14.08.2021
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் நாள் தமிழரின் வரலாற்றில் துயர் படிந்த ஒரு நாளாகும்.
தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம். உலகத்திலேயே அதிகளவு பெண்கள், அதுவும் பள்ளிக்கூட மாணவிகள் ஒட்டு மொத்தமாகக் கொல்லப் பட்டது ஒரு வரலாறாக மாறி இருக்கிறது.
உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்தச் சாதனையை இலங்கை அரசாங்கம் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் திகதி அதிகாலை வேளையில் நடத்தி முடித்தது.
வன்னிப் பகுதியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய இடங்களில் இருந்து கல்விப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 61 மாணவிகள் சில மணித் துளிகளில் மரணித்து போனது ஈழ மண்ணை சோகத்தில் மூழ்கடித்தது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 11, 2006-இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பயிற்சி வகுப்புகள் தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு கொலை செய்யப் பட்டனர் .
பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப் போய் கிடந்தன. துள்ளிக் குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாகக் கிடந்தன. கனவுகளைச் சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக் கொண்டு கிடந்தது.
அதிகாலை வேலை கிணற்றடியிலும், கழிப்பறையிலும், சமையலறையிலும், தத்தம் கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு கொல்லப் பட்டனர் .
காலை வேளையில் இலங்கை அரசின் வெறி பிடித்து வந்த கிபிர் விமானங்கள் ஆறு முறை குண்டுகளைக் கொட்டியது. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது.
மாணவிகள் வாயிலின் ஊடாக ஓட முடியாதபடி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது. அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நான்கு திசைகளிலும் போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது .
மாணவிகள் எந்தத் திசை வழியாகவும் வெளியே ஓட முடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப் பட்டது.
அங்கிருந்த நூற்றுக் கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது. ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் இரத்தக்கறை மாறாது இருக்கிறது.

உலக வரலாற்றில் நடந்த மறக்க முடியாத கொலைகளில் பிஞ்சு குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்ட இந்த நாளை தமிழர்களால் எப்படி மறக்க முடியும்?
நன்றி: சங்கதி -கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்
பின்னூட்டங்கள்:வெங்கடேசன்: கொடூர அரக்கக் குணம் கொண்டவர்களால் கொல்லப்பட்ட நம் பிள்ளைகளுக்கு இதய பூர்வ அஞ்சலி். எவ்வளவு உயிர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்டனர். உலகமே இன்று வரை, கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. வேதனை. இனப் படுகொலையாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றனர். மனித குலமே வெட்கித் தலை குனிய வேண்டும் 😡😡
தேவிசர கூலிம்: படிக்க முடியவில்லை கண்களில் கண்ணீர் திரையிடுகிறது. கொடும் பாவிகளை இன்னும் அந்த இறைவன் விட்டு வைத்திருக்கிறாரே...
முகில்: தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி வரலாறு படைப்பது உண்மைதான். போற்றுகிறோம். ஆனால் செஞ்சோலையில் குண்டுவீசி 400 குழந்தைகள் கொல்லப் படுவதற்கும்; தொடர்ந்து இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் படுவதற்கும் காரணமாக இருந்த சிங்கள அரசிற்குத் துணை போனவர்கள் ஒரு கொலைஞர் குடும்பம் தானே..இதை எந்த வரலாற்றில் சேர்ப்பதாம்?
இதற்குத் துணை போன குடும்பத்தாரைத் தூக்கி வைத்துப் புகழும் இனத்தவரைத் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப் படுகிறேன்.
தமிழீழத்தில் தமிழன மக்களை அழிப்பதற்குத் துணை போன குடும்பத்தின் புகழாரங்களைத் தயவு செய்து இந்தப் புலனத்தில் பகிர வேண்டாம்.
வெங்கடேசன்: இனத் துரோகி. இவர் நினைத்து இருந்தால் ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். தன் மக்களுக்காக இனத்தையே பலி் கொடுத்தவர். துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது 😭
முருகன் சுங்கை சிப்புட்: முகில்: ஓர் இனம் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கும் போது, தன் மகளுக்குப் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு வேட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓடியவர். அவர் குடும்பத்தின் இனம் மானம் காக்க வேண்டும். அப்படித்தானே.
சாப்பிடுகிற சோற்றில் உப்பு போட்டுச் சாப்பிடும் எந்தத் தமிழரும் ஓர் இனத்தை அழித்தக் குடும்பத்திற்குப் பரிந்து பேச மாட்டார்.
முருகன் சுங்கை சிப்புட்: எப்படி அய்யா. வெறும் வாய்மொழியிலா..? செயலிலா? அதையும் சொல்லி விட்டால் நம் இனத்தில் தான் இன மானம் காக்க நிறைய போராளிகள் உள்ளனரே உடனே திரண்டு விடுவார்கள்.
மொத்தமாக ஓர் இனம் போரால் அழிந்து, வறுமையில் வாடிக் கொண்டும், அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம். அந்த வருடத் தீபாவளியை பட்டாசு வெடித்துக் தானே கொண்டிருந்தோம். எங்கே போச்சு நம் இன உணர்வு அய்யா...
முகில்: இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே புலனத்தில் ஒரு வாக்குவாதம். அதில் தாங்கள் சொன்னது: தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்படும் போது மலேசியத் தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பூப்பறித்துக் கொண்டு இருந்தார்களா என்று கேட்டீர்கள். நினவு இருக்கிறதா. நீங்கள் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை.
அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, இன்றைக்கு அந்தக் கொலக்காரக் குடும்பத்திற்குப் பரிந்துரை செய்வது போல ‘இன மானம் காப்போம்’ என்று சப்போர்ட் பண்ணுவது, அறவே எனக்குப் பிடிக்கவில்லை.
முருகன் சுங்கை சிப்புட்: திசை திருப்பவில்லை அய்யா. வழியைச் சொல்லுங்கள்... நான் வாய் சொல் வீரன் அல்ல. கலைஞர் எனக்கும் எதிரிதான்😡
முகில்: இப்படித்தான் அன்றைக்கும் கேட்டீர்கள். என்னத்த வழி சொல்வது. முதலில் உங்களுக்கு என்று ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
தமிழீழ மக்கள் சாகடிக்கப் படுவதற்கு துணை போன குடும்பம் என் எதிரிகள் என்று வைராக்கியக் கொள்கை வேண்டும்.
கொலக்காரக் குடும்பம் ஆயிரத்தெட்டு நன்மைகள் செய்தாலும் செத்துப் போன இரண்டு இலட்சம் தமிழர்கள் மீண்டு வந்துவிடப் போவது இல்லை.
ஆச்சு பூச்சு என்றால் மலேசியத் தமிழர்கள் தீபாவளி கொண்டாடி பட்டாசு கொளுத்தினார்கள் என்று கதையை மாற்றி விடுவது.... போதும்.
நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள். சிராங்கூன் ரோட் அம்மாச்சி பூக்கடையில் பூமாலை கட்டிக் கொண்டு இருந்தீர்களா.
தயவு செய்து எதைப் பற்றி பேசுகிறோமோ அதைப் பற்றி பேசுங்கள்... தீபாவளி பட்டாசு கதை எல்லாம் வேண்டாம். சரிபட்டு வராது.
முருகன் சுங்கை சிப்புட்: உண்மை அய்யா... மீண்டும் சொல்கிறேன் நான் இனமானம் உள்ளவன். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி போட்டு விட்டு தப்பித்து கொள்ள நினைக்காதவன். தப்பு என் மீதும் உண்டு... உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் உண்டு. "பழமையே பேசிக் கொண்டு எதிர்காலத்தை பற்றி துளி அளவும் சிந்திக்காதவர்கள் நாம்"
முகில்: சரிங்க ஐயா. நீங்க இனமானம் உள்லவர். எங்களுக்கு எல்லாம் இல்லை. அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள். தயவு செய்து திசை திருப்ப வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. பிறகு பார்ப்போம்.
முருகன் சுங்கை சிப்புட்: நான் நிறுத்திக் கொள்கிறேன் அய்யா. ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.
முகில்: ஏற்கனவே டென்சன்.. இதில் இன்றைக்கு வேறு. இப்படியே போய்க் கொண்டு இருந்தால் எனக்கும் பிரசர் எகிறிப் போய் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும். நிறுத்திக் கொள்கிறேன். நன்றி.
வெங்கடேசன்: உடல் நலத்தில் கவனம் தேவை ஐயா🙏
முருகன் சுங்கை சிப்புட்: தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்து புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான். நன்றி
முகில்: நான்கு வயதிலேயே காது குத்தி விட்டார்கள். ஏழு வயதில் அரிச்சுவடியை மணலில் எழுத, காதில் போட்டு இருந்த கடுக்கனைக் கழற்றினேன். மறுபடியும் குத்த வேண்டியது இல்லை. 🙏
தனசேகரன் தேவநாதன்: ஈழத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்கள் அன்றைய சூழ்நிலையில் செய்ய இயன்றதைச் செய்தார்கள். எப்படி என்ன என்று கேட்காதீர்கள் செய்தவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் 💪💪💪💪💪💪😄
ஜீவன் தங்காக்: உண்மை
முருகன் சுங்கை சிப்புட்: இனி இந்த புலனத்தில் பயணம் செய்வதில் ஆர்வம் இல்லை. இதுவரை உங்களுடன் பயணம் செய்ததில் மகிழ்ச்சி... நிறைய கற்றுக் கொண்டேன். அருமையான குடும்பம். கருத்துச் சுதந்திரம் மட்டுமே இல்லை. மிகுந்த வருத்தத்துடன் விடைபெறுகிறேன்! அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏
[10:50 pm, 14/08/2021] Satya Francis: ஒரு தந்தை இல்லாமல் நாங்கள் எப்படி ஒரு குடும்பமாக பயணம் செய்ய முடியும்? தயவுடன் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் ஐயா...
[10:52 pm, 14/08/2021] Satya Francis: வணக்கம் ஐயா. இப்படி எல்லாம் நீங்கள் விடை பெற்றுக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது?
முகில்: இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் சாகடிக்கப் பட்டதை ஈழத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொண்டார்களாம். ஸ்டாலின் நிவாரண நிதிக்கு அதிகமாக அள்ளி கொடுத்தது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தானாம்
அநியாயத்தை நியாயப் படுத்த கதைகள் சொல்லப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனசாட்சி இல்லாமல் எப்படிங்க இப்படி எல்லாம் பொய் சொல்லலாமா? நியாயமே இல்லை. 🙏
கரு ராஜா சுங்கை பூலோ: ஆமாம் முருகன் சொன்ன கருத்தை ஏற்க முடியாது.
கணேசன் சண்முகம்: உண்மை ஐயா.
கரு ராஜா சுங்கை பூலோ: தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அராஜகம்.
[11:05 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஈழத தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருப்பார் கள்
[11:08 pm, 14/08/2021] Raja Sg Buluh: தமிழ் நாட்டுமக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் ஏற்க முடியவில்லை.
[11:10 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு சில சூடு சொரனை இல்லாத தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்!!!!!?
[11:11 pm, 14/08/2021] Raja Sg Buluh: எல்லாத் தமிழனையும் சூடு சொரனை இல்லாதவர்கள் என்று நினைக்க வேண்டாம்
[11:13 pm, 14/08/2021] Raja Sg Buluh: ஒரு கருத்து சொல்லும் போது யோசித்து சொல்லனும்.
[11:15 pm, 14/08/2021] Raja Sg Buluh: கருத்து சுதந்திரம் என்று ஏற்க முடியாத கருத்துக்களைச் சொல்வது தப்பு. உலகமே அழுதது. இதை உலக தமிழர்கள் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா??????
கணேசன் சண்முகம்: உலகத் தமிழர்கள் மனதில் ஆழமாய் பதிந்த மரணச் சம்பவம்.

முகில்: இந்த முகங்களைப் பாருங்கள். எத்தனை வயது. இந்தக் குழந்தைகள் தான் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகள். இவர்கள் மட்டும் அல்ல. 400 குழந்தைகள்.
இந்த மாதிரி சின்னஞ்சிறுசுகளைக் கொன்று போட்ட கூட்டத்திற்குத் துணை போன கும்பலுக்கு பரிவு காட்டுவது நியாயமா?
இப்படி எல்லாம் நடந்த பிறகு ’தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்..புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் ஏற்றுக் கொண்ட பிறகு நாம் யார் என்று கதை சொல்வது நியாயமே. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.
Raja Sg Buluh: இதை எல்லாம் எப்படி மறக்க முடியும்???
கணேசன் சண்முகம்: கண்டிப்பாக மறக்க முடியாத சம்பவம். உடல் சிதைந்த , உயிரற்ற உடல்கள்.
வெங்கடேசன்: உண்மையான தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள். காலப் போக்கில் மறக்கடிக்கப் படலாம். ஆனால் வரலாற்றை மாற்ற இயலாது. கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்கள் இன்னும் சிலர் சாட்சிகளாக உயிருடன் இருக்கிறார்கள்.
ராதா பச்சையப்பன்: அன்று சேதி கேட்டு அழுததை, இன்றும் நினைத்து பாருங்கள். இனியும் இது போன்று வேண்டாமே...