட்டு இருக்கிறேன்.
ராதா பச்சையப்பன்: ஆமாம் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். நமக்கு தான் தெரிவது இல்லை.
கரு. ராஜா: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது போன்ற விவாதங்களை தவிர்ப்போம்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இந்து எனும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக பல முறை வம்புக்கு இழுத்து பல முறை என்னை அசிங்கம் அசிங்கமாகத் திட்டி இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி ஓர் இந்துவத்வா என்றால் அதற்கு நாம் இங்கே என்ன செய்வது... இந்து என்பது ஒரு மதம். சிலர் சமயம் என்கிறார்கள். அதன் கீழே சைவம், சைவ சித்தாந்தம், என்பது எல்லாம் பிரிவுகள் அல்லது சமயப் பிரிவுகள்.
தினகரன் சுப்பிரமணியம் தங்காக்: விடுங்கள் ஆசான் மனிதம் காப்போம்.
தேவிசர கடாரம்: முற்றிலும் உண்மை ஐயா. தெளிவாக சொல்லி இருக்கிறீகள். நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை என்றால் அது நம் கருத்து. அதை மற்றவர் மேல் திணிப்பது அநியாயம்.