06.02.2021
சிம்மோர் நகரில் இருந்து தஞ்சோங் ரம்புத்தான் செல்லும் பாதையில் 6-ஆவது கி.மீ. பழைய செங்காட் கிண்டிங்ஸ் ரப்பர் தோட்டம். இப்போது இல்லை. நில மேம்பாட்டுத் திட்டங்களினால் அந்த இடம் மறைந்து விட்டது.
ஏறக்குறைய 2000 அடி உயரத்தில்...
அந்தத் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் உட்புறம் ஒரு தார் சலை. முன்று கி.மீ. தொலைவில் மலைக்காடுகள். அங்குதான் என் மகளின் மாளிகை உள்ளது.
ஓய்வு எடுப்பதற்காக நான் அங்கு செல்வது உண்டு. மாளிகைக்கு அருகில் காட்டுப் பாதைகள் உள்ளன. அங்கு நடைப் பயிற்சிகள் மேற்கொள்வதும் உண்டு. அப்போது எடுத்த சில ஒளிப் படங்கள். பதிவு செய்கிறேன்.
-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தனசேகரன் தேவநாதன்: சித்திர சோலைகளே... பாரதிதான் கவிதை வரிகள் மனதை வருடுகிறது ஐயா.
ரஞ்சன் கங்கார் பூலாய்: இயற்கையை ரசிப்போம்... பசுமையைச் சுவாசிப்போம்... அண்ணா... காலையிலேயே இப்படங்களை அனுப்பி என்னை உசுப்பி விடுகிறீர்கள்...
பழைய நினைவுகளுக்கு... விடுமுறை காலங்களில் காட்டிற்குள் நுழைந்த அனுபவத்தை சொல்கிறேன்...
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: தம்பி... இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி... அதனால் தான் சிறு விலங்குகள் வாழ்கின்றன. இல்லை என்றால்... ?
ஆதி சேகர்: நல்ல தூக்கம்... மலேசியம்... புலனத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..!
நல்ல இயற்கை காட்சியை காலையிலேயே... படம் பிடித்து கண்ணுக்கும்... மனதுக்கும்.... குளிர்ச்சியை தந்த ஐயா அவர்களுக்கும்.. தேவிசர..மா விற்கும்.. நன்றி....!
ரஞ்சன் கங்கார் பூலாய்: காட்டிற்குள் நுழைந்த அனுபவம் சுவாரசியமானது... காட்டுப் பழங்களை பறிக்க... காட்டு டுரியான் (முள் நாறிப்பழம்) மங்குஸ்தீன், ரம்பத்தான், டுக்கு, பலா, பூனைப் புடுக்கு பழம் (buah rampai) இன்னும் பல வகையான பழங்கள் ...
இப்போது இருக்கும் நிலையில்... மனித நாகரீகம் தெரியாத இந்த காட்டான்களோடு வாழ்வதை விட... காட்டிற்குள் குடியேறி விடலாமா என்று தோன்றுகிறது.
டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: இயற்கையோடு இணைந்தால் வாழ்க்கை முழுதும் அழகு! இந்த இடத்தில் நீர் நெருப்பு தவிர பஞ்ச பூதத்தில் அனைத்தும் பரிபூரணமாக ரசாயனக் கலப்பின்றி கிடைப்பதால் உடலும் தேறி உள்ளமும் அமைதி அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக