பதிவு: பி.கே.குமார் - 19.07.2021
இப்பொழுது பொதுமுடக்க காலம். ஊரே வேலைக்குப் போகாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. விடிய விடிய தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டும், திறன்பேசியில் கூட்டாளியுடன் கொட்டம் அடித்துக் கொண்டும் தூங்கப் போகிறார்கள். படிக்கும் பிள்ளைகளில் இருந்து கற்க வேண்டிய நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

வேலைக்குப் போகா விட்டாலும் சிலருக்கு சம்பளம் உண்டு. ஆனால் இயங்கலையில் படிக்காமல் மட்டம் போடும் பிள்ளைகளின் நிலை என்னவாகும்? அதன் நீட்சி எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்காத சமூகமாக இந்தியர்களில் சிலர் இருக்கின்றனர்.
நாட்டில் உள்ள தலைசிறந்த தமிழ்ப்பள்ளி ஒன்றில் சராசரி மாணவர் வருகை 77%. அப்படி என்றால் 100-க்கு 23 பேர் அன்றாடம் பள்ளிக்கூடம் வருவது இல்லை. அவர்களின் கதி எதிர்காலத்தில் என்னவாகும் என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமா?
எனக்குத் தெரிந்த இந்தியக் குடும்பம் ஒன்று. அதில் இரண்டு பிள்ளைகள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்தவர். இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் பன்னாட்டுப் பள்ளியில் ஆரம்பக் கல்வி படித்தார்கள். அதன்பின் மலேசியாவுக்கு திரும்பினர்.
திரும்பி வந்ததும் ஒருவர் தமிழ்ப்பள்ளியில் படித்தார். மற்றவர் சிரி கே.எல். எனும் பன்னாட்டுப் பள்ளியில் படித்தார். தமிழ்ப்பள்ளியில் படித்த மூத்தவர் இன்று இங்கிலாந்தில் கணக்காயராக (அக்கவுண்டன்) பணி புரிகிறார். மற்றொருவர் இங்கிலாந்தில் வழக்குரைஞருக்குப் படிக்கின்றார்.
நடுத்தரக் கும்பம் என்றாலும் காசுக்கு குறைவில்லை. அதைவிட ஒழுங்கைக் கடைபிடிப்பதிலும் கூடுதல் முயற்சி செய்வதற்கும் இந்தக் குடும்பத்தினர் தயங்கியதே இல்லை. இவர்களின் இன்றைய வெற்றிக்கு அந்தக் குடும்பம் கடைபிடிக்கும் பண்பாடுதான் காரணம் என அடித்துச் சொல்லலாம்.
கணவன் மனைவி இருவரும் குறைந்தது ஒரு மணிநேரம் நூல்கள் / நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் நாளிதழ்கள் படிக்கும் போது பிள்ளைகளும் படிக்க வேண்டுமாம். நான்கு ஐந்து வயதாக இருக்கும் போதே குழந்தைகள் இருவருக்கும் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனராம்.
இப்பொழுது வெளிநாட்டில் வழக்குரைஞருக்குப் படிக்கும் இரண்டாவது பிள்ளை பனிரெண்டு வயதில் இஞ்சோன் கிரிசம் (John Grisham) எழுதிய சட்டமும் குற்றமும் (Law and Crime) நூலை விரும்பிப் படித்தாராம்.
அப்போதே ஹெரி போர்ட்டர் கதைகளையும் கரைத்துக் குடித்தவராம். பந்து விளையாட்டில் வெறித்தன விருப்பத்துடன் விளையாடுவாராம். விளையாட்டில் துடிப்பான ஆர்வம் உள்ளவராம்.
காலையில் எழுந்து இறைவனை வணங்கி அன்றாடப் பணியை தொடங்கும் ஒழுங்கு சிறுவயதில் இருந்தே தொடர்ந்து வருகிறதாம் இந்த வழக்குரைஞருக்குப் படிக்கும் இளையருக்கு. வாசிப்பு பழக்கம்தான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது.
கூடுதல் முயற்சி (Extra effort) வெற்றிப் பெறுவதற்காகக் கூடுதல் முயற்சியும் உழைப்பையும் போட்டு வெற்றியை அறுவடை செய்யும்வரை இலக்கில் இருந்து விலக மாட்டார்கள்.
வயிறு புடைக்க உண்பது; கண்ட நேரத்தில் உண்பது; என்பது இந்தக் குடும்பத்தில் நிச்சயமாகக் கிடையாதாம். இயன்றவரை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்பர்களாம்.
எந்த வேலையும் சூட்டோடு சூடாகச் செய்து முடிப்பது வழக்கமாம். நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் இல்லையாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டார்களாம். இந்தக் குடும்பம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பண்பிலும் நிமிர்ந்து நிற்கிறது தமிழை மறக்காமல்.
- முனைவர் குமரன் வேலு
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: எல்லா மாணவர்களிடமும் திறன்பேசி, கணினி வசிதிகள் உள்ளனவா என்பதை வகுப்பாசிரியர் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.
இயங்கலை நடத்தும் ஆசிரியர்கள் நேரடியாகப் பாடத்திற்குப் போகாமல் சின்னச் சின்னக் கதைகளைச் சொல்லி அந்தக் கதைகளின் மூலமாக பாடங்களை இணைக்க வேண்டும்
நேரடியாக 2444-ஐ நான்கால் வகுத்தால் மிச்சம் வருவது ஒற்றைப் படையா இரட்டைப் படையா என்று straight to the subject. பலனளிக்காது. மாணவர்களை உற்சாகப் படுத்த வேண்டும். கதைகள் சொல்லி ஈர்க்க வேண்டும்.
எ.கா: நான் ஆசிரியராக இருந்த காலத்தில் என் பின்னால் ஒரு மாணவர் கூட்டம் எப்போதும் வலம் வருவார்கள். ஒரு வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றால் மாணவர்கள் நேராக ஆசிரியர் அறைக்கு வந்து என்னைத்தான் தேடுவார்கள். பக்கத்து வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றால் என்னைத்தான் அழைப்பார்கள். ஏன்?
மாணவர்களுக்குப் பிடித்தமான கதைகளைச் சொல்லி ஒரு பள்ளிக்கூட மாணவர்களியே ஈர்த்து வைத்து இருந்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை. மாணவர்களைக் கவர்ந்து பாடத்திற்குள் இழுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக