பதிவு: பி.கே. குமார் - 25.07.2021
ஆண்டு இறுதிப் பள்ளி விடுமுறை முடிவுற்று ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் பள்ளிக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்துவிட்டது.
மலேசியக் கல்வியமைச்சிடம் இருந்து கூட்டரசு பிரதேச மாநிலத் திணைக்களம் வழியாக எனக்கு ஒரு மடல் வந்திருந்தது. அதில் கோலாலம்பூரில் உள்ள பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றிற்கு என்னை இட மாற்றம் செய்து இருப்பதாக எழுதப் பட்டிருந்தது.

அந்தப் பள்ளிக்குச் சென்று 'உள்ளேன் ஐயா' என்று செய்யச் சொல்லி இருந்தது. தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனும் ஒரு சட்ட மிரட்டலோடு அந்த மடல் அமைந்து இருந்தது.
எனக்கு இது இரண்டாவது பள்ளி என்பதால் இவ்வகை மடல்கள் எனக்குப் புதிது. என்னுடைய முதல் பணி அமர்த்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டு இருக்கவில்லை. சிலரைக் கேட்டு அறிந்த பொழுது வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போகும் போது மடல் இப்படித்தான் வரும் என்பதை அறிந்து கொண்டேன்.
அது மட்டுமின்றி மடல் குறிப்பிடும் நாளில் தகுந்த காரணங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லாமல் காலம் தாழ்த்தினால் அரசு ஆணையை மீறியக் குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும் என்பதனையும் பிற்பாடு கல்வியமைச்சில் நான் ஒரு அதிகாரியாக இருந்த போது உணர்ந்து கொண்டேன்.
ஒருவழியாகப் பள்ளித் திறந்த முதல்நாள் என்னுடைய யமாகா உந்துருளியில் (motorcycle) பள்ளிக்குச் சென்றேன். இது பெண்கள் இடைநிலைப்பள்ளி எனும் சுவரெழுத்துக்கள் என்னை வரவேற்றன.
பள்ளிக் காலையிலேயே தொடங்கி விட்டது. நான் பத்து நிமிடம் தாமதமாகச் சென்று சேர்ந்தேன். என் உந்துருளியைப் பள்ளியின் சிற்றுண்டிச் சாலையின் ஓரமாக நிறுத்தினேன்.
'வா வா வாத்தியாரே வா' எனும் பாட்டை யாரோ பாடுவதுக் கேட்டு நிமிர்ந்தேன். சிற்றுண்டிச் சாலையின் இருக்கையில் நம்மின மாணவிகள் இருவர் அமர்ந்து இருந்தனர்.
நான் அவர்கள் பக்கம் நோக்கிய போது, ஒரு மாணவி குறும்பாகச் சிரிக்க மற்றொரு மாணவி ’படக்’கென்று வேறொரு பக்கம் திரும்பிக் கொண்டாள். இருவருக்கும் 15-16 அகவைக்குள் தான் இருக்கும்.
’அடக் கடவுளே முதல் நாளே வரவேற்பு இப்படி இருக்கிறதே’ என்று நொந்து கொண்டேன். இதை நான் உண்மையில் எதிர்ப்பார்க்கவில்லை. பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்திய மாணவிகள் இப்படியும் இருப்பார்களா என்று எனக்கு வியப்பு ஏற்பட்டது.
நான் மாணவனாக இருந்த காலக் கட்டத்தில் முன்பின் தெரியாத ஆடவனைப் பார்த்து அதுவும் ஓர் ஆசிரியரைப் பார்த்து மாணவிகள் இப்படி எல்லாம் செய்தது இல்லை.
காலம் மாறிவிட்டு இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைமுறை மாற்றம் நிகழ்கிறதோ என எண்ணத் தோன்றியது.
அந்தப் பள்ளியில் என்னோடு சேர்த்து மூவர் மட்டுமே ஆண் ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் சீனர், ஒருவர் மலாய்க்காரர். மொத்தம் 120 ஆசிரியர்கள் கொண்ட பள்ளியில் 117 பேர் பெண்கள். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள். பள்ளியின் முதல்வர், துணை முதல்வர்கள் எல்லோரும் பெண்கள்.
இந்த அதிர்ச்சி இத்தோடு நின்றுவிடவில்லை. பள்ளியின் தலைமையும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக