பதிவு: பி.கே.குமார் - 09.07.2021
அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று பல தனியார் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி... தொடர்ந்து ஆசிரியராகத் தனியார் பள்ளியிலும், விரிவுரையாளராகத் தனியார் கல்லூரிகளிலும் பணி செய்த அனுபவங்கள் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஓரளவுக்கு உதவினாலும் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளின் சூழலும் மாணவர்களின் தேவையும் சற்று மாறுபட்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.
இலாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் சூழலில் ஓர் ஐந்து ஆண்டுகள் என்னுடைய பணி அனுபவங்கள் மையம் கொண்டிருந்தன. ஆசிரியம் ஓர் அறப்பணி என்பதெல்லாம் காசுக்காக கற்பிக்கப்படும் தத்துவங்கள் என என் மனம் சொல்லியது.
புகழ்ப்பெற்ற தனியார் கல்லூரியில், பணக்கார மாணவர்கள் பயிலும் இடத்தில் எல்லாம் நல்லபடி நடக்கும் என்றும் ஏமாந்துவிடக் கூடாது.
நான் பணி செய்த அந்தக் கல்லூரியில் பல துறைகள். பொறியியல் துறையில் நான் பொறியியல் கணிதம் கற்பித்து வந்தேன். மின்னியல் படித்துக் கொடுக்கும் ஒரு மூத்த விரிவுரையாளர், நான் என இருவர் மட்டுமே அங்கு இந்தியர்கள். நாங்கள் இருவருமே ஆண்டிறுதியில் புதுப்பிக்கப்படும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம்.
நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு வேறு இனத்தவர் ஒருவர் நிரந்தரப் பணியாளராக வேலைக்குச் சேருகின்றார்.
நிறுவனம் நிறைய இலாபம் சம்பாத்தித்து உள்ளதால் அந்த ஆண்டு எல்லோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. எனக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 1.2 மடங்கு ஊக்கத் தொகையும்; இன்னொரு இந்தியருக்கு 1.5 மடங்கும், புதிதாக வந்த நண்பருக்கு 2.0 மடங்கும் வழங்கப் பட்டது. இவ்வகைப் இனப் பாகுபாடு என்னுள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இரண்டு வகையான வஞ்சிப்புகள். ஒன்று வேலை நிரந்தரம் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியைக் காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்ய முடியும். இரண்டாவது, ஊக்கத் தொகை வழங்குவதில் காட்டப்படும் பாகுபாடுகள்.
அரசாங்கப் பணியில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. ஊழியர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தம் பெறுவார்கள். மேற்படிப்புக்கு உபகார சன்பளம், பணி ஓய்வுத் தொகை, இலவச மருத்துவ வசதி, விடுமுறை என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. வேலை பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால் அரசாங்க வேலையே சிறந்தது என்று மனம் எண்ணலாயிற்று.
ஐந்து ஆண்டுகள் தனியார் துறையில் இருந்தாயிற்று. அது போதும். இனி அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என முடிவு செய்தேன். அந்தத் தருணத்தில் நாட்டின் பொருளாதாரம் மீட்சிப் பெற்று விட்டது. துன் மகாதீர்தான் அப்போது பிரதமராக இருந்தார்.
அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் அந்த வாய்ப்பு நெருங்கி வந்தது. 'ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' எனும் முழக்கம் உண்மையில் சரியாகக் கடைபிடிக்கப் படுகிறதா என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக