12 ஆகஸ்ட் 2021

நம்பிக்கை வைத்தால் அவமானம் நமக்கே

12.08.2021

ஆறுதல் கிடைக்கும் என்று சில வேளைகளில் நம்முடைய பிரச்சினைகளை நம்பிக்கையின் பெயரில் மற்றவரிடம் சொல்லி விடுகிறோம். இங்கே நம்பிக்கை தான் முதன்மை பெறுகிறது.

ஆனால் இந்தக் கலிகாலத்தில் உயிருக்கு உயிராய் நம்பியவர்களே மோசம் செய்து விடுகிறார்கள்.

2014-ஆம் ஆண்டில் என் நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் தோழி ஒருவர் இருந்தார். கூடப் பிறந்த தங்கைக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்துப் பழகி வந்தார். தன்னுடைய குடும்ப ரகசியங்களை எல்லாம் அந்தப் பெண்ணிடம் சொல்லி விடுவார். நம்பிக்கை. நம்பிக்கை.

அந்தப் பெண்ணுக்குப் பண உதவி தேவைப்படும் போது எல்லாம் 50, 100, 200 என்று கொடுத்து உதவி செய்து வந்து இருக்கிறார். கணக்குப் பார்ப்பது இல்லை.

தங்கச்சி தானே என்று அவருடைய போன் பில்; கரண்டு பில்; அந்த பில் இந்த பில் என்று நிறைய கொடுத்து உதவி இருக்கிறார். சில ஆயிரங்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் என்னவோ பிணக்கு. அப்புறம் என்ன. நண்பரின் அந்தரங்க இரகசியங்கள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தன.

அதனால் நல்லா இருந்த அவருடைய மனைவிக்கும் அவருக்கும் சண்டைச் சச்சரவுகள். பிள்ளைகளும் தந்தையாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்கள். குடும்ப உறவு முறை இன்றும் சீர் அடையவில்லை.

அப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் நம் அருகிலேயே இருக்கிறார்கள். ஆகவே யாரிடமும் எந்த இரகசியத்தையும் சொல்லாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். உங்களையே நீங்கள் நம்புங்கள்.

பின்னூட்டங்கள்

வெங்கடேசன்: உண்மை. நம்மிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றால் நண்பனும் பகைதான். என் சொந்த அனுபவமே உண்டு. மனிதர்கள் பல வகை 🤷‍♀️

இராதா பச்சையப்பன்: 🌷🙏எதுவும் சொல்ல தோன்றவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை. 🤷‍♀️🤷‍♀️

கலைவாணி ஜான்சன்: சிறப்பு மிக்க பதிவு ஐயா... நிதர்சனமான உண்மை... 👍👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக