15 ஜனவரி 2024
போகி பண்டிகை
10 ஜனவரி 2024
வாழ்க்கையில் நீக்குதல் கோட்பாடு

மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம்
மலாயா நாட்டின் முதல் இரயில் தண்டவாளம், பேராக் மாநிலத்தில் உள்ள தைப்பிங் நகரிலிருந்து, அன்றைய போர்ட் வேல்ட்; இன்றைய கோலா செபத்தாங் வரையில், ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பெற்றது.
இன்றைக்கு ஒட்டு மொத்தமாக இந்தப் பகுதிகள் அனைத்தும் சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ளன. வித விதமான வியாபாரங்கள் நடைப் பெறுகின்றன; வித வித மான உணவுகள், கருவாடுகள், கடல் பயணம் என்று ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்.
உழைக்கிறார்கள் சம்பாதிக்கிறார்கள்...
(பதில் இடுகைகள்)
பெருமாள், கோலாலம்பூர்
இதிலே
பழமையும்
புதுமையும்
இருக்கையிலே...
மலேசியா முழுமையும்
துடைத்தொழிக்க
காரணமென்ன...
பழயனவற்றை
இன்றும்
பாதுகாத்து
வரும் அரசு
ஏன்
அத்தகைய மாற்றத்தை
முன்னெடுத்தது
என்பதை
அன்றைய KTM நிர்வாகம் பதிலலித்தால் சிறப்பாக இருக்கும்...
இப்படி பழசும்
பதுசும்
பார்வையில்
விழுந்தால்
அந்த கால
நினைவலைகள்
சிறகடித்துப்போகும்...
கண்டிப்பாக
சுற்றுப் பயணிகளை
கவர்ந்திழுக்கும் இடங்கள் பல உள்ளன.
MATIC பின்னோக்கி நகருமா. ta
12 டிசம்பர் 2023
அன்வார் 2023 அமைச்சரவையில் இந்திய அமைச்சர்கள் இல்லை
Dhanasegaran Thevanathan: அமைச்சரவையில் தமிழர்கள் காணாமல் போனது மலேசிய எம்.ஜி.ஆர் செயத சாதனை... வேதனை... மாற்றத்தின் மகிமை
08 டிசம்பர் 2023
பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்
07 டிசம்பர் 2023
ஈப்போவில் ஈமச் சடங்கு செய்ய 2500 ரிங்கிட்?
மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமயத்தின் பெயரில் அதீதமாகக் கட்டணம் கேட்பது நியாயமன்று. இந்த சகோதரியைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து நம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.
ஈப்போ யோகேஸ்வரிக்கு மாமன்னரின் சிறப்பு விருது
பெருமாள், கோலாலம்பூர்
03 டிசம்பர் 2023
கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி
தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது.
01 டிசம்பர் 2023
மனித நேய மலேசிய உணர்வு
தனசேகரன் தேவநாதன், சித்தியவான், பேராக் - 01.12.2023
இனங்களுக்கு இடையில் மனிதத் தன்மைகள் பரவலாக அனுசரிக்கப் பட்டால், அங்கே பகுத்தறிவு வளர்கிறது. இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்ல அவையே பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.
எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாசாரத்தை ஏற்றுக் கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.
பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான், கிந்தா தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு பணிபுரிந்த ஓர் இந்திய பாதுகாவலரிடம் தங்களின் அன்பின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்த முறை மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உலகின் முதல் பெட்ரோல் நிலையம்
பத்தாவது மனிதன்
கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர் - 01.12.2023
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.
இரண்டாம் மனிதன்: “நான் கூகுள் சுந்தர் பிச்சை போல சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : “எனக்கு ரஜனிகாந்த் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: “ஐஸ்வர்யாராய் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!
பத்தாவது மனிதன் கேட்டான்: “உலகத்தில் ஒரு மனிதன் maximum எந்த அளவு மன நிம்மதியோடும் மனநிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு் கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் : “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து : "நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!
அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் ஒன்பதில் ஒன்றா..? இல்லை, பத்தாவது மனிதனா..?
படித்ததில் பிடித்தது
25 நவம்பர் 2023
மலேசியத் தமிழர் இனம் 2023
(பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்)
மலேசியத் தமிழர் இனத்தின் எழுச்சியால்
2008 ஆட்சி மாற்றத்தால்
அன்றைய 2007 முயற்சி...
ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முயற்சி...
அதில்...
உயர்ந்த சுகம் அனுபவித்தது
இரண்டு இனங்கள் தான்...
நாம் நமது முயற்சி...
நமது இந்த எழுச்சி...
"விழலுக்கு இரைத்த நீராக" போய் விட்டது...
அடி உதை வாங்கியவன் ஒரு புறமிருக்க
துன்பம் பட்டவன் ஒரு புறமிருக்க
சிறைவாசம் சென்ற கூட்டம் ஒரு புறமிருக்க
அநாதையாக்கப்பட்ட ஓர் இனக் கூட்டம் ஒரு புறமிருக்க...
மலேசியத் தமிழர் இனத்தின் போராட்டத்தைக் கொண்டு
இன்றும் சொகுசு வாழ்க்கை வாழும் பலர் உள்ளனர்.
அதில் அன்னிய இனத்தவர்கள் மட்டுமல்ல
மாறாக நம் இனத்தை சார்ந்தவர்கள் மிக அதிகம்...
அரசியல் மூலம் தனி மனிதனாக
குடும்ப அரசியல் நடத்திக் கொண்டு
கோடான கோடு சொத்துக்கள் சேர்த்துக் கொண்டு
அவர் அவர் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு
வாரிசு அரசியல் என்று
இராஜ போக வாழ்க்கை வாழ்கிறார்கள்...
இதற்கு உதாரணம் நிறைய உண்டு...
இன்றளவும் இதை தான் செய்து கொண்டு வருகிறார்கள்...
தமிழர்கள் பலர் அவர்களுக்கு வாலை பிடித்துக் கொண்டு
எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு பின் தொடர்கிறார்கள்...
அவர்களோ... தன் இன அரசியல் செய்கிறார்கள்...
கேட்பாரில்லை... ஐயகோ...
அன்று எழுச்சி கொண்ட மலேசியத் தமிழர் இனம்
இன்றும் கோழை இனமாக
பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கு...
இந்த 16 ஆண்டுகால போராட்டத்தின் மூலம்
"பூனைக்கு மணிக்கட்டிய" இனத்துக்கு
கிடைத்தது என்ன?
சாதித்தது என்ன?
வாழ்கிற வாழ்க்கை தான் என்ன?
அறுபது ஆண்டு கால ஆட்சியில்
ஒன்றும் கிடைக்கவில்லை
அந்தத் தாக்கத்தில் தான் "இந்திய இனம்"
குறிப்பாக 90 சதவிகித தமிழர்கள்
தலைநகரில் 2007-இல் ஒன்று கூடினார்கள்
(அதில் எனது குடும்பமும் தான்)
என்ன ஆச்சு?
அரசாங்கமும் நமது குறையை கேட்டு அறியவில்லை...
செவி சாய்க்கவில்லை...
ஒரு முக்கியத்துவம் கொடுக்க வில்லை...
(ஆரம்பத்தில் ஒரு சில சலுகைகளை கொடுத்தது குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு)
ஆனால், 2007 எழுச்சிக்குப் பிறகு
இன்று நமக்கு ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்த்தால்
ஒன்றுமில்லை...
ஒன்றுமில்லை...
ஒன்றுமே இல்லை...
காரணம் நமக்கென்று ஒரு சரியான சமுதாயத் தலைவன் இல்லை
வந்தவன்...
போனவன்...
இருக்கிறவன்...
எவனும் நல்லவன் இல்லை...
வருவான் என்று எதிர்ப்பார்த்தால்
எல்லோரும் 1000 சதவிகிதம் சுயநலவாதிகளே...
நம்மவர்களை ஏணிப்படியாக வைத்து...
மேலே போகிறார்களே தவிர
நம்பிய இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற எண்ணம் எள் அளவும் இல்லை.
நாம் சிந்திப்பதும் இல்லை... திருந்துவும் இல்லை...
சுயநல நரிக்கூட்டமும்
நம்மை சிந்திக்க விடமாட்டார்கள்...
ஆக............
ஒரு காலத்தில் "மக்கள் சக்தி"
என்று வாய் கிழிய கத்திய வாய்கள் இன்று "பண சக்தி" "தன சக்தி"
என்று சத்தமில்லாமல் இரகசியமாக மனதுக்குள்ளேயே கூவுது...
சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
அன்புடன்
நாம் தமிழர்
நாமே தமிழர்...
ஆக்கம்: பினாங்கு மகாலிங்கம் படவெட்டான்
25.11.2023
01 டிசம்பர் 2022
மலேசியம் புலனத்தின் பதிவுகள் - 23.11.2022
இறைவனைத் தவிர யாராலும் மாற்ற முடியாது. அதனால் நல்லதை நினை... நல்லதை செய்... மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்... 🌹
23/11/2022, 7:28 am - Dhanasegaran Thevanathan: 🌸🙏🌹 நல்லதை செய்து நல்லதை நினைத்து நல்லலதை விதைப்பதே நலமிக்கச் செயல்...
23/11/2022, 10:04 am - Muthukrishnan Ipoh: அன்வார் நல்ல ஒரு தலைவர்... அரசியல் காரணங்களுக்காக ஒருவரால் பழி வாங்கப் பட்டார்...
23/11/2022, 11:05 am - Dhanasegaran Thevanathan: முந்தைய தேர்தலில் அன்வாரை முன்னிறுத்தி மக்கள் வாக்களித்தனர்... இப்போது மதம் என்ற வட்டத்தில் மக்களும் நாடும் சிக்கி தவிக்கின்றனர்... பொன் விளையும் பூமியில்... சமயம் எனும் போர்வையில் ஊழலுக்கு வரப்பு கட்டி நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
23/11/2022, 11:11 am - Selvakumar Sanmuka Thevar: ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போது எல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை..!! வாழ்க வளர்க *தமிழன்*
23/11/2022, 11:11 am - Dhanasegaran Thevanathan: அரசர் நல்ல முடிவை அளிப்பார் என நம்புவோம்🙏🌹🌸
23/11/2022, 11:15 am - Vengadeshan: உண்மை ஆசான் சில தனி மனித வக்கிர புத்தியால் நாடே நாசமாகிறது 😭
23/11/2022, 11:15 am - Devi Kedah Kadaram: உண்மை... உலக நாடுகள் மத்தியில் மூவினமும் ஒன்றான மலேசியாவின் அழகான தோற்றத்தை தேர்தலுக்குப் பின்னர், சில அரசியல் கட்சிகள் உடைத்து தரைமட்டமாக்கி வருகின்றன...
23/11/2022, 11:35 am - Muthukrishnan Ipoh: கிழவர் இரும்புப் பிடி... மொசின் இன வெறி... அடி அவாங் மத வெறி... *எல்லாம் சுயநலம்*
23/11/2022, 11:38 am - Ratha Patchiappan: எவ்வளவு பெரிய மத வெறியாக இருந்தாலும் ஒருநாள் எவரும் மண்ணுக்குள்தான் போகனும். அப்போது மதம் இனம் தெரியாது...
23/11/2022, 11:42 am - Ratha Patchiappan: இந்த உண்மையை மொகைதீனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... அதனால் தான் இத்தனை அலைக்கழிப்பு.
23/11/2022, 11:44 am - Ratha Patchiappan: மனசு திக் திக் என்று அடித்து கொண்டு இருக்கிறது......?
23/11/2022, 11:47 am - Paul Servai: ஐயா... மாமன்னர் நாட்டை ஆட்சி செய்ய கட்டாயத்திற்கு வந்தால்... சட்டத்தில் இடம் உண்டா?
23/11/2022, 11:49 am - Ratha Patchiappan: இவரின் ஆதங்கம் மிகவும் சரியே... உண்மை.. மனித நேயம்..
23/11/2022, 11:58 am - Vengadeshan: நாட்டையும் மக்களையும் பற்றி எந்தக் கவலையும் கிடையாது இவர்களுக்கு...
23/11/2022, 12:03 pm - Mahalingam Pada: இன வெறி ஊறிப் போன இக்காலத்தில் இதை சிந்திப்பார் யார்?
23/11/2022, 12:03 pm - Vengadeshan: எனக்கு தெரிந்து ஒரு வழி முறை இருப்பதாக நினைக்கின்றேன். தேர்தலில் வெற்றி அடைந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்தில்... இரு பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரைக் கட்சிக்கு அப்பாற்பட்டு மனசாட்சியின் படி வாக்களித்து தேர்வு செய்யலாம்.
23/11/2022, 12:03 pm - Vengadeshan: நாடாளுமன்றத்தை கூட்டி...
23/11/2022, 12:08 pm - Ratha Patchiappan: நல்ல முடிவை எதிர்ப்பார்ப்போம்....
23/11/2022, 12:21 pm - Cikgu Sivalingam: எதையும் சவாலாய் ஏற்றுக் கொள்ளும் தார்மீகம்...
23/11/2022, 12:32 pm - Muthukrishnan Ipoh: சட்டத்தில் இடம் இருக்கிறது. மாமன்னர் தனக்குப் பிடித்த ஒருவரைக் காப்பு பிரதமராக நியமிக்கலாம். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனால் இராணுவத்தைக் கொண்டு நாட்டை பாதுகாக்கலாம். அனைத்து உரிமைகளும் அவரிடம் உள்ளன. ஒன்றே ஒன்றைத் தவிர... சட்டம் இயற்றுவது... நாடாளுமன்றத்தின் மக்களவை மேலவை கொண்டு வந்த மசோதாவை சட்டம் ஆக்குவது. அவர் சம்மதிக்க வேண்டும்.
23/11/2022, 12:35 pm - Muthukrishnan Ipoh: (நம்ப) நிலைமையும் இதே நிலைமைதான். நடிக்கத் தெரியாது... அதனால் ஏமாந்து போனதுதான் மிச்சம்.
23/11/2022, 12:42 pm - Muthukrishnan Ipoh: நடக்கிற காரியம் இல்லை சார்... இராத்திரியோட இராத்திரியாக மொசக் குட்டி ஒரு கூட்டம் போட்டு ஒரு வழி பண்ணி விடும்... ஜால்ரா போட இருக்கவே இருக்கு கிளாந்தான் ஆடி அமாவாசை... மொசக்குட்டி தெரியும் தானே... செரட்டோன் அரசு கவிழ்ப்பின் கதாநாயகர்...
23/11/2022, 12:43 pm - Vengadeshan: ஆமாம் ஆசான் உண்மைதான் நீங்கள் சொல்வது இவர்களிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது...
23/11/2022, 12:46 pm - Muthukrishnan Ipoh: *மலேசிய இந்தியர்கள் அனைவரும் நல்லா இருக்கணும்... அன்வார் பிரதமர் ஆகணும்... இறைவா* 🙏💝
23/11/2022, 12:47 pm - Vengadeshan: பெரும்பாலான மக்களின் எண்ணம் இதுதான் ஆசான்...
23/11/2022, 12:49 pm - Muthukrishnan Ipoh: சபா சரவாக் ஒத்துழைக்க தயார்.
கேள்வி: யாருக்கு? 😇
23/11/2022, 12:49 pm - Vengadeshan: குழப்பமான தகவல்கள் ஆசான்...
23/11/2022, 1:01 pm - Chinna Rasu: நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு மாவட்டங்கள் தோறும் பலப் படுத்தப்பட்டு உள்ளது. *மாமன்னர் நாளைய தினம் அனைத்து சுல்தான்களையும் சந்தித்துப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்*
23/11/2022, 1:34 pm - Dhanasegaran Thevanathan: அடுத்த கட்டம்
23/11/2022, 1:35 pm - Muthukrishnan Ipoh: மொசகுட்டிக்கு வாய்ப்பு பிரகாசம்...
*தென்னிந்திய தொழிலாளர் நிதி*
23/11/2022, 1:35 pm - Raja Sg Buluh: இந்தக் கட்டுரையை முழுதும்
படித்தேன். சாமிவேலு தகவலின்படி இந்திய சமுதாயத்தின் நன்மைக்காகவே தென்னிந்திய நிதி வாரியத்தை கலைக்க முடிவு செய்ததாகக் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தானே தமிழனின் நிலைமை ரொம்ப மோசமா போச்சு.
23/11/2022, 1:37 pm - Raja Sg Buluh: இந்தச் சாமி நல்லா வாயில வடை சுட்டுட்டு போய் சேர்ந்து விட்டார்.
23/11/2022, 1:38 pm - Muthukrishnan Ipoh: தென்னிந்திய நிதி கலைக்கப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் துன் சாமிவேலு மட்டும் அல்ல. அந்த வாரியத்தில் இருந்தவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
23/11/2022, 1:44 pm - Ganeson Shanmugam Sitiawan: மலேசிய தென்னிந்தியர் நிதி விவகாரம் விசுவரூபம் எடுத்த பொழுது, மறைந்த எழுத்தாளர் திரு.ஆதி குமணன் உரக்க குரல் கொடுத்தார்.
மகா கிழவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு துன் சாமிவேலு அவர்கள் தடுமாறினார் என்றே சொல்ல வேண்டும்.
ஆதி குமணின் உரத்த குரல், மகாதீரும் எதிர்ப்பார்க்கவில்லை.
விசயத்தை திசை திருப்ப மகா கிழவர் என்ன கூறினார் தெரியுமா?
மலேசிய இந்தியர்கள் இன்னும் தென்னிந்தியர்கள் அல்லர், மலேசியர்கள்.
இன்றும் நாம் இந்த நாட்டில் மலேசியர்களா என்றால் 🤦♂️🤦♂️🤦♂️ 😁😁😁 இதுதான் நிலைமை.
23/11/2022, 1:46 pm - Raja Sg Buluh: அருமை
23/11/2022, 1:51 pm - Muthukrishnan Ipoh: *SOUTH INDIAN LABOUR FUND (DISSOLUTION) ACT 1999* Incorporating all amendments up to 1 January 2006
PUBLISHED BY THE COMMISSIONER OF LAW REVISION, MALAYSIA
UNDER THE AUTHORITY OF THE REVISION OF LAWS ACT 1968 IN COLLABORATION WITH PERCETAKAN NASIONAL MALAYSIA BHD 2006
அரசாங்க நாடாளுமன்ற நிகழ்வுப் பதிவுகளில் அச்சிடப்பட்டு ஆவணமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுதான் கட்டுரையைத் தயாரித்து வருகிறேன்...
23/11/2022, 1:53 pm - Kanagarajan: மிக்க நன்றி ஐயா🌸
23/11/2022, 1:53 pm - Ganeson Shanmugam Sitiawan: சிறப்பு ஐயா
23/11/2022, 1:55 pm - Muthukrishnan Ipoh: திடீரென்று யாராவது நம் மீது வழக்கு தொடரலாம். ஆகவே முன்கூட்டியே சான்றுகளை வைத்து இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் போய் நின்று கொண்டு தடுமாறக் கூடாது. சட்டபூர்வமான ஆவணங்களைத் தூக்கிப் போட வேண்டும். அதோடு அவர்கள் கப் சிப்...
23/11/2022, 1:55 pm - Raja Sg Buluh: அருமை
23/11/2022, 1:58 pm - Vengadeshan: மிக்க நன்றி ஆசான்🙏
23/11/2022, 2:01 pm - Ve Sangkar Melaka: சிறப்பு 👍🏻👌🏻
23/11/2022, 2:17 pm - Ganeson Shanmugam Sitiawan: மாமன்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதாகக் கூறியுள்ளனர்
23/11/2022, 2:49 pm - Murugan Sivam: https://www.malaysiakini.com/news/645404
23/11/2022, 2:54 pm - Muthukrishnan Ipoh: ஒருக்கால் டத்தோ ஸ்ரீ அன்வார் பிரதமரானால்... நம் இனத்தவர்கள் அதிக ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மற்றவர்களை முகம் சுழிக்கச் செய்யும். இதனால் வேறு பின்விளைவுகளும் வரலாம். எனவே, இதை உணர்ந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது.
23/11/2022, 2:55 pm - Muthukrishnan Ipoh: இதை நாம் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். சாலையில் மற்றும் பொது இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
23/11/2022, 4:09 pm - Cikgu Sivalingam: பேதம் இருக்கும் வரையில் *சமதர்மம்*
என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும்.
*குட்டிக்கதை*
23/11/2022, 5:36 pm - Devi Kedah Kadaram: ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. இணையத்துல தேடிப் பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தை சொன்னான்.
"டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே."
டாக்டரு சொன்னாரு..
"தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தடவை வீதம் அஞ்சு முறை என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்!"
"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?"
" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "
" ஓ அப்டீங்களா? சரிங்க
டாக்டர் ஐயா. வர்றேன். "
ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.
ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.
" அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? "
"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிரச்சினை சரியாயிடுச்சு."
"ஓ! அப்டியா, எப்படி சரியாச்சி? "
"நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "
டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.
"என்ன தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க! "
"அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிரச்சினை பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்கன்னாரு. அப்படியே கட்டிலை 2000-₹க்கு வித்துட்டு 200₹-க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. 😄
சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
*படித்ததில் பிடித்தது*
23/11/2022, 7:57 pm - Muthukrishnan Ipoh: மலேசியாவின் 15-ஆவது பொதுத் தேர்தலின் போது, பாடாங் செராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் *கருப்பையா முத்துசாமி* மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். படித்துப் பாருங்கள்.
23/11/2022, 8:10 pm - Devi Kedah Kadaram: இனவாதம் ஊழலை விட கொடியது...
23/11/2022, 8:44 pm - Ganeson Shanmugam Sitiawan: 13-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தலைக்கனம் பிடித்த அம்னோ தலைவர்கள் ஒரு சிலர் எங்களுக்கு மஇகா வேண்டாம், எங்களுக்கு மசீச வேண்டாம் என்று முழங்கினர்.
நாங்கள் மலாய்க்காரர்கள் ஆதரவுடன் தன்னிச்சையாக வெல்வோம் என்று கொக்கரித்தனர்.
14-ஆவது தேர்தலில் வரலாறு காணாத தோல்வி அடைந்தது தேசிய முன்னணி.
தலைக்கனத்தோடும், ஆணவத்தோடும் பேசிய அம்னோ கட்சியினர் இன்று மலாய்க்காரர்களாளேயே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர்.
மஇகா மற்றும் மசீச தலைவர்களுக்கு ஏன் PH வேண்டாம், ஏன் PN வேண்டும்.
BN + PH யுடன் இணைந்தால் ம.இ.கா-வுக்கும் , ம.சீ.ச-வுக்கும் அமைச்சர் பதவி என்பது கேள்விக் குறியாகும். PH-இல் சீனர் இந்தியர் தலைவர்கள் உள்ளனர்.
அதே BN + PN உடன் இணைந்தால் நிச்சயம் அமைச்சர்கள் பதவி உண்டு.
இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்கினாலும் பரவாயில்லை, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என்பது இவர்களது முக்கிய எதிர்பார்ப்பு.
23/11/2022, 8:47 pm - Muthukrishnan Ipoh: மிக மிக அருமையான அரசியல் பார்வை... 🎖️
23/11/2022, 8:51 pm - Ganeson Shanmugam Sitiawan: நன்றி ஐயா.
23/11/2022, 8:53 pm - Muthukrishnan Ipoh: இந்தப் பதிவின் கடைசி வரிகள்... 👍👍
23/11/2022, 9:10 pm - Dhanasegaran Thevanathan: சரியாகக் கணித்தீர்கள் தம்பி. சமூகமாவது பற்றாது. பல அம்னோக்காரர்கள் அம்னோ வீழ்ச்சிக்கு காரணமான PN வேண்டாம் என்கிறார்கள். ஆனால் மஇகா எங்களை வீழ்த்திய இந்திய சமூகத்தை ஒரு கை பார்கிறேன் என்கிறது. இந்தியர்களுக்கு ஏன் மஇகா மீது வெறுப்பு. அதை சிந்திக்கவே இல்லை.
அம்னோ மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத்தான் கிராமத்து மலாய் மக்கள் PN-ஐ வெற்றி பெறச் செய்தனர் என்பதனை அம்னோ தலைவர்கள் உடனே உணர்ந்து விட்டனர். யார் தோற்றாலும் பதவியில் சுகம் கண்டவர்கள் நாட்டு நலனோ சமூக நலனோ துச்சம் 🙉🙊🙈
23/11/2022, 9:11 pm - Vengadeshan: அருமையான உரை. ஆனால் கேட்க வேண்டியவர்கள் கேட்பார்களா?😭
23/11/2022, 9:20 pm - Kumaran Marimuthu: சிந்திப்பதை இழந்துவிட்ட சமுதாயத்திற்கு நறுக்கென்று ஒர் கேள்வி. நம் சமுதாயத்தில் பெரும் பகுதி சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது ஐயா.
23/11/2022, 9:30 pm - Devi Kedah Kadaram: மிகச் சரியான ஆதங்கத்தையும் மனக் குமுறலையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்... நம்மவர்கள் காதில் இது விழுமா....
23/11/2022, 9:33 pm - Kalaivani Johnson: வணக்கம் ஐயா... சிறப்பான பதிவுகள்.... அமரர் திரு. கருப்பையா அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சிங்க ஐயா... அவரது அரசியல் ஈடுபாடு சிறப்பானவை என்று தெரிந்து கொண்டேன். மலாய், சீன சமூகத்தினர் இருந்தும் தமிழரான இவரை தேர்வு செய்தது, இவரின் நல்ல பண்பை வெளிபடுத்துகிறது. சிறப்புங்க ஐயா... 🙏🙏
23/11/2022, 9:35 pm - Barnabas: நன்றி ஐயா.
23/11/2022, 9:36 pm - Mahalingam Padavettan Penang: உண்மை தான் ஐயா... இந்த இனம் வித விதமான போதையிலும்... பல வகையான கேளிக்கையிலும்...
அடிப்படையிலான கல்வியறிவு கூட முழுமையாக பெறாத நிலையிலும்.. தன்னிலை மறந்து தான் தோன்றிச் சூழலில்... ஆணவத்தோடு சுய கட்டுப்பாடு இன்றி... ஊர் மெச்சிக்க வேண்டி தனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டு... சிந்திக்க மறந்த ஒரு இனமாக மாறி விட்டது இன்று.
அடிப்படையிலேயே மாற்றத்தை கொண்டு வந்தால் தான் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டு... பிற இனத்தவர்களின் பார்வைக்கு நாம் ஒரு அறிவார்ந்த இனம் என்றும் மதிக்கப்படும் இனமாகவும் பார்க்கப் படுவார்கள்.
ஆனால், இன்றைய சூழ்நிலை தொடருமானால் நமது அடுத்த தலைமுறைக்கு இந்த நாட்டில் எதிர்காலமே இல்லை... பெற்றோர்கள் உணர்வார்களா?
சமுதாயத் தலைவர்களின் பங்கு இருக்குமா? அரசியல்வாதிகள் சமுதாய வளர்ச்சிக்கு பாடு படுவார்களா? சிந்திப்போமாக தாய் தமிழ் உறவுகளே...
23/11/2022, 9:36 pm - Muthukrishnan Ipoh: அருமையான பின்னூட்டம்... நான் எந்தக் கருத்தையும் பதிவு செய்யும் மனநிலையில் இல்லை... நம்முடைய இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் ஆரவாரம் தான் மலாய் மக்களின் வாக்குகளைத் திசை திருப்பி உள்ளன...
23/11/2022, 9:39 pm - Devi Kedah Kadaram: இப்படி பேசி விட்டு எப்படி இவர் அவர்களுடன் கூட்டு சேருகிறார்❓ மதவாதப் பேச்சும் இனவாதப் பேச்சும் தீவிரவாதத்தை ஏற்படுத்துமே.... சரவாக் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
(விக்கிப்பீடியாவில் பதிவு செய்வது)
23/11/2022, 9:40 pm - Muthukrishnan Ipoh: நம்மால் இயன்றதை உடனுக்குடன் செய்து விட வேண்டும். நமக்கு பிறகு யாராவது எவராவது செய்வார்கள் என்று நினைப்பதை காட்டிலும் நாமே இப்போதே செய்து விட வேண்டும்... ✌️
23/11/2022, 9:40 pm - Mahalingam Padavettan Penang: நன்றி வாழ்த்துக்கள்
ஐயா. தங்களின் ஆசிர்வாதம் கிடைத்தமைக்கு நன்றி.
23/11/2022, 9:41 pm - Muthukrishnan Ipoh: நம் மலேசியம் புலன அன்பர் ஆசிரியர் கணேசன் அவர்களின் குரல் பதிவு...
23/11/2022, 9:42 pm - Devi Kedah Kadaram: 👏🏻👏🏻👏🏻👏🏻
23/11/2022, 9:46 pm - Kalaivani Johnson: உங்களின் பணி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அளப்பரியதுங்க ஐயா.. மிக்க நன்றி... 🙏🙏
23/11/2022, 9:51 pm - Muthukrishnan Ipoh: இதைப் படித்ததும் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி... மலேசியத் தமிழர்... மலாயாத் தமிழர் என்று எழுதி எழுதியே என் வாழ்நாளில் பாதி கரைந்து விட்டது... நன்றிம்மா 🙏
23/11/2022, 10:17 pm - Muthukrishnan Ipoh: கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல் குழப்பங்களினால் நம்முடைய தூக்கம் தான் கெடுகிறது. இன்றைக்காவது கொஞ்சம் சீக்கிரம் படுக்கப் போவோம். 🙏
23/11/2022, 10:19 pm - Kalaivani Johnson: கிளாந்தான் மக்களில் அடி அவாங்கை பிடிக்காதவர்களும் உண்டுங்க ஐயா... மத வெறி, இன வெறி பிடித்தவர்...😡
23/11/2022, 10:23 pm - Devi Kedah Kadaram: ஆடி அம்மாவாசைக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உரைக்காது... அவர் மதம் சார்ந்தவரகள் மட்டும் தான் சொர்க்கம் செல்லுவார்களாம்... போங்கள் நீங்கள் செல்லும் சொர்க்கம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அது எங்களுக்கு நரகமாகத்தான் இருக்கும். சீக்கிரம் சொர்க்கம் செல்ல வாழ்த்துகள்.
23/11/2022, 10:25 pm - Ratha Patchiappan: 🌷🙏 அமரர் கருப்பையா முத்துசாமி; தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவாகிய கட்டுரையை இப்போதுதான் படித்தேன். அவரின் தொண்டு மிகவும் பெரியது. தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி உதவியவர். தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. (அதிக பதிவால் கைபேசி அடிக்கடி MCO போடுகிறது)
23/11/2022, 10:27 pm - Ratha Patchiappan: அமரர் கருப்பையா முத்துசாமி அனைத்து மதத்தினரையும் அனுசரித்து போகும் நல்ல மனிதர்..
23/11/2022, 10:30 pm - Devi Kedah Kadaram: நிக் அஸிஸ் ... இப்போது இருந்தால் யாருக்கு ஆதரவு தருவார்?
23/11/2022, 10:32 pm - Ratha Patchiappan: பாஸ் சமயவாதிகள் சொர்க்கத்தையும், நரகத்தையும் நேரில் பார்த்ததைப் போல் தெரிகிறது. ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லை பாவம்... 🤪
23/11/2022, 10:35 pm - Devi Kedah Kadaram: பிரதமராக வருபவர் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்க வேண்டும்.
23/11/2022, 10:41 pm - Mahalingam Padavettan Penang: மிக தெளிவாக உள்ளனர், இன்றைய இஸ்லாமிய இளையோர்கள்...
























