12 பிப்ரவரி 2021

பிழை இல்லாமல் தமிழ் கற்றுக் கொள்வோம்

11.02.2021

பதிவு செய்தவர்: டாக்டர் ஜெயஸ்ரீ


மூனு சுழி “ண”, ரெண்டு சுழி “ன” என்ன வித்தியாசம்?

கண்ணப்பன்’னு’ எழுதச் சொன்னால் ஒருத்தன்

4-சுழி 5-சுழி போட்டானாம்!

என்னப்பானு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்,

4-சுழி 5-சுழி இருக்கக் கூடாதா?

இது எப்படி இருக்கு?

தமிழ் எழுத்துகளில் -

ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு!

மூனுசுழி "ண" என்பதும் தவறு!

"ண" இதன் பெயர் "டண்ணகரம்",

"ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கு எல்லாம் இந்த மூனு சுழி 'ணகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்"னு பேரு.

தென்றல், சென்றான் – என எங்கு எல்லாம் இந்த ரெண்டு சுழி 'னகர' ஒற்றெழுத்து வருதோ, அதை அடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத் தான் இருக்கும்.

இதனால இதுக்கு "றன்னகரம்"னு பேரு. இது ரெண்டும் என்றுமே மாறி வராது. இதுல கூட பாருங்களேன்…

பிரியாத காதலர்கள் மாதிரி சேர்ந்து சேர்ந்தே வருவதை பாருங்களேன்! இது புரியாம இவைகளை நாம பிரிச்சுடக் கூடாதல்லவா?

வேற மாதிரி சொன்னா. இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! வர்க்க எழுத்து-ன்னா,

சேர்ந்து வர எழுத்து! அவ்ளோதான்.

இந்தப் பெயரோடு ("டண்ணகரம்" "றன்னகரம்")
 
இந்த 'ண', 'ன' எழுத்துகளை அறிந்து கொண்டால்

எழுத்துப் பிழையும் குறையும்.

எப்படி?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ’ட’ இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி 'ண' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்".

இதே மாதிரிதான்

"ந' கரம்" என்பதை, "தந்நகரம்" னு சொல்லனும்.

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே.

(பந்து, வெந்தயம், மந்தை…)

தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு. இதைப் புரிந்து கொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும்.  (என்ன..? இதெல்லாம் பள்ளிக்கூடப் பாடத்தில் வராது!)

எடுத்துக்காட்டாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன –

எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.

உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்து உள்ளனர்

இதை எல்லாரும் படித்து இருப்போம்-

வல்லின எழுத்துகள் –

க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–

ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையின எழுத்துகள்–

ய ர ல வ ழ ள (இவை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்தில் இருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)
இதுவும் தெரிஞ்சதுதான்.

எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18-எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள –

18 எழுத்து வருதுல்ல... இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப் படுத்தாமல் "க ங ச ஞ ட ண" என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.

சொற்களில், மெல்லினத்தை அடுத்து

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)

க ங – எங்கே – ங் க

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப

இடையின ஆறெழுத்தும் அவற்றின் பெயருக்கேற்ப (உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி மென்மையாகவும் இன்றி இடையினமாக) செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற

அவ்வளவு தாங்க...

உலகமே இரட்டை எதிர்த் துருவ ஈர்ப்பில் தானே இயங்குகிறது!

நெட்டை ’னா’ குட்டை

பள்ளம் ’னா’ மேடு

தொப்பை ’னா’ சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் ’னா’ மெல்லினம்.

அப்படின்னா பெண்கள் எல்லாம் மெல்லிய மலர்தானா... அது அவங்கவங்க பார்வையைப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்.

ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்பிட முடியுமா?

முடியும்னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேர்த்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழ் இயல்பு.

இதே மாதிரித்தான் -

சின்ன "ர" என்பதும் தவறு!

பெரிய "ற" என்பதும் தவறு!

ர - இதனை, இடையின 'ரகரம்' என்பதே சரியானது

- மரம், கரம், உரம்

ற - இதனை வல்லின 'றகரம்' என்பதுதான் சரி.

- மறம், அறம், முறம்

இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!

வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்

இடையில வருவது இடையினம்.

அட நம்ம நடுத்தர வர்க்கம் ’னு’ வச்சிக்குங்களேன்...

வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில ’லோல்’ படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)

வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம முன்னோர்கள்

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...

இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான்!

இதே மாதிரித்தான்

உயிரெழுத்தில்

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

ஐ-

ஒ-ஓ

என வரும் இன எழுத்துகள்

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை (ஓசை ஒழுங்கு) அறிந்து எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும். படிப்பவர் நினைவில் நிலைக்கும்.

நன்றி!


11 பிப்ரவரி 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். இவரின் மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்.

மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த பெரும்பாலான சமூக நிகழ்வுகளில் சமூக ஆர்வலராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பற்றுதலைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிதும் கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.    

பாலன் முனியாண்டி, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவர். பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் அந்தக் கழகம் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணிப் பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். கடல் கடந்தும் காணலாம்.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தினரைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள்.

செய்த தர்மம் தலைகாக்கும்... தக்க சமயத்தில் உயிர் காக்கும்... இது நான்கு மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு (10.11.2020) பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

*மலேசியம்* புலனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும்.

தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.02.2021

 

10 பிப்ரவரி 2021

மயிர் குறை கருவி

10.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

மயிர் குறை கருவி. என்னது இது? நாம் அன்றாடம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்.

கத்தரிக் கோலை கண்டுபிடித்தது யார்? எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக் கோலை முடி வெட்ட பயன்படுத்தினார்கள் என்பது தான் சிறப்பான விடயம்.

அதன் பெயர்தான் "மயிர் குறை கருவி"

சங்க இலக்கியமான *பொருநர் ஆற்றுப்படை*

கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

யாழிசைத்துப் பாடும் பாடினியை வர்ணிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்..

பாடினியின் காது, மயிர் குறை கருவியின் அடிப்பக்கம் போன்று இருந்ததாம். கத்திரிக் கோலின் கைப்பிடிபோல் அவளின் காது நீண்டு இருந்தது.

பாடல் 25 - 30.

" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல்,
கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "


கருமையான கூந்தல், பிறைபோல் நெற்றி, கொலை வில் போன்று வளைந்த புருவம், இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..

அடடா...
என்னவொரு உவமை...
நீண்ட காதுகளுக்கும்...
கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்...


அதைவிட அவசியம்... சங்க காலத்திலேயே தமிழன் முடி வெட்டி சிகை அலங்காரம் கொண்ட நாகரிகத் தமிழன் என்பதுதான்.

நன்றி: முனைவர் பாண்டியராஜா அவர்களின் சங்கச் சோலை இணையப் பக்கம்.



தமிழர் உறவு முறைகள்

08.02.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ

தமிழன் தெரிந்து கொள்ள வேண்டிய தன் இனத்தின் பெருமை. அதை உலகிற்கே உரக்க சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. உறவுகள்:-

Mom , Mother , Mummy - அம்மா, தாய், அன்னை.

Dad , Father , Daddy - அப்பா, தந்தை, அய்யன்

Elder Sister - அக்காள், தமக்கை

Elder Brother - அண்ணன், தமையன்

Younger Sister - தங்கை, அங்கச்சி

Younger Brother - தம்பி, அம்பி

Maternal Grandmother - பாட்டி, ஆச்சி , அம்மம்மா, அமத்தா, அம்மாயி

Paternal Grandmother - பாட்டி, ஆச்சி, அப்பத்தா

Maternal Grandfather - தாத்தா, பாட்டன், பாட்டனார்

Paternal Grandfater - தாத்தா, பாட்டன், அப்பப்பா

Great Grandmother - பூட்டி, கொள்ளுப் பாட்டி, முப்பாட்டி

Great Grandfather - பூட்டன், கொள்ளு தாத்தா, முப்பாட்டன்

Great Great Grandmother - எள்ளுப் பாட்டி, ஓட்டி

Great Great Grandfather - எள்ளுத் தாத்தா, ஓட்டன், சீயான்

Brother - in - Law [Elder Sister's Husband] - மாமா , மைத்துனர்

Brother - in - Law [Younger Sister's Husband] - கொழுந்தனார்

Sister-in-Law [Elder Brother's Wife] - அண்ணி, மைத்துனி, மதினி, அத்தாச்சி

Sister-in-Law [Younger Brother's Wife] - கொழுந்தியாள்

Uncle [Mother's brother] - மாமா, தாய்மாமன்

Aunt [Mother's brother's wife] - அத்தை, அம்மாமி

Aunt [Mother's elder sister / Father's elder brother's wife] - பெரியம்மாள்

Uncle [Mother's elder sister's husband / Father's elder brother] - பெரியப்பா

Aunt [Mother's younger sister / Father's younger brother's wife] -சித்தி, சின்னம்மாள்

Uncle [Mother's younger sister's husband / Father's younger brother] - சித்தப்பா, சிற்றப்பார்

Aunt [Father's sister] - அத்தை

Uncle [Father's sister's husband] - மாமா

Wife - மனைவி

Husband - கணவன்

Mother-in-law - மாமியார்

Father-in-law - மாமனார்

Brother-in-law [Husband's brother] - கொழுந்தன், அளியன்

Sister-in-law [Husband's sister] - நாத்தனார்

Brother-in-law [Wife's brother] - மச்சான், மச்சினன், அளியன்

Sister-in-law [Wife's elder sister] - அண்ணி, அத்தாச்சி

Sister-in-law [Wife's younger sister] - கொழுந்தி

Son - மகன், புதல்வன்

Daughter - மகள், புதல்வி

Son-in-law - மருமகன், மாப்பிள்ளை

Daughter-in-law - மருமகள், மட்டுப் பொண்ணு

Daughter / Son -in-law's parent [No term in english] - சம்பந்தி

Cross-cousin [Father's sister's son] - அத்தான்

Cross-cousin [Father's sister's daughter] - அத்தங்கார்

Cross-cousin [Mother's brother's son] - அம்மாஞ்சி

Cross-cousin [Mother's Brother's daughter] - அம்மங்கார்

Grandson - பேரன்

Granddaughter - பேத்தி

Great Grandson - கொள்ளுப்பேரன்

Great Granddaughter - கொள்ளுப்பேத்தி

Grand Grand Grandson - எள்ளுப்பேரன்

Grand Grand Granddaughter - எள்ளுப்பேத்தி

நாம் காணும் அனைத்துக் குடும்ப தரப்பினருக்கும் தமிழில் பெயருண்டு. ஆங்கிலத்தைப் போல் யாரைக் கண்டாலும் Uncle, Aunty என்று கூப்பிடும் அவநிலை தமிழுக்கு இல்லை. பிற மொழியை போலன்று. மூன்று தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களுக்கும் பெயர் வழங்கியப் பெருமையும் தமிழையே சாரும்.

இப்படி சொந்த வீட்டில் உள்ளவர்களையே Son-in-law, Daughter-in-law, Brother-in-law, Sister-in-law, Cross-cousin என்று பிரித்துப் பார்க்காமல் நல்ல தமிழில் ஒற்றுமை கலந்த உறவுச் சொல்லிலேயே அழைக்கலாமே.

மற்ற எந்த மொழியிலும் இல்லாத; சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளைச் சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனித் தனியாகப் பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டு உள்ளது.

வேதனை என்னவெனில் நம் தலைமுறையினரோ இதைப் பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர்.

இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள் பாசப் பிணைப்பு வளரும்.




 

07 பிப்ரவரி 2021

செங்காட் கிண்டிங்ஸ் மலைக்காடுகள்

06.02.2021

சிம்மோர் நகரில் இருந்து தஞ்சோங் ரம்புத்தான் செல்லும் பாதையில் 6-ஆவது கி.மீ. பழைய செங்காட் கிண்டிங்ஸ் ரப்பர் தோட்டம். இப்போது இல்லை. நில மேம்பாட்டுத் திட்டங்களினால் அந்த இடம் மறைந்து விட்டது.


ஏறக்குறைய 2000 அடி உயரத்தில்...

அந்தத் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் உட்புறம் ஒரு தார் சலை. முன்று கி.மீ. தொலைவில் மலைக்காடுகள். அங்குதான் என் மகளின் மாளிகை உள்ளது.

காட்டுப் பன்றிகள் மேய்ந்த பாசா காடு

ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்வது உண்டு. மாளிகைக்கு அருகில் காட்டுப் பாதைகள் உள்ளன. அங்கு நடைப் பயிற்சிகள் மேற்கொள்வதும் உண்டு. அப்போது எடுத்த சில ஒளிப் படங்கள். பதிவு செய்கிறேன்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

 

தனசேகரன் தேவநாதன்: சித்திர சோலைகளே... பாரதிதான் கவிதை வரிகள் மனதை வருடுகிறது ஐயா.

ரஞ்சன் கங்கார் பூலாய்: இயற்கையை ரசிப்போம்... பசுமையைச் சுவாசிப்போம்... அண்ணா... காலையிலேயே இப்படங்களை அனுப்பி என்னை உசுப்பி விடுகிறீர்கள்...
பழைய நினைவுகளுக்கு... விடுமுறை காலங்களில் காட்டிற்குள் நுழைந்த அனுபவத்தை சொல்கிறேன்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தம்பி... இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி... அதனால் தான் சிறு விலங்குகள் வாழ்கின்றன. இல்லை என்றால்... ?

ஆதி சேகர்: நல்ல தூக்கம்... மலேசியம்... புலனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..!

நல்ல இயற்கை காட்சியை காலையிலேயே... படம் பிடித்து கண்ணுக்கும்... மனதுக்கும்.... குளிர்ச்சியை தந்த ஐயா அவர்களுக்கும்.. தேவிசர..மா விற்கும்.. நன்றி....!

ரஞ்சன் கங்கார் பூலாய்: காட்டிற்குள் நுழைந்த அனுபவம் சுவாரசியமானது... காட்டுப் பழங்களை பறிக்க... காட்டு டுரியான் (முள் நாறிப்பழம்) மங்குஸ்தீன், ரம்பத்தான், டுக்கு, பலா, பூனைப் புடுக்கு பழம் (buah rampai) இன்னும் பல வகையான பழங்கள்  ...

முள்ளம் பன்றி முட்கள்

இப்போது  இருக்கும் நிலையில்... மனித நாகரீகம்  தெரியாத  இந்த காட்டான்களோடு வாழ்வதை விட... காட்டிற்குள் குடியேறி விடலாமா என்று  தோன்றுகிறது.

டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: இயற்கையோடு இணைந்தால் வாழ்க்கை முழுதும் அழகு! இந்த இடத்தில் நீர் நெருப்பு தவிர  பஞ்ச பூதத்தில் அனைத்தும் பரிபூரணமாக ரசாயனக் கலப்பின்றி கிடைப்பதால் உடலும் தேறி உள்ளமும் அமைதி அடையும்.