16.12.2020
ஒவ்வொரு நாளும் “காலை வணக்கம்” சொல்வதைத் தவிர்க்கலாமே! அதிலும் “காலை வணக்கம்” என்பது நமது வழக்கம் அல்லவே! வணக்கம் என்பது ஒன்றுதான். காலைக்கு ஒன்று, மாலைக்கு ஒன்று என்பதெல்லாம் கிடையாது. அதுபோல, வணக்கம், நன்றி இவற்றுக்கு பன்மையும் கூடாது. வணக்கங்கள், நன்றிகள் என்பதெல்லாம் தவறு.
திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan) மொழியியல் & வரலாற்று ஆய்வாளர்
நாம் வணக்கம் சொல்லும் முறை சரியானதா? காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று எல்லாம் சொல்வது முறைதானா?
ஆங்கிலத்தில் சொல்லப்படும் குட் மார்னிங் போன்றவைக்கும் தமிழர் சொல்லும் வணக்கத்திற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
வணக்கம் என்ற சொல் பணிவைக் குறிப்பது. குட் மார்னிங் போன்றவை பிறரது நன்மை குறித்தது. காலை / மாலை / இரவு போன்றவை உங்களுக்கு நன்மை தருவதாக அமையட்டும் என்று பொருள்.
ஆங்கில முறையைப் போல, ஒருவருக்கு நன்மை பெருக வேண்டும் என்று வாழ்த்த விரும்பினால் கீழ்க்காணும் சொல்லைக் கூறலாம்.
நனாந்து
இதன் பொருள்:
நன்மைகளே நாள்முழு்வதும் நிறையட்டும்.
இச்சொல்லானது முந்தாரி முறைப்படி் உருவாக்கப்பட்டது. அதாவது,
நன்மைகள் என்னும் சொல்லின் முதலில் உள்ள ந வும்
நாள்முழுவதும் என்ற சொல்லின் முதலில் உள்ள நாவும்
துதைதல் (நிறைதல்) என்ற சொல்லின் முதலில் உள்ள து வும்
இணைந்து நனாந்து என்று உருவானது.
ஆங்கில குட்மார்னிங் / ஈவினிங் / நைட் போலின்றி, நனாந்து என்ற வாழ்த்துச் சொல்லை ஒருவர் எந்த நேரத்திலும் சொல்லமுடியும்.
சமக்கிருதத்தில் "அப்படியே ஆகட்டும்" என்ற பொருளில்
ததாச்`து என்று கூறுவர்.
அதைப்போன்ற அமைப்பும் ஒலிப்பும் கொண்டதே நனாந்து.
தமிழ் அன்பர்கள்
அனைவருக்கும்
நனாந்து.
சி.வி.ராஜன்: தமிழுக்காக உணர்ச்சி வசப்படுவதால் மட்டும் தமிழ் வளராது!
எனக்குத் தெரிந்து, ஒருவரை நாம் அன்று சந்திக்கும் போது “வணக்கம்!” (அல்லது வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா) என்று மட்டுமே சொல்லுவோம். பொதுவாக, காலை, மாலை என்று சேர்ப்பதில்லை (நான் கண்டு பழகியவரை).
ஒருவேளை, ஆங்கிலேய வழக்கப்படி, Good Morning, Good evening இவற்றிற்கிணையாக (மொழி பெயர்ப்புகளில்) அப்படி எழுதுகிறார்களோ என்னவோ! ஒருவேளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடங்கும் போது இப்படிச் சொல்கிறார்களோ?
ஓரு மேடைப் பேச்சிலே என்று வைத்துக் கொண்டாலும் கூட, "இந்த இனிய காலைப் பொழுதினிலே என் வணக்கத்தை உங்களுக்குத் தெரிவித்து..." என்று கொஞ்சம் அலங்காரமாகப் பேசுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக