15 மார்ச் 2021

ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம்

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

இன்று மார்ச் 14 தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு தினம். சக்கர நாற்காலியில் இருந்து கொண்டே மனிதகுலத்துக்கு பெரும்பயன் சேர்த்த வியத்தகு சாதனையாளர்.

இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942-ஆம் ஆண்டு பிறந்தவர்

1962-ஆம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

ஹாக்கிங்ஸ். குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடல் இயக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் இருந்தார். கணினி வழியாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு உள்ளானார்.

இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத் துறையிலும், பொது வாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்ததோடு சகர நாற்காலியில் இருந்தவாறே பிறருக்கான உந்து சக்தியாகவும் இருந்தார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத் துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியவை.

கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று நம்பப் பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன என்றும்; அதன் மூலம் காலப் போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என்றும்; இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இந்த வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

அதிதீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து, இஸ்ரேலில் பங்கேற்க வேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார்.

வியட்நாம் மீதான போர், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு எனத் தன் வீல்சேரில் பயணித்த படியே எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார்.

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்" என உறுதிபடக் கூறியவர் ஸ்டீபன் ஹாக்கிங்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக