15.03.2021
வெங்கடேசன்: அறிவு பூர்வமாக எதையும் அணுகுவது கிடையாது. சிறிய விசயத்திற்கு கூட உணர்ச்சி வயப்படுவது. அதற்கு உதாரணம் நம் சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகள். சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் கடையை அடித்து நொறுக்குவது 😭😭😭
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக வளர்த்து இருந்தால் அடாவடித் தனங்கள் நடைபெறா. தலை சரியாக இருந்தால் வாலும் சரியாக இயங்கும்.
வெங்கடேசன்: நான் பார்த்த சில பெற்றோர்கள் நல்ல குணம் உடையவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் படுமோசமாக இருக்கிறார்கள் ஐயா 😭😭
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மையாக இருக்கலாம். இருந்தாலும் கோழி முட்டை போடுவது எப்படி ஐயா கோழிக்குத் தெரியாமல் இருக்கும்?
வெங்கடேசன்: ஆகா என்ன உவமானம் ஐயா 🤭🤭🤭
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். மகன் செய்வது பெற்றோருக்குத் தெரியாமலா போகும். போற்றிப் போற்றி வளர்ப்பதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறோம். ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் பக்கத்தில் இருக்கும் மட்டையைச் சார்ந்துதான் ஊறிக் கொண்டு இருக்கும்.
டாக்டர் ஜெயஸ்ரீ: இயந்திர கதியில் ஒடும் இவ்வுலகில் குழந்தைப் பராமரிப்புக்கு பெற்றோருக்கு நேரம் செலவிட நேரமில்லை; அவர்களுக்கு நேரமின்மை காரணம். எவ்வளவு நல்ல பெற்றோராய் இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி, தட்டித் திருத்தி கலந்து ஆலோசித்து சரி எது தவறு எது என மாதிரிகளுடன் உணர்த்துகிற போது; பல்வேறு சூழ்நிலைகளில் நீண்ட நேரம் செலவிடுகிற போது; பெற்றோரைப் பார்த்து பிள்ளைகள் வழி நடப்பர்.
நீண்ட நேரம் பேசுகிற போது குழந்தைகளுக்கு எண்ணங்களைப் பகிரும் பழக்கத்தை போதிக்கிறோம். பின்னர் அதுவே பழக்கமாகி விட பிள்ளைகள் பகிரும் வழக்கமும் எடுத்துச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். இன்று என்னைப் பொருத்தவரை நேரமின்மை தான் பரம எதிரி.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சரியாகச் சொன்னீர்கள். அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழலில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க நேரம் இல்லாமல் போகிறது. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கிப் பிள்ளைகளுடன் பேச வேண்டும். அன்றைக்கு எங்கே போனார்கள். என்ன செய்தார்கள் என்பதைக் கண்டு அறிய வேண்டும்.
இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் பெற்றோர் நம்மைக் கண்காணிக்கிறார்கள் எனும் அச்சம் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். தவறு செய்ய தயங்குவார்கள். தவறு செய்தாலும் பெற்றோரிடம் அறிவுரை கேட்பார்கள்.
பிள்ளைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அவர்கள் செய்வதே அவர்களுக்குச் சரி எனப் படும். தவறு செய்தாலும் அந்தத் தவறு சரி எனவே அவர்களுக்குத் தோன்றும்.
ஒரு குழந்தை வாழ்வது பெற்றோரின் கைகளில் உள்ளது. தாழ்வது சுற்றுச் சூழல்; நடைமுறைப் பழக்க வழக்கங்கள்; நண்பர்களிடம் உள்ளது.
வெங்கடேசன்: உண்மை தான் நீங்கள் சொல்வது. தற்போதய சூழ் நிலையில் இருவருமே வேலை செய்தால்தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் 👍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக