13 ஆகஸ்ட் 2021

மலேசியம் இணையத்தளத்தில் மலேசியம் புலனப் பதிவுகள்

13.08.2021

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் தகவல்கள் மூன்று வாரங்களில் தானாகவே அழிபடும். அந்த வகையில் ‘மலேசியம் இணையத்தளம்’ தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் உறுப்பினர்கள் பதிவு செய்த அழகு அழகான பதிவுகள்; மணிமணியான முத்திரைப் பதிவுகள் எல்லாமே அழிந்து போய் விட்டன.


இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது. மலேசியம் புலனத்தில் பதிவாகும் நல்ல பதிவுகள்; நேர்த்தியான பதிவுகள் அனைத்தும் மலேசியம் இணையத் தளத்திலும் உடனுக்குடன் பதிவாகும்.

அவ்வாறு பதிவு செய்வதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த படசம் இரண்டு மணி நேரம் வரை செலவாகலாம். பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் நேர்த்தியான பதிவுகள் அனைத்தையும் சேகரித்து இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

மலேசியம் இணையத்தளத்தில் பதிவாகும் புலனப் பதிவுகள் காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும். நாம் மறைந்த பின்னரும் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னரும்; அல்லது 1000 ஆண்டுகள் கழித்தும், அடுத்து வரும் தலைமுறைகள் அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். நம்மைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

மலேசியம் எனும் பெயரில் ஒரு புலனம் இருந்தது. இப்படி எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்; இப்படி எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று அவர்களும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பதிவுகள் தான் நாம் நம் அடுத்த தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனம்.

வெங்கடேசன்: சிறப்பான முயற்ச்சி வாழ்த்துகள் ஐயா. தங்கள் செயல் மிக சிறப்பான ஒன்று 🙏🙏

கணேசன் சண்முகம் சித்தியவான்: உண்மை ஐயா. போற்றப்பட வேண்டிய செயல். காக்கப்பட வேண்டிய எழுத்துச் சாசனங்கள்.

தனசேகரன் தேவநாதன்: இது ஒரு மாபெரும் பணி. பொய் சேவையே மெய் என கருதுகிறோம் எனும் அண்ணன் அன்பானந்தன் அவர்களின் அமுத மொழி  ஓட்டப் பந்தயத்தில் எங்களையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறீர்களே...

பொய் புளுகுச் சரித்திர மூட்டைகளை அடித்துத் துவைக்கும் உங்கள் எழுத்துக்ள் என்றென்றும் உயிர் பெற்று வாழும். அன்னை சரஸ்வதி அனைத்தையும் உங்களுக்கு அருள்வாய் என அன்னையை வேண்டி இந்த அமுத கானத்தை உங்களுக்காகச் சமர்ப்பணம் செய்கிறேன்.

https://youtu.be/l1kYJFo-uBU

தேவிசர: சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

தேவிசர: வணக்கம் அப்பா. கற்றுக் கொண்டதை வீணே விரயம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன் படட்டும் என்ற உயர்வான எண்ணம் கொண்ட தங்களுக்கு இறைவன் எந்த நேரத்திலும் துணை இருப்பார்.

சரியான சமயத்தில் சரியான பாடல் சரியானவருக்கு சமர்ப்பணம். நன்றி ஐயா🙏🏻.

கரு. ராஜா: அருமை

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் தனசேகரன் ஐயா. தங்களின் நீண்ட பதிவு மனதில் ஆழமாய் வருடிச் செல்கின்றது.

இதற்கு மேலும் எதை எழுதுவது... தெரியவில்லை. தங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் நாட்டிற்கும் தேவை. வீட்டிற்கும் தேவை. இந்தப் புலனத்திற்கும் தேவை. வாழ்த்துகள் ஐயா


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக