12 ஆகஸ்ட் 2021

போகும் பாதை பொல்லாத பாதை

12.08.2021

பதிவு செய்தவர்: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

போகும் பாதை பொல்லாத பாதை
திருந்தி வாழவா தெரியவில்லை
வேகமாக வளர்கின்ற காலத்தை
விளங்கி உயரவா புரியவில்லை

அமரர் டி.எம். ராமையா


போகும் பாதை பொல்லாத பாதை

கையில் புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறாய்

..... பாடல் வரிகள் தொடரும்



பின்னூட்டங்கள்:

முருகன் சுங்கை சிப்புட்:  அருமை இந்தப் பாடலை சிறுவயதில் கேட்டுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு இப்போது தான் கேட்கிறேன். அருமை அய்யா. நன்றி 🙏🙏🙏

டாக்டர் சுபாஷினி: நல்ல பாடல். இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. mp3 வடிவில் இந்தப் பாடல் இருந்தால் அனுப்புங்கள். இது மலேசிய பாடகர் எழுதி பாடிய உள்ளூர் பாடல் தானே...

வெங்கடேசன்: திசையறியா வைரஸ் பாதை. எப்போது முடியுமோ 😢

தனசேகரன் தேவநாதன்: போகும் பாதை பொல்லாத பாதை திருந்தி வாழ்வா தெரியவில்லை. மலேசிய பாடகர் அமரர் திரு T.m இராமையா பாடிய பாடல் 😢😥


தேவிசர கடாரம்: ஊதா....ஊதா...ஊதாப்பூ... 😍

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஊதா பூவின் உவகையில் மின்சாரக் கண்ணா படத்தின் பாடல்...

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
இன்றும் என்றும் உதிரா பூ...

தேவிசர கடாரம்: வாவ் 😍...அருமை👏👏👏👏

இராதா பச்சையப்பன்: 🌷🙏 சகோதரர் கவிஞர் அவர்களே 'கொஞ்ச நாட்களாய் காணவில்லையே".  நலம் தானே? கவிதையைப் பாடலாமே'. காலையிலேயே  புலனத் தலைவர் கூட பாட்டுப் பாடி இருக்கிறார் கவனித்தீர்களா? வேறு ஒருவர் 'ஊதாக் கலர் ரிப்பன், உனக்கு யார் அப்பன் என்று கூட பாட நினைத்தாராம். ஆனால் தலைவர் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு எதற்கு என்று விட்டு விட்டாராம்.  🤷‍♀️🙏🌷

இராதா பச்சையப்பன்: 🌷🙏 இந்த ஊதா பூ பாடல் நான் கூட பாடியது இல்லை.  உலகக் கட்டுரை நாயகனுக்குக் கட்டுரை எழுத மட்டுமே தெரியும் என்று நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. பாடல்களிலும், பாடல் நாயகன் என்று  தெரிகிறது. மகிழ்ச்சி 😃🙏🌷.



 

பொறுமையின் மறுவடிவம் மூங்கில் செடி

12.08.2021

பதிவு செய்தவர்: பி.கே.குமார், ஈப்போ

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும். ஆனால் செடி வளரவே வளராது. ஓர் அங்குகுலம் அளவு கூட வளராமல் அடம் பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதைப் பராமரிக்க வேண்டும்.*

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பது இல்லை.


ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் தொடங்கும். அதுவும் எப்படி? சட சடவெனும் அசுர வளர்ச்சி.

ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஓர் இரகசியம் அதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களைப் பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஐந்தாவது ஆண்டில் ’நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன். என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை’ என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை. தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித் தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம். முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

#பாரதிய தமிழன்

 

11 ஆகஸ்ட் 2021

மொட்டை அடிக்கும் குட்டிப் பிசாசுகள்


1. ஐம்பது சாரி... ஐம்பது சுடிர்தார் போதும்...

2. அப்பா கட்டின வீடு ஒன்னு இருக்கு... அது வேணும்.

3. கல்யாணத்தை ஸ்ரீவாரி மண்டபத்தில் கிரேண்டா செய்யணும். அதன் ஒருநாள் வாடகை ஐம்பது இலட்சம். அதிலே எல்லா செலவும் அடங்கும்.

4. பிரிட்ஜ் வேணும்... வாசிங் மெசின் வேணும்... சப்போஸ் நான் தனிக்குடித்தனம் போனால்...

4. கார்... வீடு... அப்புறம் கோல்ட் 50 பவுன்... அப்புறம் எங்க அம்மா வச்சிருக்கிற இருக்கிற சேலைகள் எல்லாம் வேணும்...


5. இப்ப நாங்க இருக்கிற வீடு எனக்கு வேணும்... கீழே வாடகைக்கு விட்டு இருக்காங்க. வாடகை நிறைய வரும். நான் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். 

நான் ஒரு நாளைக்கு ஒரு சாரி கட்டினால் அதை மறுபடியும் கட்டவே கூடாது. வருசத்துல 365 நாளைக்கும் 365 சேலைகள் வேணும். இதை எல்லாம் புருசன் கிட்ட கேட்கலாமே. வேண்டாம். அப்பா அம்மகிட்ட கேட்கலாம். இன்னொருத்தன் கிட்ட போய் ஏன் கேட்கணும். (பிள்ளையை ரொம்ப அற்புதமா வளர்த்து இருக்காங்க).

6. வைர நெக்லஸ் ஒரு கலெக்சன் வேணும்.

7. 50 பவும் நகை வேணும் ஒரு நிலம் வேணும். அம்மா சேர்த்து வச்சிருக்காங்க. அதான் வேணும். (என்ன கொடுமை சார் இது)

8. மணமேடைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கணும்

9. மாப்பிள்ளை வீட்டில் 30 சவரண் கேட்டால் எனக்கு டபுளா தரணும்.

10. எனக்கு 80 பவுன்ல நகை வேணும்.

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: இந்த நிகழ்வைப் பார்க்க நேர்ந்த பொழுது என் மகள் சொன்ன வார்த்தை ‘இதுகள் பிசாசுகள்’. அச்சமயம் மகளுக்கு திருமணம் ஆகவில்லை.

இராதா பச்சையப்பன்: இது பழைய  காணொலி .

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: இதைப் பற்றி அன்பர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்லலாமே... ஒரு மாற்றத்திற்காக...

கணேசன் சண்முகம் சித்தியவான்: தாய் தந்தையின் வேர்வை  உழைப்பு  கண்ணீர் சிந்திய இரத்தம் அதை உணரும் பிள்ளைகள் உருவாக வேண்டும்.

குமரன் மாரிமுத்து: பணம், பொருள் ஈட்டும் வேட்கையில் குழந்தை வளர்ப்பை, கூட்டுக் குடும்பங்களை உதறித் தள்ளிய பெற்றோர்களின் சொத்துகள் (பிள்ளைகள்) இன்று முள்வேளியாக வளர்ந்து அவர்களையே காயப் படுத்துகின்றனர்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் கெட்டவராவது தாய் தந்தை வளர்ப்பினிலே!

தனசேகரன் தேவநாதன்: நமது நாட்டில் குறிப்பாக பெண் பிள்ளைகள் இப்படி என கேள்வி பட்டதே இல்லை ஐயா. இப்படி எதிர்பார்த்த மாப்பிள்ளைகளை தட்டிக் கழித்த பெண்கள் உண்டு.

தமிழ் நாட்டில் இந்நிகழ்வில் கலந்து கருத்து சொன்னவர்கள் வாழ்க்கை முறை புரியாத புதிராக உள்ளது. கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்கள் பாணியில் பேசுவது தமிழ்நாட்டு ஏற்ற தாழ்வு விளங்கவில்லை

ஐயா. நம்நாட்டில் வசதியான குடும்ப பெண்கள் கூட பெற்றோர்களிடம் இப்படி சுரண்டல் செய்வார்களா என்பது கேள்வி குறிதான்

கலைவாணி ஜான்சன்: வணக்கம் ஐயா.... மற்றும் அனைவர்க்கும் 🙏🙏... பெண் பிள்ளைகள் என்றால் அப்பாக்களுக்கு தேவதைகள் என்ற நினைப்பு ஆணித்தரமாக உள்ளது. ஆகவே பெண் பிள்ளைகள் தேவதைகள் தான் அப்பா என்று நிரூபிக்க வேண்டும்.

சில பெண் பிள்ளைகள் இப்படி செய்ததை எனது நண்பர் காவல் துறை அதிகாரி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்.... வேதனை தான்.... பார்த்து பார்த்து வளர்ந்தவர்களிடம் இப்படி நடந்து கொள்வது முறை அல்ல....

திருமணத்திற்கு பின் கணவருடன் சேர்ந்து உழைத்து அனைத்து ஆடம்பரங்களைச் சேர்த்து கொள்வது அவர்கள் திறமை. அதுவே சாலச் சிறந்த பண்பாகும்...

என் அப்பாவுக்கு நாங்கள் நான்கு பெண் பிள்ளைகளும் தேவதைகள் தான் என்பதை பெருமையாக மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்கிறேன்.

அப்பாக்கள் அனைவரும் பெண் பிள்ளைகளுக்கு கிடைத்த பொக்கிஷம்.... நம் புலன அப்பாக்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்... 🌹🌹🙏🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியாவைப் பொருத்த வரையில் நம் தமிழ்ப்பிள்ளைகள் தங்கமான பிள்ளைகள். 100-க்கு 95 பெண்பிள்ளைகள் குடும்பத்திற்குப் பாரம் இல்லாதவர்கள்.

காணொலியைப் பார்த்து மிக மிக வேதனை அடைந்தேன். பொதுவாகவே பெண் பிள்ளைகளைத் தெய்வக் குழந்தைகளாக, தெய்வத்தின் அவதாரங்களாகப் பார்த்து புகழ்ந்து போற்றுவது என் வழக்கம்.

ஆனால் அந்தக் காணொலியில் அப்பாவுடைய சொத்துகளை பறித்துக் கொள்வதில்தான் அந்தப் பெண்பிள்ளைகள் முழு இலக்கைக் காட்டி உள்ளார்கள். எப்படி மனசு வருகிறது என்றுதான் முதல் கேள்வி. இப்படி கேட்கும் அளவிற்கு என் மகளை வளர்க்கவில்லையே....

நம் நாட்டில் அப்படிப்பட்ட பெண்பிள்ளைகள் அறவே இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். தன்னிடம் உள்ளதை அப்பா அம்மாவிடம் கொடுக்கும் பிள்ளைகளைத் தான் இதுநாள் வரையிலும் பார்த்து இருக்கிறேன்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: ஆமாம் ஐயா. உண்மை ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரு குடும்பத்தில் அதிகமான பெண் பிள்ளைகள் இருந்தால் அங்கே பெண் தேவதைகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று பொருள்.

ஆண் பிள்ளைகளை விட்டுத் தள்ளுங்கள். அதிரசத்தை அதிசயமாகப் பார்க்கும் ஆஸ்திரேலியாகாரன் மாதிரி திருமணம் ஆனதும் பெற்றோரை அதிகம் கண்டு கொள்வது இல்லை. எல்லோரும் அல்ல. பாதிக்குப் பாதி.

ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி இல்லை. திருமணமாகிப் போனாலும் அப்பா அம்மாவை விட்டுக் கொடுப்பது இல்லை. தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகள் செய்கிறார்கள். இது நம் நாட்டுத் தமிழ்ப் பிள்ளைகளைச் சொல்கிறேன்.

காணொலியைப் பாருங்கள். அப்பாவுடைய வீடு வேண்டும். அப்பாவுடைய நிலம் வேண்டும். அம்மாவுடைய நகைகள் வேண்டும். அப்பாவுடைய பணம் வேண்டும். அதுவும் 50 இலட்சம். என்னவோ பணம் அச்சடிக்கும் மெசினை அப்பா வீட்டில் வைத்து இருக்கிற மாதிரி லிஸ்ட் போடுகிறார்கள்.

பெற்று வளர்த்து படிக்க வைத்து அடுத்தவன் வீட்டுக்குப் போகும் போது இருக்கிறதை எல்லாம் அப்பா அம்மா கொடுத்து அனுப்புகிறார்கள். கடைசி காலத்தில் பெற்றோர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கணிக்க வேண்டாமா. இருப்பதைப் பிடுங்கும் பார்வைதான் பெரிதாகத் தெரிகிறது. உண்மையிலேயே அந்தக் காணொலியைப் பார்த்து வெட்கப் பட்டேன்.

தேவிசர கடாரம்: இந்த காணொலியை என் சகோதரர்கள் பார்த்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்... பெண் பிள்ளைகள் அப்படி இல்லை என்று சூடம் அடித்து சத்தியம் செய்வார்கள்...

என் அப்பா உயிரோடு இருந்தால் ..என் பெண்கள் அப்படி இல்லை என்று ஒரே போடாகப் போட்டிருப்பார்...

[8:37 pm, 11/08/2021] Kalaivani Johnson: ஆனால் நம் நாட்டில் தமிழ்ப் பெண் பிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது மிகக் குறைவு தாங்க ஐயா....

[8:38 pm, 11/08/2021] Kalaivani Johnson: உங்களுக்காகவும் உங்கள் தந்தையர்க்காகவும் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன் சகோதரி...👍👍

தேவிசர கடாரம்: என் வீட்டில் நானும் என் தமக்கையும் என் தந்தையிடம் இது வேண்டும் என்று ஒரு நாளும் கேட்டது இல்லை... எங்கள் சகோதரர்களிடமும் கேட்டது இல்லை... இன்றும் கூட வாய் திறந்து கேட்டது இல்லை...

குமரன் மாரிமுத்து: அங்கு இருந்த வாழ்க்கைச் சூழல் வேறு; இங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் வேறு. அதுவே இந்த இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன் ஐயா.

இங்கு படித்தாலும் படிக்காவிட்டாலும் வேலை கிடைத்துவிடும்; வருமானம் ஈட்டுதலில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாத வாழ்க்கை முறை. சோம்பேறிகளை வேறு கணக்கில் வையுங்கள்.

தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லை அல்லது வேலையே இல்லை என்ற சூழல். அதனால், ஏழைகள் தங்கள் குழந்தைகள் வளரும்போது பணம் ஈட்டுதலை முதன்மைபடுத்துகின்றனர்.

பிள்ளைகள், படித்து முடித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர். பணம் ஈட்டுதலையே முதன்மையாக நினைக்கும் எந்திரமாக மாறுகின்றனர். (அனைவரும் அல்ல; ஆனால் பெரிய எண்ணிக்கை இதில் அடங்கும்.)

இது அவர்களின் தவறு அல்ல; உயிர் வாழ வேண்டும்; ஏழை என்ற முத்திரையை கிழித்தெறிய வேண்டும்..... இப்படியாக மனிதம் செயலிழந்து வருகின்றது ஐயா. என்னைப் பொருத்தவரை அங்கும் இங்கும் ஒப்பீடு செய்வது முறையாகாது.🥰✌🏻

மன்னிக்கவும். இன்னும் அதிகம் எழுதத் தோன்றுகிறது. உடல் நலம் இடம் தரவில்லை. ஏறக்குறைய 18 நாட்களாக கோறணி நச்சில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போதுதான் தேறிவருகிறேன். நேற்றிலிருந்துதான் புலனத்தில் சில பதிவுகளைச் செய்யத் தொடங்கினேன். அதிக நேரம் கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்த சிரமமாக உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டச் என் கோ தான்..... 🙏🏽😁

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நீங்கள் சொல்வதில் நியாயமான காரணங்கள் உள்ளன தம்பி குமரா. ஆனால் அக்கரையோ இக்கரையோ பெண்பிள்ளைகளைத் தெய்வப் பிறவிகளாகப் பார்க்கும் பாவனையில் வாழ்ந்து விட்டேன்.

அதனால் அப்பா அம்மாவை வைத்துக் கொண்டு அவர்களுடைய பணம், வீடு, நிலம் வேண்டும் 50 பவுன் நகை வேண்டும் என்று வாய்க் கூசாமல் கேட்பதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என்ன குமரா... உனக்குமா... உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் தம்பி. புலனத்திற்குப் பின்னர் வரலாம். முதலில் உடல் நலம். கவனம். கவனம்.


 

29 ஜூலை 2021

மூன்றாவது கொரோனா அலையில் தமிழர்கள் அதிகம் பாதிப்பு

மகாலிங்கம் படவெட்டான், நாம் தமிழர் பினாங்கு.

இன்றைய மூன்றாவது கொரோனா அலையில் நம்மவர்கள் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அழிவிற்கு காரணங்கள்....

1. ஆரம்பத்தில் ஏற்பட்ட முதல் அலையில் இருந்த பாதுகாப்பு அம்சம், பய உணர்வு, அச்சம், கவனம் நம்மவர்கள் கடைப்பிடித்த வாழ்க்கை முறை... இப்போது இல்லை.

2. இரண்டாவது அலையிலும் மிக மிகக் கவனமாக எதிர்க் கொண்டோம். அச்சம் பயம் இருந்தது. ஆனாலும் அலச்சிய போக்கு இருந்தது. கொஞ்சம் பாதிப்பு.

3. இப்போதைய மூன்றவது அலையில் முற்றிலுமாக முழு அலச்சிய போக்கை கையாண்டு....

அ... கூட்டம் கூட்டமாக கூடி மது அருந்துவது

ஆ... பணத் திமிரில் ஒன்று கூடி விருந்துகள் வைத்து ஆட்டம் பாட்டம் போடுவது

இ... பழைய பய பக்தி இல்லை..

ஈ... தெனாவட்டாக மமதையில் வாழ்வது... எனக்கு ஒன்னும் வராது என்ற திமிர்

உ... கட்டுபாடு அற்ற வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல்

ஊ... இப்போதைய சமுதாய சிந்தனையில்  சிறு வயது முதல் வயதில் மூத்தவர்கள் வரை தலை கனம் பிடித்து அலைகிறார்கள்....

இவர்களின் தெளிவில்லாத சிந்தனையால் தான் நமது இனம் இன்று கொத்து கொத்தாக செத்து மடிக்கிறார்கள்.

ஆக, இந்தச் சூழலில் நாம் யாரையும் குறை கூறவோ வஞ்சிக்கவோ வேண்டாம்.

இந்த அழிவுக்கு காரணம் நாம் தான். மற்ற இனத்தவர்கள் இந்த நோயிலிருந்து பயந்து ஓடுகிறார்கள். ஆனால், நாமோ ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டும், மது போதையில் வாழ்ந்து கொண்டும் திருந்தாத ஜென்மங்களாக வலம் வந்து கொண்டு இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால் நமது அழிவை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைய நமது மக்கள் தொகை 7 சதவிகிதம் கூட இல்லை. ஆனால், கொரோனா முடித்த பிறகு நமது மலேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நமது இந்தியரின் விகிதம் 5 சதவிதமாக மாறி விட வாய்ப்பு உள்ளது.

ஆக, நம்மை நாமே காப்போம்... குடும்பத்தையும் காப்போம்.

மகாலிங்கம் படவெட்டான்

நாம் தமிழர். பினாங்கு.

 

28 ஜூலை 2021

நெஞ்சை உலுக்கிய நிகழ்வு

பதிவு: இராதா பச்சையப்பன், கோலா சிலாங்கூர்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

எந்த எல்லைக்குப் பணி நிமித்தமாக செல்கிறீர்கள்? ஆக்ராவுக்கு... அங்கு இரண்டு வாரம் பயிற்சி. அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி.


ஒரு மணி நேரம் சென்றிருக்கும். அப்பொழுது ஓர் அறிவிப்பு. மதிய உணவு தயார்.

’சரி உணவு வாங்கலாம்’ என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும் போது எனக்குப் பின்னால் இருந்த இராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உடைந்து போனேன்.

ஏன்... சாப்பாடு வாங்கலையா?

இல்லை. விலை அதிகம். என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும். அங்கு இறங்கி உண்ணலாம். விலை குறைவாக இருக்கும்.

ஆமாம். உண்மை.

இதைக் கேட்ட பொழுது என்மனது மிகவும் வலித்தது. உடனே விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமானப் பணிப் பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.

அந்தப் பணிப் பெண் என் கைகளைப் பிடித்தாள். கண்களில் கண்ணீர். ’இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து’ என்றாள்.

நான் உண்டு முடித்து, கை கழவச் சென்றேன். அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, ’நீங்கள் செய்தததை நான் பார்த்தேன். நான் வெட்கப் படுகிறேன்’ எனக் கூறி ’இந்தாங்க... என் பங்கு ரூபாய் 500’ என்று என்னிடம் கொடுத்தார்.

நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளைப் பிடித்து குலுக்கி, ’இது ஒரு மிகப் பெரிய கருணைச் செயல்... மிக்க சந்தோஷம். உங்களைப் போன்றவர்களைத் தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிச் சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை...

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயைத் திணித்தான்.

விமானம் வந்து நின்றது. நான் இறங்கினேன். இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டைப் பையில் சில நோட்டுக் கற்றைகளைத் திணித்தார்.

இறங்கி நடந்தேன். அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச் செல்லும் இராணுவ வண்டிக்காகக் காத்து இருந்தார்கள்.

அவர்கள் அருகில் சென்றேன். நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்.

ஒரு தூண்டுதல். பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்... அனைத்துப் பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன். போகும் வழியில் நன்றாகச் சாப்படுங்கள். கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்.

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்.

இந்த இளம் வீரர்கள் குடும்பப் பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தன்னுடைய உயிரினைத் துச்சமாக மதித்து எப்படி நம்மைப் பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை.

இவர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்களைத் தரும்

சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

கோடிக் கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்... ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்... லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை நினைத்துகூட பார்ப்பது இல்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது..

இளைஞனே... என் சகோதரனே... உன்னைச் சரியான வழியில் வாழத் தயார் செய்து கொள்.

பின்னூட்டங்கள்

பதிவு செய்தவர் மீது நாம் குறை காண இயலாது. வேறு ஒரு புலனத்தில் பகிரப் பட்டது. பதிவாளருக்குப் பிடித்து இருக்கிறது. இங்கு பதிவு செய்து உள்ளார். தவறு இல்லை.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தில் பயணம் செய்யும் இந்தியப் போர் வீரர்களுக்கு விமானத்தில் இலவசமாக உணவு நீர் வழங்கப்படும். அப்படி இருக்கும் போது விமானத்தில் விற்கப்படும் உணவை விலை கொடுத்து வாங்கி வீரரகளுக்கு வழங்கியதாகச் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர: உண்மை ... தன் நாட்டை காக்கும் படை வீரனுக்கு உணவு இலவசமாக கொடுக்கலாமே...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: விமானத்தின் பயணம் மூன்று மணி நேரம். விமானத்தில் ஏறி இறங்க எல்லாம் முடிய ஐந்து மணி நேரம் பிடிக்கும். விமானத்தில் உணவு வாங்கிச் சாப்பிடாமல் டில்லியில் போய் இறங்கி சாப்பிடலாம்; அங்கு விலை குறைவு என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.

தேவி சர:உண்மை ஐயா

கேப்டன் வந்து கட்டிப் பிடித்து கண்ணீர் வடித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. சாதாரண விமானங்களில் இராணுவ வீரர்களை அனுப்புவது குறைவு. அவர்களுக்கு என்று இராணுவ விமானங்கள் உள்ளன.

15 வீரர்களுக்கு சாப்பாட்டுச் செலவு 500 ரூபாய். ஒரு வீரருக்கு 30 ரூபாய். இந்த 30 ரூபாயை மிச்சம் பிடிக்கும் அளவுக்கு இந்திய இராணுவ வீரர்களைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

வெங்கடேசன்: பொருமையாக படித்து பார்தால்தான் இவ்வளவு விஷயங்களும் விளங்கும் ஐயா அருமை 👏👏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  மொத்தத்தில் ஒரு கற்பனைக் கதையாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையே அவமதிக்கும் கதையாகவே தெரிகிறது.

தேவி சர:இப்படி கதை எழுதுவதால் அவருக்கு என்ன இலாபம்...🤦🏻‍♀️

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பதிவாளர் மீது நாம் குறை காணக் கூடாது. அதைப் பகிர்ந்ததால் தான் கருத்துகளைச் சொல்ல

கடைசியாக என்னைப் பாதித்தது. இந்திய இராணுவ வீரர்கள் 30 ரூபாய் இல்லாமல் ஐந்து மணி நேரம் பசியை அடக்கிப் பயணிக்கிறார்கள் என்று எழுதியவர் முன் வைக்கும் கருத்து... Totally absurd!

வெங்கடேசன்: சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

அவர்களைத் தெய்வங்களாகப் பூஜிக்கிறார்கள்.

அவர்களுக்காகக் கோயில் கட்டி வணங்குகிறார்கள்.

இத்தகையச் செயல்களால் தங்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது மிகுந்த வேதனை.

போன்ற நல்ல கருத்துகளையும் முன் வைப்பதற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கலாம்.

தேவி சர: எப்படி இருந்தாலும். இந்தக் கதையை பிரதமர் மோடி படித்தால் என்ன ஆவது... நல்ல வேலை அவருக்கு தமிழ் படிக்க தெரியாது...

வெங்கடேசன்: எப்படி இருந்தாலும் பிழை பிழைதான்... போர் எல்லையில் இந்திய இளைஞர்கள் நாட்டுக்காக உயிர் துறக்கிறார்கள். அப்படி இருக்கும் போது வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் பொழுதை வீணாகச் செலவு செய்கிறார்கள் என்பதைச் சொல்ல முன் வருகிறார்.

ஒரு நாட்டை அவமதிப்பது போல கதை செல்கிறது.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை.