07.03.2021
நாடறிந்த கவிஞர். நம் மலேசியம் புலன அன்பர். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனையில், கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவர் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும். மறுபடியும் பழையபடி கவிதைகள் எழுத வேண்டும். இறைவனை இறைஞ்சுகின்றோம். புலன அன்பர்களும் அவர் நலம் பெற வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.
புலன நிர்வாகிகள் அறுவரும் இதன் வழி தங்களின் ஆறுதலைப் பதிவு செய்கின்றனர்.
புலன நிர்வாகத்தினர்
கரு. ராஜா (கோலாலம்பூர்)
ராதா பச்சையப்பன் (கோலா சிலாங்கூர்)
தமிழ் மறவன் பாலன் முனியாண்டி (பினாங்கு)
கென்னடி ஆறுமுகம் (கிரீக்)
தேவி சரவணன் (கூலிம்)
முத்துக்கிருஷ்ணன் (மலாக்கா)
மலேசியம்
06.03.2021
ஆறுதல் தெரிவித்த அன்பர்கள்:
1. நாகராஜன்: 🙏
2. தேவி கடாரம்: சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🏻
3. ராதா பச்சையப்பன்: 🌹🙏 திருமதி சந்திரா குப்பன் 'நலம் பெற்று வந்து மீண்டும் புலத்தில் அவர் கவிதைகளைப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.🙏🌹🙏🌹🙏🌹.
4. கு.ச. இராமசாமி: திருமதி சந்திரா குப்பன் உடல் நலம் பெற்று மீண்டும் நம்முடன் இணைய வேண்டும். அதிகம் எழுத வேண்டும். நாம் அனைவரும் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்.
5. வெங்கடேசன்: இறை அருளால் கவிஞர் சந்திரா குப்பன் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
6. தனசேகரன் தேவநாதன்: விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம். 🌹🙏🌹🙏🌹🙏
7. டத்தோ தெய்வீகன்: நலம் மலர்க! மீண்டும் கவிதைகள், வலம் வருக!
8. கென்னடி ஆறுமுகம்: விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.
9. சந்திரா குப்பன்: நன்றி உறவுகளே 🙏
10. குமரன் மாரிமுத்து: சகோதரி அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
11. கலைவாணி ஜான்சன்: சகோதரி விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏
12. சந்திரசேகர் தமிழகம்: கவிஞர் சந்திரா குப்பன் அவர்கள் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டிக்கொள்கிறேன்.
13. முத்துசாமி கோலா கிள்ளான்: கவிஞர் அவர்கள் பூரண சுகமடைய எனது அன்பு நிறைந்த பிரார்த்தனைகள். வாழ்க நலத்துடன் வளத்துடன் 🌷
14. டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: பரிபூரணமாக உடல் நலம் தேறி வர பிரார்த்திக்கிறோம்.
15. பி.கே.குமார், ஈப்போ: வாழ்க வளமுடன் வாழ்க நலத்துடன்.
16. வனஜா பொன்னன்: சீக்கிரம் குணமாக வேண்டும். மீண்டும் நலம் பெற்று பிரகாசிக்க வேண்டும் எழுத்துலகில்...
17. கரு ராஜா சுங்கை பூலோ: காப்பார் கவிஞர் சந்திரா குப்பன் நலமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
18. டாக்டர் ஜெயபாலன்: காப்பார் கவிஞர் சந்திரா அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்போம் ...
19. தினகரன் தங்காக்: 😢🙏கவிஞர் சந்திரா மீண்டும் வருவார்கள்🙏👍🏻
20. வேலாயுதம் பினாங்கு: சந்திரா குப்பன் அவர்களே.... தங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம். மீண்டு நலமுடன் வாருங்கள். இப்படிக்கு, தமிழ் உறவு அன்பன். 🙏🙏🙏
21. முருகன் சுங்கை சிப்புட்: மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்.
அய்யா நலம்பெற என்னுடைய வாழ்த்துக்கள்.🙏
22. கணேசன் சண்முகம் சித்தியவான்: கவிஞர் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.
23. செல்லையா செல்லம்: சகோதரி விரைவில் பூரண நலம் பெற பிராத்திக்கிறேன்
24. உதயகுமார் பெர்லிஸ்: சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏
25: ஆதி சேகர் கோலாகிள்ளான்: நம்மோடு பயணிக்கும் தன் கவிதைகளால் பல மனதை தன்வசத்தில் வைத்திருந்த சந்திரா குப்பன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற தட்டச்சு பதிவை படித்தவுடன் சற்று மனம் வருந்தினாலும்... அவர்கள் சீக்கிரம் பூர்ண சிகிச்சை பெற்று மீண்டும் மலேசியம் என்ற நூல் நிலையத்திற்க்கு பல கவிதைகள் படைக்க வேண்டும் என்று
இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். 🙏
26. ஜெயகோபாலன் பாகான் செராய்: கவிஞர் சந்திரா குப்பன் அனைத்தையும் வென்று நலமே திரும்பி வருவார்🙏
27. சிவகுரு மலாக்கா: சகோதரி விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..
28. டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறேன்
ஒரு நெருடல்
இந்தப் புலனத்தைச் சேர்ந்த ஓர் அன்பர்; ஒரு கவிஞர் சுகவீனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டிக் கொள்வோம் என்று புலன நிர்வாகம் இன்று காலை ஓர் அறிவிப்பு செய்து இருந்தது.
அவருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொன்னால் அவரும் மகிழ்ச்சி அடைவார். புலன உறுப்பினர்கள் நமக்கு ஆறுதல் சொல்கிறார்களே எனும் மகிழ்ச்சியில் அவரும் சீக்கிரமாகக் குணம் அடைவார்.
இந்தப் புலனத்தில் அந்தச் செய்தியை 112 பேர் பார்த்து இருக்கிறார்கள். 8 பேர்தான் ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். 94 பேர் ஏனோ தானோ போக்கு?
ஏங்க ஆறுதல் சொல்ல மனசு வரவில்லை. ரெண்டு மூனு வரிகள் ஆறுதலாகச் சொன்னால் என்ன குறைந்து விடப் போகிறது. உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? சாப்பிடுற சோற்றில் பங்கு கேட்டார்களா?
உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் நீங்கள் வருத்தப் படாமல் வேதனைப் படாமல் இருப்பீர்களா. உங்களுக்கு என்றால் இரத்தம். மற்றவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்டினியா?
மருத்துவமனையில் இருக்கும் கவிஞர் சந்திரா குப்பன் தினசரி மூளையைப் பிசைந்து கவிதை எழுதிப் பதிவு செய்கிறார். அதைப் படிக்கிறீர்களே. அதற்காகவாது மனசில் கொஞ்சம் இரக்கம் வேண்டாம். அதற்காகவாவது இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல வேண்டாம்.
அவருக்கு ஓர் ஆறுதல் சொல்ல ஒரு வக்கு இல்லை. இந்த இலட்சணத்தில் தொலைக்காட்சி கலைக்காட்சி ஜூம் பண்ணிப் பாருங்கள். விவாதம் நடக்கிறது ‘லிங்கு லுங்கு’ கொடுத்து இருக்கிறேன்.
நன்றி இல்லாத் தனத்தின் சுயநலங்கள். வெட்கமாக இருக்கிறது. வயதில் மூத்த ஒரு பெண். முடியாமல் இருக்கிறார். அவருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்ல முடியாதவர்கள்...
இந்த மாதிரி இரக்கம் இல்லாதவர்கள்; நன்றி சொல்லத் தெரியாதவர்கள்; இனி இங்கு பயணிப்பதில் நியாயம் இல்லை.
புலன நிர்வாகம்
06.03.2021
ராதா பச்சையப்பன்: 🌹🙏கேட்காமல் தருவதே ஆறுதல். கேட்டும் கிடைக்கவில்லையானால் ::::::::::? அதற்கு பெயரே வேறு. யாரையும் வற்புறுத்த வேண்டாமே. இது என் தனிப்பட்ட கருத்து.🙏🌹.
திருமதி சந்திரா குப்பன், நலமே வருவார். நம் புலனத்தை தன் கவிதைகளால் அலங்கரிக்க இறைவனின் அருளால். இறைவனிடம் இறைஞ்சுகிறேன்🙏🌹🙏🌹🙏🌹.
முத்துக்கிருஷ்ணன்: நன்றி இல்லாதவர்கள் நமக்குத் தேவையா?
தனசேகரன் தேவநாதன்: நமது புலனத்தைக் குடும்ப உறவுகளாக நினைப்பவர்களுக்கு ஐயாவின் ஆதங்கம் புரியும். வெறும் இரயில் பயணிகளாக இருந்தால் இந்த உணர்வின் உன்னதம் விளங்காது. அனைத்து மனிதர்களின் மனநிலையை பொறுத்தது. குடும்பத்தில் மூத்தவர் சொல் கேட்டு வாழ்கின்றவர்களுக்கு ஐயா அவர்களின் எண்ணம் பளிச்சென விளங்கும். நன்றி 🌹🙏
தேவி கடாரம்: தங்கள் ஆதங்கம் சரி ஐயா....👍🏻
இம்மாதிரி போக்கு கொண்டவர்களை என்ன சொல்ல...🤷🏻♀️
சொன்னாலும் புரியாதவர் போல் இருக்கிறார்கள்...
தாங்கள் எடுக்கும் முடிவே சரி ஐயா...👍🏻
தேவி கடாரம்: பிப்ரவரி 28 ஆம் தேதி சகோதரி சந்திரா குப்பன் பகிர்ந்த ஞாயிறு கவிதை.... சகோதரியின் கவிதைகளை நான் அழிப்பது இல்லை.. என்ன தான் புலனத்தில் நிறைய செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும்... என் அலை பேசியில் சேமிப்பு பெட்டி நிறைந்து விட்டாலும் பல நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவை நான் பத்திரமாக வைத்துக் கொள்வேன்..
அந்த வகையில் சகோதரியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்... கடந்த சில தினங்களாக அவரது கவிதை நம் புலனத்தில் காணாதது வருத்தமும் ஏமாற்றமும் எனக்கு இருந்தது.
நேற்று நம் புலனத்தில் ஐயா பதிவு செய்த பிறகே செய்தி தெரிந்தது...
மனம் கலக்கின்றது... அவர் மீண்டும் பழைய படி கவிதையோடும் சிந்தனை வரிகளோடும் புலனத்தில் வலம் வர இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன்.. 🙏🏻
முத்துக்கிருஷ்ணன்: இவருக்கு ஓர் ஆறுதல் சொல்ல மனசு வராத சில சுயநலங்கள்... இந்தப் புலனத்தைத் தங்கள் சொந்த சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு குதிரைச் சவாரி செய்வது கண்டு வருந்துகிறேன். மனிதநேயம் இல்லாதவர்கள்... வேதனை..
தேவி கடாரம்: உண்மை ஐயா...எனக்கும் அந்த வருத்தம் உண்டு...😔
முத்துக்கிருஷ்ணன் >>> டாக்டர் சுபாஷினி: மன்னிக்கவும் சகோதரி... நேரம் ஒதுக்கி இதை எல்லாம் உங்களால் இந்தப் புலனத்தில் பகிர முடிகிறது.
ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த மூத்த பெண் கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லீங்களா? வேதனை.
முத்துக்கிருஷ்ணன் >>> முருகன் சுங்கை சிப்புட்: இதை எல்லாம் பகிர முடிகிறது. நேரம் இருக்கிறது. ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லை. வேதனை.
முத்துக்கிருஷ்ணன் >>> இமயவர்மன்: இதைப் பகிர முடிகிறது. நேரம் இருக்கிறது. ஆனால் இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு இரண்டு வார்த்தை ஆறுதல் சொல்ல நேரம் இல்லைங்களா சார்.
முக்கிய அறிவிப்பு: இந்தப் புலனத்தைச் சேர்ந்த கவிஞர் சந்திரா குப்பன் அவர்களுக்கு ஆறுதல் சொல்லாதவர்கள் தயவு செய்து எதையும் இங்கு பகிர வேண்டாம்.
அவர்களுக்கு வந்தால் இரத்தம். மற்ற புலன உறுப்பினர்களுக்கு என்றால் தக்காளிச் சட்டினியா? மனித நேயம் இல்லாத சுய விளம்பரங்கள் இந்தப் புலனத்திற்கு தேவை இல்லை. வெளியேறி விடலாம்.
முருகன் சுங்கை சிப்புட்: அம்மா நீங்கள் நலம்பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
டாக்டர் ஜெயஸ்ரீ கண்ணன்: மதிப்புமிகு சந்திரா குப்பன் அவர்களது உடல்நிலை எப்படி உள்ளது - ஏதேனும் தகவல் தெரிவிக்கப்பட்டதா ? - மீண்டும் அவர்புலனத்தில் வலம் வர ஆவலுடன் உள்ளோம்
சந்திரா குப்பன்: மகிழ்ச்சி. ஆண்டவன் அருளால் மீண்டும் முயற்சி செய்கிறேன் சகோதரி 🙏
தங்கள் ஆதங்கம் சரி ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி....
பதிலளிநீக்கு